Sunday, June 06, 2010

397. Sam & Silas vs ஏசு & முகமது

*


எனக்கு  மிகவும் இளையவராக கல்லூரியில் எனது துறையில் சேர்ந்து, சேர்ந்த புதிதில் என்னையும் என் நடவடிக்கைகளையும் 'ஒரு மாதிரி'  பார்த்து, சுணங்கி, எட்டி நின்று,
பின் சிறிது காலத்தில் என்னோடு மிக நெருங்கிப் பழகிய நண்பர் முனைவர் சைலஸ். அவர் எப்போதும் ஒரு பெரிய நம்பிக்கையாளர்.  கிறித்துவ வழிகளில் வழுவாது வாழும் குடும்பத்தினர். தன் எண்பது வயதினையும் தாண்டி தன் இறைப்பணியைச் செவ்வனே செய்து வந்த தந்தையின் ஒழுக்கமான மகன். இப்படி நிறைய ...

ஆரம்பத்தில் என்னிடமிருந்து அவர் விலகி நின்றதற்கே முக்கிய காரணம் நான் கிறித்துவத்தை மறுத்தும், எதிர்த்தும் இருந்தது மட்டுமல்ல; ஆசிரிய-மாணவ உறவு முறைகளும் கூட.  அந்தக் காலங்களில் அடிக்கடி மதங்களைப் பற்றிய விவாதங்கள் எங்களுக்குள் இருக்கும். மாணவர்களை  சூழ்நிலைப் படிப்புக்காகக் கல்லூரியை விட்டு வெளியே அடிக்கடி இருவரும் அழைத்துச் சென்றதுண்டு. பயிற்சிக்காக மாணவர்களோடு வெளியே தங்கியிருந்த இரவுகளில் பல சமயம் எங்கள் விவாதம் தொடரும். அனேகமாக நான் ஒருவனாகவும், எதிர்த்தரப்பினர் பலருமாகவும் இவ்விவாதங்கள் தொடரும். அவருக்கு பைபிள் அத்துப்படி. நான்  ... அதான் உங்களுக்கே தெரியுமே! (பதிவுலகிற்கு வந்த பிறகுதானே மதங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்து கொண்டேன்! நன்றி - பதிவுலகிற்கும், எதிர்த்து குரல் கொடுத்த அனைவருக்கும். )

தொடர்ந்து சில ஆண்டுகள் விவாதங்களில் கழித்தோம். நான் அவரையோ அவர் என்னையோ மாற்ற முடியாது என்பது புரிந்த போது என்பதை விடவும், எங்களுக்குள் இருந்த நட்பு ஆழமானதால் நாங்கள் இருவருமே ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, நாங்கள் செய்த வாதங்களை நிறுத்திக் கொண்டோம். மனிதத்தை விட மதமா பெரிது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

ஆனாலும் அவர் எங்கள் விவாத காலத்தில் நான் கேட்ட என் கேள்வி ஒன்றை மிக நல்ல கேள்வி என்றும் அதற்கு எந்த மதங்களிலும் பதில் இல்லையென்றும் கூறி அந்தக் கேள்விக்காக எனக்கு 'ஃபுல் மார்க்' போட்டார்! அந்தக் கேள்வியை நான் எனது இப்பதிவில் கேட்டிருந்தேன். அக்கேள்வி:

9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. (இதுவும் ஒரு மூட நம்பிக்கையோ, என்னவோ!!)

NO RELIGION IS UNIVERSAL. 
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.

நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். அதுவும் நம் முருகன் தமிழ் நாட்டு எல்லையைக் கூட தாண்டவில்லை. மற்ற கடவுளர்கள் கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை வரை என்று சொல்லலாம். காரணம் என்ன?  

கிரேக்க நாட்டுக் கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அந்த நாட்டு மலைகளில் மட்டுமே வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...) நடத்தியதாகவோ இல்லை. (இஸ்லாமியரால் காபிர் எனக் கருதப்படும் காதியானிஸ் / அகமதியாக்கள் எனப்படும் பிரிவினர் உலகத்தின் பெரும் தத்துவஞானிகள் எல்லோரையும் நபிகள் என்று இப்போது சொல்லிவருகிறார்களாம் ... அதை விடுங்கள்)
இதற்குக் காரணம் என்ன?

மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.

Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves - perhaps our actual selves, perhaps our ideal selves - on the universe as a whole....... The image of God as a divine father has strong Freudian overtones”.(Reason and religion" An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285.) இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.

இதை வாசிக்கும் நம்பிக்கையாளர்களுக்கு - அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் - கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த 'முடிவு'க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,..........

இக்கேள்விக்கு இதுவரை யாரும் சரியான, பொருத்தமான பதிலும் தந்ததாக நினைவில்லை. இதைவிடவும் இக்கேள்வியை நான் கேட்டதும் நண்பர் விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொன்னது இன்னமும் நன்கு நினைவிலிருக்கிறது.


'நீங்கள் சொல்வது போலவே ஏசுவும் வெறும் ஒரு tribal leader ஆக மட்டும் இருந்தாலும், அவர் மக்களிடம் தன்னை ஒரு கடவுளாக ஆக்கிக் கொண்டார் என்றால் அவரை மிகவும் நான் மதிக்கிறேன் (I respect him for his 'achievement'.) --  ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனிதன் (tribal leader) தன்னைப் பல கோடி மக்கள் தன்னைக் கடவுளாக வணங்கும்படி ஆக்கிக் கொண்டு  விட்டாரே -- அதற்காகவே நான் அவரை மிகவும் மதிக்கிறேன்.'

பதிவுலகிற்கு வந்து இன்னும் மற்ற மதங்களைக் கொஞ்சம் தெரிந்து கொண்ட பின் நான் அவரது statement-யை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க வேண்டியதுள்ளது.

ஏசு இப்படி ஒன்றைச் செய்ததால் என் நண்பர் அவரை மதிக்கிறேன் என்றாரென்றால், இப்போது நான் முகமதுவை அதைவிடவும் மதிக்கிறேன். ஏனென்றால் முகமது, ஏசுவைவிட மேலும் புத்திசாலித்தனமாக 'தானே கடைசி நபி (இப்படி ஒரு முற்றுப் புள்ளி. ஏது எதிராளி இப்போது?!);  குரானின் எந்த வார்த்தைகளையும் மனிதன் மாற்ற முடியாது' (முன்பு கடவுளால் முடியாத ஒரு காரியம் இப்போது மட்டும்  எப்படி என்று  ... ?) என்று அறுதியாகச் சொல்லி விட்டு சென்று விட்டார். ஏசு கதையிலாவது ஜிப்ரேல் மேரியிடம் வந்து ஏதேதோ சொன்னதாக ஒரு கதையுண்டு. முகமதுவைப் பொறுத்தவரை "வெளிசாட்சி" என்று ஏதும் கிடையாது. அவரே சொல்லிக் கொள்கிறார் - தன்னை கடவுளின் தூதன் வந்து பார்த்து, ஹாய் என்று சொல்லி, மேலும் அவ்வப்போது பல 'டிக்டேஷன்' கொடுத்ததாக ... அதை அவர் வெளியே போய் சொல்லி, அதைப் பலரும் பின்னாளில் எழுதிக் கொடுக்க ... அவை யாவும் மனிதக் கரங்கள் படாமல் போற்றி இன்றுவரை கடவுளால் காப்பாற்றப்படுவதாக ...தனக்குத்தானே "சாட்சி" சொல்லும் இது போல் கதைகள்தான் நம்மிடையே நிறைய இருக்கே ...

 ஆனாலும் ஏசுவும் முகமதுவும் தாங்கள் சொன்ன வார்த்தைகளக்  கேட்டு, கோடிக்கணக்கானவர்களை தங்களை நம்ப வைத்து விட்டார்கள் . ம்ம் .. ம் .. சரியான போட்டி ...


எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ... இதையெல்லாம் நம்புவதற்கு!
*


72 comments:

ஆபிசர் said...

கடவுள்,மதம் பற்றிய விவாதங்களில் உங்களை அடிசிக்க ஆளே கிடையாது

Hegel and Hegelians like Ludwig Fuerbach had this debate.Hegel said God created man but Hegelians said man created God.

