Thursday, May 29, 2025

1311. THE INCARCERATIONS .. CONTENT






மதங்களினால் ஏற்பட்ட முக்கோண வடிவப் படிநிலைகளில் அவர்கள் அடித்தட்டுகளிலேயே அமுக்கி, அழுத்தி வைக்கப்பட்ட மக்கள். இந்த ஒதுக்கப்பட்ட மக்களோடு பல்வேறு உள்மண சாதி மக்கள், அவர்களுக்குள்ளே இருக்கும் உள்சாதியினர் போன்ற அனைவரையும் இணைத்து இந்திய சமூகம் உள்ளது.
சமூகப் படிநிலைகளில் மேலிருந்து கீழாகப் புனிதத் தன்மையும், நில உடைமையும், செல்வமும், அறிவும், வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்து கீழ் நிலையில் உள்ளவர்களை மேலே சொல்லப்பட்ட அனைத்தும் இல்லாத ஒரு நிலைக்கு மேல் தட்டில் உள்ளவர்களால் தள்ளப்பட்டிருப்பார்கள். இதிலும் ஒரு வினோதமான பழக்கம் இந்தச் சமூகத்தில் உண்டு. அந்தப் படிநிலை முக்கோணத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பிறப்பு மட்டுமே நிச்சயம் செய்யும். அந்த நிலையிலேயே தான் நீங்கள் எப்போதும் இருக்க முடியும். அதில் மாற்றமேதுமில்லை. நீங்கள் அறிவில், கல்வியில், பதவிகளில் உயர்ந்தாலும் சாதிநிலை மாறாது.
இந்தப் படிநிலை முக்கோணத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள் புரோகிதர்களாகவும், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சத்ரியர்களாகவும் இருப்பார்கள். இந்த இரு இனத்தவரும் மிகவும் சுத்தமான, அதாவது பரிசுத்த சாதிக்கார்களாக இருப்பவர்கள்; வசதிகளிலும்,வாய்ப்புகளிலும் இந்த இருவருக்கே முதலிடங்கள் கொடுக்கப்படும். அதன் பின்வரும் இனத்தவர் வைசியர்; அதற்கும் அடுத்த கடை நிலை ஆட்கள் சூத்திரர்கள் அல்லது பணியாட்கள். இன்னும் இதன் கீழ்ப் படிநிலையில் கூட வைக்கப்படாத மக்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள். படிநிலையில் கூட அவர்களை வைக்காததற்கான காரணம் அவர்கள் அத்தனை தீட்டுப் பட்டவர்கள்; ஆகவே மிகத் தாழ்ந்தவர்கள்; அவர்கள் மனிதர்கள் தானா என்பதே ஒரு கேள்வியாக இருக்கிறது. அதனால் அவர்கள் குடியிருப்பதும் கூட ஊருக்கு வெளியே தனியே “காலனிகளில்”வாழ்வார்கள்… இல்லை ... வாழ வைக்கப்படுவார்கள். இந்த மக்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது, நீர் நிலைகளில் தண்ணீர் எடுக்கக்கூடாது; கோயில் போன்ற புனிதமான இடங்களில் நுழையக்கூடாது. இப்படி அவர்களுக்குப் பல ‘கூடாதுகள்’!

