Thursday, March 30, 2006

147. சோதிடம்..11 -எண் கணிதம்

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆனானப்பட்ட நம்ம ஐயன் திருவள்ளுவரே எண் கணித சோதிடம் பற்றிச் சொல்லியிருக்காராமே தெரியுமா? அவர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”னு சொல்லிட்டு போனாலும் போனார்; நம்ம ஆளுங்க அவரையே quote பண்ணிட்டாங்க…’பாத்தீங்களா, நம்ம ஐயன் திருவள்ளுவரே எங்க numerology பற்றிச் சொல்லியிருக்காராக்கும்’ அப்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… பாவம்’பா…விட்டுருங்க.. உங்களுக்கு சப்போர்ட் வேணும்னா அதுக்காக இப்படியா?

எல்லா மட்டத்திலேயும் இந்த ‘வியாதி’ பரவியிருச்சு; பகுத்தறிவாளர்களாகட்டும், கை நாட்டுகளாக இருக்கட்டும். என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்டின்கிற நினப்பு போல. வை.கோபால்சாமி வைகோ ஆயிடரார்; அவ்வளவு எதுக்கு, எல்லா விஷயத்திலும் முற்போக்காளராக இருக்கும் கமல ஹாசன் ஏன் பெயரை மாத்திக்கிட்டாரென தெரியவில்லை.(இந்திக்காரர்களுக்குப் பரிச்சயமான பெயர் அது என்று சொன்னதாக நினைவு. சரியோ, தவறோ தெரியாது.) எனக்குக் கூட ஒருத்தர் பெயரை நான் மாத்திக்கிட்டா பெரிய ஆளா வந்திருவேன்னு சொன்னார்; அதுவும் sam அப்டிங்கிற பெயரை sham என்று மாத்திக்கச் சொன்னார். சாமி, sam அப்டிங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (பேராவது அழகா இருக்கட்டுமேன்னு அப்பா பெரிய மனசு பண்ணி வச்சிருக்காரு.). அதோட, sham- அப்டிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா, என்னக் கேவலப்படுத்துறதின்னே முடிவெடுத்திட்டியான்னு கேட்டு விரட்டவேண்டியதாப் போச்சு!
சில சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்க ஆவல்.
1. பெயரை மாற்றுவதால் என்ன நடக்கிறது? (vibration அது இதுன்னு சொல்றாங்களோ?)
1. அந்த மாதிரி பெயரை மாற்றுவதால் (eg. sam -> sham ) என்ன ஆகிறது?
3. என் பெயரை மாற்றினாலாவது உச்சரிக்கப்படும் சத்தம் வேறுபடும். Murugan என்பதை Murugun என்று மாற்றுவதாக வைத்துக்கொண்டால், பழையபடி முருகன் என்றுதானே அந்த நபர் அழைக்கப்படுவார். பிறகு ஒலிமாற்றம் எப்படி ஏற்படும்? ஒலிமாற்றம் இல்லாவிட்டால் எழுத்துக்களை -spelling-யை மாற்றுவதால் என்ன பயன்?
4. முருகன் என்ற சாமியின் பெயரால் அழைக்கப்பட் வேண்டுமென்று பெயர் வைக்கப்பட்டு, பிறகு Murugun என்று அழைக்கப்பட்டால், அந்த முருகனின் மேலேயும் நம்பிக்கையில்லை; அவரையே ‘(ஏ)மாற்றி’ விடுகிறோம் என்று பொருளில்லையா?
5. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் மதிப்புகொடுத்தது எப்படி? (யாரோ ஒரு பிரான்ஸ் நாட்டு ‘மேதாவி’ கொடுத்ததாக ஒரு நண்பனும், இல்லை..இல்லை நம்ம சித்தர் ஒருத்தரு கொடுத்தார் என்று இன்னொருவனும் சொன்னார்கள்; எனக்குத் தெரியாது. ) யார் கொடுத்திருந்தாலும் ஏன் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படியானால் இந்த numerology-ன் மூலம் இங்கிலாந்தா?
6. உச்சரிப்பைப் பொருத்தே vibration இருக்கும். vibration-யைப் பொருத்து பலன்கள் இருக்கும் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியா உச்சரிக்கிறோம். என் பெயரே என்னென்ன பாடு படும் என்று எனக்குத்தான் தெரியும்! sam, sham, shiam, john, சாம், சாமி, - தொலைபேசியில் என் பெயரைச் சொல்லி அடுத்த முனையில் இருப்பவரைப் புரிய வைக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்!
7. ஆங்கிலமே தெரியாதவருக்கும், ஆங்கிலமே தெரியாத நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி சார்ந்த எண்கணிதம் எப்படி சரியாக இருக்கும்?
8. ஆங்கில முறையில் பெயரின் எழுத்துக்களை மாற்றினாலும் தமிழில் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கப்பட்டால் அதனால் என்ன வித்தியாசம் வரும்? பலன் என்ன மாறும்? சான்றாக, நம்ம முதல் அமைச்சர் தன் பெயரை ஆங்கிலத்தில் jeyalalithaa என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால், jeyalalithaa என்று ஆங்கிலத்தில் சொல்வது போலவேதான் jeyalalitha என்ற பெயரையும் உச்சரிக்க முடியும். அப்படியானால் என்ன vibration changes வந்துவிடும்? பெயர் உச்சரிக்கப்படுவது ஒன்றாகவே இருப்பின், எதற்கு இந்த மாற்றம்?(இது 3-வது பாயிண்ட் மாதிரியே இருக்குல்ல? எட்டு என்றாலே இப்படித்தாங்க… இது எப்படி இருக்கு?)
9. எண்களுக்கு சில கணித மதிப்பு இதன் அடிப்படை விஷயம். இந்த கணித மதிப்புக்கு என்ன அடிப்படை? யார், எதற்காக, எப்படி, ஏன் இந்த மதிப்புகளை இந்த எழுத்துக்களுக்கு - ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே - கொடுத்தார்கள்?
10. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்கூட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து முடிச்சு போட்டு விடலாம். ஆனால் இந்த பிறந்த தேதிக்கும், பெயரின் கூட்டல் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கலாம்; தெரிந்தவர்கள் கேள்விகள் கேட்டு கேள்விகளின் எண்களைக்கூட்டினால், அந்தக் கூட்டுத்தொகை மாறுமல்லவா? அந்த மாற்றங்களுக்குத் தனிப் பலன்கள் உண்டு. அவைகளை நமது நிலைய ஜோதிடர் உங்களுக்கு ஒரு தாயத்துடனும், ஒரு தகடும் வைத்து அனுப்புவார். தாயத்தை அணிந்து கொண்டு, தகட்டை வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் புதைத்து வைத்தாலோ எல்லா அஷ்டதேவிகளும் உங்களைத்தேடி ஓடி வருவார்கள். வேண்டுவோர் இதை வாசித்த 9 நாட்களுக்குள் ரூபாய் 236.34 (பாத்தீங்களா- கூட்டுத்தொகை 9 வருதா…?) அனுப்பவும். தபால் செலவு தனி. வழக்கமாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு 18% தள்ளுபடி உண்டு.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 30 2006 04:45 pm | சமூகம் |
27 Responses
nagarajan Says:
March 30th, 2006 at 5:29 pm
ஆயிரந்தான் சொல்லுங்க, இன்னமும் நிறைய பேர் ஜோசியத்தை நம்பிக்கிட்டுத் தானே இருக்காங்க. என்ன நாஞ்சொல்றது உண்மை தானுங்கலெ.

