Monday, June 07, 2010

398. உங்களுக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு ... வாங்க

*
திடீர்னு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்த்துட்டாங்க. ஆனா அதுக்கு முயற்சி எடுத்த நம்ம நாட்டு BCCI, இப்போ நடக்கப்போகிற ஆட்டத்துக்கு நாங்க வரமாட்டோம்; எங்களுக்கு அதை விட "பெரிய" வேலை இருக்கு.
வெளி நாட்டுக்குப் போய் விளையாடப் போறோம் அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அரசுக்கும் BCCI-யை அடக்க முடியலை. நாட்டுக்காக விளையாடுறதை விட காசுக்காக விளையாடுறதுன்னு BCCI நினச்சிருச்சி. சச்சின் வீட்டுப் பூனைக்கு கால் வலிக்குதாமே அப்டின்னு கவலைப்படுற நம்ம கிரிக்கெட் அன்பர்கள் இதுக்காக ஒரு பதிவாவது போட மாட்டார்களா என்று நினைத்தேன்.

ஆனால், நமக்குத்தான் தலைக்கு மேல வேற நிறைய வேலை இருக்கே ...!

சமச்சீர் கல்விக்கு எதிரா பெரும் கோஷம் நடக்குது. கொடுக்குற கல்வியை தரமா உயர்வா கொடுக்குறதுக்கு ஆதரவா நாம யாராவது ஒரு பதிவு போடலாம்.

ஆனால், நமக்குத்தான் தலைக்கு மேல வேற நிறைய வேலை இருக்கே ...!(மதுரை சரவணனுக்கு மட்டும் அவரது பதிவுக்காக நன்றி.)

தனியார் பள்ளிகள் இவ்வளவுதான் மாணவர்களிடமிருந்து 'கறக்கலாம்' என்று அரசு போட்ட சட்டத்திற்கு எதிராக பல பள்ளிகள் கோர்ட் கேஸ்னு போயாச்சி.. ஓரிரு பள்ளிகளில் பெற்றோர்களால் சின்னப் போராட்டங்கள். நமக்கோ பாலுக்கும் காவல்; பூனைக்கும் காவல் அப்டின்னு ஒரு போராட்டம். எல்லோரும் நம்ம பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்க்கிறோம். அவர்கள் நம்மிடம் பிடுங்கும் காசுக்கு அவர்களைத் திட்டிக் கொண்டே தொடர்ந்து அந்தப் பள்ளிகளைத்தான் நாம் தேடி ஓடுகிறோம். அரசின் சட்டத்தை அமுல் படுத்த, அரசை ஆதரித்து நாம் சில பதிவுகளாவது போடலாம்.

ஆனால், நமக்குத்தான் தலைக்கு மேல வேற நிறைய வேலை இருக்கே ...!

கடைசியாக எழுதிய விஷயத்தைப் பற்றி எழுதணும்னு நானும் நினச்சிக்கிட்டே இருந்தேன். ஆனாலும் எழுதலை. ஆனால் இன்றைய 'நீயா .. நானா?' நிகழ்ச்சி பார்த்த பிறகு உடனே கட்டாயம் ஒரு பதிவு போடணும்னு நினச்சேன்.

இந்த ஆண்டு 10வது வகுப்பின் முதல் மதிப்பெண் நெல்லையில் உள்ள அரசு பள்ளி மாணவி.12வது வகுப்பு தூத்துக்குடி மாணவன். அரசுப்பள்ளியா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக "பெத்த பள்ளிக்கூடம்" இல்லை.

தொடர்ந்து பல ஆண்டுகளாக (25 ஆண்டுகள் என்று நினைக்கிறேன்.) விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் 12வது வகுப்பு தேர்வு பெறுபவர்களில் அதிக விழுக்காடு பெற்று வருகிறது. இங்கே அதிக அளவில் அரசு பள்ளிகளே உள்ளன.

நாமக்கல், சேலம் போன்ற இடங்களில் நடத்தப்படும் "ஸ்பெஷல்" பள்ளிகளை விடவும் அரசுப் பள்ளி, அல்லது சாதாரணப் பள்ளிக் குழ்ந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வருவது கண்கூடு.

இப்படியெல்லாம் உண்மை இருப்பினும் நாம் தேடி ஓடுவது தோலுரிக்கும் பெரிய பள்ளிகளுக்குத்தான்.

இன்றைய "நீயா .. நானா?" நிகழ்ச்சிதான் நான் இதுவரை பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாகும். பள்ளி நடத்துவோர் ஒரு பக்கமும், பெற்றோர் மறு பக்கமாகவும் இரு அணிகள். ஆனாலும் இரண்டாவது அணியில் ஒரு பள்ளி நடத்துனரும் இருந்ததுவும், அவர் பள்ளிக்கான சொத்து எல்லாமே பள்ளியின் பேரில் உள்ளது என்றதும், சேவையாகவே பள்ளி நடத்துவதாகச் சொன்னதும், பள்ளி நடத்துவோருக்கு எதிராக அக்கு வேறு ஆணி வேராக பல சட்ட நுணுக்கங்களைக் கூறியதும் மலைப்பாகவும், அருமையாகவும் இருந்தது.

