Thursday, June 24, 2010

404. ராவணன் படம் பார்த்தேன்.

*


ராவணன் பார்க்கப் போனேன். அதிக கூட்டம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துச் சென்றேன். கூட்டம் ஏதுமில்லை. என் சைடில் நின்ற ஒரு ஆள் பிச்சை கேட்பதுபோல் நின்றார்.
கையில் சில ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். நான் அவரைப் பார்த்ததும், ‘கொஞ்சம் குறையுது; ரூபாய் கொடுங்க’ என்றார். ‘குளித்து குடி’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘பிச்சையெடுத்து பார்’ என்று யாரும் சொல்லாததால் நான் ‘அடச் சீ போயா’ன்னு சொல்லிட்டு போய்ட்டேன். உலகமயமாக்குதலின் effect-தான் இதுவோ. ‘படம் பார்’ என்ற ஓர் மேல்தட்டு நாகரீகம், ‘பிச்சையெடுத்தும் படம் பார்’ என்ற நிலைக்கு ஒருவரை விரட்டிச் செல்கிறது என்பது அவ(ரை)னைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. இது என்ன .. இப்படிப்பட்ட சிந்தனைகள் எதற்கு இப்போது என்று யோசித்தேன். ‘ஓ! மணி படம் பார்த்தால் பலருக்கு உலகமயமாக்குதல், பி.ந.த்துவம் . இவையெல்லாம் மனதில் தோன்றுமாமே … அந்த ‘வியாதி’தான் எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிருக்குன்னு நினச்சுக்கிட்டேன். அவரு என்னமோ எப்பவும் ‘கடன்வாங்கி’ கதை வைத்து படம் எடுப்பார்; அவரைப் பார்த்து அவர் இதைச் சொல்லவில்லை; அதைச் சொல்லவில்லைன்னு அவர் உயிரை எடுக்குறாங்க. எதுக்கு இதெல்லாம் அப்டின்னு நினச்சிக்கிட்டு டிக்கெட் எடுக்கப் போனேன். எனக்கு முன்னால் ஒருவர். டிக்கெட் வாங்க கை நீட்டியவர் விலை கேட்டதும் தயங்கினார். 100 அல்லது 150 ரூபாய் கொடுத்து பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு சுய பட்டிமன்றம் நடத்தியிருப்பார் போலும். கடைசியாக 100 ரூபாய் டிக்கெட் வாங்கி, பின்னால் நின்ற என்னிடம் ‘இப்படி விற்றால் எப்படி திருட்டு சி.டி. ஒழியும்’ என்றார். ‘ரொம்பவே நியாயம்’ என்றேன். நீ 120 கோடிக்குப் படம் எடு. அதுக்காக நான் மட்டுமே 100 அல்லது 150 கொடுக்கணுமா? இதுக்கு ஒழுங்கான வரி உண்டா? இந்தக் காசு யாருக்குப் போகுது? Atleast படம் எடுக்க செலவழிச்சவனுக்காகவாவது போகுதா? கொடுக்குற டிக்கெட் எல்லாம் கணினி பிரிண்ட் அவுட்தான். யாருக்கு என்னென்ன கணக்கு? என்னென்னமோ நடக்குது … தியேட்டருக்குள் சென்றதும் கடைசி வரிசைக்கு முந்திய வரிசையில் அமர்ந்தேன். பின்னால் ஒரு குடும்பமோ என்னவோ .. இரு பாலர் கூட்டம் .. தேவையில்லாமல் ஜோக் அடிப்பதாக நினைத்து சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பின்னாலிருந்து ஒரு ட்ராமா போட்டுக் கொண்டிருந்தால் எப்படி படம் பார்ப்பது என்றெண்ணி, எழுந்து இன்னும் இரு வரிசை தாண்டி போய் உட்கார்ந்தேன். உள்ளதே மணி படம் .. வசனமே குறைய இருக்கும். இதில இதுக இப்படி கத்திக்கிட்டு இருந்தா யாரு படம் பார்க்க / கேட்க முடியும்? குத்துப் பாட்டு, காதல்பாட்டு