Sunday, August 28, 2005

60. மாநாட்டு வேலைக்குப் போகணும்...

இன்னைக்கு ராத்திரி மதுரை போறேன். ஏன்னு கேக்றீங்களா?

நேத்து ராத்திரி நல்லா தூங்கின பிறகு யாரோ எழுப்பினாங்க. யாருன்னு கேட்டேன். நம் எதிர் கால முதல்வர், கறுப்புச் சிங்கம், மதுர கீரத்துரை அரிசி மில்லின் அன்புப் புதல்வன், நம்ம கேப்டனின் மச்சான் என்றார், வந்தவர். என்ன வேணும்னேன். 'நீங்க'தான் அப்டின்னார். எனக்கு ஒண்ணும் புரியலை. பிறகுதான் விதயத்துக்கு வந்தார். 'நம்ம கட்சிக்கு தமிழ்மண ப்ளாக் உலகத்துக்கு கொ.ப.செ.வாக நம்ம கேப்டன் உங்களை தெரிஞ்செடுத்திருக்கிறார்' என்றார் வந்தவர். உடனே உக்காரச் சொல்லி, காப்பி பலகாரம் கொடுத்து உபசரிச்சேன்.

'என்னங்க இப்படி, எனக்கு என்ன தெரியும்னு இப்படி ஒரு பெரிய பொறுப்பை கேப்டன் குடுத்துட்டார்'னு கேட்டேன்.

எல்லாம் அப்டி அப்டிதாங்க. இப்ப, என்ன தெரியும்னு நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சீங்க? html...ip number...graphics...இப்படி ஏதாவது தெரிஞ்சா ஆரம்பிச்சீங்க. ஒரு லின்க் கொடுக்க தெரியுமா உங்களுக்கு? சுட்டி தெரியும்; கீ போர்டு தெரியும். இத வச்சுக்கிட்டே ஏதொ நீங்க ப்ளாக்-பொழப்ப ஓட்டல? இப்ப பாருங்க உங்களுக்கும் திட்டி திட்டி வாசிக்கிறதுக்கோ, இல்ல, வாசிச்சி வாசிச்சி திட்றதுக்கோன்னு நாலு ஆளுக இல்லியா? சிலரு + வேற போடுறாங்களாமே, இல்லியா? அதுமாதிரிதாங்க இதுவும். அதல்லாம் சமாளிச்சுப்புடலாம்; கவலையே படாதீங்க. கேப்டனுக்கு நம்ம மதுர ஆளு வேணும்னு ஆயிப்போச்சு. ஏன்னா, அவரு ஆஸ்தான அலங்காநல்லூர் ஜோசியரு இதுக்கு ஒரு மதுர ஆளுதான் போடணும்னு சொல்லிட்டார்லா' அப்டின்னு சொன்னதும் எனக்கும் ஒரு 'இது' வந்திரிச்சி.

'சரீங்க, நான் என்ன பண்ணனும்னு கேட்டேன்.

'இன்னும் இரண்டு மூணு நாள்ல நல்ல நாள், நல்ல நேரம் பாத்துட்டு கேப்டன் உங்க பேரை அதிகார பூர்வமாய் அறிவிச்சுடுவார். அதுக்குப் பிறகு நீங்க மள மளன்னு வேலய ஆரம்பிச்சுருங்க' அப்டின்னார் மச்சான், I mean, கேப்டனோட மச்சான்.

'சரி'ன்னு எந்திரிச்சி 'எல்லாம் பாத்துக்கங்க; தமிழ் ப்ளாக்கர்க ஓட்டு ஒண்ணுகூட வெளிய போயிரக்கூடாது; பாத்துக்கங்க. அதுக்கு நீங்க தான் பொறுப்பு. அதுக்கு என்ன வேணும்னு முதல்ல சொல்லிடுங்க; எல்லாம் கவனிச்சுடுவோம்'னார். அந்தக் 'கவனிச்சுடுவோம்'னு சொன்னதுமே எனக்கு மூளை வேல செய்ய ஆரம்ப்பிச்சிருச்சி.