1310. THE INCARCERATIONS .. CONTENT







லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் உள்ள திருச்சபையைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருந்தார். அதைவிட அவர் எழுதிய இன்னொரு புத்தகம் வெகு விரைவில் அனேகரின் எதிர்வினைகளுக்கு உள்ளானது. அந்த நூலின் தலைப்பு: கிறித்துவமும் புரட்சிகளும் (The Church and Revolution). ஏனெனில் இந்த நூல் கிறித்துவ நடைமுறைகளுக்கு எதிரான கருத்துகளோடு வெளிவந்திருந்தது. சமுதாய நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும்; அதைத் திருச்சபை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நடைமுறை கருத்தாக இருந்தது. ஆனால் கவ்தார்த் ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் மீண்டும் பல புரட்சிகள் தோன்றின. அப்போதெல்லாம் கிறித்துவ மதம் இந்தப் போராட்டங்களுக்கு எதிரான நிலையிலேயே இருந்தது. சமுதாய, பொருளாதாரப் போராட்டங்களை எதிர்த்து கிறித்துவம் நின்றது. ஆனால் பிற மனிதர்களை அடக்கியாளும் உயர்நிலை மக்களுக்கு ஆதரவாக இருந்தது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கவ்தார்த் இரண்டாம் வத்திகன் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார். இந்தக் குழு உலகத்தில் உள்ள திருச்சபை முழுவதிலும் அனைத்து இனத்தவருக்கும் புது மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது என்பதைப் பற்றி அலசும் குழுவாக அது இருந்தது.
-----------------------------
ஜுலியஸ் நெய்ரெர் கிறித்துவத் திருச்சபை பற்றிக் கூறியதையும் வாசித்துக் காண்பித்தார்கள்:
“...கிறித்துவம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் விழித்தெழுந்து வளர வேண்டுமானால் போராட்டம் தேவையான ஒன்று. … சமுதாய கட்டமைப்புகள், பொருளாதார அமைப்புகள் மனிதனை ஏழ்மைக்குள் அழுத்துகின்றன. அவன் கேவலப்படுத்தப்படுகிறான், தாழ்த்தப்படுகிறான். இவைகளை எதிர்த்துப் போராடா விட்டால் கிறித்துவம் பொருளற்றதாகிவிடும். இதனால் மதத்தில் மீதியாக இருப்பது நம்பிக்கையாளர்களால் நம்பப்படும் மூடநம்பிக்கைகளின் மூட்டையாக மட்டுமே இருக்கும். மனிதன் மேல் கடவுள் வைத்திருக்கும் அன்பை திருச்சபையும், அதன் உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்தப் போராட்டங்களில் தலைமை எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அது நீதிக்கு புறம்பான கொடுமைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு விடும்.”



1309. THE INCARCERATIONS .. CONTENT







சுதாவிற்கு நினைவில் ஒன்று தோன்றியது. அவர் என்னிடம், “நெல்சன் மண்டேலா சொன்னதை நான் வாசித்திருக்கிறேன். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ‘வெள்ளை மக்களின் நீதிமன்றத்தில் நான் ஒரு கருப்பு மனிதனாக நின்று கொண்டிருந்தேன்’ என்றார் அவர். ஏறத்தாழ அதே நிலை தான் நமக்கும். பல சமயங்களில் முதலாளிகளின் வழக்காடு மன்றத்தில் அங்கு வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியின் சொல் எடுபடுமா? அல்லது ஒரு கிராமத்தானாக ஒரு முதலாளியின் நீதிமன்றத்தில் நிற்க வேண்டியதிருக்கும்; அவன் பேச்சு எடுபடுமா? சில சமயங்களில் ஆண்களின் நீதிமன்றத்தில் தனியாக பெண்ணொருத்தி நின்றிருப்பாள். சில சமயங்களில் மாநில நீதிமன்றத்தில் சில மக்களும் அவர்கள் போராட்டமும் நின்று கொண்டிருப்பார்கள். இந்த நீதிமன்றங்கள் எல்லாம் நமக்கானது அல்ல; ஆனால் நமக்கு வேறு வழியும் இல்லை. அனைத்தும் உனக்கு எதிராக நிற்கும்; ஆனால் அவைகளை விட்டு நீ ஓடிவிட முடியாது; ஓடி விடக்கூடாது. எதிர்த்து நின்று உன்னால் என்ன செய்ய முடியுமோ அவைகளையாவது செய்துவிடு” என்றார் சுதா.
“சில வழக்குகளில் சில சமயங்களில் நமக்கு ஒரு தடை உத்தரவு கிடைக்கலாம்; வேறு சில சமயங்களில் சமரச முயற்சிகள் நடக்கலாம். இவைகள் எல்லாம் நமக்கு கிடைக்கும் சில சில நன்மைகள். நாம் விரும்பியது அனைத்தும் கிடைக்காமல் கைநழுவி போனாலும் ஏதோ இப்படி ஒரு சில நன்மைகளும் நடக்கும் வாய்ப்புண்டு. சில சமயங்களில் சமரசங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு சில லாபங்கள் கிடைக்கும். இப்படி தான் வாழ்க்கையும் வழக்குகளும் போய்க் கொண்டிருக்கின்றன”, என்றார் சுதா.

