Wednesday, September 14, 2005

68. எனக்கு மதம் பிடிக்கவில்லை...8

தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
"மதங்கள் எதுவும் எனக்குப் பிடிக்காது போயின; அதனால், எனக்கு மதம் பிடிக்கவில்லை."
பின்னூட்டமிட நினைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: எனக்கு சமயங்களில் ஏன் நம்பிக்கை இல்லாமல் போனதென்பதைப் பற்றி விலாவாரியாக எழுதியாயிற்று. அதனால், கடவுளின் உந்துதலால் எழுதப்பட்டதாகவோ, கடவுளே தந்ததாகவோ நம்பப் படும் சமய நூலகளின் மேலும் நம்பிக்கையில்லை. பின் ஏன் அவைகளை மேற்கோள் காட்டினாய் என கேட்டால், அவைகளில் என் பார்வையில் நான் கண்ட குழப்படிகளையோ, அல்லது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளுக்கு எதிர் வாதமாக அவர்களே நம்பும் 'வார்த்தைகளையே' பயன்படுத்தவோதான் அவைகளை மேற்கோளிட்டேன். ஆகவே, உங்கள் எதிர் வாதங்களில் நீங்கள் மேற்கோள்களோடு வந்தால் அவைகளை நான் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சமய நூல்களின் மேற்கோள்களின்றி சாதாரண மனித அறிவுக்கு எட்டும் (எனக்கு அவ்வளவே முடியும் என்பதால்..) காரணங்களையோ,விவாதங்களையோ முன் வைத்தால் என்னால் முடிந்த அளவு எதிர்வினையாற்ற (react) முயல்வேன்.


சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகள்:

சமயங்களில் நான் கண்ட சில ஒற்றுமைகளால் எனக்கு நானே சமயங்கள், சமய நம்பிக்கைகள் மேல் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. முடிவு என்ன என்பதை பிறகு கடைசியில் காண்போம்; இப்போதைக்கு நான் கண்ட ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

1.) carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.

எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம்.

2.)"இரண்டாம் வருகை", "அந்தி நாள்", "தீர்ப்பின் நாள்" - போன்ற பல பெயர்களில் உள்ள கோட்பாடுகளும் பல சமயங்களில் காணப்படுகின்றன. தீர்ப்பின் நாள் - judgment day - கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஒன்றே. இந்து சமயத்தில் கடவுளின் பத்தாவது அவதாரமாக எதிர் பார்க்கப்படுவதும், இறுதிக் காலமான கலியுகத்தில் அழிக்கும் 'கல்கி' அவதாரமாக கடவுள் வருவாரென்பதும் உள்ளது. 'இறுதி எச்சரிக்கை' என்று ஏன் ஒன்று - கல்விச்சாலைகளில் நம்மைக் கலங்க வைக்கும் final exam மாதிரி - இருக்கவேண்டும்? யோசிப்போம்.

3.) "திரித்துவம்" - கடவுளின் மூன்று நிலைகள், அல்லது கடவுளர்களே மூன்றாக இருப்பது என்பதும் பல சமயங்களில் பரவிக்கிடக்கும் ஒரு கோட்பாடு. கிறித்துவத்தில் - பிதா, மகன், ஆவி என மூவர்; ஆனாலும் ஒரே கடவுள். இந்து சமயத்தில் - பிரம்மா (ஆக்கல்), விஷ்ணு (காத்தல்), சிவன் (அழித்தல்) என முக்கடவுள்கள். தாவோயிஸத்தில் 'the three pure ones'.

4.) ஆத்மா, ஆன்மா என ஏறத்தாழ எல்லா மதங்களுமே ஒரே மாதிரியாகவே பேசுகின்றன. இந்த ஆத்மா /ஆன்மா அழியாத ஒன்று என்ற நிலைப்பாடும் எல்லாரிடமும் உண்டு. ஆனால், ஆபிரஹாமிய மதங்கள், கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார் என்ற நம்பிக்கையால், மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டென்கிறார்கள். இந்து சமயமோ எல்லா உயிர்க்கும் ஆன்மா உண்டென்கிறது. மனிதன் இறந்த பிறகு அவனுக்குக் கிடைக்கும் (காரட்டோ, குச்சியோ) வெகுமதியோ, தண்டனையோ அந்த ஆத்மாவினால், ('நித்தியத்திற்கும்') அழிவின்றி காலா காலத்துக்கும் அனுபவிக்கப்பட வேண்டுமென கூறப்படுகிறது.

5.) ஓஷோ சொகிறார்: "All religions are very oppressive." உண்மைதானே. கடவுள் பெயரால் மக்கள்தான் எப்படியெல்லாம் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். பாத யாத்திரை, விரதம், உருளல், பிறழல், உடம்பெல்லாம் அலகு - இப்படி ஒரு பக்கம். தங்கள் கைகளில் ஆணிகளை அடித்துக் கொள்ளும் கூட்டம் இன்னொரு புறம். தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு உடம்பெல்லாம் ரத்த விளாராக ஆக்கிக்கொள்ளும் மதத்தினர் இன்னொரு புறம். எந்தக் கடவுளும் இப்படியெல்லாம் பண்ணிக்கொள் என்று கூறியதாகத் தெரியவில்லை.

அதேபோல, எல்லா மதங்களுமே ஏழ்மையை பெருமைக்குரிய விதயமாகவே பார்க்கின்றன. எதற்காக ஏழ்மை உயர்த்தப் படவேண்டும்? மக்களில் பலரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களைக் 'குழுமை'ப் படுத்தவா?
செக்ஸ் ஒரு தகாத விதயமாக, மறைக்கப் படவேண்டிய ஒரு விதயமாக, ஒடுக்கப்படவேண்டிய காரியமாக ஏன் கருதப்பட வேண்டும். பசி போல அதுவும் ஒரு அடிப்படை உணர்வு. பசி என்பதால் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சாப்பிட்டு விடுகிறோமா? அதே போல் செக்ஸ் சிந்தனைகளும் இருந்தால் போதுமே. celibacy ஏன் மதங்களால் தீவிரத் தன்மையோடு உயர்த்தப் படுகின்றன?