இந்த பதிவு....."நான் ஒன்ன என்ன வாங்கிட்டு வர சொன்னேன்"னு வாழைப்பழ காமெடி மாறி மொதல்லேந்து சண்டைய ஆரமிக்கிற மாறி இருக்கு

உமர் | Umar said...

//எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ... இதையெல்லாம் நம்புவதற்கு//


இதுக்கே மலைச்சிட்டா எப்படி? முகம்மது விண்வெளிப் பயணம் போனதப் பத்தியெல்லாம் கேள்விப்பட்டா அப்படியே ஷாக்காயிருவீங்க. (53: 13-18)

கார்த்திகைப் பாண்டியன் said...

//NO RELIGION IS UNIVERSAL.
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.//

உண்மைதானே.. நெத்தியடி..:-)))

FRIENDS said...

உங்கள் எண்ணம் சரி, ஆனால் அதை பற்றிய உங்கள் அறிவு குறைவானது. இஸ்லாத்தில் எங்கும் சொல்லவில்லை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும்தான் இறை தூதர் என்று. இஸ்லாம் சொல்கிறது " நாம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இறை தூதர்களை அனுப்பி வைத்தோம் என்று. Jesus ஒரு இறை தூதர் mosas ஒரு இறை தூதர் இப்படி பலர் தெர்தேடுக்கப்பட்டனர். அதில் கடைசியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்கள் அரேபியாவில் மாத்திரம் இருந்தாலும் அவரது தோழர்கள் முழு உலகமும் சென்றனர். அதனால்தான் இந்தியாவில் தங்கிவிட்ட இந்திய கடவுள்கள் போலல்லாது கிரீசில் தங்கிவிட்ட கிரீஸ் கடவுள்கள் போல் அல்லது இஸ்லாம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது. தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது ஐரோப்பாவில் இருக்கும் ஒரு முஸ்லிமாகட்டும் அல்லது வேறு எங்கேனும் இருக்கும் ஒரு முஸ்லிமகட்டும் அவனது வணக்க முறையில் அல்லது குர்'ஆனில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. மேலதிக விபரங்களுக்கு http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=135&Itemid=153

FRIENDS said...

உங்கள் எண்ணம் சரி, ஆனால் அதை பற்றிய உங்கள் அறிவு குறைவானது. இஸ்லாத்தில் எங்கும் சொல்லவில்லை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும்தான் இறை தூதர் என்று. இஸ்லாம் சொல்கிறது " நாம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இறை தூதர்களை அனுப்பி வைத்தோம் என்று. Jesus ஒரு இறை தூதர் mosas ஒரு இறை தூதர் இப்படி பலர் தெர்தேடுக்கப்பட்டனர். அதில் கடைசியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்கள் அரேபியாவில் மாத்திரம் இருந்தாலும் அவரது தோழர்கள் முழு உலகமும் சென்றனர். அதனால்தான் இந்தியாவில் தங்கிவிட்ட இந்திய கடவுள்கள் போலல்லாது கிரீசில் தங்கிவிட்ட கிரீஸ் கடவுள்கள் போல் அல்லது இஸ்லாம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது. தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது ஐரோப்பாவில் இருக்கும் ஒரு முஸ்லிமாகட்டும் அல்லது வேறு எங்கேனும் இருக்கும் ஒரு முஸ்லிமகட்டும் அவனது வணக்க முறையில் அல்லது குர்'ஆனில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. மேலதிக விபரங்களுக்கு http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=135&Itemid=153

உமர் | Umar said...

@FRIENDS
//வேறு எங்கேனும் இருக்கும் ஒரு முஸ்லிமகட்டும் அவனது வணக்க முறையில் //

தொழுகையின்போது விரல் ஆட்டுவதில் பல வேறுபாடுகள் உள்ளனவே!

// இஸ்லாம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது//

கிறித்துவமும்தான் உலகம் எங்கும் பரவியிருக்கின்றது. ஒரு பகுதியிலோ பல பகுதிகளுக்கோ மதம் பரவியதைப் பற்றி கட்டுரை பேசவில்லை. மதம் உருவான பகுதியில் இருந்த மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே கடவுளும், கடவுளின் தன்மைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வடுவூர் குமார் said...

உங்க‌ள் க‌ட்டுரைக‌ள் ஒவ்வொன்றும் புது புது ப‌ரிணாம‌ம்,கேள்விக‌ள் & அர்த்த‌ங்க‌ள் கொண்ட‌து.ம‌த‌ங்க‌ளை ப‌ற்றிய‌ உங்க‌ள் எண்ண‌ம் வ‌லைப்ப‌திவுக‌ள் மூல‌ம் மேம்ப‌ட்ட‌து என்றால் அது என‌க்கும் கூட‌.
கேள்வி ம‌ட்டுமே கேட்க‌ தெரிந்த‌ நீங்க‌ள்..அத‌ன் மூல‌ம் ப‌ல‌ரையும் கேள்வி கேட்க‌ வைத்துவிடுகிறீர்க‌ள்.
முருக‌ன் தென் நாட்டை விட்டு வேறு எங்கும் போக‌வில்லை!!! சிரிப்பு வ‌ந்தாலும் அட! ஆமாமில்ல‌ என்று யோசிக்க‌வைத்துவிட்டீர்க‌ள்.
என்ன‌ தான் ப‌டித்தாலும் ‍‍ டிஸ்க‌வ‌ரி சேன‌லில் ஒவ்வொரு தாவ‌ர‌மும் அத‌ன் சூழ்நிலைக்கு ஏற்ற‌ மாதிரி த‌ன் விதைக‌ள் மூல‌ம் எப்ப‌டி த‌ன் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குகிற‌து என்று பார்க்கும் போது...இதுக்கெல்லாம் கார‌ண‌ம் எங்கிருக்கும் என்று தோணி..க‌டைசியாக‌ க‌ட‌வுள் ப‌க்க‌ம் தான் சாய‌ வேண்டியிருக்கு.வால் பைய‌ன் ச‌ண்டைக்கு வ‌ர‌ப்போகிறார்.
:-))

என்ன‌வோ போங்க‌,பிற‌ந்த‌து‍ சாகிற‌து இதுக்கெல்லாம் கார‌ண‌மே புரிய‌லை இந்த‌ சின்ன‌ ம‌ண்டைக்கு.

Indian said...

//9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. (இதுவும் ஒரு மூட நம்பிக்கையோ, என்னவோ!!)

NO RELIGION IS UNIVERSAL.
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.

நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். அதுவும் நம் முருகன் தமிழ் நாட்டு எல்லையைக் கூட தாண்டவில்லை. மற்ற கடவுளர்கள் கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை வரை என்று சொல்லலாம். காரணம் என்ன?கிரேக்க நாட்டுக் கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அந்த நாட்டு மலைகளில் மட்டுமே வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...) நடத்தியதாகவோ இல்லை. (இஸ்லாமியரால் காபிர் எனக் கருதப்படும் காதியானிஸ் / அகமதியாக்கள் எனப்படும் பிரிவினர் உலகத்தின் பெரும் தத்துவஞானிகள் எல்லோரையும் நபிகள் என்று இப்போது சொல்லிவருகிறார்களாம் ... அதை விடுங்கள்)
இதற்குக் காரணம் என்ன?

மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.
//

Totally agree with you.

Indian said...

//அதனால்தான் இந்தியாவில் தங்கிவிட்ட இந்திய கடவுள்கள் போலல்லாது கிரீசில் தங்கிவிட்ட கிரீஸ் கடவுள்கள் போல் அல்லது இஸ்லாம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது.//

1000 ஆண்டுகள் கணக்கில் இலங்கை, அங்க்கோர் வாட் (கம்போடியா), பாலி (இந்தோனிசியா), தாய்லாந்து இங்கெல்லாம் இந்தியக் கடவுள்கள் பரவி இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

200/300 ஆண்டுகள் கணக்கில் தென் ஆப்ரிக்கா, கரீபியன் தீவுகள், பிஜி, மொரிஷியஸ், மியான்மார் ௦௦போன்ற நாடுகளுக்கும் இந்துக் கோயில்கள் பரவி இருக்கின்றன.

