இந்தப் போராட்டம் வெறுமனே குடியரசைக் காப்பாற்றுவதற்காக மட்டும் எழுந்ததல்ல. அதனோடு சமூக நீதி, சிறுபான்மையினரின் உரிமைகள், பொருளாதார சூழ்நிலைகள் உரிமைகள், நியாயங்கள் பெறுவது என்பதும், உலகம் பொருளாதார மயமாகும் போது நடக்கும் சமமின்மை முற்றிலுமாக தகர்க்கப்பட வேண்டும் என்பவைகளும் இதில் அடக்கம். . இந்தப் போராட்டம் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், வேலை பெறுவதற்கான போராட்டம் என்பதையும் தாண்டி நமது அடிப்படை உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பதும் அடங்கும். இந்த அடிப்படை உரிமைகள் உலக அளவில் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற நிலைக்கான போராட்டம். பி்.கோ. கைதிகள் 16 பேரும் இது போன்ற ஒரு சமூக மாற்றம் கொண்டு வருவதற்கே இந்த யுத்தத்தைத் தங்கள் கைகளில் எடுத்தார்கள்.
குடியரசுக்காக நடக்கும் இந்தப் போராட்டம் முடியவில்லை. இந்தியாவில் குடியரசு நலிந்திருப்பது அப்படியே விடக்கூடிய ஒன்றல்ல. இந்த நூல், அதன் வாசகர்கள் அனைவரும் குடியரசின் நன்மைக்காக இணைந்து ஒன்றாக நிற்க வேண்டும். அதுவே குடியரசிற்குக் காவலாக நிற்கும். நிமிர்ந்து நிற்கும் இந்த போராளிகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்வதும், அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் எவ்வளவு திரிக்கப்பட்ட ஒன்று என்றும். உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமே ஒன்று திரண்டு இந்த யுத்தத்தை, உலகின் தர்ம யுத்தமாக மாற்ற வேண்டும் அதன் மூலமாகவே குடியரசு இங்கேயும், உலகத்தில் எங்கேயும் புதிதாகக் காப்பாற்ற முடியும்.
No comments:
Post a Comment