‘சமூக நீதி’ என்ற பெயரில்
திரிந்து போன பால்!
ஆனந்த் டெல்டும்டெ
தமிழாக்கம்: தருமி
மக்களுடைய எண்ணிக்கை கணிசமாகத் தெரிய வந்தால், அதை வைத்து மக்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளைக் கோரிப் பெறுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று பலரும் ஒரு கற்பனையில் மிதக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு சுதந்திரத்தையும் துணிச்சலையும் கொடுக்கும் என்றும் கருதுகிறார்கள்.
இது, சில முக்கிய உண்மைகளைத் தவிர்த்து விட்டுப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஏனெனில், சாதிக் கணக்கெடுப்பு நடப்பதால் மட்டுமே - மக்களுக்குச் சரியான விகிதாச்சாரத்தோடு - அனைத்திலும் பங்கு கிடைக்கும் என்று நினைப்பதே தவறு.
அதையும் கடந்து, பல்வேறு ஆதிக்கச் சக்திகளின் அதிகாரங்களையும் வசதிகளையும் கேள்வி கேட்கும் நிலை வர வேண்டும். சாதியக் கணக்கெடுப்பின் மூலம் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் சம பங்கு கேட்கும் நிலை இயல்பிலேயே வர வேண்டும். இதிலிருந்து தெரியும் ஒரு செய்தி, தரவுகள் மட்டுமே போதாது; அவை வெறும் ஆயுதங்கள் மட்டுமே.
சாதிப் பட்டியலை வைத்துக் கொண்டு, அந்தப் படிநிலைகளை உடைக்காமல், ஆட்சியமைக்கும் முயற்சி மட்டும் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. சாதிகளை மக்களின் புற அடையாளங்களாகவும், மக்களின் சமூக எல்லைகளை வரைமுறைப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
முழு கட்டுரையை வாசிக்க:
https://dalitmurasu.com/posts/6aa3e4467854facd07144db8
முகநூல் இணைப்பு:
https://www.facebook.com/share/p/1EoUYAuajE/

No comments:
Post a Comment