Thursday, September 15, 2005

53. நான் ஏன் மதம் மாறினேன்...? - 2

*

*


தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.



முதலில் பதிந்த நாள்: 18.08.05



இரண்டு விஷயங்கள்:
ஒன்று - இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .

இரண்டு - நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.

எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம். பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் - என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். 'கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு' என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? "கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்" என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே - அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

'கடவுள்' இருந்தால் - 'அது' முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். - omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் 'முக்காலமும்' உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது - என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை - PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை...) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே 'அவன்' திட்டப்படி நடப்பதாக இருந்தால் - மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், 'கடவுளின்' முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, 'முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்' என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் - predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் 'ஜெபமே ஜெயம்' என்ற கூற்று என்னாவது?


இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? - தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! - என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து - எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு "பத்துக்கட்டளைகள்" ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் - என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் - என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி...மெல்ல..மெல்ல...மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த 'ஆட்டை'யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் ... ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். 'எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்' - என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. "என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim - இங்கே, rationality என்பதற்கு ' பகுத்தறிவு' என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து - தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.



*

அடுத்த பதிவுக்கு: 3ம் பதிவுக்கு.


*

42 comments:

வானம்பாடி said...

நன்றாக எழுதுகிறீர்கள் தருமி, அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன். நன்றி!

துளசி கோபால் said...

தருமி,

சீக்கிரம் எங்களையும் ஆட்டைக்குச் சேர்த்துடுங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

குழலி / Kuzhali said...

//மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள்//
முதிர்ச்சியோடு எழுதப்பட்ட பதிவு.

நன்றி

NambikkaiRAMA said...

அன்பரே! அருமையாக தொகுத்துள்ளீர்.
நாம் மதம் என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு ஞானம் என்றால் என்ன என்பதை பர்றி யோசித்தால்..மதப்பிரச்சனைகள் எதுவும் வராது. நம் மக்கள் இந்த இடத்தில்தான் தவறுகிறார்கள். இறைவன் ஒருவனே! அதை சிலர் இயற்கையென்றும் கூறலாம். ஆனால் ஞானமே முக்கியம். "சித்தம்" என்ற கூகுள் குழுமத்திற்கு வருகை தாருங்கள்.

மு. மயூரன் said...

தருமி, உங்களுடைய இந்த பதிவால் வெகுவாக ஈர்க்கப்பட்டுவிட்டேன்.

விதி- கடவுளின் சித்தம்- ஜெபம என்று முன்வைத்திருக்கும் தர்க்கம் எல்லாவற்றையும் உடைத்து எறிகிறது.

மதம் தேவையில்லை என்பது என் வாதம்.
இந்த "ஞான" காரர்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் மதத்தை நிராகரிப்பதாக ஒரு வார்த்தை உரத்து சொல்லட்டும். நான் அவர்களை நம்புகிறேன்.
ஆனால் சொல்ல மாட்டார்கள். இவர்கள்தான் மதவாதிகளின் தத்துவவாதிகள்.
இன்னும்சொல்லப்போனால், மூளைச்சலவை செய்யத்தெரிந்த மதவாதிகள்.

மதத்தை, மதங்களை நிராகரிக்காத சித்தாந்திகளும், ஞானக்காரர்களும் பச்சை சுயநலவாதிகள்.

எவருக்காவது, சாமிகும்பிடுவதும், ஜெபிப்பதும் மனதுக்கு ஆறுதல் கொடுக்கிறதென்றால், அதனை அப்படியே விட்டுவிடலாம். அதனை நிறுவனமயப்படுத்தி, மதமாக்குவது வேண்டாத வேலை.

G.Ragavan said...

தருமி, மிகவும் அருமையான பதிவு. நம் தாய் நல்லவள் என்று உணரும் அதே நெரத்தில் நண்பனின் தாயும் நண்பனுக்கு நல்லவள்தான் என்பதை உணர்வது மிக்க அறிவுடைமை. உண்மையான ஆன்மீகம் என்பது என் கருத்து. நான் படித்த பல தமிழ் நூல்களில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை உணர்கின்றவர்களால் உலகிற்கு நன்மையே விளையும்.

ஈஷ்வரு அல்லா தேரே நாம் என்று பாட்டும் இருக்கிறதே.

தமிழில் சொன்னால் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்".....மூச்சுக்கு முந்நூறு முறை முருகா என்று சொன்னவர் சொன்ன கருத்து அது. எல்லாம் ஒன்றுதான் என்று முடிக்கிறார்.

சங்கரய்யா said...

அருமையாக எழுதுகிறீர்கள், அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

நல்லடியார் said...

நட்சத்திரப் பதிவாளருக்கான அறிகுறிகள் தெரிகின்றன :-) தொடருங்கள் தருமி கடைசியில் வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன்.

தருமி said...

"நட்சத்திரப் பதிவாளருக்கான அறிகுறிகள் தெரிகின்றன :-) "
நட்சத்திரத்திற்கு என்ன அவசரம்; எனக்கு இப்போது தேவை பிறை !. வாருங்கள், உங்கள் கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்தால் சந்தோஷப்படுவேன்.

"கடைசியில் வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன்" - அதைவிட எப்போதும் கூடவே வந்தால்...?

தருமி said...

சுதர்சன், நம்பி - மிக்க நன்றி

துளசி - "சீக்கிரம் எங்களையும் ஆட்டைக்குச் சேர்த்துடுங்க" -- "யாரையும்" விட்றதாக இல்லீங்க!