இதில் எதுவும் மணி குறை வைக்கிறதில்லை. ஆனா வசனம் மட்டும் குறைச்சிக்கிட்டாரு. தமிழ்ப்படத்தில் ஒரு முன்னேற்றம்தான் இது. கொஞ்சம் கொஞ்சமா பரிணாமம் நடக்குமாமே … அது மாதிரி இது … பாரதிராஜா நிஜ இடங்களில், கிராமங்களில் படப்பிடிப்பு என்றாக்கியதுபோல், மணி ரொம்ப கொஞ்ச வசனம் என்று மாத்தியிருக்கிறார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் வந்தால் இன்னும் அடுத்த நூற்றாண்டில் தமிழ்ப்படங்கள் ‘உலகத் தரத்திற்கு’ வந்திடாதா!? பின்னாலிருந்த ஒருவர் கைத் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார். நம்மூர் ஆளுகளுக்குத் தொலைபேசியில் எப்படி மெல்ல பேசத் தெரியும். சத்தமோ சத்தம் .. இதிலே அம்மாவிடம் 70 ஆயிரம் ரூபாய் கேட்டு அனத்திக்கிட்டு இருந்தார். ‘நாங்க ரெண்டு மகன்களும் உங்களை நல்லா பார்த்துக்குவோம்’ அப்டின்னு ஒரு சென்டிமென்ட் டயலாக் வேற … கடவுளே ..! படம் ஆரம்பித்த பிறகும் தொல்லை சில நிமிடங்கள் தொடர்ந்தது. படம் என்னவோ இப்போது நடக்கிற கதைதான். ஆனால் புராணக் கதையை இப்படி எடுத்து வச்சதினாலேயோ என்னவோ படமும், கதையும், பாத்திரங்களும் ரொம்ப அந்நியப்பட்டு நின்றன. நல்ல இடங்கள். அழகான படப்பிடிப்புகள். வடிவேலு சொல்றது மாதிரி (பில்டிங் ஸ்ட்ராங்க்; பவுண்டேஷன் வீக்கு அப்டின்றது மாதிரி) என்னதான் இடமும் படப்பிடிப்பும் நன்றாக இருந்தாலும், ஒட்டாமல் படம் நம்மிடமிருந்து தனித்து நிக்குது. பாலத்துச் சண்டை எப்படி எடுத்திருப்பார்கள்? கேமிரா எங்கே இருந்திருக்கும்? பாலம் நல்ல கட்டையில் புதிதாகச் செய்ததுதான். ஆனாலும் ‘நம்ம தலை’கள் உதைத்தால் உழுத்துப் போனது போல் உதிர்ந்தன. Cliff hanger முதல் சீன் நினைவுக்கு வந்தது. இடம் அது மாதிரி நன்றாக இருந்தது. ஆனால் சண்டை, நம்ம நாயகர்களின் வசனங்கள் … ம்ம்.. ஒண்ணும் அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. பல இடங்களில் பின்னணி இசையில் brave heart இசை இயக்குனர் James Horner-ன் bag-piper-ன் இசை நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில் இசை அழகாய் இசைந்திருக்கும். இசையும் காட்சியும் ஒன்றுக்கொன்று இணைந்து நிற்கும். அவை நம் பார்வைகளை, காதுகளை ஆக்கிரமித்ததே இல்லை. காட்சிகள் கண்ணை வருட., இசை காதை வருடும். ராஜா நல்ல உடைன்னு மொட்டக் கட்டையா ஊர்வலம் வரும்போது சின்னப் பிள்ளை மட்டும் உண்மையைச் சொல்லுமே அது மாதிரி, ரஹ்மான் அப்டின்னதும் மக்கள் உடனே பஜனைப் பாடல்களை ஆரம்பிப்பது மாதிரி உள்ளது. எனக்குத் தெரிந்த அளவில் எந்தப் படத்திலும் ரீரிக்கார்டிங்கில் ரஹ்மானின் ‘தெரமை’ நன்றாக இருந்ததாக நினைவில்லை. பம்பாய் படத்தில் கூட அந்தக் கடைசி கலாட்டா சீனில் அவர் கொடுத்த ரீரிக்கார்டிங் ‘அட .. என்னப்பா இந்த ஆளு .. நல்ல சீனைக் கூட பார்க்க முடியாம கெடுத்து வைக்கிறாரே அப்டின்னுதான் நினைக்க வச்சிது. இந்தப் படத்திலும் அதே