சமீப காலங்களில் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளிலும் பணி நிமித்தம் சென்ற இந்தியர்களாலும், designer-godman-களாலும் பரவி இருக்கின்றன.

என்ன கிறித்துவத்தைப் போலவோ, இஸ்லாமைப் போலவோ முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லவில்லை.

Point is: வட்டாரக் கடவுள்களால் இன்னொரு வட்டாரத்தில் இன்னொரு கடவுள் தோன்றி உள்ளார் என்பதை அறியாமலிருப்பதே அவர்களின் வட்டாரத் தன்மையை பறை சாற்றுகிறது. ஏன் அரேபியாவிலோ, இந்தியாவிலோ தோன்றிய கடவுள்கள் பற்றி ஜப்பானிலோ, அலாஸ்காவிலோ, அர்ஜென்டினாவிலோ (தோன்றிய நேரத்தில்) அறிந்திருக்கவில்லை?

carpet-bombing போல ஒரு இறைவன் ஏன் அனைத்துக் கண்டங்களிலும் இறங்கவில்லை அல்லது இறக்கப்படவில்லை?
சுனாமியைப் போல ஓர் புள்ளியில் தோன்றி எல்லா திசைகளிலும் பரவுது?

Victor Suresh said...

Flip side: கடவுள் நம்பிக்கையில்லாத தொல்குடிகளோ, சமகாலத்து சமுதாயமோ கிடையாது. மனித சமுதாயத்தின் வரலாறு, புவியியல் என்னும் காலம், மற்றும் இடம் என்ற பரந்தவெளியில் கடவுள் என்ற ஒரு சிந்தனை பற்பல வடிவங்களில் விரிந்திருக்கிறது என்பதே உண்மை. நீங்கள் எதையெல்லாம் கடவுள் இல்லாமல் இருக்கலாம் என்பதற்கு காரணங்களாக வைக்கிறீர்களோ, அவையெல்லாமே கடவுள் இருக்கவும் செய்யலாம் என்ற சாத்தியக்கூற்றிற்கும் காரணங்களாக அமைகின்றன.

கடவுள் மறுப்பாளர்கள் தத்துவார்த்த ரீதியாக இன்னும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு உதாரணம்தான் நீங்கள் தற்போது முன்வைக்கும் விவாதம்.

Anonymous said...

Your questions may be fresh to you; or to those who received them. But they are stale, repeated by many ad nauseum and thought over by so many.

The answer is you are correct. Gods are limited to the area where they were created.

How do you say it is wrong? People's imagination is limited; so the limitations to gods themselves.

Hindu religion does not boast, unlike other religions, that their gods are for all nooks and corners of the world. Their gods and goddesses are for Akhand Bharat, comprising the Indian subcontinent only.

Every people, every tribe, since times immemorail, believed in a power above them. For they felt vulnearable before nature and her fury. Out of fear first, then, out of some yearning for things beyond the material world, have made them explore their minds, which we call spirituality, to create imaginary attributes to their gods and goddesses, or One God.

As long as man posessesses mind, so long as he posesseses imagination. Intense imagination on such matters of mind needs to express itself: so bewildering variety of faiths we call religions.

Man has mind, which works in different ways, one of which is spirituality.

People like you are either purblind to that, or willingly suppress that.

Please tell me how to express the flood of imagination that comes out of me over such questions who brought me to the world, why, why I have to live a short time; is there not any meaning at all in my existence? Am I just a bundle of nerves and bones? Is filling my stomach, and aiming to fill it just to survive only, the one and only purpose? Why suffering? Why happiness? What really called suffering? Is happiness an illusion? Why many suffer? and many enjoy themselves? Why good health right from birth? Why sickness, why physical deformities to me? Why innocent die naturally for no fault of their own?

So on and so forth.

The man who possesses such intense and active imagiantion will raise the questions to himself and search for answers, at least when he can?

Have you ever?

Anonymous said...

It is a question of imagination vs non-imagination or negation of the truth that we possess imagination.

IT IS NOT A QUESTION OF BELIEF VS ATHEISIM OR NON-BELIEF

மருத புல்லட் பாண்டி said...

iyya intha kulatheiva valipadu allathu moothaiyarukku thithi intha maathi ella mathathillum ullathu konjam asai pottu paarunga,

vayasu aanna kojam selective.... irrukkum

மருத புல்லட் பாண்டி said...

iyya intha kulatheiva valipadu allathu moothaiyarukku thithi intha maathi ella mathathillum ullathu konjam asai pottu paarunga,

vayasu aanna kojam selective.... irrukkum

kiristians said...

(noah's) flood around the worldhttp://www.talkorigins.org/faqs/flood-myths.html#Tarascan

dear sir

please check the above link

kiristians

தருமி said...

ஆப்பீசர்,
//சண்டைய ஆரமிக்கிற மாறி இருக்கு//

நான் முடிக்கிறது மாதிரில்லா நினச்சேன்!

"If triangles have gods, their gods would be triangles." அப்டின்னு இதுல சொல்லியிருக்கேன்.

தருமி said...

kummi,
//முகம்மது விண்வெளிப் பயணம் போனதப் பத்தி..//

ஏதேதோ அங்கெல்லாம் பல இடங்களுக்கு அவரை கூட்டிட்டு போனது மாதிரி வாசித்த நினைவுண்டு. நல்லா இருக்கும்னா நீங்களும் சொல்லுங்க .. கேட்டுக்கிறேன்.

தருமி said...

கா.பா.,

அடடா ... "இந்தப் பக்கமும்" வந்துட்டீங்க நெத்தியடியோடு ...

வந்துட்டு போயிருங்க .....

ramachandranusha(உஷா) said...

தருமி சார், நான் கூட பார்வதியின் அங்கங்கள் துண்டு துண்டாய் இந்துஸ்தானில் மட்டும் அதாவது
பாகிஸ்தான்,பங்களா தேஷ், நேபாளில் உட்பட- மட்டும் விழுந்தது என்று கேள்வி கேட்டு திட்டு வாங்கியிருக்கிறேன்.ஏன் ஆர்ட்டிக் அண்டார்டிக், நியூசிலாந்து, லண்டன், அமெரிக்கால விழலை?

ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டு
இருந்தால், நமக்கு நரகம் நிச்சயம். ஏதோ பேச்சு துணைக்கு நீங்களாய் இருப்பீங்களேன்னு மனச தேத்திக்கிறேன் :-)

தருமி said...

FRIENDS,

/உங்கள் எண்ணம் சரி, ஆனால் அதை பற்றிய உங்கள் அறிவு குறைவானது. //

sounds very ambiguous. எண்ணம் - அறிவு இரண்டில் எது சரி?

//Jesus ஒரு இறை தூதர் mosas ஒரு இறை தூதர் இப்படி பலர் தெர்தேடுக்கப்பட்டனர்.//

ஆனால் இரண்டுபேரும் ஒரே "ஜாதி" - இஸ்ரவேலர்கள். நோவா, மோசே, ஈசா எல்லாரும் ஒரே நாட்டினர்தானே. அதுதானே என் கேள்வியே.

//ஸல்) அவர்கள் அரேபியாவில் மாத்திரம் இருந்தாலும் அவரது தோழர்கள் முழு உலகமும் சென்றனர். //

இதேதான் புத்தருக்கும், ஏசுவுக்கும். மண்டேலாவுக்கு நல்லவேளை proselytisation-க்காக அவரது தோழர்கள் யாரும் உலகம் சுற்றவில்லை!

//இஸ்லாம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது.//

கிறித்துவம், புத்தம், இந்து மதம் உலகம் எங்கும் நிலைத்திருக்கிறது. இல்லையா?

//அவனது வணக்க முறையில் அல்லது குர்'ஆனில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது.//

கும்மி என்னவோ சொல்றார். அது என்ன? அது எனக்குத் தெரியாது.

பிள்ளையார்பட்டியிலும் சரி, பெனிசில்வேனியாவிலும் சரி பிள்ளையாரை தேங்காய் உடைத்துதான் கும்பிடுகிறார்கள்; கன்னத்தில போட்டுக்கிறாங்க ..