குழலி _ "முதிர்ச்சியோடு எழுதப்பட்ட பதிவு." - அதான, நம்ம வயச ஞாபகப்படுத்தலனா தூக்கம் வராதே!

அவ்வை - "the concept of God is essential for humans." - அப்டீன்ற! அது ஒரு வகை முடிவுரை; பார்ப்போம்.

பாசிட்டவெரமா - 'சித்தம்' இன்னும் பார்க்கவில்லை; பார்த்து தொடர்பு கொள்கிறேன். நன்றி

மு. மயூரன் - "அதனை நிறுவனமயப்படுத்தி, மதமாக்குவது வேண்டாத வேலை." - G.K. சொன்னது அதுவே.

இனோமினோ - "கும்பகோணம் தீ விபத்துக்கும் ,சுணாமிக்கும் கடவுள்தான் பொறுப்பு என்று.." - மறுக்கிறேன்; பாவம் கடவுள். விட்டுவிடுங்கள்.

ஏன்யா, சஸ்பென்ஸ் எதுவும் வைக்க விடமாட்டீர்களா?


ராகவன் - "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது.." - இந்தப் பாடலைப் பொருளோடு அனுப்பித்தர இயலுமா? தனி முகவரி தெரியும்தானே? நன்றி.

Anonymous said...

அது யாருங்க அது G.K.? ஆச்சார்யனி காலடிலத் தேட ஆரம்பிச்சு தெரிஞ்சதுல இருந்து தெரியாததைக் கண்டுபுடிச்ச Alcyoneனை சொல்றீங்களா? :-)

ஜோ/Joe said...

தருமி,
கலக்குறீங்க!
என்னுடைய பதிலை சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன்..என் புரிதல் படி யூதர்கள், கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள் அனைவரும் வணங்கும் கடவுள் ஒன்று தான் (கடவுள் ஒருவரே என்பதற்காக இல்லை .'யாவே' யும் ,'பரமபிதா'வும் ,'அல்லா' வும் வேறு சொல் பிரயோகங்களே) . மோசஸ்(மூசா நபி) , இயேசு (ஈசா நபி) ,முகமது (முகமது நபி) ஒரே கடவுளையே பிரதிநிக்கின்றனர் .மேரி -க்கு இறைவார்த்தையை அறிவித்த கபிரியேல் தூதர் தானே முஹமதுவுக்கு குரானை இறக்கியதாக சொல்லப்படுகிறது (தவறென்றால் முஸ்லிம் அன்பர்கள் திருத்தவும்) .ஆக யூதர்கள் இயேசுவின் வருகைக்கு முற்பட்ட அனைத்தையும் நம்புகின்றனர் .கிறிஸ்தவர்கள் அதோடு கூடுதலாக இயேசு இறைமகன் என்று நம்புகின்றனர் ..முஸ்லிம்கள் இயேசு இறைமகன் அல்ல ,இறை தூதர் என்ற திருத்தத்தோடு ,இறுதித் தூதராக முகமதுவை நம்புகின்றனர் ..ஆக இறை தூதர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் அனைவரும் வணங்கும் கடவுள் ஒன்று தானே? 'அல்லா' என்பது 'கடவுள்' என்பதன் அரபு வார்த்தை .அரபு விவிலியத்தில் கூட 'அல்லா' என்று தான் இருக்கும் என கேள்விப்படுகிறேன் .

எனவே மத ரீதியாக சில நடைமுறைகளும் நம்பிக்கைகளும் வேறுபடினும் இம்மக்கள் குறிப்பிடும் கடவுள் ஒன்று தான்.

G.Ragavan said...

தருமி, எனக்கு முழுப்பாடலும் நினைவில்லை.
"ஓலமறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" என்ற வரி மட்டும் ஏனோ மனதில் சிக்கெனப் பதிந்து விட்டது.

இதற்குப் பொருளை இங்கேயே கொடுக்கின்றேன்.

ஓலமறைகள் - மறைகள் ஓலமிட்டு.
அரைகின்ற ஒன்றது - வணங்கித் துதிக்கின்ற இறையானது
மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் - அனைத்தையும் கடந்து ஒளிருகின்ற பரஞ்சுடர்

பொதுப்பொருள் - எத்தனை பேரும் ஊரும் முறையும் கொண்டு வணங்கினாலும் எல்லாம் ஒன்றே.

இது போல நிறையக் கிடைக்கின்றன தமிழில். பழைய நூல்களை நிறையத் தேட வேண்டியிருக்கின்றது. நேரம் ஒன்றுதான் இப்போதைக்குத் தேவை.

தருமி said...

க்ருபா: "அது யாருங்க அது G.K.?" அது G. கிருஷ்ணமூர்த்தி. a philosopher
"ஆச்சார்யனி காலடிலத் தேட ஆரம்பிச்சு தெரிஞ்சதுல இருந்து தெரியாததைக் கண்டுபுடிச்ச Alcyoneனை சொல்றீங்களா? :-) "இது புரியலையே, க்ருபா!


ஜோ :"இம்மக்கள் குறிப்பிடும் கடவுள் ஒன்று தான்." - அப்படியா? பின் ஏன் இவர்களுக்குள் ஆண்டாண்டுகளாய் சண்டை? பிரிவினைக்குக் காரணம் என்ன?

ராகவன்: நன்றி மிகவும்.

Anonymous said...

ஒரே கடவுளைக்கும்புடும் இம்மக்கள் சண்டைபோடுவதை ஏன் அந்த பெரிசால் தடுக்க முடிவதில்லை.
அருஞ்சொற்பொருள்:-
பெரிசு: எல்லா உயிர்களுக்கும் பெரியவன் அதுதான் கடவுள்

மு. மயூரன் said...

