Wednesday, July 10, 2013

666. பறவைகளை நாடி ....







*



  பெங்களூரிலிருந்து கூர்க் செல்லும் வழியில் ரங்கன் திட்டு. இவ்விடம் பற்றி  ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். பறவைகளின் சரணாலயம் என்று அந்தக் காலத்திலேயே மதுரையிலிருந்து படம் எடுக்க நண்பர்கள் சென்றது பற்றித் தெரியும்.
இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு.

ஒரு பெரிய பூந்தோட்டம். அதற்கு எதிர்த்தாற்போல் மரங்கள் அடர்ந்த பகுதி. வரும் பறவைகள் ஆங்காங்கே மரங்களின் மீது அமர்ந்திருந்தன. நடுவில் நீர்த் தேக்கம். இந்தப் பக்கம் வந்தால் நர மனிதர்கள் இருப்பார்களே என்ற அச்சத்தில் பறவைகள் இப்பக்கமே வருவதில்லை. நடுவில் இருந்த நீர்ப்பரப்பில் முதலைகள் உண்டு என்று ஒரு பயங்கரச் செய்தியால் படகுப் போக்குவரத்துப் பக்கம் நாங்கள் போகவேயில்லை.                                                                                       


மீன் .. மீன் .. மீன்
இவ்வளவு தூரத்திலிருந்து அவைகளை எப்படிப் படம் எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளைஞர் கூட்டம் படா படா காமிராக்களோடு படையிறங்கியிருந்தார்கள். அனேகமாக எல்லோரும் Canon காமிரா தான். பலரும் 500 mm வைத்திருந்தார்கள். ம் .. ம் .. அவர்கள் காமிரா வழியே கூப்பிட்டால் தூரத்து பறவையும் பக்கத்துப் பறவையாகி விடுமே என்று ஒரு சின்ன ஏக்கப் பெருமூச்சு ...


முயன்று பார்ப்போமே என்று சில படங்கள் எடுத்தேன்.
வந்தவை இவை .......                                     













NO CRASH LANDING ...GOOD PILOTING ...!
நிஜம் .. நீர் ... நிழல்
LOVELY  LANDING ........




பறக்கும் .. பறவை பறக்கும் ....



 


மேலும் சில படங்களைக் காண .. இங்கு செல்க  -->






  *

2 comments:

ராமலக்ஷ்மி said...

நீரில் நிழலோடு மற்றும் பறக்கும்போது எடுத்தவை அருமையாக உள்ளன.

பதினைந்து வருடங்களுக்கு முன் ஒருமுறை சென்றிருந்தேன். அப்போது வீடியோ கேமராவுடன் திரிந்த காலம்:). அதன் பின் மைசூர் சிலமுறைகள் சென்றிருக்கிறேன் என்றாலும் இங்கு செல்ல நேரம் இருக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் குழந்தைகளோடு எப்பவோ போனது இந்த ரங்கன திட்டு.
வெகு அமைதியான இடம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருக்கவில்லை.
எடுத்திருக்கிற படங்கள் ரொம்ப க்ளியராக வந்திருக்கின்றன.

Post a Comment