6.) நம்பிக்கையாளர்களிடம் அதிகமாகக் காணக் கிடைக்கும் இன்னொன்று - கடவுளர்கள் நடத்தும் அதிசயங்கள் மேலுள்ள நம்பிக்கைகள். எண்ணெயும், தண்ணீரும், தீச்சட்டிகளும், தாயத்தும்,விபூதியும், மந்திரித்தலும் - எல்லாம் எவ்வளவு நம்பிக்கைகளைத்தான் வளர்க்கின்றன! Miracles எனப்படும் சமய அதிசயங்கள் எந்த மதத்தில்தான் இல்லை. ஆனால், அதில் ஒரு வேடிக்கை: ஒரு மதத்தினரின் அதிசயம் மாற்று மதத்தினருக்கு வேடிக்கையாக இருப்பதுதான். நானே இதைச் சோதித்திருக்கிறேன். கிறித்தவர்களிடம் கர்ணன் குந்தவிக்கு சூரிய பகவானால் பிறந்த முறையைச் சொன்னால் 'ஐயோ, என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது' என்று சொல்வது வழக்கம். அவர்கள் மறந்து போகும் விதயம், ஏசு மரியாளுக்குப் பிறந்ததற்கும், அந்த இந்துக் கதைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எல்லாமே நம்பிக்கையைப் பொருத்த விதயங்களே.ஏசு பலரைக் குணமாக்கினாரென்றால், பாண்டிய மன்னனுக்கு சிவனடியார் விபூதி கொடுத்து குணமாக்கினார்; கண்ணில் மண்ணை வைத்து குருடனுக்குக் கண் கொடுத்தாரென்றால், திருநாவுக்கரசருக்கு பேச்சு வந்தகதை நினைவுக்கு வருகிறதே. ஏசு துர்ஆவிகளை பன்றிக்குள் செலுத்தி கடலுக்குள் விரட்டினாரென்றால், இங்கே இந்து சமயத்தில், மதுரையில் நரிகள் பரிகளாயினவே. போதும்; சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்து,பக்தர்களுக்கு கடவுளர்கள் 'காட்சி'தருவது (apparitions). “ Many mystics have visions, and the envisioned objects almost inevitably reflect the cultural background of the mystic. Protestants never envision the Virgin Mary, but Catholics do; Jews never envision the resurrected Jesus, but Christians do; Buddhists and Hindus envision divine messengers quite different from those encountered by Western mystics'(Reason and religion” An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp306 ). இவர் சொல்வது போல, அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் அந்தந்தக் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்; மாறி வருவதில்லை! ஆனால், எனக்கும் இப்படி 'ஒரு காட்சி' கிடைத்தது. அது பற்றிய விபரம் அறிய அங்கே போகவேண்டும்.

7.) நம் உலகம் சூரியக் குடும்பத்தில் ஒரு சிறிய பகுதி; இந்தச் சூரிய குடும்பமோ 'பால் வீதி'யின் மிக மிகச் சிறிய பகுதி; இந்த பால் வீதியோ ஒரே ஒரு காலக்ஸி; இதுபோல் எண்ணிக்கையிலடங்கா காலக்ஸிகள். அப்படியென்றால், பரந்துபட்ட இந்த பிரபஞ்சத்தில் நம் உலகம் எவ்வளவு இத்தனூண்டு (insignificant)! ஆனால், பாருங்கள் எல்லா சமயங்களுமே anthropocentric-ஆக, மனித குலத்தை மட்டுமே கடவுள்கள் சுற்றி சுற்றி வந்ததாகப் பேசுவது,...அவர்களை மட்டுமே உய்விக்க அவதரித்தார்கள் என்பது...யோசித்துப் பாருங்களேன்..எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

8.) 'Making of pudding is in the eating' என்பார்கள். அம்மா செய்த சமையல் நல்லா இருக்கிற அன்னைக்கு சட்டி காலி. மாற்றியும் சொல்லலாம். சட்டி காலின்னா அன்னைக்கு அம்மா சமையல் டாப்! Process produces results; results prove the process. எல்லாம் வல்ல, நல்ல, கருணை நிறைந்த,அன்பே உருவான கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் உலகம் இப்படியா இருக்கும்? இல்லை..இல்லை..கடவுள் நல்லாதான் படைச்சார்; நானும், நீயும்தான் - அல்லது, உன்னமாதிரி ஆளுங்களாலதான் உலகம் கெட்டுப் போச்சுன்னா - அடிப்படை தப்பு இருக்கிறது அந்தக் கேள்வியில். "If this chaotic world is the creation of a god, it tells you that god had bungled! The theistic rationalists of the eighteenth century argued that when God created the world, he did either a perfect job or an imperfect job. If he did a perfect job, there was no need for him to interfere with the orderly workings of events within the world, since any deviation from perfection would be for the worse. If there was a need for him to suspend the laws of nature, this implied that he had bungled the job in the beginning. (Reason and Religion, pp 94)


9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. மூட நம்பிக்கையோ, என்னவோ!!
NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.
நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?

மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.(Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves - perhaps our actual selves, perhaps our ideal selves - on the universe as a whole....... The image of God as a divine father has strong Freudian overtones”.)Reason and religion" An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285. இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles. என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.

வாசிக்கும் நம்பிக்கயாளர்களுக்கு - அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் - கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த 'முடிவு'க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,..........