// ஒரே கடவுளைக்கும்புடும் இம்மக்கள் சண்டைபோடுவதை ஏன் அந்த பெரிசால் தடுக்க முடிவதில்லை. //

அப்பிடி போடு....!!!!!

அது இறைவனின் சித்தமாக இருக்கக்கூடும் என்றுகூட சில புத்தக வழிபாட்டாளர்கள் சொல்லத்தொடங்குவார்கள்.

அப்படி எதாவது குர் ஆனில் இருக்கிறதா என்று அந்த புத்தகத்துக்கு விளக்கம் எழுதிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் தெரியும்.

இந்த பதிவும் பின்னூட்டங்களும் கூட அங்கே சொல்லப்பட்டிருக்கலாம்.. ;-))

Anonymous said...

//இந்த பதிவும் பின்னூட்டங்களும் கூட அங்கே சொல்லப்பட்டிருக்கலாம்.. ;-))//

:-)))))))))))))))

passing to nalladiyar

Anonymous said...

That is JK?

தருமி said...

anonymousஅப்டின்னு வந்தா பதில் பின்னூட்டம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சா, இப்படி நான் ப்ண்ணின தப்பைத் திருத்திறது ஒரு anonymous.

மிக்க நன்றி..anonymous. அது JK. என்னமோ,எப்படியோ GK-ன்னு எழுதிட்டேன். மீண்டும் நன்றி

வெங்காயம் said...

தருமி தங்களைவிட நான் வயதில் குறைந்தவன். ஆனாலும் நல்ல திசையில் நீங்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளீர்கள் என்பது மட்டும் புலப்படுகிறது.

Anonymous said...
//இந்த பதிவும் பின்னூட்டங்களும் கூட அங்கே சொல்லப்பட்டிருக்கலாம்.. ;-))//

:-)))))))))))))))

passing to nalladiyar
ஏன் நல்லடியாருக்கு மட்டும் கடத்த (Pass) வேண்டும். விதியை நம்பும் இஸ்லாமிய, கிறித்துவ, இந்து மத வலைப்பதிவர்கள் அனைவருக்கும் (pass to all beleivers in God) என்று ஏன் இருக்கக் கூடாது... (நான் இந்துவாக இருந்து பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்ப்டடவன் என்பதை நினைவில் கொள்க)

நல்லடியார் said...

நல்லவை நடந்தால் அதற்கு 'தானே' காரணமென்றும், கெட்டவை நடந்தால் பிறர் (இளிச்சவாயர்?)மீதோ அல்லது யாரும் கிடைக்காவிட்டால் கடவுள் மீதோ போடுவது மனிதனின் இயல்பு.

நல்லதும் கெட்டதும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டு, வேதமும் தூதரும் அனுப்பப்பட்டு, சிந்திக்க மூளையும் கொடுத்து, நல்லது செய்தால் சுவர்க்கமென்றும், தீயது செய்தால் நரகம் என்றும் போதித்து, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மட்டுமே பொறுப்பு எனச்சொல்வது பாரபட்சமாக இல்லையா?

வெவ்வேறான மனிதர்களை கடவுள்தான் படைத்தான் (அல்லது குரங்கிலிருந்து வந்தான் என்றாலும்) ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் கெட்டவனாகவும் இருப்பது ஏன்?

எல்லா மதங்களும், தத்துவங்களும் நல்ல நோக்கத்தில்தான் போதிக்கப்பட்டன. அதனை பிரயோகப்படுத்தும் முறையில்தான் மனிதன் வேறுபடுகிறான். கடவுளை மறுப்பவர்களெல்லாம் நல்லவர்கள் என்ற முடிவுக்கு வர எந்த முகாந்திரமும் இல்லை.

தருமி சார், உங்கள் முந்தைய மத நம்பிக்கை தவறு என்ற முடிவுக்கு வர சுமார் 45 வருடங்கள் எடுத்துக் கொண்ட நீங்கள், கடவுள் மறுப்பே சரியென்று எப்படி உடனே முடிவுக்கு வந்தீர்கள்?

தேடல்களின் தொடர்ச்சி பகுத்தறிவா? தேடியதில் முடிவுக்கு வருவது பகுத்தறிவா?

தருமி said...

"ஏன் நல்லடியாருக்கு மட்டும் கடத்த (Pass) வேண்டும். விதியை நம்பும் இஸ்லாமிய, கிறித்துவ, இந்து மத வலைப்பதிவர்கள் அனைவருக்கும் (pass to all beleivers in God) என்று ஏன் இருக்கக் கூடாது"

வெங்காயம் - நன்று சொன்னீர்கள். ஏன் எல்லோரும் நல்லடியாரை மட்டும் குறி வைக்கிறீர்கள். இது நல்லடியாருக்கு மட்டும் பதில் சொல்லஆரம்பிக்கப்பட்ட பதிவு என்று யாராவது நினைத்திருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள். இது 'தருமி'யின் பல்லாண்டு சிந்தனைகள்; பல மணி நேர முயற்சிகள். முழுக்க முழுக்க இந்தக் கருத்துக்கள் என்னைச் சார்ந்தவை.

நல்லடியார் - உங்கள் கேள்விக்கு 55. 2a என்று ஒரு தனி, சிறு பதிவில் பதிவளித்து ஒரு விண்ணப்பமும் வைப்பதாக நினைத்துள்ளேன். மறுபடியும் சென்னை பயணம். அதனால் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்க.
சந்திப்போம்.

நல்லடியார் said...

//நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த 'ஆட்டை'யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? )//

தருமி,

நீங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் கொள்கைகளை மட்டும்தான் எதிர்க்கிறீர்களா? மத நம்பிக்கைகளுக்கு எதிரான பதிவு என்பதால் அனைத்து மத, கொள்கையாளர்களும் இணைந்தால்தானே நன்றாக இருக்கும்.

மேலும் உங்கள் பதிவுகளுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் கிறிஸ்தவர்கள் வந்த மாதிரி தெரியவில்லை. ஆரோக்கியம் கிறிஸ்தவர் என்றால் உங்கள் பதிவுக்கு வருவதில் என்ன சிரமமோ? !-)

ஜோ/Joe said...

நல்லடியார்,
//மேலும் உங்கள் பதிவுகளுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் கிறிஸ்தவர்கள் வந்த மாதிரி தெரியவில்லை. ஆரோக்கியம் கிறிஸ்தவர் என்றால் உங்கள் பதிவுக்கு வருவதில் என்ன சிரமமோ? !-)
//
தருமி-யை கிறிஸ்தவராக கண்டுகொண்ட நீங்கள் 'ஜோ'- வை கண்டு கொள்ள முடியாததேனோ? எப்போதும் ஆரோக்கியம் பற்றிய சிந்தனையாகவே இருக்கிறீர்கள் போலும் ..கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள் ..உங்கள் மற்றும் ஆரோக்கியம் சண்டையை எல்லா இடத்திலும் பரப்பாதீர்கள்.

நல்லடியார் said...

//..உங்கள் மற்றும் ஆரோக்கியம் சண்டையை எல்லா இடத்திலும் பரப்பாதீர்கள்.//

ஜோ,

ஆரோக்கியத்திற்கும் எனக்கு என்ன ஜென்மப் பகையா என்ன? அவர் தன்னை கிறிஸ்தவர் என்று சொல்லியுள்ளார். அதனால்தான் அழைப்பு விடுத்தேன். அவர் மதத்திலுள்ள நல்ல கருத்தை சொல்லட்டுமே? இஸ்லாமிய துவேசம் மட்டும்தான் அவருக்குத் தெரியுமோ?

//தருமி-யை கிறிஸ்தவராக கண்டுகொண்ட நீங்கள் 'ஜோ'- வை கண்டு கொள்ள முடியாததேனோ?//

உங்களைப் பற்றி அதிகம் எனக்குப் பரிச்சயமில்லாததால் கவனிக்க வில்லை. ஸாரி :-( இனி கண்டு கொள்கிறேன் ;-)

ஆரோக்கியம் என பெயர் வைத்துக் கொண்டு இஸ்லாத்தை மட்டும் தூற்றி அதன் எதிர்வினையின் பலனை கிறிஸ்தவத்துக்கு எதிராக திருப்புகிறார் என்பது பலரின் ஆதங்கம். மரியாதாஸ் கூட இதைச்சுட்டியதாக ஞாபகம். மேலும் ஆரோக்கியம் கிறிஸ்த்தவர் என்று சொல்கிறார், ஆனால் உண்மையான அமைதி மார்க்கமான பெளத்தத்திற்கு அனைவரும் செல்லும்படி ரெகமண்ட் செய்கிறார்? ஏன் கிறிஸ்தவம் அமைதி மார்க்கம் என்று அவரால் சொல்ல முடியவில்லை? இது பற்றி அவரிடம் சிலர் வைத்த பின்னூட்டங்களை வசதியாக நீக்கி விட்டு புதிய பதிவுக்கு தாவுவார் என்பது வேறு விஷயம்.

இன்னொருவர் P.C.ஜேம்ஸ் ! இவர் ஆரோக்கியத்தின் இஸ்லாமிய கருத்துக்களால் புல்லரிக்கிறாராம். அதேசமயம் மேத்யூ என்பவர் ஒரு முல்லாவாம்! ஏனென்றால் சில சமயம் ஆரோக்கியத்தை கடிந்து கொண்டதால். எண்ணமோபோ = எண்ணம் - போ :-)

ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

நல்லடியார்,
நீங்களும் ஆரோக்கியமும் மாறி மாறி "நான் பிடித்த முயலுக்கு மூணு கால்" -னு சொல்லிட்டே இருந்தால் ஒன்றும் நடக்க போவதில்லை .உங்கள் விவாதங்களை நானும் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன் .அவர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு விடை சொல்வதை விட "உன்னுடையது மட்டும் யோக்கியமா? என்று அதற்கு இணையான இன்னொரு கேள்வி கேட்பது தான் உங்கள்(அல்லது உங்களோடு சேர்ந்து அவரை எதிர்ப்பவர்கள்) பாணி .அவருடைய பாணியும் அது தான் .இப்படிப்பட்ட அணுகுமுறையால் யாரும் எந்த கருத்தையும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

இணக்கமான விவாதங்களுக்கு உங்களிடமும் அவரிடமும் ஆர்வம் இல்லை .மேலே என்னுடைய பின்னூட்டத்தில் யூத,கிறிஸ்தவ ,இஸ்லாம் மதங்களை ஒப்பிட்டு நான் கூறியதை நீங்கள் படிக்கவே மாட்டீர்கள் ..அது பற்றி கருத்து கூறி நமக்குள் புரிந்துணர்வை வளர்க்க உங்களுக்கு ஆர்வம் இல்லை ..மாறாக ஆரோக்கியம் இங்கும் ஏன் சண்டை போட வரவில்லை என அங்கலாய்க்கிறீர்கள்.

தருமி குறிப்பிட்டுள்ளதை நினைவூட்ட விரும்புகிறேன்...
"என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு. "

வெங்காயம் said...