நினைவுதான். ரஹ்மான் பாட்டில்தான் தன் இசையால் வார்த்தைகளைக் கொல்வார். நான் பார்த்த தியேட்டரில் படமே ரஹ்மானால் கொல்லப்பட்டது. கதாநாயகனும் நாயகியும் பேசுவது 75% புரியவேயில்லை. ஆனால் பிரபு, கார்த்திக் பேசியது நன்றாகக் கேட்டது. அப்படியானால், என் காது டமாரமா? தியேட்டர் டப்பாக்கள் மோசமா? ரஹ்மான் மோசமா? தெரியவில்லை. ஆனாலும், என் முடிவு: ரஹ்மான். அந்தச் சின்னப்பிள்ளை சொல்றது மாதிரி நான் சரியா சொல்றேனா; இல்லை ‘பஜனை’ மக்கள் பலரும் சரியா சொல்றாங்களா … தெரியலை. ஆனால் இந்தப் படத்தின் உண்மையான வில்லன்: ரஹ்மான்தான். எனக்கு அதில் இரண்டாவது கருத்து இல்லை. சன் டிஷ்ஷுக்கு ஒரு விளம்பரம் ஒண்ணு வருமே .. அதில் கூட அந்தக் குண்டுப் பையன் அல்லது வித்யா பாலா ‘டண்டணுகு டண்டணா அப்டின்னு சொல்லுவாங்களே அது மாதிரியும், பக் .. பக்குன்னு நாயகன் சொல்ற வசனமும் டாப்! அது என்னங்க விக்ரம் ... பாலா மாதிரி டைரக்டர்களிடம் படிச்ச பாடமெல்லாம் இப்படி சீக்கிரம் மறந்திர்ரீங்க .. சரி .. நல்ல டைரக்டர்னா நல்லா நடிப்பீங்க போலும். அந்தக் காலத்தில டைரக்டர் ஸ்ரீதர் வேணாம்னு சொன்ன பிறகு வடக்கே ஹேமமாலினி போனதும், இங்கேயுள்ள ஆ.வி.யும், கல்கியும் ஒரே அட்டைப் படமும், குட்டிச் செய்தியாகவும் போட்டு அவரை அங்கே ஒரு கனவுக் கன்னியாகவும், 'மீடியா கதாநாயகி'யாகவும் மாற்றி தமிழ்நாட்டில் அந்த அம்மாவுக்கு ஒரே glorification செஞ்சாங்க; பெரிய ஆளா ஆக்குனாங்க. அதே மாதிரி இப்போ மணிக்கு மீடியா சப்போர்ட். அங்க பத்த வச்சி, இங்க பத்த வச்சி, இன்னைக்கு அவர் ஒரு பெரிய பெயர் வாங்கின டைரக்டர். சும்மா சொல்லப்படாது .. மெளன ராகம், நாயகன், அஞ்சலியில் பாதிப் படம் – இதெல்லாம் நல்ல படம்தான்.அதுக்காக அவர் எது எடுத்தாலும் அதை இமயத்தில் கொண்டு வைக்கிறது .. நடிகர்களும் அவர் படத்தில் நடிப்பதே என் வாழ்வின் குறிக்கோள் என்பது … அம்மாடி … செம ஜால்ரா ! இந்த அளவு மீடியா சப்போர்ட் தொடர்ந்து நாலு படம் கொடுத்த பாலாவுக்கோ, வெயில் கொடுத்த வசந்தபாலனுக்கோ, மொழி கொடுத்த ராதா ரவிமோகனுக்கோ கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்; பொருத்தமாகவும் இருக்கும். கார்த்திக் .. நீங்க ரொம்ப பாவமுங்க. மணியின் மெளனராகம் படத்தில் உங்களுக்கு அப்படி ஒரு நல்ல பெயர். அதுக்காகவே இந்தப் படத்தில உங்களை மணி ‘போட்டுப் பார்த்துட்டார்’. வையாபுரிக்கு கொடுக்க வேண்டிய ரோலை உங்களுக்குக் கொடுத்துட்டார்; மணி சொன்னார்னு நீங்கள் ஒத்துக்கிட்டீங்க; நாங்களுமா ஒத்துக்கணும்? வெறும் டெக்னாலஜி மட்டுமே ஒரு படத்தை பெருசாக்காது. உள்ளே சத்து வேணும். இன்னும் புராணங்களை மணி விட்டு வைக்கவா போகிறார்? நடக்கட்டும் …. அவர் புகழ் பாடத்தான் பெரும் குரூப்பே அலையுதே … இன்னைக்கி கூட ஆ.வி.யில் மணியைப் பற்றிப் போட்டிருப்பது: இந்திய சினிமாவின் மெளன குரு! :)  அப்டின்னா என்னாங்க ... ?