அப்படியே நீ சொல்வதுபோல மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்றால், அப்படித் தோன்றிய மதங்களின் நோக்கம் என்ன? அப்படிப் படைத்த நம் முன்னோருக்கு அதற்குரிய நோக்கம் என்ன? - என்பது உங்கள் கேள்வி.

பதில்: எனக்கும் தெரியாது. ஆயினும், இப்படி இருக்குமா?

1. Policing the society? ஒழுங்கா நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பார்கள். பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்றால்தான் ஒரு பயம் வரும். அந்த பயம் வரத்தான் புத்திசாலி முன்னோர்கள் சமயங்களை ஆரம்பித்திருப்பார்களோ? அதனால்தானோ எல்லா மதங்களும் கடவுளையும், தண்டனைகளையும் சேர்த்தே சொல்லி நம்மை மிரட்டி வைத்திருக்கின்றன?

2. Psychotherapy? இது என் வாழ்க்கையில் நானே அனுபவித்தது. யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?

வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம் முழுமையாகச் சரணடைய ஒரு 'இடம்' வேண்டும்.(கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இதோ அந்த வரிகள் - மனத்தின் வேதனையை அனுபவித்துச் சொல்லும் அந்தக் கவிதை வரிகள்:

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் - எவ்வளவு சரியான வரிகள். பல துயர நேரங்களில் இந்த மனித குலத்தின் மேல் வெறுப்பு வருவதில்லையா?

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே)

எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் - மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் - உடனடியாக.

இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?


மனிதம் போதுமே!

I REST MY CASE !
******************* ******************* *****************


பிடித்த சில மேற்கோள்கள்:

Some quotes:

NIETZCHE: Men would rather believe than know, have the void as purpose than be void of purpose.

E.O. WILSON (Sociobiologist): The enduring paradox of religion is that so much of its substance is demonstrably false, yet it remains a driving force in all societies.

RAPPAPORT (anthropologist): Sanctifications transform arbitrary into the necessary and regulatory mechanism which are arbitrary, are likely to be sanctified. The extent that the roles have been sanctified and mythologized, the majority of the people regard them as beyond question and disagreement is defined as blasphemy.

ALFRED J. AYER (philosopher) in “The Claims Of Theology” “If one thought of the world’s history been planned by its creator, a strong case could be made for inferring that he is malevolent; if he is unaware of what is happening here, then he cannot be omniscient and omnipotent and if does nothing about it, then he most definitely cannot be benevolent!”

  CHARLES DE MONTESQUIEU:    If triangles have gods, their gods would be triangles.

? : Thank God! I’m an atheist !! 
You talk to God, you're religious. 
God talks to you, you're psychotic.”Doris Egan

I REST MY CASE !

*

37 comments:

Lucky Balaraman said...
This comment has been removed by a blog administrator.
inomeno said...

என் அறிவுக்கு எட்டியது.

//எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. //

ஸ்வர்க்கம் , மோட்சம் , நரகம் , அல்-ஜன்னத்(மோட்சம்?), ஜன்னத்(நரகம்?) .இவை இறந்த பின் வருபவை.

//ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன.//

'நிர்வாண நிலை',இது வாழும் போது அடைவது.

ஆகயால் ஜைனம், புத்தம் இதர மதத்தோடு இந்த விசயத்தில் ஒன்றுபடவில்லை என்று என்னுகிறேன் .

தருமி said...

இனோமினோ - "'நிர்வாண நிலை',இது வாழும் போது அடைவது"

திருத்திவிட்டேன்; சுட்டியமைக்கு நன்றி

துளசி கோபால் said...

தருமி,

நல்லா சிந்தித்து கவனமா எழுதியிருக்கீங்க. இதுக்குப்பின்னாலே இருக்கற உழைப்பு தெரியுது!

வாழ்த்துக்கள்.

மதம் ஏதாயாலும் சரி, மனிதன் நன்னாயால் மதி. இதுதான் என்னோட கொள்கை & விருப்பம் .

கலை said...

வணக்கம் தருமி!

உங்களது 'நான் ஏன் மதம் மாறினேன்' இல் 6 அங்கங்களும், 'எனக்கு மதம் பிடிப்பதில்லை' யும் இப்போதான் வாசித்து முடித்தேன். மிகவும் அருமையாக ஆராய்ந்து உங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போலவே எனக்கும் மதங்கள்பற்றி பல பல கேள்விகள் மனதில் வந்ததால், அவற்றை எனக்குத் தெரிந்த அளவில் எழுதியிருந்தேன். http://kaddurai.blogspot.com/ இங்கே மூன்றே மூன்று பதிவுகள் உள்ளன. அதில் இரண்டாவது பதிவில் 'மதங்களும் மனிதர்களும்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். முடிந்தால் ஒரு தடவை அதையும் பாருங்கள். உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றிலும் எனக்கும் உடன்பாடுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் உங்களைப் போல் ஆராய்ந்து, எழுதுவதற்கான, திறமை, அறிவு, அனுபவம், எனக்கு இருக்கவில்லை.

மிகவும் அழுத்தம் திருத்தமாய் இங்கே உங்கள் ஆய்வுக் கட்டுரை வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

முழுமையான சுய மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் மற்ற உயிர்களிடம் கருணை, அன்பு கொண்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதும். மதம் என்பது அவசியமே இல்லை என்றுதான் நானும் நம்புகிறேன்.

Balaji-Paari said...

Nalla oru katturai.

தருமி said...

பாலாஜி, நன்றி. ஆனாலும் ரொம்ப நீளமா போயிடுச்சோ..வாத்தியார் புத்தி, இல்ல!!