FRIENDS,தயவு செய்து நான் சொல்ல வந்ததை மறுக்க வேண்டுமெனில் முதலில் கேள்வியைப் புரிந்து கொள்ளுங்கள். அதன்பின் 'உங்கள் எண்ணம் சரி, ஆனால் அதை பற்றிய உங்கள் அறிவு குறைவானது' என்று சொல்லாம்.

Let me repeat: NO RELIGION IS UNIVERSAL, that includes Islam. Else show me one prophet in any other country/continent.

தருமி said...

வடுவூர் குமார்,

//சூழ்நிலைக்கு ஏற்ற‌ மாதிரி த‌ன் விதைக‌ள் மூல‌ம் எப்ப‌டி த‌ன் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குகிற‌து என்று பார்க்கும் போது...இதுக்கெல்லாம் கார‌ண‌ம் எங்கிருக்கும் என்று தோணி..//

அடடா .. பரிணாமத்திற்கு வந்திட்டீங்களே ... அதாவது வால்பையனுக்கு ஒட்டி நிற்கிறீங்களே ..

தருமி said...

ஏவிஎஸ்,
இதில் எதற்கு Flip side?

//கடவுள் மறுப்பாளர்கள் தத்துவார்த்த ரீதியாக இன்னும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு உதாரணம்தான் நீங்கள் தற்போது முன்வைக்கும் விவாதம்.//

நான் மிகவும் definite-ஆகச் சொல்லும் ஒரு விதயத்தை நீங்கள் தடுமாற்றம் என்று சொல்வதை எப்படியென்று விளக்கினால் புரிந்து கொள்வேன்.

தருமி said...

Jo Amalan Rayen Fernando,

//Your questions may be fresh to you; or to those who received them. But they are stale, repeated by many ad nauseum and thought over by so many.//

இக்கேள்வியை வேறு யாரும் கேட்டு நானறியவில்லை. After all I am purblind, as you call me! show me some reference so that i come to know of it. please.

//As long as man posessesses mind, ... we call religions.//

so you say: imagination = religion. thanks.

//he flood of imagination that comes out of me ....Why innocent die naturally for no fault of their own?//

so many questions to the purblind!!

//Have you ever?//
yes, sir. i too have some imagination.

தருமி said...

மருத புல்லட் பாண்டி,
தமிழில் எழுது; பதில் சொல்றேன். இல்லாட்டி .. போ!

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

FRIENDS,
இன்னொண்ணு விட்டுட்டேனே ..
//முகமதுவைப் பொறுத்தவரை "வெளிசாட்சி" என்று ஏதும் கிடையாது. அவரே சொல்லிக் கொள்கிறார்.
...தனக்குத்தானே "சாட்சி" சொல்லும் இது போல் கதைகள்தான் நம்மிடையே நிறைய இருக்கே ...
//

இதற்கு பதிலேதும் சொல்லாம போய்ட்டீங்களே!நிறைய பேர் இதுமாதிரி சொல்லி நீங்க கேட்டதில்லையா? அவங்க establish ஆகலை; நபி establish பண்ணிட்டார். அவ்வளவுதானே வித்தியாசம். இல்லீங்களா?நானும் அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

தருமி said...

kiristians,

நிறைய கதை பற்றி சொல்லியிருக்கு. அதனால் என்ன?

//Hindu:

Manu, the first human, found a small fish in his washwater. The fish begged protection from the larger fishes, in return for which it would save Manu. Manu kept the fish safe, ....//

இந்தக் கதையை வாசிச்சீங்களா?

தருமி said...

kiristians,

நோவா கதை உண்மையாக இருக்க முடியுமா? அப்படி ஒரு கடவுள் இருக்கலாமா? அப்படி ஒரு கடவுள் இருந்தால் இன்னைக்கு என்ன நடக்கணும்?
மதங்களை மறந்து அந்தக் கதையை மட்டும் வைத்து யோசித்துப் பாருங்களேன்.

தருமி said...

ரா. உஷா,

//ஏதோ பேச்சு துணைக்கு நீங்களாய் இருப்பீங்களேன்னு மனச தேத்திக்கிறேன்//

நானும் அப்படித்தான் நினச்சி சந்தோஷமா இருந்தேன். ஆனா இப்போவெல்லாம் பெருசுக - சாமிகள், சந்நியாசிகள்,- என்று எல்லோரும் வந்து நம்ம டிஸ்டர்ப் பண்ணிடுவாங்களே//

:(

Victor Suresh said...

தருமி: "நான் மிகவும் definite-ஆகச் சொல்லும் ஒரு விதயத்தை நீங்கள் தடுமாற்றம் என்று சொல்வதை எப்படியென்று விளக்கினால் புரிந்து கொள்வேன்."

மதத்தை முன்னிட்டு ஏன் தத்துவரீதியாக கடவுள் மறுப்பை செய்ய இயலாது என்பதை http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html-ல் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் தற்போது முன் வைக்கும் வாதம் அதே வகையிலானதே. நீங்கள் முன் வைக்கும் சிந்தனை வசீகரமானதென்றாலும் அதன் வீச்சை விட ஆழம் குறைவு. கேட்டவுடன் "ஆஹா, என்னமா சொல்லிட்டார்யா" என்று தோன்றுவதும், சற்று சிந்தித்த பிறகு "இதில அப்படி என்ன பிரமாதமான விஷயம் இருக்கு" என்ற வகையிலான சிந்தனைதான் இது.

Flip side என்றது நாணயத்தின் மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டவே. மதங்களை நிறுவியவர்களின் வரலாறும், புவியியலும் குறுகியதாக இருந்திருக்கலாம். ஆனால், கடவுளைப் பற்றிய உணர்வு காலத்தையும், இடத்தையும் கடந்து நிலவி வந்திருக்கிறது. இந்த மாபெரும் உணர்வை உதாசீனம் செய்து விட்டு முன்னேற முடியாது. மறுபடியும் சொல்கிறேன்: மதங்களை முன்னிட்டு கடவுளின் இருப்பை மறுப்பது, மேகத்தின் மறைப்பை முன்னிட்டு ஆதவனின் இருப்பை மறுப்பதுதான்.

தருமி said...

ஏவிஎஸ்,
Jo Amalan Rayen Fernando சொல்வது போல் இது யாரும் எழுதியதை நான் இங்கு ஒப்பிக்கவில்லை. I still feel that it is my own brainchild.

நீங்கள் சொல்வது போல் இது முதலில் பிரமிப்பை ஏற்படுத்தி பின் 'ப்ப்பூ' என்று சொல்லும் அளவிலும் எனக்குப் படவில்லை. I still feel that it is a very strong point to prove that no religion is universal.

//கடவுளைப் பற்றிய உணர்வு காலத்தையும், இடத்தையும் கடந்து நிலவி வந்திருக்கிறது. இந்த மாபெரும் உணர்வை உதாசீனம் செய்து விட்டு முன்னேற முடியாது. //

கடவுளைப் பற்றிய உணர்வு காலங்காலமாய் எல்லோரும் சொல்வது போல் மனிதனுக்கு இருக்கும் வாழ்வை/வாழ்க்கையைப் பற்றிய அச்சமும், இறப்பைப் பற்றிய பயமும்தான் காரணம். இதில் ஏதும் கடவுள் தன்மை இல்லை.

அடுத்து, நீங்கள் சொல்லும் /மாபெரும் உணர்வை/ என்பது யாது? நாம் ஜோடித்த கடவுள் என்னும் கோட்பாடு - concept - தரும் உணர்வை உரித்துப் பார்த்தவனுக்கு இதில் 'மாபெரும்' என்று ஒன்றும் இல்லை.

மரணத்தைப் பற்றிய பயம் --> கடவுள் கோட்பாடு --> கடவுள் பயம் --> 'மாபெரும் உணர்வு' -- இவைகளைத் தவிர்த்துப் பார்த்தால், உரித்துப் பார்த்தால் எல்லாமே 'வெங்காயம்'.

Victor Suresh said...

தருமி,

உங்களது சிந்தனைகள் உங்களுடையதாக இருக்கலாம், மற்றவர்களுடையதாக இருக்கலாம். அவை பொருட்படுத்தப்படுவது அவைகளுக்காகவே தவிர, யாருடையதற்காக என்பதற்கல்ல.