1308. THE INCARCERATIONS .. CONTENT


May be an image of text that says 'A chilling, meticulously documented accouTe Arundhati Roy THE INCARCERATIONS BHIMA KOREGAON FROM THEAWARD-WINNING THE AUTHOROFNIGHTMARCH AUTHOR NIGHTMARCH HE IND SEARCH FOR ALPA DEMOCRACY IN INDIA SHAH'


ஒரு பக்கம் மோடி தன் புகழை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார் அதே சமயத்தில் பெரும் முதலாளிகள் வளர்ந்து தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டார்கள். ஒரே ஒரு சான்றாக, அதானி இந்தியாவில் பெரும் பணக்காரராகவும் உலகத்தின் பெரும் பணக்காரர்களின் பட்டிலியில் குறைந்த காலத்திற்குள் உயர்ந்து விட்டார்.... மோடி முதலமைச்சரான பிறகு குஜராத்தில் அவரது செல்வம் செழிக்கத் தொடங்கியது. வியாபாரம் பரந்து விரிந்தது. அதனை முன்மாதிரியாக வைத்து ‘அதுதான் குஜராத் மாடல்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வணிக வளர்ச்சி மூலம் அவருடைய வணிக சாம்ராஜ்யம் பெரிதும் விரிவடைந்தது. இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள் அதானியின் கைவசம் வந்த பிறகு வணிகப் பொருட்களின் போக்குவரத்து எளிதாயிற்று. அதனோடு ஏழு விமான நிலையங்கள், நாடு முழுவதும் உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதற்காகச் சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் அதானியின் குழுமத்தின் கீழ் வந்தது . பல உலகச் சுரங்கங்களைக் கைப்பற்றி இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் முதல்வரானார்.
நாட்டில் ‘பல்லுயிர்க் காடுகள்’ என்று காப்பாற்றப்பட்ட நிலங்களை சிமெண்ட் தயாரிப்பிற்கும், மின்சக்தி உற்பத்திக்கும், நிலக்கரி சுரங்கங்கள் என்ற பெயரில் அரசு அதானிக்கு வாரிக் கொடுத்தது. காடுகள் அழிந்தன; அதனால் அதானி வளர்ந்தார். ; மின்சாரம் அவர் உற்பத்தி செய்கிறார்; பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடகங்கள் அவர் தலைமையேற்றார்.45
வளர்ந்தது அதானி என்ற ஒருவர் மட்டும் அல்ல; அவரைப் போல் நிறைய வணிகர்கள் பட்டியலில் உள்ளார்கள். அம்பானி, டாட்டா, பிர்லா போன்ற வணிகர்கள் மோதியின் காலத்தில் வேக வேகமாக பொருளாதாரத்தில் முன்னோக்கிப் பாய்ந்தார்கள்.
2004-ம் வருடத்தில் அதானியின் செல்வம் 1600% எகிறியது. மோடி பிரதமராக ஆன பிறகு 2022-ல் எட்டு பில்லியன் டாலர் அளவில் ஆரம்பித்த அதானியின் வர்த்தகம் 137 பில்லியன் டாலர் அளவு உயர்ந்தது. என்னே ஒரு ராட்சச வளர்ச்சி!