துளசி, நன்றி.
"இதுக்குப்பின்னாலே இருக்கற உழைப்பு தெரியுது!" - இதுக்கு ஸ்பெஷல் நன்றி...

கலை,நன்றி.
உங்கள் பதிவைப்படித்து அங்கேயே என் கருத்தைச் சொல்கிறேன். சரியா?

கூத்தாடி said...

மதம் குறித்த இந்த பதிவுகள் ஒரு திறனாய்வாளுக்குரிய அனைத்து அம்சங்களுடன் இருந்தது.உங்கள் பதிவு
தி.க போன்றோர்களின் முட்டாள்தனமான வாதம் அல்லாமல் தெளிவான ஆராச்சியின் மூலம் நீங்கள் இந்த முடிவுக்கு வந்ததாகத்தான் படுகிறது.

புத்த மதமும் "முற்பிறவி பயன் , மறுபிறப்பு பற்றிய நம்பிக்கைகளை கொண்டுள்ளது ,ஆனால் அது நிர்வாண நிலையை ஒரு பிறவில் அடைய முடியும் அதற்கு சித்தார்த்த புத்தரே உதாரணம் என்றும் கூறுகிறது." தம்ம பதத்தின் பலக் கதைகள் இந்து மதக் கதைகளை ஒத்தவையே.எனக்கு பிடித்த போதிசத்துவர் concept மஹாயான புத்த மதத்தின் தனிச்சிறப்பு என எண்ண்கிறேன்.புத்தர் கடவுளை பற்றியே பேசவில்லை ,ஆனால் பாவம் புத்தர் ,அவருக்கே சிலை வைத்து பூஜிப்பது முரண் நகை (Irony).


இந்து , கிருத்துவ ,இசுலாம் மதங்களை எழுதிய அளவுக்கு ஜைன,புத்த மத கோட்பாடுகளை நீங்கள் விளக்கவில்லை
எனப் படுகிறது.இஸ்லாமின் சுபி பிரிவுப் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை .ரூமி,கலீல் சிப்ரான் போன்றோரின் கவிதைகளின் உலகத் தன்மை இருக்கிறது.

உங்களின் "மனிதம்" முதல் என்னும் கொள்கை எந்த மத நம்ப்பிக்கையாளர் / எதிர்ப்பாளர்களுக்கும் ஒத்த கருத்தாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

Unknown said...

தருமி,
உங்களின் மதம் பற்றிய அனைத்துப் பதிவுகளையும் படித்தேன். மத மற்றும் கடவுள் மறுப்புக்கு இதை விட யாரும் சிறப்பாக சுருக்கமாக கூறிவிட முடியாது.

//ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை//
// மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை//
// செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும்//
// இந்த 'வெளிச்சத்திற்கு' வந்த பின் இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு //

100 % சரி

erode soms said...

தருமி அவர்களுக்கு முதல் வணக்கம்
மிகச்சிறப்பாக கொட்டியுள்ளீர்.
மதங்கள் அன்னாள் கட்சிகள் தவிர வேறில்லை.
ஆரம்பத்தில் எல்லாம் மக்கள் நன்மையன்றி வேறு ஒன்றும்
அறியோம் கதைதான்.உலகத்தையே சுற்றிக்காட்டிவிட்டீர் நன்றி

அழகு said...

தருமி, உங்களின் இந்தத் தொடர் பதிவுக்கான உழைப்பு, தெளிந்த சிந்தனைக்கு எத்துனை பொற்காசுகளானாலும் தகும்.
நானும் கூட 'மனிதம்' கட்சிதான் ரொம்ப நாளாகவே.

inomeno said...

/ஆனாலும் ரொம்ப நீளமா போயிடுச்சோ../

I collected ur gold coins here.
http://inomeno.blogspot.com/2005/09/blog-post_16.html
Hope that is fine with u.

Partha (பார்த்தா) said...

Wonderfully written!!

For the past few years I have been thinking in those lines, but you put it in paper with a clarity that I can never achieve.

Thanks a lot thrumi!

Anonymous said...

SOME MORE OLD GOLD COINS HERE FOR INOMINO

Anonymous said...

தருமியிடம் சுட்ட தங்கக்காசு

ஆனாலும் இந்து மதம்என்பது இது மட்டும்தான் என்றில்லையாதலால் இம்மதத்தோடும் எனக்கு ஒன்றுதல் இல்லை. அதுவுமின்றி, சாதியமைப்புக்குச் சமயச் சாயம் பூசி, இந்த வேறுபாடுகள் கடவுளிடமிருந்து வந்தவை என்று சனாதன தர்மம் பேசும்போது அந்த மதமே ஒரு எட்டிக்காயாக எனக்கு மாறிவிடுகிறது.

எல்லாவற்றையும் விட இவையே முக்கியக் காரணம்

எச்சரிக்கை: வயது வந்தவர்களுக்கு மட்டும் :-)))

Anonymous said...

இனோமினோ - "'நிர்வாண நிலை',இது வாழும் போது அடைவது

திருத்திவிட்டேன்; சுட்டியமைக்கு நன்றி

Anonymous said...

இதுக்குப்பின்னாலே இருக்கற உழைப்பு தெரியுது.நன்றி

Chandravathanaa said...

யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?

வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும்..........


இப்படியான சமயங்களில் பலமுறை பாடல்கள் என்னைத் தேற்றியிருக்கின்றன.

தருமி said...

koothaadi ஜைன,புத்த மத கோட்பாடுகளை நீங்கள் விளக்கவில்லை
- ஒப்புக் கொள்கிறேன். ஒரு காரணம்: நம் சம்மூகத்தில் உள்ள முக்கிய மதங்களைப் பற்றி அதிகமாகச் சொல்ல நினைத்தேன். ஆனாலு, புத்தத்தைப் பற்றி இன்னும் சேர்க்க ஆசை.

