Saturday, November 22, 2014

803. JIHADI COLLECTION (12)



DANGEROUS LESSONS: If the Islamic State is detonating shrines
,
 it is following the precedent set in the 1920s by the House of Saud. 

Picture shows the Prophet Younis Mosque 

after it was destroyed in a bomb attack by 

Islamic State militants in Mosul.





S. IRFAN HABIB
(S. Irfan Habib holds the Maulana Abul Kalam Azad Chair,
National University of Educational Planning and Administration, New Delhi.)
-----------------------------------------------------
செளதிய வஹாபியத்தின் கொடூர முகம்


ஹபிப் எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் ….
(என்னுடைய வார்த்தைகள் ஏதுமில்லை இங்கே.)   



வஹாபியிசத்தை உலகம் முழுமைக்கும் பரப்ப வேண்டுமென்ற குறிக்கோளோடிருக்கும் ஐ.எஸ். அமைப்பினை இன்று துருக்கி அரசு தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது வரலாற்றில் ஒரு விபரீதமான விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல முடியும். செளதி அரசால் இன்று நியாயப்படுத்தப்படும், வலிமைப்படுத்தப்படும் ஐ.எஸ். 19ம் நூற்றாண்டில் ஒரு அராஜக, தீவிரவாத அமைப்பாக உருவெடுத்தது. ஐ.எஸ்.அமைப்புக்கு தங்கள் கொள்கையை நிலை நிறுத்த எந்த வித கொடூரமான மனித குலத்திற்கே எதிரான முறைகேடுகளையும் அது கைக்கொள்ளும் என்பது அதன் ஆரம்பகால வரலாற்றிலிருந்தே தெரிய வரும் உண்மை.

வஹாபிய இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அதன் வெறியாட்டத்தை நேரடியாக அனுபவித்தது ஓட்டோமான் அரசு தான்.1988ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிஞராக இருந்த அப்துல் வஹாப் அப்போதிருந்த செளதி அரேபியாவின் முதல் மன்னனான இபுன் சாவுத் இருவரும் இணைந்து ஓட்டோமான் அரசிற்கு பெரும் தலைவலியாக உருவானார்கள். வழக்கத்திலிருந்த பல இஸ்லாமிய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்கினார்கள்.  …  ஓட்டோமான் அரசு இவர்களைத் தோற்கடித்து அவர்களை பாலைவனத்திற்குள் விரட்டியடித்தார்கள். ….  வஹாபிய கொள்கைகள் மூடத்தனமானவை; இஸ்லாமியத்திற்கு எதிரானது என்பது துருக்கியரின் கருத்து. ஆனால் இன்று துருக்கியர்கள் ஐ.எஸ். அமைப்புடன் இருப்பது என்பது ஒரு பெரிய நகைமுரண்.