புறப்பட்டவர் சடாரென திரும்பி 'இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு. மள மளன்னு வேல ஆரம்பிச்சிருங்க' என்றார். 'என்ன இரண்டு வாரத்தில'ன்னு கேட்டேன். கொஞ்சம் கோவம் வந்திருக்கும்போல. இருக்காதா பின்ன. மெனக்கெட்டு என்ன கொ.ப.செ. வா போட்ருக்காங்க. அவரு சொன்ன பிறகுதான் 'நம்ம கட்சி' மாநாடு மதுரல நடக்க போற விதயம் ஞாபகத்திற்கு வந்திச்சு. நான் ஒரு பெரிய மொடாக்குதான்; நம்ம கட்சி, நம்ம ஊர்ல நடக்கப் போகுது; நான் எப்டி அத மறக்கலாம். 'சாரி'ங்க'ன்னு சொல்லிட்டு 'இப்பவே ஆரம்பிச்சிடலாம்'னேன்.

'உடனே நம்ம ஊருக்கு கிளம்புங்க. மாநாட்டு வேல எல்லாம் நல்லா பாத்துக்குங்க. அநேகமா, நம்ம கட்சியின் ' உ.வெ.கொ.ப.ச' வா மாநாட்டு மேடைல உங்கள நம்ம கேப்டன் அறிவிச்சுடுவார்', அப்டின்னர். வழக்கம்போல மொடாக்குக்கு புரியல.

'அது என்னங்க...உ.வெ.கொ.ப.ச. ?' அப்டின்னேன். கொஞ்சம் முறைச்சார். பிறகு, மூஞ்சில ஒரு சிரிப்பை ஓடவிட்டு, 'உள்நாட்டு வெளிநாட்டுக்கு கொள்கை பரப்புச் செயலாளர்' என்றார். அப்டின்னா, கட்சிக்கு முழுசுமா நாந்தான் கொ.ப.ச. அப்டின்ற உண்மை புரிஞ்சுது. அடுக்கடுக்கா எனக்கு பதவிக்கு மேல பதவியா கொடுத்துட்டு மச்சான் 'டக்'னு போய்ட்டார்.

'ஆஹா, இன்னும் ரொம்ப விதயம் டிஸ்கஸ் பண்ணாம போய்ட்டோமே'ன்னு இருந்திச்சு.

ஏன்னா, எனக்குத் தெரியும். இந்த விஷயம் லீக் ஆனதும் 'எனக்கு கட்சியில இந்த பதவி வாங்கிக்கொடு, அந்தப் பதவி வாங்கிக்கொடு; நம்மள அப்டி கவனிச்சுக்கோ, இப்டி கவனிச்சுக்கோன்னு' நம்ம வலைஞர்கள் மொய்ச்சுடுவாங்கன்னு. எல்லாம் நல்லா யோசிச்சுதான் செய்யணும்னு முடிவெடுத்திருக்கேன். சும்மா இந்த லொள்ளு பண்ற கேசுகள எல்லாம் பக்கத்தில சேத்துக்கவே கூடாது.

மாநாட்டு வேல தலைக்கு மேல இருக்கு... மச மசன்னு நிக்காம வேல ஆரம்பிக்கணும்னு நினச்சுக்கிட்டு இதோ மதுரைக்குக் கிளம்பிட்டேன் இன்னைக்கு ராத்திரியே! அங்க பாப்போம்...சரியா?

19 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Henk said...
This comment has been removed by a blog administrator.
P.V.Sri Rangan said...
This comment has been removed by a blog administrator.
Information Revealed said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

அய்யா கருணா என்னும் மு.பச்சையப்பன் என்பவரே,

மன்னிக்கணும் உங்க பதிவை எடுத்ததற்கு.simple reason: it completley robs away the funny side of my post.
you post it in your blog and please give me the link. right?