கல்வெட்டு,அழகு,Stephen, Partha,
மிக்க நன்றி
இனோமீனோ, that;s quite fine with me

சந்திரவதனா,
இப்படியான சமயங்களில் பலமுறை பாடல்கள் என்னைத் தேற்றியிருக்கின்றன - ஒரு மன அழுத்தத்தில் இருந்து வெளிவர, நம்மை நாமே மறக்க இசை, வாசிப்பு, படைப்பு - என்று ஏதோ ஒன்று.
நன்றி...பாடல் வரிகளுக்கும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள தருமி

தங்கள் வலைப்பதிவுகள் அருமை. மதம் ஏன் இன்னமும் வாழ்கிறது? அதற்கு தாங்கள் கூறியுள்ள காரணங்களுடன் இதையும் பாருங்களேன். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்ணையில் எழுதியது:
http://www.thinnai.com/science/sc1007024.html
தவறுகள் ஏதேனும் கண்டால் கூறுங்கள் ...அப்படியே எவ்வளவு தவறுகள் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு பொற்காசுகளை குறைத்துக்கொள்ளுங்களேன்.
-வாழ்த்துக்களுடன்
அரவிந்தன் நீலகண்டன்.

வசந்தன்(Vasanthan) said...

தருமி, வாசித்தேன்.
மிக்க நன்று.
முழுவதும் செரிக்கவில்லை. திரும்பவும் வாசிக்க வேணும். அப்பதான் முழுக்க உள்வாங்கலாம். (அப்பதானே இன்னொரு இடத்தில நான்இதப்பாவிச்சு ஒரு கலக்குக் கலக்கலாம்).

மு மாலிக் said...

அனைத்து மதங்களைப் பற்றியும் படித்திருப்பது பாராட்டத்தக்கது.

மு மாலிக் said...

இருப்பினும்...

சில மதங்களை கொள்கை ரீதியாகவும் (வரலாற்று சம்பவங்களைத் தவிர்த்தும்) வேறு சில மதங்களை வரலாற்று ரீதியாகவும் (கொள்கைகளை அதிகம் விமர்சிக்காமலும்) எழுதியுள்ளீர்கள்.

மேலும் ...

சுட்டிகளையும்(reference) தந்திருக்கலாம். அச்சுட்டிகளின் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்திருக்கலாம். ஏன் சொல்லுகின்றேன் என்றால் நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நபிகளார் இறந்து 200 வருடங்கள் கழித்து அவரைப் பற்றி கேள்விரீதியாக அறிந்து எழுதப் பட்டவை. அவைகளின் நம்பகத்தன்மைகள் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் சர்சையிருந்து வருகிறது என்று தங்களுக்கு கூற விரும்புகின்றேன்.

நன்றி

rv said...

தருமி
நல்லதொரு பதிவு

எல்லா மதங்களும் பொய்யென்றுதான் நானும் நினைப்பதுண்டு. இந்த அருமையான பதிவிற்கு ஒரு additionஆக என் இஸ்ரேலிய நண்பன் ஒருமுறை கூறியதை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.

கடவுள் என்பவர் gravity மாதிரி. பத்தாயிரம் அடி மேலே போய் ப்ளேனில் இருந்து கீழே குதித்தவாறே, 'கிராவிட்டி தெய்வமே, என்னைக் காப்பாற்று" என்றால் கிராவிட்டி உன்னே காப்பாற்றாது. கீழே விழத்தான் செய்வாய். அது கிராவிட்டியின் பிழையனறு. ஏனெனில் அது ஒரு உயிரற்ற, நீங்கள் சொன்னது போல் anthropocentric கடவுளைப் போல் ஒரு force இல்லை. தன் வேலையை மட்டுமே செய்யுமேயன்றி நீங்கள் கூக்குரல் கொடுத்தாலும் கண்டுகொள்ளாது. அது அதன் scopeஇலும் இல்லை.

இது மாதிரியே நான் இந்த பாவத்தை செய்துவிட்டேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்வதால் கடவுள் காப்பாற்றுவாரென்றால் நடுநிலையுடையவர் என்ற தகுதியை இழந்து அவர் ஒரு சர்வாதிகாரியின் பாத்திரத்தைத்தான் ஏற்க வேண்டியிருக்கும்.

அதேபோல, கடவுள பணித்தற்கு எதிராய் மனிதனை ஆப்பிள் உண்ணச்செய்த்தது சாத்தான் அல்லவா? அப்படியென்றால் மனிதகுலம் சாத்தானுக்குத்தானே நன்றி செலுத்தவேண்டும்? ஏன் மனிதர்களை வேண்டாமென்ற கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்?

நிறைய இருக்கிறது இந்த மாதிரி.

நல்ல பதிவிற்கு மீண்டும் நன்றி.

தருமி said...

சில references இப்போது (18.09.05)சேர்த்திருக்கிறேன் - 6-வது பகுதிக்கு மட்டும்.

தருமி said...

நீலகண்டன், வசந்தன், மாலிக், ராமனாதன் - மிக்க நன்றி

தருமி said...

நன்றி தருமி அவர்களே,

ஆனால், உங்கள் சுட்டிகள் (reference) பற்றி ஒரு சின்ன குறிப்பு:

Mirza Tahir Ahmad என்பவரின் எழுத்துக்களை எடுத்துக் கொண்டுள்ளீர். அவர் 'அஹமதியா' எனும் பிரிவினின் தற்போதைய தலைவர் ஆவார். அஹமதியா எனும் பிரிவு வெறும் 0.01% தான். அப்பிரிவின் கருத்துக்களுக்கு ஏனைய இஸ்லாமியர்கள் ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர்.