மு.மயூரன் said...
//அப்பிடி போடு....!!!!!
அது இறைவனின் சித்தமாக இருக்கக்கூடும் என்றுகூட சில புத்தக வழிபாட்டாளர்கள் சொல்லத் தொடங்குவார்கள்.
அப்படி எதாவது குர் ஆனில் இருக்கிறதா என்று அந்த புத்தகத்துக்கு விளக்கம் எழுதிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் தெரியும்.
இந்த பதிவும் பின்னூட்டங்களும் கூட அங்கே சொல்லப்பட்டிருக்கலாம்..;-)) //

ஜோ - நல்லடியார்,

தருமி அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினேன் என்றோ, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக மட்டுமோ இப்பதிவை எழுதவில்லை. மாறாக கடவுளையும் விதியையும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து மதத்தின் கொள்கைக்கு எதிராகவே இதனை எழுதுகிறார் என்றே புலப்படுகிறது. அதனால்தான் நல்லடியாரும் ஆட்டத்தில் பின்பு வந்து சேர்ந்து கொள்வதாக எழுதியுள்ளார். இப்படியிருக்கையில் இந்த விவாதத்தை ஒரு குறிப்பிட்ட மதத்திற்றகாக மட்டும் திருப்ப முனைந்ததையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தருமி இந்து மதத்தை பின்பு கவனித்துக்கொள்ளலாம்... இப்போது இஸ்லாமும் கிருத்துவர்களும்தான் தேவை என்பதையும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

ஆரோக்கியம் முசுலிம்கள் அனைவரையும் கிருத்துவர்களாகவும் புத்தர்களாகவும் மதமாற்றம் செய்யவேண்டும் என்று எழுதிவருகிறார். அவரும் இந்த விவாதத்தில் பங்கெடுத்து, அவருடைய கருத்தையும் சொல்ல வேண்டும் என்று நல்லடியார் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

நல்லடியார் அவர்களே, ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன? அவருக்கு இதுபற்றி விளக்கம் கூறத்தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இருவரையும் நான் வேண்டுவதெல்லாம், தருமி அவர்களை அவர் கூறவந்த கருத்துக்களிலிருந்து அவரை திசை திருப்பிவிடாதீர்கள் என்பதுதான்.

நல்லடியார் said...

//இணக்கமான விவாதங்களுக்கு உங்களிடமும் அவரிடமும் ஆர்வம் இல்லை// - ஜோ

//கருத்து கூறி நமக்குள் புரிந்துணர்வை வளர்க்க உங்களுக்கு ஆர்வம் இல்லை ..மாறாக ஆரோக்கியம் இங்கும் ஏன் சண்டை போட வரவில்லை என அங்கலாய்க்கிறீர்கள்// - ஜோ

//அவர் தன் மதத்திலுள்ள நல்ல கருத்தை சொல்லட்டுமே?// என நான் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

//என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு//

ஐயா,என் அம்மா நீங்கள் வெறுக்கும் அளவுக்கு மோசமானவளர் இல்லை என்றே நான் இதுவரை எழுதி வருகிறேன். நான் எங்காவது பிறரின் அம்மா மோசம் என்று எழுதியிருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன்

அம்மா=மதம்

ஜோ, எனது பின்னூட்டங்கள் உங்களின் முந்தைய பின்னூட்டங்களோடு தொடர்புடையது. ஆனால் உங்களின் பின்னூட்டங்களை நீக்கி விட்டீர்கள்.

நான் யாரோடும் குதர்க்க வாதம் பண்ண வரவில்லை.நான் நம்பும் மதம் பிறருக்கு எதிரியல்ல என நான் அறிந்தவற்றை சொல்லவே முயற்சிக்கிறேன். எனக்கென்னமோ இப்பதிவில் மதங்களுக்கான கலந்துரையாடல் வாய்ப்பு இல்லாதது மாதிரித்தான் தெரிகிறது. நன்றி

ஜோ/Joe said...

நல்லடியார்,
உங்கள் விவாதத்துக்குள் நான் வரவில்லை .அந்த அளவு நேரமில்லை .ஆனால் ஆரோக்கியத்திற்கும் அவரை எதிர்த்து உங்கள் பதிவுகளில் எழுதும் ஆரோக்கியம் உள்ளவன் ,கெட்டவன் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியருக்கும் பெரிய வித்தியாசமில்லை .இன்னும் சொல்லப்போனால் ஆரோக்கியம் அவர் சார்ந்திருக்கும் மதம் 100% சரி என்று சொல்லுவதாக தெரியவில்லை ..ஆனால் நீங்களெல்லாம் உங்கள் மதம் 100% சரி என்கிறீர்கள் ..உங்களுக்கு சாதகமாக இருக்கும் போது பதிலிறுக்கிறீர்கள் .அல்லது அதே கேள்வியை வேறு மதத்திற்கு எழுப்பி ,உங்களுக்கு நாங்கள் பரவயில்லை என நிறுவ முனைகிறீர்கள் .உங்களுடைய வாதம் தான் என்ன? இஸ்லாம் மற்ற மதங்களை விட மேல் என்பது மட்டுமா? அல்லது இஸ்லாம் 100% சரி என்பதா? இரண்டாவது எனில் அதை மட்டும் நிறுவ முனையுங்கள் ? மற்றவற்றை விட யோக்கியம் என்பது மட்டும் 100% ஆகாது.

Anonymous said...

