சிறையில் அடைபட்ட பிறகு ஸ்டேன் அவர்களின் உடல்நலம் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் சிறை அதிகாரிகள் கூட மிகவும் இரக்கமின்றி ஸ்டேன் தன் பையில் எடுத்துச் சென்றிருந்த உறிஞ்சுகுழலுடன் கூடிய தம்ளரைக் கூட அவருக்கு தர மறுத்து விட்டனர்..தனக்கு அந்தத் தம்ளரைத் தர வேண்டும் என்று தேசிய புலனாய்வுத் துறைக்கு அவர் ஒரு விண்ணப்பம் கொடுத்திருந்தார். அதைப்பற்றி ஆராய்வதற்கு அந்த அமைப்பு 20 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆயினும் முடிவில் அவரது விண்ணப்பம் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. நண்பர்கள் பலரும் பெரிய எண்ணிக்கையில் அந்த தம்ளரின் வடிவத்தை.சிறைகளில் தொடர்ந்து ஒட்டியதற்குப் பிறகு ஸ்டேன் அவசியத்திற்காக கேட்ட தம்ளர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இந்தக் கருணை பிறப்பதற்கு 50 நாட்கள் தேவைப்பட்டது அங்குள்ளவர்களுக்கு! தம்ளர் ஓர் ஆயுதமல்ல.; ஆனால் அவருக்கு அது ஓர் அத்தியாவசிய தேவை; அது கிடைப்பதற்கு, மக்களின் கருணை பிறப்பதற்கு 50 நாட்கள் தேவையாகி விட்டது.
மனத்தளவில் இறுகிப் போயிருந்த ஸ்டேனின் மனது சிறையின் அழுத்தத்தால் மெல்ல நொறுங்கிப் போக ஆரம்பித்தது. .... தொடர்ந்து கேட்ட பிணையும் அவருக்குக் கிடைக்கவேயில்லை. இதயப் பிரச்சனையும் உண்டாகி சிறையிலேயே மரணம் அடைந்தார்.
2021 ஜூலை 5 மதியம் 1.30 மணிக்கு அவரது இறுதி மூச்சு காற்றோடு காற்றாகக் கலந்தது.
No comments:
Post a Comment