மேலும்

http://answering-islam.org எனும் இணையதளம் முஸ்லீம்களை எதிர்ப்பதற்காகவே உள்ள்தொன்று என்பதை அறிக.

மேலும்

wikipedia போன்றவைகளை இரண்டாம் தர மூலமாகவே கருதமுடியும். நீங்கள் முதன்மையான ஆதாரங்களை (those refering directly to hadiths or Quraan)முயன்றிருக்கலாம்.

மேலும் நடுநிலையான நூல்களையும் பார்த்திருக்கலாம். உதாரணங்கள்....

1) Muhammad
Author: Karen Armstrong

2) What everyone needs to know about Islam ?

Author: John L Esposito
Press: Oxford University press

நீங்கள் கூறியுள்ள குர்-ஆனின் இருந்ததாகக் கூறப் படும் 'சாத்தானிய வசனங்கள்' பற்றி Esposito-வின் புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சல்மான் ருஷ்டி-யைப் பற்றியும் தான். மேலும், உங்களைப் பாதித்ததாகக் கூறப்படும் முகம்மது(pbuh)-ஆயிஷா(RA) திருமணம் பற்றியும், முகம்மது பலரை மணக்க நேர்ந்த காரணங்கள்-சூழ்நிலைகள் பற்றியும் கூறப் பட்டுள்ளது.

மேலும் எனது வலைப்பதிவிற்கு உங்களின் வருகைக்கு நன்றிமாலிக்,

அஹமதியா எனும் பிரிவு வெறும் 0.01% தான் - அந்தப் பிரிவைப் பற்றி எழுத வேறு எங்கு செல்ல? அதோடு, 'மாறாத, மாற்றாமுடியாத' என்ற நம்பிக்கைக்கு அது ஒரு கேள்விக்குறி அல்லவா?

"முஸ்லீம்களை எதிர்ப்பதற்காகவே உள்ளதொன்று என்பதை அறிக."

- ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில் இதற்குப் பதில் கூறியிருந்தேன். எதிர் வாதங்களைத்தெரிந்து கொள்ள அதுதானே வழி; கிறித்துவத்தைப்பற்றி அறிய ஒரு priest- இடமோ, இஸ்லாம் அறிய ஒரு முல்லாவிடமோ சென்றால் எந்த வித "உண்மைகள்" கிடைக்கும்?

நடுநிலையான நூல்களையும் பார்த்திருக்கலாம். கிடைத்தால் படிப்பதற்குத் தடையேதுமில்லை. ஆனாலும், what is good for a goose need not be so for a gander (இதுவும் ஏற்கெனவே சொன்னதுதான்). நீங்கள் நடுநிலை என்று கூறுவது எனக்கு எப்படியோ?

பலரை மணக்க நேர்ந்த காரணங்கள்-சூழ்நிலைகள் - புத்தகங்கள் கூட எதுவும் வேண்டாம், மாலிக், நீங்களே நியாயப்படுத்திப் பாருங்களேன். அதில் நியாயங்கள் ஏதும் இருப்பதாக முஸ்லீம் அல்லாத ஒருவருக்காவது தோன்றுமா, சொல்லுங்கள். இதேபோன்ற ஒரு கேள்வியை 'பர்தா'விற்குக் கேட்டிருந்தேன்.

வந்த பின்னூட்டங்களையும் படித்துப் பார்க்க அழைக்கிறேன்.

முதல் பகுதியில் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே - அதற்கும் பதில் சொல்லுங்களேன்.

ஆர்வத்திற்கு நன்றி

உங்களின் இக்கேள்விகள் noreply-comment@blogger.comஎன்றிருந்தும் பின்னூட்டத்தில் ஏனோ வரவில்லை; ஆகவே, உங்கள் கேள்விகளையும். என் பதில்களையும் என் பின்னூட்டத்தில் cut & paste செய்துள்ளேன். குற்றமில்லையே!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லதொரு பதிவு.
நன்றி

தருமி said...

நன்றிக்கு நன்றி, ஷ்ரேயா!

Anonymous said...

Mr.Malik

/*இஸ்லாத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் நபிகளார் இறந்து 200 வருடங்கள் கழித்து அவரைப் பற்றி கேள்விரீதியாக அறிந்து எழுதப் பட்டவை. அவைகளின் நம்பகத்தன்மைகள் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் சர்சையிருந்து வருகிறது என்று தங்களுக்கு கூற விரும்புகின்றேன்.*/


நீங்கள் சொல்வது போல் 200 வருடம் என்பது இஸ்லாத்தின்வரலாற்றில்உங்களுக்கு இருக்கும் அறியாமையைக் காட்டுகிறது.

அல்குர்ஆனும் சுன்னாவும் எந்தவித தீர்வும் கூறாத சில விசயங்களுக்கு அல்லது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, குர்ஆன் மற்றும் சுன்னாவைப் பேணி அடிப்படை இஸ்லாமியச் சட்டங்களுக்கு மாற்றமில்லாத வகையில், பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண அறிஞர்கள் எடுத்த முயற்சியே இஜ்திஹாத் எனப்படுகின்றது.

இதில் சில சந்தர்ப்பங்களில் பெரும்பாலோனோரின் ஒருமித்த கருத்து எட்டப்படாத சூழ்நிலைகளும் ஏற்பட்டு விடுவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூழ்நிலையைப் பொருத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு நபி (ஸல்) அவர்களது காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.

அல் ஹன்தக் யுத்தம் முடிந்ததும் பனீகுரைழா என்ற இடத்தை அடையாமல் யாரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். இடையில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அவர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அஸ்ர் தொழுகையின் நேரம் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக சிலர் தொழுதார்கள்.