Balaji-Paari said...

Dharumi,
enakku ennpost-nnu kettu seekiram sollunga. Appuram canada -ko.paa.se-yaa irukka ennakku aatchebam illai...ithukku eppadi gavanikkanumo...appadi gavanichukoonga...:)) :))

முகமூடி said...

பமகவுடன் கூட்டணி வேண்டி தூதனுப்பி, பேச்சு வார்த்தை நடந்து வரும் வேளையிலே, (எதிர்கால) கூட்டணி கட்சியின் தலைவரிடம் ஒரு வார்த்தை கலந்தாலோசிக்காமல் மட்டுமின்றி, சரித்திரத்திலேயே இல்லாத வகையில் கொபசெ பதவிக்கு ஒரு ஆடவரை அமர்த்தும் விகாந்தருக்கு பமக தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது

குழலி / Kuzhali said...

அ*ன் மன்றத்து ஓட்டு வேண்டுமெனில் எங்கள் தலைவி அ*னோடு சேர்ந்து நடிப்பேன் என்று அடம்பிடித்து அக்கா ஜோ*கா வை மிரட்டியது போல தன் பலத்தை வைத்து மிரட்டக்கூடாது, இதற்கு சரியென்றால், கேப்டனுக்கு தான் எங்கள் மன்றத்து வேட்டெல்லாம் சாரி ஓட்டெல்லாம்.

awwai said...

vevaramaana aalu indha darumi! ippo ko.pa.se; apparam CM, apparam PM, apparam 'dictator', apparam thanadhu mundhaya blog kanava ninavaa aakidalaamnu kanavu kaanaraaru!
... kalaindhu pogum megamgal!

துளசி கோபால் said...

தருமி,

இது அநியாயம். அதெப்படி உள்நாடு வெளிநாடு ரெண்டும் உங்களுக்கு?

இங்கே ஒரு மனுஷி இருக்கரது மச்சானுக்கு( அதாங்க விஜயகாந்தின் மச்சானுக்கு) தெரியலையாமா?

அதுவும் கோபால் இங்கெ 'கிறைஸ்ட்சர்ச் விஜயகாந்த்' பட்டம் வாங்கியிருக்கறப்ப, இதெல்லாம் நல்லால்லே சொல்லிப்புட்டேன் ஆமா!

தருமி said...

பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது. ஒழுங்கா நல்ல பிள்ளையா இருந்தா,first applicant என்ற முரையில் 'ஏதாவது' செய்யப்படும்.

முகமூடி, சரி இந்த ஆளை கொஞ்சம் பிறகு கவனிக்கலாமேயென நினைச்சிருந்தேன். இப்ப எல்லாம் இல்லன்னூ ஆயிப்போச்சுல்ல.

குழலி, இதெல்லாம் 'நம்ம' விதயமாச்சே. சத்தம் போடாம 'கமுக்கமா' முடிச்சுடுவோம், சரியா?

அவ்வை, பாவி...பாவி...சாபமா போட்ற. தங்கத் தலைவனை வச்சு என்னென்ன பண்றன் பாரு.

துளசி, பொறாமை..பொறாமை...ஒரு மனுசன மேல வரவிடமாட்டீங்களே!
அது சரி, தம்பி கோபால் என்ன எங்க கேப்டன் மாதிரி ரொம்ப அழகோ?

தருமி said...

பாலாஜி-பாரி, என்ன வெளயாட்டா? யாரு யாரை கவனிக்கிறது. ஒழுங்கா நல்ல பிள்ளையா இருந்தா,first applicant என்ற முரையில் 'ஏதாவது' செய்யப்படும்.
தவறு திருத்தப்படுகிறது.....என்ற முறையில்...

துளசி கோபால் said...

//அது சரி, தம்பி கோபால் என்ன எங்க கேப்டன் மாதிரி ரொம்ப அழகோ? //

தருமியின் சந்தேகத்தைத் தீர்த்துரணும்.