வாழ்வைப் பற்றிய அச்சமும், மரணத்தைப் பற்றிய பயமும் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் பிரத்தியோகமானதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். அவை மட்டுமே கடவுளை மனிதன் நம்புவதற்கு காரணமாகின்றன என்ற நம்பிக்கை நமது சிந்தனைத் தளத்தை ரொம்ப குறுக்கி விடுகிறது. இருந்தாலும் பாதகமில்லை. ஏனென்றால் மனிதன் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று நம்புகிறானா, இல்லையா, அதற்கான காரணங்கள் என்ன, அவை சரியா, தவறா என்பதை வைத்து கடவுளின் இருப்பையும் இல்லாமையையும் நிறுவ முடியாது. எனவே, தத்துவார்த்த ரீதியாக கடவுளை மறுக்க முனையும் உங்களுடைய அணுகுமுறைக்கும், கடவுளைக் காட்ட முயலும் மதங்களின் அணுமுறைக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்றை "இதுதான் உண்மை" என்று உறுதியாக முன்வைக்க முயல்கிறீர்களே, இதைத்தான் நான் தடுமாற்றம் என்கிறேன்.

தருமி said...
This comment has been removed by the author.
Anonymous said...

Dharmi!

On the spot you are:

Imagination = religion or,
Imagination = God.

You have understood and accepted me.

It is the heart of the matter in my message.

Imagination.

Without which, no question of spirituality, no question of religion, no question of gods etc.

Take a baby: its imagination is inchoate. It cant have anything called spirituality.

Take a lunatic. He or she is unable to have a mind of their own. Hence, no imaginative powers. Hence, no religion, no god for them.

Take at the same time a barbarous tribe. It does have imagination: but not capable of depth. Their songs and dances are not elaborate and intricate. So their religions too. It believes in some God, but plainly; and even if they have rituals, they are simple.

Take the so-called religious people amid us.

They are modern. They have tilled their mind deeply and drew up their elaboate religions. I mean, their founding fathers. Hence, their religions are intricate and elaborate. They have written books, and delivered sermons on the mount etc.

There are difference in degrees of imagination that determine the nature of their religions.

You have accepted me that it is imagination that determines religion or our spiritual nature. It is I who should say thanks to you. Not you.

Now, where do you stand as an atheist?

You are in denial mode: You deny the fact that man possesses imagination. According to you, we are less than babies, without anything called 'thinking' i.e. imagination.

If you dont deny, you have to accept religions, the endproducts of intense imagiantions of certain exceptional humans like the Prophet, the man called Jesus of Nazerath, another man from Sicily Paul, the Rishis who lived on the banks of Sindhu River or Gangetic valley so on; and the metaphyiscal questions that agitated their minds of the founding fathers before they drew up the religions.

Dont take anything personlly as you seem to have been offended by my 'purblind'. If you do, I am afraid, you want to evade my prodding.

தருமி said...

ஏவிஎஸ்,
//அவை பொருட்படுத்தப்படுவது அவைகளுக்காகவே தவிர, யாருடையதற்காக என்பதற்கல்ல.//

நல்லது. நான் சொல்ல வந்ததும் அதுவே: I still feel that it is a very strong point to prove that no religion is universal.

//நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்றை "இதுதான் உண்மை" என்று உறுதியாக முன்வைக்க முயல்கிறீர்களே, இதைத்தான் நான் தடுமாற்றம் என்கிறேன்.//

நம்பிக்கையென்றால் - faith - என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? நான் ஒன்றும் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என்று நம்பவில்லை. எனது முடிவுகள் நம்பிக்கையின்பாற் பட்டதல்ல. தடுமாற்றம் எனக்கல்ல.

பதிவின் மையப்புள்ளியே 'NO RELIGION IS UNIVERSAL.
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை' என்பதையே நீங்கள் தொடவே இல்லையே.

ரிஷபன்Meena said...

திரு.தருமி சார்,

கொஞ்சம் கழுத்தைப் பிடிப்பது மாதிரி கேள்விதான் இது.

உங்க நண்பர் சொன்னா மாதிரி இதுக்கு நேரிடையா சொல்றதுக்கு எதும் பதில் இல்லை தான்.

அவ்வப்போது இது போல கேள்விகள் பல என்னுள் எழுந்தாலும் கடவுள் நம்பிக்கை தான் சாதரனமக்களை அமைதியாய் வைத்திருக்கிறது.

Victor Suresh said...

தருமி: "நம்பிக்கையென்றால் - faith - என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? நான் ஒன்றும் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என்று நம்பவில்லை. எனது முடிவுகள் நம்பிக்கையின்பாற் பட்டதல்ல."

நல்லது, ஆனால் நீங்கள் கொடுக்கும் காரணங்களாலும் கடவுள் இல்லை என்று நிறுவ முடியாதே. என்ன செய்வது அதை உங்கள் நம்பிக்கை என்று விட்டு விட வேண்டியதுதான்.

"பதிவின் மையப்புள்ளியே 'NO RELIGION IS UNIVERSAL.
எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை' என்பதையே நீங்கள் தொடவே இல்லையே."

உங்களது கண்டுபிடிப்பை நான் ஆட்சேபிக்கவில்லையே. அதன் தொடராக வரும் "அதனால் கடவுள் இல்லை" என்ற தர்க்கத்தைத்தானே நிராகரிக்கிறேன். இது பற்றி நீங்களும் பேச மறுக்கிறீர்களே. ஏன்?

தருமி said...

Jo Amalan Rayen Fernando,

who could like prodding? do you embrace them?

you said: //You have understood and accepted me.//

i replied: //so you say: imagination = religion. thanks.//

i have understood you. who said i accepted you. is it just because i said 'thanks'?

i wonder how do you call the tilled imagination of modern man becomes a religion. தமிழில் அவைகளை கனவுகள் என்று சொல்லவா இல்லை, கற்பனைகள் என்று சொல்லவா? எப்படியிருப்பினும் ஒருவரின் imagination மதங்களாக இருக்கின்றன என்ற உங்கள் கொள்கை எனக்கு ஒப்புதல் இல்லை.

ஆபிசர் said...

தருமி அய்யா,
சிறிது நேரம் ஒதுக்கி இதனை படிக்கவும்.விரிவாக விவாதிக்கலாம்

http://aapicer.blogspot.com/2010/06/blog-post_08.html

தருமி said...

ஆக நீங்கள் மதங்களை மறுக்குகிறீர்கள்; ஆனால் கடவுளை மறுக்கவில்லை.

ம்ம்..ம்ம்... கடவுளின் தன்மைகள், குணங்கள் ...இத்யாதி இத்யாதி .. என்று மதங்கள் போதிக்கின்றன. அவைகளை மறுத்து தவரென்று சொல்லியாச்சு. கடவுளின் செயல் என்று சொல்வதையெல்லாம் 'இயற்கை' அல்லது physico-chemistry என்று சொல்லியாச்சு.

இத்தனைக்கும் பிறகு கடவுள் இல்லை என்பதை எவ்வாறு நிறுவுவது. ஒன்று செய்யலாம் .. உங்கள் கடவுள் சித்தாந்தத்தைச் சொல்லுங்கள். உடன்படுகிறேனா என்று பார்க்கிறேன்.

பேச மறுக்கவில்லை. என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறேன்!

Victor Suresh said...

அப்பாடா, ஒரு வழியாக மதத்தை மறுப்பதன் தொடர்ச்சியாக கடவுளை மறுக்க முடியாத தத்துவார்த்த சிக்கலை உணரத் தொடங்கி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

அறிவியல் மூலமாகவும் கடவுளின் இருப்பையோ, இல்லாமையை நிறுவ முடியாது என்பதை என்னுடைய பதிவில் விளக்கி விட்டேன்.

எனவே, கடவுள் இருக்கிறார் என்பது எப்படி ஒரு நம்பிக்கையாக இருக்கிறதோ, அப்படியே கடவுள் இல்லை என்பதும் இருக்கிறது. இதில் நம்பிக்கை என்பதை faith என்று எடுத்துக் கொள்வதை விட belief என்று எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

வேடிக்கை என்னவென்றால் கடவுளின் தீவிர நம்பிக்கையாளர்கள் செய்வது போலவே கடவுள் இல்லை என்று தீவிரமாக நம்புகிறவர்களும், உங்களது கொள்கைகளை கோபுரத்தில் ஏறிச் சொல்ல விரும்புகிறீர்கள்; அவற்றை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முனைகிறீர்கள்; மாற்றுக் கருத்துக்களை லேசாக ஏற்பதில்லை.