இந்த நபிமொழியை அவர்கள் விளங்கியிருப்பார்களெனில் குறித்த இடத்தை அவசரமாக அடைய வேண்டும் தாமதித்தல் கூடாது என்பதை விளங்கிருப்பார்கள். இன்னும் சிலர் ஹதீஸை செயல்படுத்த வெண்டுமென தொடர்ந்து சென்றார்கள். அந்த இடத்தை அடைந்ததும் தொழுதார்கள்.

இந்தக் கூட்டத்தாரின் பிரயாணம் முடிந்து நபி (ஸல்) அவர்களை அடைந்ததும், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும், நபி (ஸல்) அவர்களது கட்டளையைச் செயல்படுத்திய விதத்தையும் இரு பிரிவினரும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

ஆனால் இரு பிரிவினரும் செய்ததைத் தவறு என இறைத்து}தர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை.

அடிப்படை அம்சங்களிலில்லாது சிறு விடயங்களில் அல் குர்ஆனும், சுன்னாவும் மௌனம் சாதித்ததே இஜ்திஹாத் ஏற்படக் காரணமாக அமைந்தது எனலாம். இது அல்லாஹ் தன் அடியார்கள் மீது அன்பினால் ஏற்பட்டதாகும்.

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை விளங்குவதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளும், சுன்னாவை (ஸஹீஹ், ஹஸன், ழயீப்) என தரம் பிரிப்பதில் உண்டான கருத்து வேறுபாடுகளுமே இஜ்திஹாதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட காரணமாயிருந்தன. இவை இஸ்லாமிய ஷாPஅத்தின் ஆழத்தையும், விசாலத்தையும் தெளிவுபடுத்துவதாகவே உள்ளன

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சி நபித்தோழர்கள் மத்தியில் இருக்கவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களோடு இருந்தார்கள். பிரச்னைகள் வரும்போது நபி (ஸல்) அவர்களிடம் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களது இறப்பிற்குப் பின் நபித்தோழர்கள் நவீன பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதத்தில் இஜ்திஹாத் என்ற துறைக்குச் சென்றார்கள். மேலும் நபித்தோழுர்கள் பல நாடுகளுக்குப் பிரிந்து சென்ற பொழுது, ஆங்காங்கே அவர்களுக்கு ஏற்பட்ட அல்லது முன்வைக்கப்பட்ட மார்க்கப் பிரச்னைகளுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், அவர்களது அறிவுத் திறனைக் கொண்டு ஆய்வு செய்து அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்ப்பை எடுத்தார்கள். அவ்வாறே அவர்களது மாணவர்ளும் தொடர்ந்தார்கள

மு மாலிக் said...

தருமி அவர்களே,

உங்களுடைய மற்றொரு பதிவில் ('நான் ஏன் மதம் மாறினேன் --6') நான் செய்திருந்த விமர்சனத்திற்கு இப்பதிவில் விளக்கம் கூறியதற்கு நன்றி. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த கேள்விக்கு வேலைப் பளு காரணமாக உடனே பதில் கூற முடியவில்லை. இனோமினோ என்பவரும் ஒரு கேள்வியை அந்த இன்னொறுப் பதிப்பில் கேட்டுள்ளார்.

நான் அப்பகுதியிலேயெ ஒரு குறு-விளக்கம் அளித்துள்ளேன்.

அது பற்றி மேலும் விளக்கமடைய நான் கூறிய புத்தகங்களை ஆராயலாம்.

Anonymous said...

Very Intresting, I read From the Web and Share with you..
******************************

Close-to-complete Ideology and Religion Shit List


Taoism: Shit happens.

Confucianism: Confucius say, "Shit happens."

Buddhism: If shit happens, it isn't really shit.

Zen Buddhism: Shit is, and is not.

Zen Buddhism #2: What is the sound of shit happening?

Hinduism: This shit has happened before.

Islam: If shit happens, it is the will of Allah.

Islam #2: If shit happens, kill the person responsible.

Islam #3: If shit happens, blame Israel.

Catholicism: If shit happens, you deserve it.

Protestantism: Let shit happen to someone else.

Presbyterian: This shit was bound to happen.

Episcopalian: It's not so bad if shit happens, as long as you serve the right wine with it.

Methodist: It's not so bad if shit happens, as long as you serve grape juice with it.

Congregationalist: Shit that happens to one person is just as good as shit that happens to another.

Unitarian: Shit that happens to one person is just as bad as shit that happens to another.

Lutheran: If shit happens, don't talk about it.

Fundamentalism: If shit happens, you will go to hell, unless you are born again. (Amen!)

Fundamentalism #2: If shit happens to a televangelist, it's okay.

Fundamentalism #3: Shit must be born again.

Judaism: Why does this shit always happen to us?

Calvinism: Shit happens because you don't work.

Seventh Day Adventism: No shit shall happen on Saturday.

Creationism: God made all shit.

Secular Humanism: Shit evolves.

Christian Science: When shit happens, don't call a doctor - pray!

Christian Science #2: Shit happening is all in your mind.

Unitarianism: Come let us reason together about this shit.

Quakers: Let us not fight over this shit.

Utopianism: This shit does not stink.

Darwinism: This shit was once food.

Capitalism: That's MY shit.

Communism: It's everybody's shit.

Feminism: Men are shit.

Chauvinism: We may be shit, but you can't live without us...

Commercialism: Let's package this shit.

Impressionism: From a distance, shit looks like a garden.

Idolism: Let's bronze this shit.

Existentialism: Shit doesn't happen; shit IS.

Existentialism #2: What is shit, anyway?

Stoicism: This shit is good for me.

Hedonism: There is nothing like a good shit happening!

Mormonism: God sent us this shit.