வெறுப்பின் எல்லைகள்
வஹாபின் தீவிரவாத, புனிதவாதக் கொள்கைகள் இபுன் சாவுத்தின் ஈவு இரக்கமற்ற மதத் தீவிரவாதத்தோடு இணைந்தது. …  பயங்கரங்கள் நடந்தேறின. … இந்த நிகழ்வுகள் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னெடுத்தன; பயங்கரவாதம் தலையெடுத்தது. இஸ்லாமியர் மட்டுமல்ல; உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் அது வன்மத்தோடு தீண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு தீவிரவாத இஸ்லாமியக் குழுவும் இவர்களையே முன்னோடியாகக் கொண்டுள்ளது. செளதியின் பண பலமும், அதிகார வெறியும் இக்குழுவின் தத்துவங்களே உண்மையான இஸ்லாம் என்றும், மற்றவையெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகியவை என்றும் பறை சாற்றுகின்றன.
வஹாபியம் பலப் புது மோசமான மாற்றங்களோடு வளர்ந்து விட்டது. இன்று அதன் வளர்ச்சி வளர்த்து விட்ட செளதியையே பயமுறுத்துகிறது. இதனால் தங்களை ஐ.எஸ். குழுவிடமிருந்து விலக்கிக் கொண்டு அதன் கொடூரம் ஷாரியத் சட்டங்களுக்குப் புறம்பானது என்று மெக்காவின் தலைமைக்குரு பொது அறிக்கை விட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற இரட்டை வேடம் போடுவது செளதிக்கு பழகிப் போன விஷயம் தான்!
பழைய புனித இடங்களை அழித்தொழிப்பது ஐ.எஸ்., செளதிக்கும் 1920லிருந்தே உள்ள வழக்கம் தான்.  இதோடு, ஷியா இஸ்லாமியரை வெறுத்தொதுக்குவது இருவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை. 19ம் நூற்றாண்டில் கர்பாலாவில் நடத்திய கொள்ளையும்,கொலையும், பின்னால் நபியின் பேரனான ஹுசைனின் நினைவிடத்தை அழித்ததும் மிகப் பழைய கதைகள். அன்று ஆரம்பித்த ஷியாக்களின் மீதுள்ள எதிர்ப்பு இன்றும் ஐ.எஸ்., அல் கொய்தா குழுவினரிடம் தொடர்ந்து இருப்பதும் உண்மை.
வஹாபியத்தின் புதிய தோற்றம்
ஏனிந்த வஹாபியம் இப்படி தலையெடுத்து ஆடுகிறது? 1970ல் நடந்த இரானியப் புரட்சி வஹாபியத்திற்கு எதிரான ஒன்றாக இருந்தது. இவைகளுக்கு எதிராக வஹாபியத்தை புதிதாக வளர்த்தெடுக்க செளதி முனைகிறது. இதன் பிரதிபலிப்புதான் போகோ ஹரம், அல் ஷாகேப். அல் கொய்தா, தாலிபன், இப்போதைய ஐ.எஸ்.  போன்றவைகளின் வளர்ச்சி. ஷியாக்களும் முன்பு போலில்லாமல் தீவிரவாதத்திற்குள் அயோத்தல்லா கொமேனி காலத்திற்குப் பின் மாற ஆரம்பித்து விட்டார்கள்.
செளதி, கத்தாரி அரசுகள் இப்போது ஐ.எஸ். மூலம் ஒரு அரக்க சக்தியை வளர்த்து விட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; தங்கள் அரசின் அமைதிக்கு இது எதிரானது என்றும் உணர்ந்திருக்கிறார்கள். வஹாபியிலிருந்து ஐ.எஸ்.பிறந்திருந்தாலும் இன்று அது மிக அதிக்க் கொடூரத்துடன் வளர்ந்து விட்டது. இன்று ஐ.எஸ். குழுவை அடக்க ராணுவத்தால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டது.


ஆனால் இஸ்லாமிய உலகத்தில் நிரந்தர அமைதி வேண்டுமாயின், இஸ்லாமியத்திற்குள் ஒரு புதிய போராட்டம் ஆரம்பிக்க வேண்டும். அங்கு ஒரு பெரும் மனமாற்றம் தேவை. இஸ்லாமிய ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு என்பதைத் தாண்டியும் நம் பார்வைகள் இன்னும் விசாலமாக வேண்டும்.










4 comments:

குறும்பன் said...

Sleep Well - டீக்கடை காரர் சொல்வது "அரசாங்கம்" நான் பல நாள் கேட்டு விட்டேன் அவர் அரசாங்கம் என்று தான் சொல்கிறார். அதன் சொல் இவ்விளம்பரத்தில் எதற்கு என்று தான் புரியவில்லை.

குறும்பன் said...

முற்றிலும் உண்மை. இவர்களை வளர்த்துவிட்டதிற்கு ஷியாக்கள் மீதான வெறுப்பு மிகமுக்கிய காரணம். சவுதிக்கு போட்டியாக பலமாக உள்ள அரசு ஈரான் மட்டுமே. துருக்கி இப்போது மதவாதிகளின் கையில் அவதிப்படுகிறது. மக்கள் ஆட்சியில் மதவாத சக்திகளின் கையே ஓங்கி இருக்கிறது, நகரங்களில் தான் மதவாத சக்திகளின் கை ஓங்கவில்லை. துருக்கி அதிபரின் சில அறிக்கைகளை படித்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பது விளங்கும். அவர் பசுந்தோல் போர்த்திய புலி. ஐ ஒ தான் அவரின் தடைக்கல்.

வேகநரி said...

அமைதி பூங்காவிற்குள் புகுந்து தரிசித்து வந்தேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முதன்முதலாக தங்களின் மொழிபெயர்ப்பை தற்போது படித்து மிகவும் ரசித்தேன். மொழிபெயர்ப்பு என்ற நிலையில் இல்லாமல் மூலக்கட்டுரையைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. மிக முக்கியமான பொருண்மையைக் கொண்ட கட்டுரையை மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி.

Post a Comment