என்னுடைய நம்பிக்கை இந்த விவாதத்தின் பொருளிலிருந்து சுயாதீனமானது. நான் ஒரு பெந்தகோஸ்தே சபைக்காரனாகவோ, அல் கொய்தா தீவிரவாதியாகவோ, ஆர்எஸ்எஸ்காரனாகவோ கூட இருக்கலாம். அது நான் தெரிவித்த கருத்துக்களின் உண்மையை எவ்விதத்திலும் மாற்றப் போவதில்லை. இருப்பினும் என் நிலை: நான் மதங்களை, குறிப்பாக மதங்களின் பெயரால் செய்யப்படும் தவறுகளைக் கண்டிக்கிறேன். ஆனால், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கை எனது சொந்த அனுபவங்கள், மற்றும் நான் நம்பும் மனிதர்களின் சாட்சியங்கள் மூலமாக உருவானது. உங்களைப் போன்றே "கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்திருக்கிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கிறது. ஆனால், அதற்கான விடை எப்போதுமே "கடவுள் இருக்கிறார்" என்பதாகவே இருந்து வந்திருக்கிறது.

குடுகுடுப்பை said...

அருமை, இதே கேள்விகளை நானும் என் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். பிரண்ட் மதத்தை சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு அறிவு பத்தாது என்று கூறினார், இதே தொனியில்தான் எல்லாரும் பேசுகிறார்கள்.

Anonymous said...

//தமிழில் அவைகளை கனவுகள் என்று சொல்லவா இல்லை, கற்பனைகள் என்று சொல்லவா? எப்படியிருப்பினும் ஒருவரின் imagination மதங்களாக இருக்கின்றன என்ற உங்கள் கொள்கை எனக்கு ஒப்புதல் இல்லை.
//

கற்பனைகள் என்பதே சரி. அக்கற்பனைகளின் manifestations தான் மதங்கள்.

கடவுள் இருக்கிறாரா இல்லயா என்பது என் வாதமல்ல. மதங்கள் கடவுளைப்பற்றிக் கதைக்கும் மனிதனின் கற்பனைகள்.

உங்கள் பிரச்னையென்னவென்றால், மனிதனுக்கு கற்பனாசக்தி கிடையாது; அவ்வாறு இருப்பினும்கூட அவை கதை, கட்டுரை, கவிதைதான் புனையுமேயொழிய கடவுளைப்பற்றி எழுதாது பேசாதென்பதே.

இது தவறு.

As I said, among the innumerable possiblities of human imagination, one is spiriutuality or the methaphysical questions that may lead some, not all, to talk or write about a Super Being. A few among the 'some' went on founding religions, the end-results of imagination about the Super Being plus how to regulate one's life to the imaginary tastes and distastes of the Super Being. The said few are exceptional and extraordinary individuals who possesses such imagination in such a degree so different from that of ordinary people like us: that is my point.

Since their imagination is so vastly different from ours, we dont understand them. An unbridgeable gap exists between them and us.

Some, like atheists, heckle at them and their 'creations'. What we dont understand we condemn, ridicule and we dervice some malicious glee out of it. It induces in us some complacent feeling of superiority in us. Atheists feel such 'superiority' over the believers!

You say you dont agree to the view point that imagination gave birth to religions.

So, the onus is now on you. Tell us:

What then induced man to 'create' God and religions?

வால்பையன் said...

பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவை தற்பொழுது உலகமே நம்புது,அப்போ அவர் தானே பெரிய கடவுள்!

வால்பையன் said...

//ஒவ்வொரு தாவ‌ர‌மும் அத‌ன் சூழ்நிலைக்கு ஏற்ற‌ மாதிரி த‌ன் விதைக‌ள் மூல‌ம் எப்ப‌டி த‌ன் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குகிற‌து என்று பார்க்கும் போது...இதுக்கெல்லாம் கார‌ண‌ம் எங்கிருக்கும் என்று தோணி..க‌டைசியாக‌ க‌ட‌வுள் ப‌க்க‌ம் தான் சாய‌ வேண்டியிருக்கு.வால் பைய‌ன் ச‌ண்டைக்கு வ‌ர‌ப்போகிறார்.//


நான் ஏன் சண்டைக்கு வரப்போகிறேன்!
இதில் கடவுளுக்கு என்ன வேலை என்று தான் கேட்கிறேன்!, ஆலிப்ஸ் மலை தொடர் சென்ற நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு தற்பொழுது அதிக பனியால் மூட பட்டிருக்கிறது, அதனால் அங்கிருந்த தாவரங்கள் விலங்குகள் அழிந்து விட்டன, நீங்கள் சொன்னது போல் தாவரங்களுக்கு ஏன் கடவுள் உதவி செய்யவில்லை!

கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏடாகூடமா போனால் தான் கோவம் வரும் எனக்கு!

வால்பையன் said...

அது ஆண்டிஸ் மலை தொடர், ஆலிப்ஸ் என்று மாற்றி சொல்லிவிட்டேன் ஸாரி!

அது தென் அமெரிக்காவில் இருக்கிறது, அங்கிருந்து தான் அமேசான் நதி உருவாகிறது, இன்கா நாகரிகத்தின் தாயகம் அது!

வால்பையன் said...

//கடவுள் நம்பிக்கையில்லாத தொல்குடிகளோ, சமகாலத்து சமுதாயமோ கிடையாது. மனித சமுதாயத்தின் வரலாறு, புவியியல் என்னும் காலம், மற்றும் இடம் என்ற பரந்தவெளியில் கடவுள் என்ற ஒரு சிந்தனை பற்பல வடிவங்களில் விரிந்திருக்கிறது//

மனித நாகரிகம் ஓரிடத்தில் தோன்றி இடம் பெயர்ந்ததற்கு இதைவிட வேறு உதாரணம் சொல்ல முடியாது, பரிணாமவியலின் கூற்றும் அதே!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் கண்டங்கள் ஒன்றினைந்து இருந்ததும் பின் கால மாற்றத்தில் பிரிந்ததும் அறிந்ததே, அவ்வாறு பிரியும் போது தனது தேவைகேற்ப கடவுளை படித்து கொண்டார்கள் மனிதர்கள், இன்னும் இயற்கையை மட்டுமே வணங்கும் பழங்குடிகளும் இருக்கிறார்கள், அவர்கள் மட்டுமல்ல, மொத்த மனித நாகரிகமே இயற்கை சீற்றங்களை கண்டு பய்ந்து தான் கடவுளை கண்டுபிடித்தன! அதன் பின்னான வளர்ச்சி குழுமத்தின் நாகரிக வளர்ச்சியை பொறுத்து அமைந்தது!

வால்பையன் said...

//iyya intha kulatheiva valipadu allathu moothaiyarukku thithi intha maathi ella mathathillum ullathu konjam asai pottu paarunga,

vayasu aanna kojam selective.... irrukkum//


மூதாதயருக்கு செய்யும் மரியாதையே பின்னாளில் குலதெய்வ வழிபாடு ஆனது, உண்மையில் எல்லை காவல் தெய்வங்கள் என்பவர்கள் மனிதர்களே, குழுமத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் தமது வீரத்தினால் தற்பொழுதும் வணங்கபடுகிறார்கள், இன்றும் நேதாஜி, கட்டபொம்மன் போன்றார் மதிக்கப்படுவது போல்!
இன்று இருக்கும் அறிவால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, அவர்கள் கடவுள் அல்ல என்று, அன்று அறிவு போதவில்லை, ஆனால் இன்றும் அதே அறிவோடு இருப்பவர்கள் மற்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாக சொல்வது விந்தை!

வால்பையன் said...

//ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டு
இருந்தால், நமக்கு நரகம் நிச்சயம். ஏதோ பேச்சு துணைக்கு நீங்களாய் இருப்பீங்களேன்னு மனச தேத்திக்கிறேன் :-)//

நானும் இருக்கேங்க!, அனேகமா நாந்தான் நரகத்துக்கு சூப்பர் வைசரா இருப்பேன்!