க்ருபா: "அது யாருங்க அது G.K.?" அது G. கிருஷ்ணமூர்த்தி. a philosopher
"ஆச்சார்யனி காலடிலத் தேட ஆரம்பிச்சு தெரிஞ்சதுல இருந்து தெரியாததைக் கண்டுபுடிச்ச Alcyoneனை சொல்றீங்களா? :-) "இது புரியலையே, க்ருபா!


அதாங்க, அதான். என்னடா இது நம்ப கிச்சாவை J.K.-னு சொல்லாம G.K.னு சொல்றீங்களேன்னுதான் கேட்டேன். :-)

'ஆச்சார்யனின் காலடியில்' (At the Feet of the Master) நம்ப கிச்சா மொதோ மொதோலா எழுதின புத்தகம், 'உண்மையை'க் கண்டறிந்துவிட்டதும். ஆனா "Alcyone"ங்கற பேர்லதான் எழுதினார். அப்பறமா காலக்கிரமத்தில் J.Kirshnamurti்னே போட்டு வெளிவர ஆரம்பிச்சது அந்தப்புத்தகம் (ரொம்ப சின்னதாதான் இருக்கும்).

இன்னொரு புத்தகம் From Known to the Unknown, எல்லாருக்கும் தெரிஞ்சது.

அதான் ரெண்டுத்தயும் சேர்த்து 'ஆச்சார்யனி காலடிலத் தேட ஆரம்பிச்சு தெரிஞ்சதுல இருந்து தெரியாததைக் கண்டுபுடிச்ச Alcyoneனை சொல்றீங்களா'னு கேட்டு நானும் கொழம்பி உங்களயும் கொழப்பிட்டேன். :-(

நல்லடியார் said...

//எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே 'அவன்' திட்டப்படி நடப்பதாக இருந்தால் - மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும். ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?
predeterminism-கேள்விக்குள்ளானால், 'கடவுளின்' முழு வல்லமை என்னாவது?//

தருமி,
உங்கள் கேள்வியை கொஞ்சம் மாற்றிக் கேட்டுப்பாருங்கள். எல்லாமே இயற்கையாக நடக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.

ஆண்டாண்டு காலம் அமைதியாக இருந்த கடல் டிசம்பர்-26, 2004 அன்று மட்டும் ஏன் சுனாமி ஆட்டம் போட்டது? பூமிப்பந்துக்குள் அன்று ஏன் பூகம்பம் ஏற்பட்டது? அன்று மட்டும் இயற்கையாக ஏற்பட்ட பூகம்பம் ஏன் இன்று ஏற்படவில்லை? டெக்டானிக் பிளேட்டுகள் நகர்ந்தன என்றால் ஏன் அவை அன்று மட்டும் நகர வேண்டும்? எப்போதும் வரும் வரும் சூரியன், மாறவில்லை. ஆனால் கடல் மட்டும் ஏன் தன் இயற்க்கையிலிருந்து மாறியது? இப்படி எல்லாவற்றையும் கேள்வி கேட்டுக் கொண்டே போகலாம்.

3:66 உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள். (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

18:54 இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.

31:20 நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும், இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும், நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.


நாம் சாப்பிடும் அரிசி நமக்காகவா பயிரிடப்படுகிறது? நாம் சாப்பிடும் அரிசியை உண்டாக்க உங்கள் பங்கு என்ன? எங்கோ ஒருவன் உழுவதற்க்காக தன் மனநிலையைப் பக்குவப்படுத்திக் கொண்டு வெயிலிலும் மழையிலும் விவசாயம் செய்கிறான். விதைத்த நெல்லை மூட்டை கட்டி சுமப்பதற்காகவே ஒருவன் தன் நிலையை கூலியாளாக மாற்றிக் கொள்கிறான். அதனை விற்று லாபம் நட்டம் பார்க்க ஒருவன் தன்னை வியாபாரியாக மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு எங்கோ இருக்கும் நாம் சாப்பிட இத்தனை பேரின் மனநிலையை மாற்றி வைத்திருப்பவன் யார்? இப்படி பலரின் மனநிலையை உங்களுடைய ஒருவேளை உணவுக்காக மட்டும் மாற்றும் வல்லமை படைத்தவன் யார்?

இந்த கேள்விகளெல்லாம் நியாயமற்ற கேள்விகளா? அல்ல. இறைவனை மனிதனின் பண்புகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பதால் வரும் கேள்விகள் இவை.

கடவுளை நம்பினாலும் உயிர் வாழலாம், நம்பாவிட்டாலும் உயிர் வாழலாம். எனில் கடவுள் எதற்கு? கடவுளை நம்பியவனும் கஷ்டப்படுகிறான். நம்பாதவனும் சந்தோசமாக இருக்கிறான். எனில், கடவுளை நம்பி என்ன பிரயோஜனம்?

22:11 இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்¢ ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்¢ இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.

17:83 நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்¢ அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.

41:49 மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை¢ ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.

நல்லடியார் said...

//மற்றவற்றை விட யோக்கியம் என்பது மட்டும் 100% ஆகாது.//

இஸ்லாம் 100% யோக்கியமற்றதாக இருந்து விட்டுப் போகட்டும். கிறிஸ்தவம் 100% யோக்கியம் அல்ல என்று முன்னாள் கிறிஸ்தவர் "தருமி" என்ற நம்பிக்கையாளர் உங்கள் மார்க்கத்தை விட்டு சென்று விட்டார். நீங்கள் கிறிஸ்தவராக இருப்பவர் , அவர் கிறிஸ்தவராக இருந்தவர். யார் நம்பிக்கை சார் சரி?

ஜோ/Joe said...