Mormonism #2: This shit is going to happen again.

Wiccan: An it harm none, let shit happen.

Scientology: If shit happens, see "Dianetics", p.157.

Jehovah's Witnesses: >Knock< >Knock< Shit happens.

Jehovah's Witnesses #2: May we have a moment of your time to show you some of our shit?

Jehovah's Witnesses #3: Shit has been prophesied and is imminent; only the righteous shall survive its happening.

Moonies: Only really happy shit happens.

Hare Krishna: Shit happens, rama rama.

Rastafarianism: Let's smoke this shit!

Zoroastrianism: Shit happens half on the time.

Church of SubGenius: BoB shits.

Practical: Deal with shit one day at a time.

Agnostic: Shit might have happened; then again, maybe not.

Agnostic #2: Did someone shit?

Agnostic #3: What is this shit?

Satanism: SNEPPAH TIHS.

Atheism: What shit?

Atheism #2: I can't believe this shit!

Nihilism: No shit

And of course we must add...Alcoholics Anonymous: Shit happens-one day at a time!


I think it's all a bunch of doo doo.

*****************************

Jayabarathan said...

நண்பர் தருமி,

//// carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.\\\\

//// எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம். ////

மனிதன் பிறக்கும் போது மூர்க்கர் மத்தியிலே பிறந்தால் மூர்க்கனாகிறான். நல்லவர் மத்தில் பிறந்தால் நல்லவனாகிறான். அந்த Raw Material நிலையில் இருப்பவன் மனிதன். தற்போதுள்ள வெறும் பள்ளிப் படிப்பு மட்டும் மனிதனைக் கலாச்சார நாகரீக மனிதனாக மாற்றாது. இதுவரை மாற்றவில்லை.

"காரட் ஏற்பாட்டின்படி" சொர்க்க லோகம், நரக லோகம் என்று பயங்காட்டி மதங்கள் ஒழுக்கம் புகட்ட வில்லை என்றால் மனிதன் ஒருநாளும் ஒழுக்க நெறி கற்றுக் கொள்ளப் போவதில்லை. நமது கல்வி முறை மனிதனை மனித நேயனாக மாற்ற முடிய வில்லை. காரணம் அதில் தண்டிப்பு முறைகள் கிடையா !!! படியாதவனும் மூர்க்கனாக இருக்கிறான். படித்தவனும் மூர்க்கனாக இருக்கிறான். விடுதலை நாட்டில் காவல் துறையும், நீதித் துறையும் கடைசியில் அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

இங்குதான் உலக மதங்கள் நற்சேவை புரிய வாய்ப்புள்ளன. புத்தர், ஏசு, முகமது நபி, விவேகானந்தர் போன்ற மதக் குருமார்கள் தமக்குக் கீழிருக்கும் பைபிள், குர்ரான், கீதை, குறள்
ஆகிய அறநெறி நூல்கள் மூலம் உலக அமைதி நிலைநாட்ட வசதிகள் வழிமுறைகள் உள்ளன.

மதக் குறைபாடுகளைக் காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள மதக் குருமார்கள் முன்வர வேண்டும். மதம் ஒரு மனிதக் கருவியே. அதை ஆக்க வழிகளுக்குப் பயன் படுத்த குருமார் சமூகத்தில் பங்கேற்க வேண்டும். பெரியார் போல் பாமரரை "முட்டாள்" என்று திட்டி வெறுப்பூட்டி இந்தக் காலத்தில் மக்களுக்கு அறநெறிகள் புகட்ட முடியாது.

அரசியல்வாதிகள், பள்ளி ஆசிரியர்கள், அறிஞர்கள், அனுபவ முதியவர் யாரும் மனித நேயப் பணிகள் எங்கும் செய்வதில்லை !


சி. ஜெயபாரதன்.

Guna said...

தருமி அவர்களுக்கு

நீங்கள் மதம் இல்லை என்று சொல்லுகிறிர்கள் .http://www.scribd.com/doc/10524296/Sujatha-Kadavul-Irrukkirara
இதை நீங்கள் படித்து பாருங்கள் பார்த்து விட்டு எனது மெயில் பண்ணுங்கள் நன்றி gunaloga@gmail.com

RaaKu saamy said...

எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் - மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் - உடனடியாக.

Thi is true----

virutcham said...

நான் ஏன் மதத்தினுள் இருக்கிறேன் என்பது பற்றிய (இந்த தலைப்பில் அல்ல ) என் எண்ணச் சிதறல்களை நான் சேகரித்துக் கொண்டிருந்த போது உங்கள் பதிவுகள் கண்ணில் பட்டன.
நன்றாக, மென்மேயாக, காஷ்ப்புணர்ச்சி இல்லாமல் சொல்லப்பட்ட விதம் அருமை.
இந்து மதம், புத்தம் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நான் ஒரு பதிவாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்.

உங்களிடம் சில கேள்விகள்:
1. உயிர் பிரிதல் என்று தமிழில் சொல்லப் படுவதற்கும், dead,expired என்று ஆங்கிலத்தில் சொல்லப் படுவதற்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கிறது. What do you think about it?

2. Something that never had life ex, stone, water etc that only undergo wear and tear or combine to some other thing in due course.
Something that lived and died ex, any living being from trees to human.
living , non-living என்கிற science classification தாண்டி
something that lived for years, gave so much to others(trees), some one lived for years with lots of feelings, wishes, love, hatreds, possessed so much, lost so much, etc and no more now.
Energy can never be created nor destroyed - Science
Religion - The uyir/Anma moves travels from one body to other etc

You can give your views, which may or may not pertain to religion or science or within any frame.

Pls, share your views.

http://www.virutcham.com

Anonymous said...

Thanks to Tharumi once again. Great job.

Post a Comment