வால்பையன் said...

//மதங்களை முன்னிட்டு கடவுளின் இருப்பை மறுப்பது, மேகத்தின் மறைப்பை முன்னிட்டு ஆதவனின் இருப்பை மறுப்பதுதான்.//


இந்துஞானமரபு வகையை சேர்ந்தவர் போல!
இப்படி எல்லாவற்றிற்கும் முட்டைகட்டை போட்டு தான் பல நாடுகள் இன்னும் முனேறாமலேயே இருக்கு!

வால்பையன் said...

//நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்றை "இதுதான் உண்மை" என்று உறுதியாக முன்வைக்க முயல்கிறீர்களே, இதைத்தான் நான் தடுமாற்றம் என்கிறேன்.//

புத்தகங்களை தவிர வேறு ஆதாரம் எதுவும் காட்டாதபோது கேட்க தான் செய்வார்கள், சரி அது உண்மை இல்லை பொய் என்று நிறுபிக்க உங்களிடம் என்ன இருக்கிறது ஏவிஎஸ் சார்!

வால்பையன் said...

//உங்களைப் போன்றே "கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்திருக்கிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எழத்தான் செய்கிறது. ஆனால், அதற்கான விடை எப்போதுமே "கடவுள் இருக்கிறார்" என்பதாகவே இருந்து வந்திருக்கிறது.//

இருக்கிறாரா என்ற கேள்வி வரக்காரணம், இருக்கிறார் என எண்ணம் தரும் விடை!

இரண்டும் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்!

Victor Suresh said...

வால்பையன்,

"கடவுளின் இருப்பு பற்றிய தருமியின் கேள்விகளுக்குப் பதில்கள்" என்ற தலைப்பில் ஒரு பதிவே எழுதியிருக்கிறேன் (http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html). அதில் நீங்கள் என்னிடம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இருக்கின்றன. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உரையாடுங்கள். ஒரே ஒரு விண்ணப்பம்: பரிணாமம், பயோடெக் சம்பந்தமாக உங்கள் தளத்தில் நான் எழுதிய போது நீங்கள் அதை எதிர்கொண்டது போல் அல்லாமல் எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து கொண்டு விவாதியுங்கள். நன்றி.

தருமி said...

//கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நம்புகிறேன். //

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நம்புகிறேன். இதை என் கட்டுரைகளில் வைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.

//இந்த நம்பிக்கை எனது சொந்த அனுபவங்கள், மற்றும் நான் நம்பும் மனிதர்களின் சாட்சியங்கள் மூலமாக உருவானது.//

இந்த நம்பிக்கை எனது சொந்த அனுபவங்கள், சிந்தனைகள் மூலமாக உருவானது.

தருமி said...

//கடவுளை மறுக்க முடியாத தத்துவார்த்த சிக்கலை..//

கடவுள் என்று ஒன்று இருக்க முடியாத நிதர்சனமே நிச்சயமாக உள்ளது. இருப்பார் என்பதற்கான தடயங்கள் கூட இல்லையே எனக்கு ...

தருமி said...

J0,
//கற்பனைகள் என்பதே சரி. //

இதை எப்படி ஒரு லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கற்பனைகள் தனிமனித எண்ணங்கள். இவைகள் தொகுத்து ஒரு மதமாக மாறுவதென்பதை எப்படிஒத்துக் கொள்வது?

//The said few are exceptional and extraordinary individuals ...//

அவர்களின் கற்பனைகளை நீங்கள் கடவுள் என்கிறீர்கள். எனக்கு .. இல்லை.

//What we dont understand we condemn, ridicule and we dervice some malicious glee out of it.//

நமது இருவரின் இப்பதிவிற்கான பின்னூட்டங்கள்கூட சொல்லுமே யாருக்கு நீங்கள் சொல்லும் ridicule, some malicious glee இருக்கிறதென்று ...

தருமி said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை//

அவருடய இளவயது மனைவியை முகமது மறைந்த பின்னும் வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாதாம்!, ஆனால் இவர் மட்டும் கிழவியை கூட விட்டு வைக்க மாட்டாராம்!, இதையெல்லாமா கடவுள் சொல்லியிருக்கிறார்!

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

Jo,

//Atheists feel such 'superiority' over the believers! //

ஆம்.ஏனென்றால் ..

ஐயப்பனும், ஆறுமுகமும் தோன்றிய விதம் நல்ல கற்பனையாக உங்களுக்குத் தோன்றலாம். எனக்கில்லை.

பயன்கொடா மரம் வெட்டப்படும் என்ற தியரி & கனிகொடா அத்தி மரத்தை சபித்த நிகழ்வு எனக்கு நியாயமாகப் படவில்லை.

உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை.

நியாயமில்லாததாக எனக்குத் தோன்றிய இவைகள் எல்லாம் என் கற்பனைகளால் அல்ல. தர்மத்தால் ஆனது.

இவைகள் உங்களுக்கு உயர்வாகவும், சரியாகவும் தோன்றினால் அது உங்களின் "கற்பனை".

தருமி said...

//So, the onus is now on you. Tell us:

What then induced man to 'create' God and religions?//

ஏன் சார், எனக்குப் பின்னூட்டம் போடும் பலரிடம் இந்த "challenging voice" அடிக்கடி வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனிப்படி?

தவிர்த்தல் நலம்.

anyway, உங்கள் கேள்விக்கான பதிலை இதுவரை பலரும் காலங்காலமாய் கொடுத்து வந்ததுள்ளதுதான். அதில் புதிது ஏதுமில்லை. நானும் அவைகளை என் மதக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன்.

Victor Suresh said...

தருமி: "கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நம்புகிறேன். இதை என் கட்டுரைகளில் வைத்திருப்பதாகவே நினைக்கிறேன்."

தருமி: "கடவுள் என்று ஒன்று இருக்க முடியாத நிதர்சனமே நிச்சயமாக உள்ளது. இருப்பார் என்பதற்கான தடயங்கள் கூட இல்லையே எனக்கு ..."

உங்களது நம்பிக்கையை மதிக்கிறேன். ஏற்றுக் கொள்ளவில்லை, அவ்வளவுதான். கடவுளை நம்பும் மதத்தவர்கள் போலவே, கடவுளை நம்பாத மதத்தைச் சேர்ந்தவர்களும் பல நம்பிக்கைகள் வைத்திருக்கிறீர்கள்: கடவுள் என்றால் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும்; கூப்பிட்டால் "யெஸ் சார்" என்று அட்டெண்டஸ் கொடுக்க வேண்டும்; உலகம் முழுவதும் ஒரே விதத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும்; இத்யாதி, இத்யாதிகள். இந்த கடவுள் இல்லை நம்பிக்கையும் ஒரு நம்பிக்கையே என்பதை அதை நம்புபவர்கள் உணர்ந்தால் மகிழ்ச்சியே.

தர்க்கத்தின் அடிப்படையிலும், தற்போதைய விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் கடவுள் இல்லை என்று நிரூபிக்கப்பட முடியாதது என்பதாக நான் ஞாயிறு தபால் வலைப்பதிவில் முன் வைத்த காரணங்களின் மீது என்றாவது ஒரு நாள் விவாதம் நடத்த முன் வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு, இந்த விவாதத்திலிருந்து விடை பெறுகிறேன். இச் சிறியவனைப் பொறுத்துக் கொண்டு பதில் அளித்ததற்கு நன்றிகள் பல.

தருமி said...

//இச் சிறியவனைப் பொறுத்துக் கொண்டு பதில் அளித்ததற்கு நன்றிகள் பல.//

:)

Anonymous said...

Dharmi!

It is better to have put in a single reply to my message. It would have been clearer.

Remove the personal element in all my messages. In argument, it may sound to be challenging you.

You can challenge me in return.

I have grown beyond the level of looking for and personal elements in general topic and getting peevish.

Now let me go to your reply or replies.

Next.

Anonymous said...

J0,
//கற்பனைகள் என்பதே சரி. //

இதை எப்படி ஒரு லாஜிக்காக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கற்பனைகள் தனிமனித எண்ணங்கள். இவைகள் தொகுத்து ஒரு மதமாக மாறுவதென்பதை எப்படிஒத்துக் கொள்வது?

