Saturday, September 17, 2005

70. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...

எல்லாரும் கவிதை எழுதுறீங்க; நாங்களும் அந்தக் காலத்தில் எழுதியிருக்க மாட்டோமா; பழைய குப்பையைக் கிளறும்போது அது தற்செயலாகக் கையில் சிக்காதா; தொட்டால் ஒடியறது மாதிரி இருந்ததில் உள்ள அந்தக் கவிதைக்கு வயசு 25-30 வயசுன்னா, அப்போ அந்தக் கவிதை கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கிற கவிதைதானே ?

அரங்கேற்றத்திற்கு நம்ம ஏரியா (அதாங்க, மீனாட்சி கோவில் மண்டபம்) பக்கத்தில இருக்கிற பொற்றாமரைக் குளம் பக்கம் போகலாமாவென நினச்சேன்...சரி, அங்க தண்ணில்லாம் அவ்வளவு நல்லா இல்ல...ஒரே பாசி. அதனால, நம்ம தமிழ்மணத்திற்குப் போய்விடுவோமின்னு வந்திட்டேன். ஏதோ..பாத்து...ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.

ஞானிக்கு
இது கண்டு
மனமெல்லாம் வேதனை.
வேதனையில் வதங்கி
உள்ளம் உருகி
ஊசிமேல் ஒற்றைக்கால் தவமிருந்து
கடவுளைக் கண்முன் கொணர்ந்த ஞானி
மனமுருகிக் கேட்டார் கடவுளிடம்:
மனித வாழ்விலிருந்து போலித்தனங்கள்
மறைவதெப்போ?

வந்த இறைவன்
பதில் சொல்லாது
சிரித்து நழுவினான்.

காடுவிட்டு நாடு ஏகிய ஞானி
தண்டோரா போட்டுச் சொன்னான்:
கடவுளைக் கண்டேன்;
கேட்டதெல்லாம் பெற்றேன்;
சித்தியும் அடைந்தேன்;
முக்திக்கு அச்சாரமும் பெற்றேன், என்று.

ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.


யார் கண்டது; அடுத்த பதிவுகளில் ரொமாண்டிக் கவிதைகள் கூட வரலாம்!

11 comments:

kirukan said...

A realistic Kavithai... I like it

தாணு said...

ரொமாண்டிக் கவிதைகளும் கால் நூற்றாண்டு பழசுதானா?

தருமி said...

கிறுக்கன்,
realistic Kavithai - என்ன சொல்ல வர்ரீங்க..? 'நடப்பு' அப்டீங்கிறீங்க; அப்படிதானே..!

தாணு,
அப்புறம் என்ன, இப்பவா ரொமான்டிக் கவிதைகள் எழுதச் சொல்கிறீர்கள்...ஆனாலும், எழுதலாம்தான்..அடி வாங்கணுமே...

Anonymous said...

appa kadavul irundhara?

வசந்தன்(Vasanthan) said...

'அந்தக் காலத்துல' ஞானம் தேடி அலைஞ்சிருக்கிறியள் ;-)

தருமி said...

ivarugala , appa irunthaaru!

vasanthan - அப்பப்போ 'ஞானம்' தேடி அலையறதுதான்; ஏன்னா, அப்பா பெயரே அதுதானே!

தருமி said...

கிறுக்கன், நன்றி

ivarugala, ந்ன்றி. appo irunthissu...

வசந்தன், அப்பப்போ 'ஞானம்'
தேடி அலையறதுதான்; ஏன்னா, அப்பா பெயரே அதுதானே!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ரொமாண்டிக் கவிதைகளும் கால் நூற்றாண்டு பழசுதானா??????? :O)

தருமி said...

ஷ்ரேயா,
தாணு இதே கேள்வியைக் கேட்டார்கள்; பதிலும் சொல்லிவிட்டேன். ஆனாலும், "நேயர் விருப்பத்திற்காக" புதிதாக ஏதாவது முயற்சிக்கலாமாவென ஒரு 'சின்ன..சின்ன' ஆசை. ஒரு துணிச்சல்தான்.

பழூர் கார்த்தி said...

தருமியே, கவிதை உம்முடையதுதானா அல்லது சிவபெருமானிடம் (திருவிளையாடல் ஞாபகமிருக்கிறதா) கடன் வாங்கினீரா :-)

இருப்பினும் பரவாயில்லை :-)

கடன் பட்டார் நெஞ்சம்
கலங்குவது போல், உம்
கவிதை பார்த்ததும்
கலங்கியது என் நெஞ்சம் !
காதல் கலந்து,
மோதல் தவிர்த்து
கவிதை எழுதி கலக்குவீராக !!!

தருமி said...

சோம்பேறிப் பையரே,
இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா இந்தப் புனைபெயரைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேனே; ஒரு பெரும் புலவனை இப்படி இன்சல்ட் பண்ணலாமோ? ஒரே ஒரு தடவை ஓசி வாங்கியதற்காக இப்படியா?

Post a Comment