இன்னும் ஒரு கேள்வி:
எதுக்குடா நடுவில வேற படங்கள் சிலது போட்டிருக்கான் அப்டின்னு பார்க்கிறீங்களா? இந்தப் படமெல்லாம் அஞ்சலிப் பாப்பா மாதிரி இல்லை? அப்போ இந்தப் படங்களை தங்கள் விளம்பரத்திற்கு சிலர் பயன்படுத்திய போது இது எங்கள் படம்; எங்கள் உத்தரவின்றி யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு மணி சொன்னதாக நினைவு. நான்கூட நினச்சேன்; இந்த மாதிரி நல்ல படைப்புகளை மத்தவங்க ‘சும்மானாச்சுக்கும்’ காப்பி பண்றது சரியில்லையேன்னு. ஆனா அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுது மணியே  நான் இங்கு கொடுத்திருக்கும் புத்தகத்தில் உள்ள படங்களைத்தான் காப்பி அடித்திருக்கிறார் என்று.







FYNN என்பவர் எழுதிய அருமையான MISTER GOD, THIS IS ANNA என்ற நூலில் PAPAS என்ற cartoonist வரைந்த படங்களே அவை.அட ... கதைகள் மட்டுமல்ல ... படங்களுமா காப்பி???  :(










காப்பி அடிப்பதும் நல்ல திறமைதான்; இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் தானாக, புதிய களங்களை, புதிய உருவாக்கமாக நான் கடவுள், மொழி, வெயில் … போன்ற படங்களை இயக்குகிறவர்களுக்கு மரியாதை அதிகமாக இருக்க வேண்டாமா???? தேவையில்லாமல் ஒருவரை ஏன் இப்படி 'மீடியா இயக்குனராக' ஆக்குகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.








37 comments:

அத்திரி said...

குசும்பு கலந்த விமர்சனம்...............

நல்ல பதிவு ஐயா

உண்மைத்தமிழன் said...

தங்கத் தலைவி ஐஸ்வர்யாவை பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லாம இதுக்குப் பேரு விமர்சனமா..?

வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

பெருசே..

ஐஸூக்காக இன்னொரு தடவை கண்ணாடி போட்டுட்டுப் போய் பாருங்க..!

வடுவூர் குமார் said...

ஓஹோ! அஞ்சலி பாப்பா இப்படித்தான் வந்ததா?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

உண்மையான விமர்சனம் இதுதான்! ஆனால் உண்மை கசக்கும் பலருக்கு..... கடவுள் கதைகளைப் போல..... வாழ்த்துக்கள் சார்!

வவ்வால் said...

Nermaiyana pathivu.media cover seyvathe "cover" vaanga thaan!