நல்லடியார்,

//கிறிஸ்தவம் 100% யோக்கியம் அல்ல என்று முன்னாள் கிறிஸ்தவர் "தருமி" என்ற நம்பிக்கையாளர் உங்கள் மார்க்கத்தை விட்டு சென்று விட்டார். நீங்கள் கிறிஸ்தவராக இருப்பவர் , அவர் கிறிஸ்தவராக இருந்தவர். யார் நம்பிக்கை சார் சரி?//
அவருக்கு அவர் நம்பிக்கை சரி .எனக்கு என் நம்பிக்கை சரி .கத்தோலிக்க மதம் சொல்லும் எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் எனக்கு ஏற்புடையதைல்ல .ஆனால் கடவுளை நம்புகிறேன் .இறைமகன் இயேசுவை நம்புகிறேன் .எனக்கு மதம் சொன்னதை விட இயேசுவின் போதனைகளின் சாராம்சமே முக்கியம் .கிறிஸ்தவ மதம் இயேசு நிறுவியதல்ல .இயேசு நிறுவியது அன்பு ,பிறர் நேசம் ,மன்னிப்பு ,இரக்கம் .அதை நான் நம்புகிறேன் ..அதற்கு தொடர்பாக என் பிறப்பால் வந்த மதம் சொல்வதை கடைபிடிக்கிறேன் .எனக்கு ஏற்புடையதல்லாததை நான் கடைபிடிப்பதில்லை .அதற்காக யாரும் பத்வா கொடுக்கப்போவதில்லை ..தருமிக்கும் கொடுக்கப்போவதில்லை .

கிறிஸ்தவ மதம் 100% யோக்கியம் இல்லை .அதில் குறைகள் இருக்கின்றன என நான் ஒத்துக்கொள்ளுகிறேன் .இஸ்லாம் மட்டுமே 100% சரி என்பது தான் உங்கள் வாதமா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்லவும்.

நல்லடியார் said...

//கத்தோலிக்க மதம் சொல்லும் எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் எனக்கு ஏற்புடையதைல்ல .ஆனால் கடவுளை நம்புகிறேன் .இறைமகன் இயேசுவை நம்புகிறேன் .எனக்கு மதம் சொன்னதை விட இயேசுவின் போதனைகளின் சாராம்சமே முக்கியம் .கிறிஸ்தவ மதம் இயேசு நிறுவியதல்ல//

இதை உங்கள் சொந்த கருத்தாக மட்டுமே சொல்ல முடியும். பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிரது அதுதான் கிறிஸ்தவம். நாங்களும் குர்ஆன், ஹதீஸின் சாரம்சமே இஸ்லாம் என்றுதானே சொல்கிறோம்.

//எனக்கு ஏற்புடையதல்லாததை நான் கடைபிடிப்பதில்லை .அதற்காக யாரும் பத்வா கொடுக்கப்போவதில்லை//

கலீலியோவுக்கு ஃபத்வா கொடுத்தது ரோமானிய முல்லாக்கள்தான். இன்றும் இத்தாலிய ஃபத்வாதான் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கருத்து. இதனை நீங்கள் மறுக்க முடியாது.

//கிறிஸ்தவ மதம் 100% யோக்கியம் இல்லை .அதில் குறைகள் இருக்கின்றன என நான் ஒத்துக்கொள்ளுகிறேன் .இஸ்லாம் மட்டுமே 100% சரி என்பது தான் உங்கள் வாதமா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்லவும். //

இஸ்லாம் 100% சரியான மார்க்கம் என்று எந்த மதக் கொள்கைகளுடனும் ஒப்பிட்டு என்னால் நிரூபிக்க முடியும். அதனை அரைகுறையாக விளங்கிய முஸ்லிம்கள் வேண்டுமானால் 100% முஸ்லிம்களாக இருக்கவில்லை என ஒப்புக்கொள்கிறேன்.

ஜோ, ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள். இங்கு அனைத்து மதக் கொள்கைகளும் விவாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவத்தையும், இஸ்லாத்தையும் மோத விட்டு குளிர்காய சிலர் முயற்சித்துள்ளர்கள். அந்த அடிப்படையில்தான் அனானிமஸாகவும், பக்தன் வேஷத்திலும் சொல்லப்படும் தத்துவங்கள்.

இஸ்லாம் இயேசுவையும் கிறிஸ்தவர்களையும் வெறுக்கவில்லை என்பதையும் பழைய ஏற்பாட்டையும், அதன் முன்னறிவிப்புகளையும் பார்த்தீர்கள் என்றால், இஸ்லாமும் கிறிஸ்தவமும் வெவ்வேறல்ல என ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மேற்கொண்டு விவாதத்தை தொடர விரும்பவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவரோடு என்பதே எனது கருத்து.

ஜோ/Joe said...

நல்லடியார்,
//இதை உங்கள் சொந்த கருத்தாக மட்டுமே சொல்ல முடியும். //
நான் இல்லைன்னு சொன்னேனா? என் கருத்து தாங்க..மண்டபத்தில யாரவது எழுதிகொடுத்து அதை வந்து சொல்லல்ல..என் கருத்து தான் ..என் கருத்து தான் .என் கருத்தே தான் ..அதே போல உங்க கருத்தை தான் கெட்டேன் .ஐயா! ஆள விடுங்க.

//கலீலியோவுக்கு ஃபத்வா கொடுத்தது ரோமானிய முல்லாக்கள்தான். //
அதனால தாங்க கத்தோலிக்க மதம் சொன்ன எல்லாவற்றையும் என்னால் ஏற்க முடியாதுன்னு சொன்னது.
//இன்றும் இத்தாலிய ஃபத்வாதான் உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கருத்து. இதனை நீங்கள் மறுக்க முடியாது.//
என்னங்க பண்ணுவாங்க? மிஞ்சி போனா மதத்துல இருந்து தள்ளி வைப்பாங்க ..இறைவன் கிட்டயிருந்து யாரையும் தள்ளி வைக்க எந்த மதத்துக்கும் அதிகாரம் கிடையாது .