இன்னொரு ஜென்மம். கழுத்தில் டை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. பேசியதெல்லாமே அகங்காரம் தான். பெரிய பள்ளிகளில் பெற்றோர்கள் மதிக்கப்படுவதில்லை; அவர்களிடமிருப்பதெல்லாம் அகங்காரம்தான் - arrogance - என்று குற்றம் சாட்டிய போது மிகவும் திமிராக அப்படித்தான் இருப்போம் என்ற மமதை, அரசு தலையிட்டால் நாங்கள் கொடுக்கும் கல்வியின் தரத்தைக் குறைப்போம் என்ற தெனாவட்டு -- எதற்கும் குறைச்சலில்லை அந்த ஜென்மத்திடம். விருந்தினராக வந்த பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவரான  ராஜா என்பவரும் நன்கு ஆரம்பித்து, பின் மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களைக் கூறினார். பிடிச்சா வாங்க ... இல்லைன்னு அரசு பள்ளிக்குப் போங்க என்கிறார்.

பாலாஜி சம்பத் என்ற சமூக ஆர்வலரின் பேச்சு எளிதாக இருந்தது. கோபி முதலிலிருந்தே மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு எதிரான கருத்துக்களோடு இருந்தார். ஆனால் முடிவுரையில் நாம் நம் குழந்தைகளை ஒரு
product-க்காகத்தான் பார்க்கிறோம்; நாம் நம் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதிலேயே status symbol-ஆகத்தான் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது போன்ற நடைமுறைகளைச் சொன்னார். பள்ளிக்கூடம் நடத்துபவர்களையும் நேரடிக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

இதையெல்லாம் இங்கே சொல்லக் காரணம் அரசு தனியார் பள்ளிகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர இப்போது எடுக்கும் நிகழ்வுகளில் மக்களும், பதிவர்களாகியா நாமும் இணைந்து போராடணும். நம் அரசைப் பற்றி நமக்குத் தெரியும். ஹெல்மட் போடணும்னு கோர்ட் உத்தரவு போடும்; ஆனால் அரசு மக்களைப் 'புண்படுத்தக்கூடாதே' என்ற நல்லெண்ணத்தில் அதைச் செயல்படுத்தாது. அதே போல் இப்போதும் தனியார் பள்ளிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் நல்ல முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அரசு திசை மாறாமல் எடுத்த முடிவுகளை தொடர்ந்து எடுத்துச் செல்ல மக்கள் சரியான நிலைப்பாடுடன் நிற்க வேண்டும்; அரசையும் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்.

எப்போதாவது நமது அரசினரால் நல்ல விஷயம் ஆரம்பிக்கப்படும். அப்படி ஒரு நிகழ்வு இது. இதை பதிவர்களாகிய நாமும் அதனை ஆதரித்து, அரசு அப்பள்ளிகளை ஒழுங்கினுக்குள் கொண்டுவர நம் பங்கை நாம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பதிவுகளைப் பயன்படுத்தாவிடில் பதிவுகளாலும், பதிவர்களாலும் சமூகத்திற்கு என்னதான் பயனிருக்க முடியும்?

'Cinematainment' என்பதே எக்கள் வாழ்க்கையின் லட்சியம் என்றிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களின் நடுவிலும் இப்படி ஒரு கருத்தை எடுத்துக் கையாண்டிருக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு இருக்கும் அக்கறையில்  சிறிதாவது நமது பதிவர்களுக்கு இருக்க வேண்டாமா? இதுபோன்ற சமூக அக்கறை உள்ள விதயங்களை எடுத்து எழுதி சமூக விழிப்புணர்விற்கு சிறிதாவது நம் பங்கை அளிக்க வேண்டாமா?

......... வாங்க


இரவு 12.40

21 comments:

மதுரை சரவணன் said...

மிக்க நன்றி ... தனியார் பள்ளிகள் தரம் என்ற பெயரில் காசு பிடுங்குவதை ,தெரிந்தே பெற்றோர்கள் நல்ல கல்வி என்ற போலிப் பெயரில் விலைக்கு வாங்குவது நிற்கும் போது மட்டுமே கல்வி அனைவருக்கும் நிரந்தரம் ஆகும்.

நேசமித்ரன் said...

சூடான இடுகை சார்

கடமைகளை நினைவுறுத்துவதுமான இடுகைக்கு நன்றி

Thekkikattan|தெகா said...

status symbol -ரொம்ப உண்மை. கண்டிப்பாக இதனைப் பற்றிய இன்னும் கூடுதலான பதிவுகள் வர வேண்டும். அந்த எண்ணம் ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வார்த்தைக்கு வார்த்தை இடுகையில் சொல்லும் அனைத்தையும் வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் said...

:)

நல்ல இடுகை.

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான வருத்தங்கள்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.. என்னால முடிஞ்சதை எழுதுறேன் ஐயா..

