Tuesday, July 10, 2018

990. என்னே தருமியின் தீர்க்க தரிசனம் !






தர்மபுரியில் 2002ம் ஆண்டு பஸ் ஒன்றை எரித்து மூன்று மாணவிகளைக் கொன்ற மூன்று அதிமுககாரர்களுக்கு

மரண தண்டனை விதித்து,

பின் அதை ஆயுள் தண்டனையாக மாற்றி ..

இப்போது அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

 ... இதற்கு எதிர்ப்பாக மாணவிகளின் குடும்பத்திலிருந்தும் ஏதும் எதிர்ப்பு வரவில்லை. ...தினசரிச் செய்தி (8.7.18)

இச்சம்பவம் பற்றி இன்றைய பேலியோ புகழ் நியாண்டர் செல்வன்,  .. அன்றைய $செல்வன் அவர்கள் எழுதிய மகிழ்ச்சிப் பதிவுகளுக்கு எதிராக நான் ஒருபதிவை 23.2.2007 பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவிட்டேன். பின் அதனைத் தொடர்ந்து ஒரு மீள் பதிவாக 12.3.2016ல் அதைப் பதிவிட்டேன். ஆக. ஒரே நிகழ்வைப் பற்றிய  மூன்றாவது பதிவு இது.

இதை வாசித்ததும்  என் முதுகை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். பதினோரு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்ன “தீர்க்க தரிசனம்” அச்சு அசலாக இன்று அப்படியே நடக்கிறது. சும்மா சொல்லக்கூடாதுடா, தருமி ! பின்னீட்ட ...போ !

பழைய பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள். தொடுப்புகள் கீழே.
  
(23.2.2007)

(12.3.2016)

ஆனால் இது போன்றவைகள் நடக்க நாம் தான் முழுக்காரணம். ஏன் தெரியுமா? இந்த மாணவிகள் எரிக்கப்பட்டு, சில மாதங்களில் அடுத்த பொதுத் தேர்தல் வந்தது. எரிந்து போன நம்ம பெண்களின் நினைவு நிச்சயமாக மக்கள் மனதில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்தத் தொகுதியில் வென்றது அவர்களை எரித்த அதே அதிமுக கட்சி தான்.


சூடு .. சொரணை என்பார்களே... 

அப்படியென்றால் என்னங்க???



2 comments:

G.M Balasubramaniam said...

முதலில் தண்டனை வழங்கப்பட்ட சிலர் விடுதலையாவதும் தண்டனை குறைக்கப் படுவதும் சகஜ மாகி விட்டது நீதி வழங்குவதில் குறையோ

வேகநரி said...

ஆசியா தாய்லாந்தில் சிறுவர்கள் மீட்கபட்ட சாதனை நிகழ்வை உலகே பாராட்டுகிறது. இங்கே ஜெயலலிதா செய்த ஊழல் குற்றத்தை உறுதி செய்து வந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுககாரர்கள் பஸ்சை எரித்து மாணவிகளை கொலை செய்கிறார்கள், இப்போ விடுதலையாக போகிறார்கள்.
--------------
உலகக் கோப்பை பற்றி பல பதிவுகள் எழுதியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி.
நேரமின்மையால் உடனே படிக்க முடியவில்லை.பின்பு அவசியம் படிப்பேன்.

Post a Comment