//The said few are exceptional and extraordinary individuals ...//

அவர்களின் கற்பனைகளை நீங்கள் கடவுள் என்கிறீர்கள். எனக்கு .. இல்லை.

//What we dont understand we condemn, ridicule and we dervice some malicious glee out of it.//

நமது இருவரின் இப்பதிவிற்கான பின்னூட்டங்கள்கூட சொல்லுமே யாருக்கு நீங்கள் சொல்லும் ridicule, some malicious glee இருக்கிறதென்று //

So, you deny that imagination in certain individuals brought forth all religions and books on God.

If I asked what else, if not imagination, your statement is as follows:

anyway, உங்கள் கேள்விக்கான பதிலை இதுவரை பலரும் காலங்காலமாய் கொடுத்து வந்ததுள்ளதுதான். அதில் புதிது ஏதுமில்லை. நானும் அவைகளை என் மதக்கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன்.

I am not going to read all that you had written in the past. Now, and right now, I ask you,

tell me, how the individuals – Mohamad, Jesus, Buddha, Jain, Hindu Rishis, - created their religions?

If I pose this question in a tough manner, you are peeved. Now I am asking you politely:

Please tell us what was that in them which created all talk and books on God, their God or Gods?

You can say in a few sentences, if you will. Or, elaborately, if will.

Anonymous said...

//ஐயப்பனும், ஆறுமுகமும் தோன்றிய விதம் நல்ல கற்பனையாக உங்களுக்குத் தோன்றலாம். எனக்கில்லை.

பயன்கொடா மரம் வெட்டப்படும் என்ற தியரி & கனிகொடா அத்தி மரத்தை சபித்த நிகழ்வு எனக்கு நியாயமாகப் படவில்லை.

உனக்கெல்லாம் 4 மனைவிகள் என்று சட்டமிட்டு தனக்கு மட்டும் 9/10 என்று கொண்டது எனக்கு நியாயமாகப்படவில்லை.

நியாயமில்லாததாக எனக்குத் தோன்றிய இவைகள் எல்லாம் என் கற்பனைகளால் அல்ல. தர்மத்தால் ஆனது.

இவைகள் உங்களுக்கு உயர்வாகவும், சரியாகவும் தோன்றினால் அது உங்களின் "கற்பனை".//

You are here betraying your limitations.

What are they?

You have concluded that religions are what you wrote above - mumbo-jumbo of imaginary tales, with moral. You accept that a cock and a fox can talk and narrate the fables to your grandchildren, all because of the tail-end moral element or didactisim in it. But when such stories are written with religious instructions as their end, you cry foul.

Ok, I agree that they are negative; and not suitable or rather, offend our modern ears. So, lets reject them.

You have assumed impetuously that I accept such stories and say they are religions. How can you assume that, Mr? Have I ever or anywhere written that God having more and more wives is religion?

But, why do you say and who has told you that they alone constitute what is called religion?

The religious people say that such stories are for lesser mortals not for enlightened ones. The latter do not need any such crutches to stand and walk.

You project one side of religion. I am concerned with other side. On taking that side only, I am arguing with you.

Back to the overwhelming question:

The other side is the creation. The founders talk about it and wrote about it. The Rishis said no need to go to temples, no need to even worship the multigods, in mutlt form, no need to read books, no need to philsophise, intellectualise. The Rishis are echoed by Sithars.

Face them. Not the puranic stories and variety of anandas cavorting with bevy of beauties in dark rooms, in saffron clothes.

Tell us:

Why the founders created all about God?

ஆபிசர் said...

நான் முன்னாடியே சொல்லல முதல்லேந்து எல்லாம் ஆரமிக்கும்னு .எதோ விவாதத்துக்கு கூப்புடுராங்கள போயிட்டு வாங்களேன்

தருமி said...

Jo,
//You are here betraying your limitations.//
ஐயா, இப்படி ஒரு நாட்டாமை தீர்ப்பு. ஆனால் அதை ஒட்டி .. //So, lets reject them.// என்று ஒட்டி வருகிறீர்கள்! தீர்ப்பு தப்போ?

//You have assumed impetuously that I accept such stories ..// யாரு ஐயா அப்படி சொன்னது? மதங்கள் என்ற பெயரில் வரும் 'கதைகளை' பற்றிய என் கருத்தைச் சொல்லியுள்ளேன்.

//The religious people say that such stories are for lesser mortals not for enlightened ones. // சார், நீங்க எந்த குரூப்புல வர்ரீங்களோ தெரியலை. ஆனா நான் சொன்னது எல்லாம் 'கதை; இல்லீங்க. அத்திமரக் கதையும், நான்கு மனைவியா ஒன்பது மனைவியா என்பதெல்லாம் 'கதை' இல்லைங்க. அந்தந்த குரூப்புட்ட கேளுங்க இதெல்லாம் வெறும் கதையான்னு ...

//The Rishis are echoed by Sithars.//
what happens then to pastors, priests, monks, imams and mullahs?

தருமி said...

//So, you deny that imagination in certain individuals brought forth all religions and books on God. // மதங்கள் எப்படி வந்திருக்கக்கூடும் என்று நான் எழுதியுள்ளேன் என்றால் நீங்கள் உடனே //I am not going to read all that you had written in the past.// என்கிறீர்கள். ஆனால் அது கூட பரவாயில்லை; உடனேயே // Now, and right now, I ask you,// என்று ஆர்டர் போடுகிறீர்கள். ஏற்கெனவே சொன்னேன்: இது போன்ற கட்டளையிடுதலைத் தவிர்த்தல் நலம் என்று. புரியவில்லை போலும்.

//I have grown beyond the level of looking for and personal elements in general topic and getting peevish.//
how can i be so genial like you. i am peevish and become petulant when somebody tries to prod me for no reason.

மீண்டும் உங்களிடமிருந்து இன்னொரு மிரட்டல் ! //Tell us:
Why the founders created all about God?//
மனிதனின் கற்பனைகளே மதங்கள் - இது உங்கள் தியரி. இதை நீங்கள் சொல்வது போல் //You can say in a few sentences, if you will. Or, elaborately, i(f) will.// -- நீங்களே சொல்லிவிடுங்கள். பவ்யமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தருமி said...

Jo,
நான் எனது கருத்துக்களை என் பதிவுகளில் எழுதுகிறேன். அவைகளின் மேல் நீங்கள் தீர்ப்பெழுதுவது தவறில்லை. ஆனால் நான் எழுதுவதில் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். இல்லையேல் உங்களின் பதில் மேல் என் கேள்வி இருக்க வேண்டும். இதுவே சரியான முறையாக இருக்கும். அதை விட்டு விட்டு 'அதுன்னா என்னன்னு சொல்லு .. இதுன்னா என்னன்னு சொல்லு ...' அப்டின்னு அதிரடி ஆர்டர் போடுறது எவ்வகையிலும் முறையில்லை. இதை உங்களிடம் சொல்லியும் மீண்டும் மீண்டும் உங்கள் விருப்பத்திற்கு நான் எழுத வேண்டும் என்கிறீர்கள். தவறு.

அதே போல் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன் என்றுதான் கூறினேன். நீங்கள் அதை வாசித்துக்கொள்ளுங்கள் என்று கூட கூறவில்லை. ஆனால் நீங்கள் இப்போ .. இங்க .. பதில் சொல் என்பது எவ்வளவு சரி / நாகரீகம் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் நன்றாக எழுதுகிறீர்கள்; ஆனால் சரியாக எழுதவில்லை. தேவையில்லாத - teasing parlance, unnecessary nouns and adjectives - எதற்கு? no harm in being calm, cool and gentle.

School of Energy Sciences, MKU said...

மதம் மற்றும் கடவுள் எல்லாம் எப்போதும் எங்கும் உண்டு. நாத்திகர் கூட செய்யும் தொழிலே தெய்வம் என்பர். ஆக, ஏதோ ஒரு வடிவில் எங்கும் நிறைந்தவன் எங்கும் இருப்பான்.

தருமி said...

வில்ஸன்

ஆமென் .......

Post a Comment