தனிமடல் பாருங்க!

தருமி said...

ஆஹா, துளசி, இப்டி போட்டோ காமிச்சு, உங்க இன்புளியன்சை நிரூபிச்சி, ரொம்ப பயமுறுத்திறீங்களே!

ஆனா, உங்களை மாதிரியெல்லாம் இல்லை, தம்பி கோபால். பாத்தாலே நல்ல மனுஷனா தெரியறார். நம்ம பதவிக்கு வேட்டு வைக்கமாட்டார்.

துளசி கோபால் said...

தரு மி,
நம்ம 'இன்புளியன்ஸ்' இது மட்டுமில்லை. இன்னும் பல நட்சத்திரங்களோடவும்( சினிமா & ஸ்போர்ட்ஸ்) இருக்கு! அதுக்குன்னே ஒரு புகைப்படப்பதிவு ஆரம்பிக்கலாம். ஆனா வேணாமுன்னு அடக்கமா(!) இருக்கேன்:-)

Balaji-Paari said...

அட போங்க தருமி..
நான் bad boy-ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க..கேப்டன் மட்டும் good boyன்னா சொல்ல்லுவாரு. என்னோட அரசியல் எதிர்காலம் ரெண்டு நாள்ல இருண்டு போச்சே....:(

:) :)

Aarokkiam said...

ஒரு சிறு முக்கியமற்ற அறிவிப்பு

தமிழ்மணம் சம்பந்தபட்ட நிரல்களை என் பதிவிலிருந்து நீக்கியிருக்கிறேன். காரணம் அவர்கள் என் பதிவை நானாகவே நீக்காவிட்டால், தனி விளக்கம் கொடுத்து நீக்க வேண்டிவரும். இதுவரை நான் எழுதியவை அர்த்தமின்றி போக வாய்ப்புள்ளது.

இந்த பதிவு இனி தமிழ்மணத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது தமிழ்மண நிர்வாகிகளைப் பொறுத்தது. அதே சமயம் என் பதிவில் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ள சில முல்லாக்களின் பதிவையும் நீக்க வேண்டும். நான் எழுதுவதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் எனக்கு எதிராக பின்னூட்டமிட்டு வருவதே இவர்களின் பழக்கமாக இருக்கிறது. இது போன்ற பதிவுகள் தேவையா?

அதே போல யாரெல்லாம் இந்த பதிவை தங்களுடைய பதிவுகளில் இணைப்பு கொடுக்கிறார்களோ அது அவரவர் விருப்பம். அவர்களது பதிவின் முகவரி இந்த பதிவில் இருக்கலாமா என்பது பற்றி பின்னூட்டத்தில் குறிப்பெழுதினால், அதனை இணைக்கிறேன். இது ஒரு ரெசிபுரோக்கல் மற்றும் வல்காரிட்டி இன் டினமினேசன் அடிப்படையில் செய்கிறேன்.

நேசகுமார், ஐனோமினொ என்ற பெயரிலும் நான் எழுதிவருவதால் என்னமோபோ என்ற என்பதிவை தொடர்வதில் பல தொழில்நுட்ப சிக்கலையும் மன உளைச்சலையும் சந்திக்கிறேன்.இந்த பதிவை எதிர்த்து எழுதுபவர்களது இணைய முகவரியை இந்த பதிவில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். (உதாரணத்துக்கு அபு முஹை, நல்லடியார், இறைநேசன், அப்துல் குத்தூஸ், அபு அதில் ஆசாத்). கொடுப்பதன் ஒரே காரணம், நான் எதனை எதிர்க்கிறேன் என்பதும், நான் எதிர்க்கும் விஷயத்தை முழுமையாக இந்த பதிவின் வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும். அபுமுஹை, நல்லடியார் போன்றோர் என்ன எழுதுகிறார்கள் என்பதை நன்றாக முழுமையாக படித்து விளங்கிக்கொண்டு இந்த என்னமோபோ பதிவை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்களது வார்த்தைகளை நான் திரிக்கிறேன் என்று வாசகர்கள் கருதினால், அதனைப் பற்றி எழுத அது வசதியாக இருக்கும்.