Nermaiyana media ungalai ponra pathivarkal thaan.

Anjali "E.T" xerox,kannathil muthamital "A.I" xerox enpathu oor arintha ragsiyam aanal mani aattvor othukamaattanga!

Mani ithuvarai sonthamaga oru padamum edukkavillai aanal avar thaan best directoram vilangidum tamil cinema!

Intha raavanan padathirku script,screenplay rensil desilva(rang de basant,luck etc padam seythavar).,kadaisiyil iruvarkkum misunderstanding aanthaal avar peyarai mani thookkivittar.

avarum konjam velai balance vaithe senrar,athan sothappala kathai irukku pola.

தருமி said...

அத்திரி,
குசும்பா .. அப்டின்னா?

தருமி said...

வயசுப்பய உ,த.,
ஐஸுக்கு என்னங்க .. அழகு. வயசானாலும் ஒளவையார் படம் எடுக்கலாமே ..

யாரோ அவர் உடையைப் பற்றியெல்லாம் எழுதியிருந்தாங்க. அப்படியெல்லாம் தப்பாக இல்லை, (சிங்கை சென்று வந்த பிறகு இந்த உடைகள் மீதான என் பார்வை மாறியிருப்பதன் காரணமாகக்கூட இருக்கலாம்.)

தருமி said...

வடுவூஎ
எடுத்தது கூட தப்பில்லை; ஆனால் அதன்பின் காப்பிரைட்ஸ் பற்றி பேசியதுதான் கொஞ்சம் ஓவர்.

தருமி said...

M.S.E.R.K.,
//கடவுள் கதைகளைப் போல.....//

அதாவது அவர் படங்களில் கதை இருக்காது என்பதை இப்படி சொல்கிறீர்களா?!

தருமி said...

வவ்வால்,
background கதை வேற சொல்லியிருக்கீங்க .
நன்றி

ப.கந்தசாமி said...

பதிவர்களுடைய விமரிசனங்களைப் பார்த்த பின்பும் படம் பார்க்க போன ரொம்ப தைரியசாலி சார், நீங்க.

தருமி said...

டாக்
ஆஹா ... ஓஹோன்னும் விமர்சனங்கள் வந்தனவே ...!

வால்பையன் said...

நீங்க மட்டும் தான் சினிமாவை வித்தியாசமா பாக்குறிங்க!

துளசி கோபால் said...

அந்த 'சின்னப்பிள்ளையா' மாறினதுக்கு நன்றி.

இளங்கன்றுதான் பயமறியாது.

தருமி said...

வால்ஸ்,
//நீங்க மட்டும் தான் சினிமாவை வித்தியாசமா பாக்குறிங்க!//

வசவா .. வாழ்த்தா ..?

தருமி said...

டீச்சர்,
//அந்த 'சின்னப்பிள்ளையா' மாறினதுக்கு நன்றி.//

புரியலையே......

தருமி said...

டீச்சர்,
சாரி .. சாரி... புரிஞ்சிரிச்சி.அப்போ சொன்னது சரின்னு சொல்றீங்க. இல்லையா?

மதுரை சரவணன் said...

//வெறும் டெக்னாலஜி மட்டுமே ஒரு படத்தை பெருசாக்காது. உள்ளே சத்து வேணும். //

உண்மை. இது தமிழ் சினிமாவுக்கு அன்னியம்.

விமர்சனப் பார்வை புதிது...வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

//வெறும் டெக்னாலஜி மட்டுமே ஒரு படத்தை பெருசாக்காது. உள்ளே சத்து வேணும். //

உண்மை. இது தமிழ் சினிமாவுக்கு அன்னியம்.

விமர்சனப் பார்வை புதிது...வாழ்த்துக்கள்

இரா. பிரபாகர் said...