s

1307. THE INCARCERATIONS .. CONTENT



யுக் சௌத்ரி தான் கலந்து கொண்ட கருத்தரங்கில் 2021 ஜூன் மாதம் இதைப் பற்றிய விளக்கங்களை அளித்தார். "நீதிமன்றங்கள் தங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை காண்பித்திருக்க வேண்டும். அவர்கள் தன்னிச்சையாக, நியாயத்திற்காகப் போராடுவார்கள் என்று நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட சான்றுகளை, தரவுகளை அவைகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்ள அவர்கள் முயற்சி எடுத்து இருக்க வேண்டும். அப்படியே இல்லாவிட்டாலும் மற்றவர்கள் எடுத்த முயற்சியை கண்கொண்டாவது பார்க்க வேண்டும். எந்தச் சான்றுகளால் மக்கள் சிறையில் அடைபட்டார்களோ அந்த சான்றுகளை, அதன் உண்மைத் தன்மையைக் காண வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அந்தக் கடமை உண்மையாக மேற்கொள்ளப்பட்டதா? இந்தத் தரவுகளை நம்பி, இத்தனை பேரை சிறையில் அடைப்பது எந்த அளவு நியாயம் என்று சிறிதாவது உணர்ந்ததா? அப்பொழுது ஏதும் கூற முடியாத இந்த மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்த ஒரு நீதிமன்றமும் கொடுக்கப்பட்ட சான்றுகளின் உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை".
பீ.கோ. வழக்கில் சிறைப்பட்டவர்களின் வழக்கை விசாரணை செய்ய ஆரம்பித்த பத்து நீதிபதிகள் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர் (recused). 2022 மே மாதம் வரை இந்த வழக்கில் 10 நீதிபதிகள் இவ்வாறு தங்களை விடுவித்துக் கொண்டனர்.85 மும்பை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே ஐந்து நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்கள். அதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கௌதம் நவ்லக்கா அவர்களை விசாரிக்கும் பொழுது விலகிக் கொண்டார்கள்.84 இவ்வாறு விலகிக் கொள்ளும் நீதிபதிகள் அதற்கான காரணங்கள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஆயினும் நடப்பதைப் பார்க்கும் பொழுது பீ.கோ. வழக்கைத் தொடுவதற்கே பல நீதிபதிகளுக்கு மனதில்லை.
************************
யுஏபிஏ வழக்குகள் அனைத்தும் அரசியல் தொடர்பானவை; ஆகவே இது ஒரு வழக்கமான வழக்கல்ல. அதிலும் இது ஒரு சாதாரண அரசியல் வழக்கு என்றும் கருத முடியாது. ஏனென்றால் இந்த வழக்குகளில் அரசு மிகவும் ஆர்வம் எடுத்துக் கொள்கிறது. ஒரு சாதாரணமான யுஏபிஏ வழக்கில் அரசுகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் இருப்பது வழக்கமே. ஆனால் இது போன்ற வழக்குகளில் அரசியல் சார்புத்தன்மை அதிகமாக வழக்கின் மீது படிந்துள்ளன. இந்த வழக்குகளில் அரசாங்கம் முதலிலேயே வழக்கின் முடிவை தீர்மானித்து விடுகிறது. ஆகவே நீதிபதிகளும் நீதிமன்றமும் அதிகமாக அரசின் பக்கம் இணக்கமாக இருந்தாக வேண்டும். ஏறத்தாழ அரசு சொல்வதை நீதிமன்றமும் நீதி அரசர்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை காண்கிறோம்.இந்த நிலை மிகவும் ஆபத்தானது. மட்டுமல்ல ஏறுத்தாழ இதுவே ஒரு பெரும் ஊழல்தான். நாட்டிற்கே இது இழுக்கு", என்று கூறியிருந்தார்.
*************
நீதிமன்றங்களின் மௌனம், நீதி அரசர்களின் அசட்டுத்தனம் மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. எந்த காலத்திலும் இல்லாத அளவு நீதியரசர்கள் இவ்வாறு அரசோடு மிகவும் இணைந்து செல்வதை இப்போதுதான் பார்க்கிறேன்"
***************
இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அரசு நீதிபதிகளை சிறிது வளைந்து கொடுக்கச் சொன்னது. ஆனால் அவர்களோ ஒரே அடியாக கீழே விழுந்து தவழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை சிறிதே வளைக்க நினைத்தனர்; ஆனால் அவர்கள் வளைந்ததோ மிக அதிகம். மனதில் அத்தனை அச்சம். பல நேரங்களில் அவர்களை தங்கள் வாய்களை அடைத்துக் கொண்டார்கள். அரசின் முன்னால் கைகட்டி அமைதியான தொழிலாளிகள் போல் இருந்தார்கள்".
"அதே போன்ற காடசிகளை நம் கண் முன்னே இன்றும் நாம் காண்கிறோம். அமைச்சர்கள் அரசாங்கத்தின் மேல் கொள்ளும் காதலை விட நீதிபதிகளுக்கு அரசின் மீதான காதல் அதிகமாகி விட்டது. .....
நீதிபதிகளுக்கு ஓர் எண்ணம் இருந்திருக்கும் போலும்: இந்த அரசு உனக்கு என்ன செய்தது என்பதை விட அந்த அரசுக்கு நீ என்ன செய்து விட்டாய் என்று கேட்டுக் கொள் என்ற எண்ணம் நீதிபதிகளிடம் இருந்திருக்கும் போலும்".