நான் இந்த முடிவை எடுக்கக் காரணம், இந்து மதத்தில் இருந்து கொண்டு, இஸ்லாத்தை மட்டும் திட்டித் தீர்ப்பதால் பிராமனர்கள், எந்த சிரமமும் இன்றி வருணாசிரமத்தை தினிக்கிறார்கள்.காஞ்சி சங்கராச்சாரியின் வீழ்ச்சிக்கு பின்னும் பிராமனீயம் ஒழியாது என நேசகுமாராகிய நான் கருதுவதால் பல்சுவை விசயங்கள் மட்டும் இனி எழுதப்போகிறேன். ஜெயமோகனை மதிக்கிறேன். அதுவும் என் ஊர்க்காரன் என்பதால்.

புலிப்பாண்டியும் நானும் சேர்ந்துதான் இதுவரை எழுதி வந்தோம்.இதற்கான நிதியுதவிகளை நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நாகர்கோவில் RSS மூலம் ஏற்பாடு செய்திருந்தார். தற்போது அவரே எழுத ஆரம்பித்து விட்டதால் அத்தகைய உதவிகளை எதிர் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆதாயம் இல்லாமல் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதனால்தான் புலிப்பாண்டியை தவிர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் என் நிலையை புரிந்து கொள்ளவில்லை.

மற்றபடி, இந்த பதிவை படிப்பவர்களுக்கு, இந்த பதிவை படிக்க நான் கொடுக்கும் கஷ்டத்தை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்மணம் என்ற ஒரே இடத்தில் பார்த்து எளிதில் இந்த இணைப்புக்கு வந்து படிப்பது வசதியானதுதான். ஆனால், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நான் எந்த குழப்பத்தையும் தர விரும்பவில்லை. முடிந்தால் படியுங்கள். இல்லையேல் உதாசீனம் செய்துவிட்டு போங்கள். ஆயிரம் வருடங்களாக புரிந்து கொள்ளாததை இந்த நிமிடமேவா புரிந்து கொள்ளப்போகிறீர்கள்? தருமி,காஞ்சி பிலிம்ஸ், வெங்காயம், அமலசிங் போன்ற வலைப்புக்களை புறக்கணியுங்கள்.

நான் வேறெந்த பதிவிலும் பின்னூட்டம் எழுதுவதில்லை. இதுவே என் கடைசி பின்னூட்டம். அதுவும் சுய விளக்கமாகவே.நேசகுமார், புலிப்பாண்டி எழுதியவை போலி பின்னூட்டம் என்று எனக்கு தோன்றினால் அதுவும் நீக்கப்படும். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பின்னூட்டங்கள் நீக்கப்படும். எரிதங்கள் நீக்கப்படும். (எனக்கு நேரமிருந்தால்).

தருமி said...

"நான் bad boy-ன்னு தான் எல்லாரும் சொல்றாங்க.."
- பாலாஜி, எல்லாரும் சொன்னாங்கன்னா பொய்யாவா இருக்கப் போவுது! ஏதோ, இப்பவாவது உண்மை தெரிஞ்சுதே. பாரி, உங்கள் மெயில் முகவரி வேணுமே, please.

துளசி, அடக்கம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்க என்ன பண்றீங்க.. இதே ப்ளாக்கிலேயே படமும் கதையுமாக ஜமாய்ங்களேன். எதிர்பார்க்கிறேன்.

satya said...

dear tharumi...
kalaasitteeenga...i like your blogs mate!!! but dont ever try to visit my blog ...i dont write much in it!!!

but ppl like u, kuzhali, suresh etc., inspiring me to write...

kudos!

Post a Comment