பெரியவரே..
மணி உங்களுக்காகப் படம் புடிச்சிருக்கிறதா ரெம்பவும் நெனப்பு வைச்சுக்காதீங்க. கடைசி காலத்தில அவரோட வறுமைய போக்கிற அரும்பணியில இருக்காரு. ஐஸ்ஸும், ரகுமானும் உலக ரசிகப் பெருமக்களுக்காகவும், விக்ரம் தென்னாட்டுக்கும் சின்னப்பச்சன் வடநாட்டுக்குமா பிரிச்சி மேWசதில 60கோடி பில் போட்டதா அதிகாரபூர்வமில்லாத தகவல்.( நான் இவ்வளவு பம்முறதுக்குக் காரணம் இந்த தொகை கூடுதலாகவும் இருக்கலாமில்லையா?). ரோஜாவுக்கு பிறகு மணி கதைய விட விற்பனை சாத்தியங்களையே அதிகமும் சிந்திக்கிறார் போலும். அவர் ஒரு எம் பி ஏ என்பதையும் நீங்க மனசில வச்சுக்கணும். ஒரு சில கோடிகள் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நீங்களாயிருந்தா எதைப் பத்திக் கவலப்படுவீங்க.100 ஓவாயக் குடுத்துட்டு என்னமோ ரொம்பத்தான் அலட்டிகிறீங்களே..

Thekkikattan|தெகா said...

அட, தருமி படத்தையும் பார்த்திட்டு போட்டுத் தாக்கிட்டீங்க - தோலுறிச்சிருக்கீங்க ரொம்பச் சரி. இப்படித்தான் மீடியாக்கள் வித்து வித்தே வேணுங்கிறவங்கள ஏத்தி வைச்சிக்கிறதும், கவனிக்காம விடணுங்கிறதும் நடக்குது என்ன செய்வது ...

துளசி கோபால் said...

ராவணனே புரிஞ்சுருச்சு நான் சொன்னது புரியலையேன்னு திகைப்பாப் போயிருச்சு. அதே சமயம் கொஞ்சம் மகிழ்ச்சியும் உண்டானது நெசம்.

நானும் மணி படத்துக்கு வசனம் எழுதப்போலாமேன்னு:-))))

உண்மையை உரக்கச் சொல்லும் காலமா இது?????

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

தெக்ஸ்,
முடிஞ்சா போன பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிற விமர்சனங்களை வாசித்துப் பாருங்க. ஜய் .. ஜக்கா ... ஜய் .. ஜக்கா ரொம்ப நல்லா கேக்கும்!

TBR. JOSPEH said...

நானும் பல விமர்சனங்களைப் பார்த்துவிட்டு தியேட்டருக்கு போய் இந்த படத்தை பார்க்க வேண்டுமா என்று நினைத்தேன். ஓசியில் டிவிடி கிடைத்தால் வேண்டுமானால் பார்க்கலாம்:))

தருமி said...

டி.பி.ஆர்.
படப்பிடிப்பு, இடங்கள் பார்க்க பெரிய திரையே நல்லது

shabi said...

மொழி கொடுத்த ராதா ரவிக்கோ /// ராதா மோகன் டைரக்டர் பெயர்

தருமி said...

நன்றி ஷபி. தவறைத் திருத்தி விட்டேன்.

தருமி said...

ப்ரபா,
//100 ஓவாயக் குடுத்துட்டு என்னமோ ரொம்பத்தான் அலட்டிகிறீங்களே..//

ஐயோடா .. நான் அலட்டலைங்க. சும்ம அலட்டுறவங்களைச் சொல்றேன்.

இன்னைக்கி இந்து-வில் வந்துள்ள ராவணன் - ராவன் விமர்சனங்கள் வாசித்துப் பாருங்க (ராவணனுக்கு - http://www.thehindu.com/arts/cinema/article474237.ece)இந்திப் படத்துக்கு எழுதின அனுஜ் குமார், தமிழ்ப்படத்துக்கு எழுதின மாலதி ரங்கராஜன் == இருவரின் விமர்சனத்தில் இரண்டாமவர் அடிக்கும் ஜால்ரா சத்தம் காதைக் கிழிக்குது.

ஆபிசர் said...