தருமி said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...

வார்த்தைக்கு வார்த்தை இடுகையில் சொல்லும் அனைத்தையும் வழிமொழிகிறேன்//

அப்புறம் என்ன ... வாங்க

Robin said...

//எப்போதாவது நமது அரசினரால் நல்ல விஷயம் ஆரம்பிக்கப்படும். அப்படி ஒரு நிகழ்வு இது. இதை பதிவர்களாகிய நாமும் அதனை ஆதரித்து, அரசு அப்பள்ளிகளை ஒழுங்கினுக்குள் கொண்டுவர நம் பங்கை நாம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பதிவுகளைப் பயன்படுத்தாவிடில் பதிவுகளாலும், பதிவர்களாலும் சமூகத்திற்கு என்னதான் பயனிருக்க முடியும்?//
சரியாகச் சொன்னீர்கள்.

Indian said...

நல்ல பதிவுங்க ஐயா.


அந்தத் *தலைக்கு மேல வேல* என்னனுதான் யாருக்கும் தெரியாது.

நேத்து நீயா நானா முழுசாப் பாக்க முடியல. மறு ஒளிபரப்பு இருக்கான்னு தெரியல.

Indian said...

சமச்சீர் கல்வியை செயல்படுத்தினா
தங்களின் so-called premium branded product அடி வாங்கும் என்ற நல்ல எண்ணம்தான் மெட்ரிக்குலேஷன் பள்ளி *நிறுவனங்களை* எதிர்க்க வைக்கிறது.

ஆபிசர் said...

நம்ம மக்கள் என்னைக்கு கல்விய கல்வியா பாத்திருக்காங்க?பொண்ண அதிகமா படிக்கவச்சா ஜாதில யவனும் பொண்ணு தரமாட்டான்.அந்த காலேஜ் நடத்துறது நம்ம சாதிக்காரங்க.நம்ம சாதிக்காரங்க நெறைய பேரு அங்க படிக்கிறாங்க.....இந்த மாறி நான் நெறைய பெற பாத்துட்டேன்.
எந்த படிப்புக்கு சம்பளம்(கிம்பளம்) ஜாஸ்தின்னு பாத்து அதுல தான் சேக்குறாங்க.
இத தான் நம்ம புத்திசாலி பிரைவேட் பள்ளிகள் வகையா பயன்படுதிகுறாங்க.அரசியல்ல இதெல்லாம்......

Kala said...

ஜயா நலமா?
விழிக்க வைக்கும் விழிப்பான
இடுகை
உங்கள் விழிப்புக்கு!
வழி கிடைக்க வேண்டும்
நன்றி

Anonymous said...

நல்ல இடுகை

அமைதி அப்பா said...

மிகவும் அற்புதமான இடுகை சார்.
இந்த இடுகையைப் பாராட்டி, நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு தலைக்கு மேல வேற நிறைய வேலை இருப்பதால்! இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.(சும்மா,எல்லோரும் டென்ஷன் ஆகக் கூடாது பாருங்க)


நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களில் பலர் நல்ல மதிப்பெண் பெறுவதில்லை. சிலர் வாங்கும் மதிப்பெண்ணை பத்திரிகையில் போட்டு விளம்பரப் படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். பல பெற்றோர் பணத்தை இழந்ததுடன்,அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.


நீயா நானாவில் அந்த 'டை' கட்டிய பேர்வழி பேசியபோது எரிச்சல் வரத்தான் செய்தது. அந்த பேர்வழி திருந்த வாய்ப்பில்லை ஏனெனில் 'ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்'
தொடரட்டும் உங்கள் பனி.
நன்றி.

தருமி said...

சரவணன்,
நேசமித்திரன்,
தெக்ஸ்,
டிவிஆர்,
கோவி,
கா.பா.,
ராபின்,
ஆப்ப்பீசர்,
இந்தியன்,(இப்போ பதிவுலகில் 'தலைக்கு மேல்' என்ன'ங்க?)
கலா,
மகா,
அமைதி அப்பா,

.......அனைவருக்கும் மிக்க நன்றி.

sriram said...

தருமி ஐயா..
Productive ஆக ஒரு விசயம் செய்ய உங்க உதவி தேவை. VOIP phone மூலம் 781 363 9168 கூப்பிட முடியுமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தருமி said...

மன்னிக்கணும் ஸ்ரீராம். இப்போ அதனைப் பயன்படுத்தலையே :(

ரோஸ்விக் said...

விழிப்புணர்வான இடுகை ஐயா... பாராட்டு மட்டும் சொல்லி போவதில் மனம் ஒப்பவில்லை.

பதிவிட முயல்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கரெக்ட்டுமா!

ராஜ நடராஜன் said...

ஆக்கபூர்வமான இடுகை.

ரோஸ்விக் said...

உணர்த்தியதற்கு / உணர்ந்ததற்கு அப்புறம் எழுதியதற்கு வெட்கங்கள்.

http://thisaikaati.blogspot.com/2010/06/school.html

Post a Comment