//இஸ்லாம் 100% சரியான மார்க்கம் என்று எந்த மதக் கொள்கைகளுடனும் ஒப்பிட்டு என்னால் நிரூபிக்க முடியும்.//
அதைக் கூட மற்ற மதத்தோடு ஒப்பிட்டு தானா? அட போங்கப்பா..நீங்களும் உங்க விவாதமும் ..நான் இந்த ஆட்டத்துக்கு வரல..நன்றி!

துளசி கோபால் said...

தருமி,

எனக்கொரு சந்தேகம்.

'நான் ஏன் மதம் மாறினேன்'னு தலைப்பு வச்சிருக்கீங்களே, இப்ப நீங்க எந்த மதத்துக்கு மாறியிருக்கீங்க?

தருமி said...

இந்த பதிவுக்குரிய பின்னூட்டங்களை முடித்துக் கொள்ளலாமென நினக்கிறேன். அதோடு, இத்தலைப்பில் இனி எழுதப்போகும் பதிவுகளில் தற்காலிகமாகவேனும் பின்னூட்டங்களைத் தடை செய்ய நினைத்துள்ளேன்.

காரணங்கள்: நான் ஏற்கெனவே கேட்டிருந்தபடி என் பதிவுகளில் வரும் கருத்துக்களை மட்டும் வைத்துப் பின்னூட்டங்கள் வந்தால் அதைப் பற்றி விவாதிக்க எளிதாயிருக்குமென நினைத்தேன். ஆனாலும், வரும் பின்னூட்டங்கள் அந்த LOC-யைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அது இயல்பும் கூட. அதோடு, நான் சொல்லவரும் விதயங்களுக்கு முன்பே அதைப்பற்றிய கேள்விகள் வந்து விழுந்து விடுகின்றன. எஞ்சுவது சிறிது குழப்பமும், குழப்பத்தில் "மீன் பிடித்தலுமே'.

ஆகவே, நான் எழுத நினைத்துள்ள பகுதிகளை எழுதி முடித்ததும் I hope to have a refined discussion covering all aspects. ஒருவேளை அப்போது கருத்துக் கலந்துரையாடல் எளிதாகலாம். ஏனெனில், என் பதிவுகள் நான் ஏற்கெனவே கூறியபடி என் பல ஆண்டுகளின் தொடர் தேடலால் வந்த கருத்துக்கள். எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் அல்லது தனி மனிதனுக்கும் குறிவைத்து எழுதப்பட்டதல்ல.அப்படியான கருத்துக்களை முழுவதுமாகத் தந்த பிறகு மதத்தைப்பற்றிய என் முழு முகமும் உங்களுக்குத் தெரியவரும். அப்போது வரும் கேள்விகள் பொருளோடும், மிகச்சரியாகவும் வரும் என்ற நம்பிக்கை உண்டு.

ஆகவே, இந்தப் பதிவில் ஆர்வம் காட்டி வரும் அனைவரையும் சிறிது பொறுமை காக்கக் கேட்டுக்கொள்கிறேன். எனது பதிவுகள் ஓரளவுக்கு முடிந்ததும் 'அணைக் கதவுகளைத்' திறக்கிறேன். அப்போது உங்கள் கருத்து வெள்ளம் பொங்கிப் பிரவாகமாய் வருமென நம்புகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

Sridhar said...

ஆட்டைகு லேட்டா வந்தாலும் சேர்த்துக்கங்க.


An interesting blog. Good writing by all participants. Since questioning is not often encouraged in Christianity and Islam, I guess Dharumi's "thought process" is more interesting than a Hindu questioning.

In the realm of mind, all questions will be there. Allow them as they exist only in the realm of mind. When questions can't be answered by books or introspection, the mind gives up and enlightenment happens. You become free from all bindings.

Then, there is a rebel mode that happens when the bindings are gone. But slowly and surely one sees these bindings as something within the mind and He stays more conscious. One can even play with these bindings and see the mind deriving little pleasures. This is the active state of being. The Gita talks about the active state with enlightenment where the sthita-prgna performs his duties without attachment to the effects of it.

When enlightenment happens, in the passive state, it is not possible to differentiate between living and non-living, good and bad, God and Evil. That is the state of being God. At that level of consciousness, God is not someone or something sitting in a far off universe watching you; God is something that you are, you experience and the experienced.

Until one reaches that state of consciousness, allow for all debates on God and see experience of futility of the concept of God and that of the debates.

http://justexperience.blogspot.com/2007/01/blog-post.html

Anonymous said...

Mr. Dharumi,
I am just a spectator and just happened to read your 2nd post regarding religion. I could feel your deep thoughts and decided to read all your related articles with a free mind later.
Just thought of sharing one point which comes across my mind while reading "Kelungal tharappadum". To me it flashed like it doesn't mean that you ask and god will give you whata you want. It is that you ask for a deep thought and answer will be given(found). Knock the door of knowledge with questions and it opens.
To be frank I was not believing Christian preachings so far but the truth of this fact really stuns me now. Probably I will read bible some time.
Murali.

தருமி said...

hi anonymous
normally i dont want to entertain anonymous.

//Knock the door of knowledge with questions and it opens.//
i have explained how i kept 'knocking' regarding my own doubts but how the 'doors' never opened for me.

Post a Comment