படம் பாத்துட்டு சொல்றேன்.மணிக்கு சரக்கு தீந்து விட்டது போலும்.ஒடனே அவர்கிட்ட எங்கே சரக்கு இருந்துதுன்னு கேக்காதீங்க.பெருசுங்கள விட்டுட்டு என்ன மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டு பாருங்க. all time favorite movies இல் கமல் படங்களும் (அன்பே சிவம்),மணி படங்களும் (நாயகன்,தளபதி,அஞ்சலி) கண்டிப்பா இருக்கும்.என்ன காப்பி அடிச்சாருன்னு ரொம்ப பீல் பண்றீங்க.அதெல்ல்லாம் பண்ணாம பொழைக்க முடியாது பாசு

தருமி said...

ஆப்பீசர்,
//என்ன மாதிரி சின்ன பசங்க கிட்ட கேட்டு பாருங்க. ..//

சின்னப் பசங்க,
நானும் தான் சொல்லியிருக்கோம்ல ..//மெளன ராகம், நாயகன், அஞ்சலியில் பாதிப் படம் – இதெல்லாம் நல்ல படம்தான்.அதுக்காக அவர் எது எடுத்தாலும் அதை இமயத்தில் கொண்டு வைக்கிறது .. நடிகர்களும் அவர் படத்தில் நடிப்பதே என் வாழ்வின் குறிக்கோள் என்பது … அம்மாடி … செம ஜால்ரா //

தருமி said...

ஆப்பீசரு,
//காப்பி அடிச்சாருன்னு ரொம்ப பீல் பண்றீங்க//

அட நீங்க வேற .. நான் அவர் காப்பி பண்றதை பெருசு பண்ணலை. ஆனா அவரை தலைல தூக்கி வச்சி கரகாட்டம் ஆடுறாங்களே அவங்களத்தான் சொல்றேன். அந்த மாதிரி காப்பி அடிக்காம நல்லா பண்றதா மூணு டைரடக்கர் பெயரையும் சொல்லியிருக்கேனே... அவுகளைத் தூக்கிக்கிட்டு ஏன் ஆடலை? என்பதே என் கேள்வி.

k selvaprabhu said...

அத்தரிபச்சா என்ற ஓரு சொல் போதுமே.

Ram said...

Naan innum padam paakkaleenga. Velaavaariya ezhuthunathukku nanri. Time waste pannaama vera ethavadu uruppadiya pannalaam, illa vera vithathula waste pannalaam.
Paravaayillaye, ivalavu naal kazhichchum Anna book baththirama vechchurukkeenga.
Rams

தருமி said...

ram
//Paravaayillaye, ivalavu naal kazhichchum Anna book baththirama vechchurukkeenga.
Rams //

நீ கொடுத்த நல்ல புத்தகமாச்சே .. ரெண்டு தடவை வாசிச்சேன்.

Unknown said...

//எனக்குத் தெரிந்த அளவில் எந்தப் படத்திலும் ரீரிக்கார்டிங்கில் ரஹ்மானின் ‘தெரமை’ நன்றாக இருந்ததாக நினைவில்லை. பம்பாய் படத்தில் கூட அந்தக் கடைசி கலாட்டா சீனில் அவர் கொடுத்த ரீரிக்கார்டிங் ‘அட .. என்னப்பா இந்த ஆளு .. நல்ல சீனைக் கூட பார்க்க முடியாம கெடுத்து வைக்கிறாரே அப்டின்னுதான் நினைக்க வச்சிது//
உண்மை!

Unknown said...

மிக அருமையான விமர்சனம்! அதுவும் அந்த அஞ்சலிபாப்பா படங்கள்! மணிரத்னம் படங்களுக்கு பாடப்படும் பஜனைகள் பற்றி அருமையாகச் சொல்லி இருந்தீர்கள்!

அடுத்த கொலைவெறித் தாக்குதலுக்கு மணிரத்னம் தயாராகிறாராம். தெரிந்தவுடன் ஆடிப் போய்விட்டேன். 'பொன்னியின் செல்வன்'

Post a Comment