Thursday, March 02, 2006

138. தோல்விச் சுகம்…

நிச்சயமா இதுதான் ‘தேர்தலை’ப் பற்றிய கடைசிப் பதிவு - அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போவது போல ஒரு நினைப்பு.

புதிய முயற்சி. நிச்சயமாக நிறைய முன்னேற்பாடுகள் இருந்திருக்கும். நிறைய நேரம் செலவழித்திருக்க வேண்டும். - இவைகள் எல்லாவற்றிற்காகவும் மனம் நிறைந்த, மனம் திறந்த பாராட்டுக்கள் - நிலாவிற்கு. இன்னும் இதுபோல் பல போட்டிகள் நடத்த எதிர்பார்க்கிறோம்.
நன்றி நிலா.

சிறிலாவது வேலையின் நிமித்தமாய் தனது பார்ட்னருக்குக் கை கொடுக்க முடியாது போயிற்று. என்னளவில் photoshop-ல் வேலை செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு, பொன்னான நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு செலவழிக்காது என் பார்ட்னர் செல்வனின் கழுத்தில் மாட்டிய கல்லாக அவர் வெற்றிச் செல்வனாவதைத் தடுத்து விட்டேன். செல்வனின் தலைவிதி நான் அவர் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பது. விதி என் ரூபத்தில் விளையாடி விட்டது, பார்ட்னர். Sorry about it.
நான் தவறிய விஷயங்களில் எல்லாம் மிகச் சரியாக இருந்து, உழைத்து வெற்றி கண்ட குமரன்-கொத்ஸ் குழு ஒப்பாரும், மிக்காருமின்றி தனிப் பெரும் வெற்றி ஈட்டியமைக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள். Hats off to you, kumaran & Koths.

ஓட்டுப் போட்ட அந்த எண்மருக்கும் (லிஸ்ட் பார்ட்னரின் பதிவில்!) நெஞ்சார்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.
வெற்றிக்குப் பின் சுற்றி நின்று கும்மியடிக்க ஆட்கள் பலர் இருப்பதுண்டு.ஆனால் தோல்விக்குப் பின் தோள் கொடுக்க வருபவர் மிகக் குறைவே. ஆனால் எங்கள் குழுவின் ‘நிகரில்லாத்’ தோல்விக்குப் பின் ஆறுதல் சொல்ல வந்த நல்ல பல உள்ளங்களுக்கு என்றும் நாங்கள் கடப்பாடு உடையோம். மறவோம் இந்த நல்ல உள்ளங்களை, அவர்தம் ஆறுதல் மொழிகளை. அவர்கள் கொடுத்த அறிவுரைகளையும் என்றும் நினைவில் கொள்வோமென உறுதியளிக்கிறோம். பின்வந்து பின்னூட்டமிட்ட அந்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஏனெனில், வெற்றி பெற்றிருந்தால் கூட இது போன்ற மனசைத் தொடும் பின்னூட்டங்கள் வந்திருக்குமா, என்ன? பெற்ற தோல்வியால் வந்த உங்கள் அனைவரின் பின்னூட்டங்கள் மயிலிறகாய் வருடிச்சென்றன.

தோல்வியில் இத்தனை சுகமா?

நன்றி….Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 02 2006 02:06 pm | Uncategorized | | edit this
8 Responses
ஜோ Says:
March 2nd, 2006 at 2:33 pm e
தருமி,
இன்னொரு தேர்தல் வச்சா அனுதாப ஓட்டுல அமோகமா ஜெயிப்பீங்க போலிருக்கே!

தருமி Says:
March 2nd, 2006 at 2:41 pm e
ஜோ,
நிலான்னு ஒரு தேர்தல் கமிஷனர் இருக்காறே..

pot"tea"kadai Says:
March 2nd, 2006 at 5:57 pm e
தருமி, நீங்கள் தான் என்னுடைய ஒரே இன-மான, தன்மான தலைவர்:-)))))…உங்களுக்காகத்தான் நான் ஓட்டு போடக்கூட துணிந்தேன். அடுத்து நடை பெற இருக்கும் தேர்தலில் எப்பாடுபட்டாவது உங்களை வெற்றியடைய வைப்பேன் இல்லையென்றால் நான் தங்கிலிஷில் டைப்புவதை விட்டுவிடுகிறேன் என்று இந்த தேர்தல் மீது ஆணையிட்டு சூளுரைக்கிறேன்.

//தோல்வியில் இத்தனை சுகமா?//

சில நேரங்களில் தோல்வி தான் சுகமே!!!!:-)

சிங். Says:
March 2nd, 2006 at 6:17 pm e
தருமி ஐயா அடுத்த எலக்ஷன்ல சமாய்சிடுவோம்! இது இடைத்தேர்தல்தானே.பொதுத்தேர்தல்ல பாத்துக்குவோம்!

சோம்பேறி பையன் Says:
March 2nd, 2006 at 7:20 pm e
பரவாயில்லை.. எங்கள் நெஞ்சங்களில் என்றுமே நீங்கள்தான் வின்னர் !!!
உங்க பார்ட்னர் (செல்வன்) பதிவு விலாசம் என்ன ??

குமரன் Says:
March 2nd, 2006 at 8:10 pm e
சுகராகம் சோகம் தானே…..

வந்து விரிவான பின்னூட்டம் இடுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

selvan Says:
March 4th, 2006 at 4:25 am e
பார்ட்னர்,

//செல்வனின் தலைவிதி நான் அவர் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பது. விதி என் ரூபத்தில் விளையாடி விட்டது, பார்ட்னர். sorry about it. //

என்ன பார்ட்னர் இதெல்லாம்?சும்மா வெளையாட்டுக்கு ஒரு போட்டி.அதுல போய் சாரி கீரின்னுட்டு.உங்க் நட்பு கிடச்சது இந்த போட்டி மூலமா தான்.அந்த வெற்றிக்கு ஈடு இணை உண்டா சொல்லுங்க?

உங்க ரசிகர்கள் உங்க மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கன்னு பாருங்க.இது அத்தனையும் உங்க எழுத்துக்கு கிடைச்ச வெற்றின்னு தான் சொல்லணும்.

தருமி Says:
April 19th, 2006 at 3:12 pm e
:duel:

No comments:

Post a Comment