Suresh- Penathal Says:
March 30th, 2006 at 5:33 pm
பேச்சு மட்டும் எண் கணிதத்தை எதிர்க்கறது போல இருந்தாலும், இந்தப்பதிவு பற்றி ஒரு அனாலிஸிஸ்:

பதிவு எண்: 147 = கூட்டுத்தொகை 2

ஜோதிடம் தொடர் எண் 11 - கூட்டுத்தொகை 2.

பதிவிட்ட நேரம் அமெரிக்காவில் 29ஆம் தேதி - கூட்டுத்தொகை 2.

இப்படி எல்லாம் பாத்து பாத்துதான் செய்யரீங்களோ?

சதயம் Says:
March 30th, 2006 at 8:23 pm
நியூமராலஜி…அறிவியலா அல்லது பிதற்றலா என்கிற தர்க்கத்தை விட நியூமராலஜி பற்றிய எனது தெளிவுகளைப் பதிப்பிக்கலாம் என நினைக்கிறேன்.

‘உலகத்திலேயே மிக அழகான சொல் ஒருவருடைய பெயரே’ என்று யாரோ சொன்னதாக படித்தது,எனக்கு இன்றுவரை பிடித்த சிலவற்றில் ஒன்று. கணினிக்கு Machine language என்பதைப் போல ஒவ்வொரு மனிதனுக்கு பெயர் சூட்சுமமான ஒன்று என நினைக்கிறேன்.

சமஸ்க்ருதத்தில் ‘அஷரலஷா’ என்கிற நூலில் அட்சரங்கள்,எழுத்துக்களுக்கான ஒலி அளவுகள்,அதனால் விளையும் நன்மை தீமைகள் விளக்கப்பட்டுள்ளதாக படித்திருக்கிறேன்.(இந்நூல் பற்றி அறிந்தவர்கள் மேலும் விளக்கலாம்).

எழுத்துக்களின் கூட்டால் உண்டாகும் சப்தம் ‘மந்திரம்’ எனவும் நமது உடல் யந்திரமாக இயங்குவதாகவும் ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது.இந்த உடலுக்கு ஒத்திசைவான மந்திரங்களை(பெயர்) உச்சரிக்கும்போது யந்திரம்(உடல்) உருவேற்றப்படுவதாயும் அதன் தொடர்ச்சிதான் நன்மையும் தீமையும் என்பது ஒரு வாதம்.

தமிழில் அகத்தியரும்,வராகமிகிரரும் இதைப்பற்றிய ஆய்வு(!)க் கருத்துகளை கூறியிருப்பதாக கூறினாலும் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Cheiro’ என்பாரால் நாமகரணம் செய்யப்பட்டதே நியுமராலஜி.

எல்லாம் சரி..ஆங்கில எழுத்துக்களை ஏன் நியூமராலஜிக்கு பயன் படுத்த வேண்டுமென்கிற நியாயமான கேள்விக்கு கிடைத்த ஒரு சுவாரஸ்யமான சப்பைக் கட்டு என்னவென்றால்…”நமது 18 புராணங்களில் 9வது புராணமாகிய ‘பவிஷ்ய புராணம்’, கலியுகத்தில் வர்ணாசிரம தர்மங்கள் தலைகீழாய் போகும்,நான்கு வர்ணத்தாரும் தொழில் மாற்றங்களை காண்பர்.தொன்மையும் சிறப்பும் வாய்ந்த மொழிகள் அழியும்.”ஐம்.கலீம்.சௌக”எனும் ஆங்கில மொழியும் அதன் நாகரிகமும் பரவும்.தலைகீழாக தீபங்கள் எரியும்” எனக் கூறப்பட்டுள்ளதை அடிக்கோடிட்டு ஆங்கிலத்தில் நியூமராலஜி காலத்தின் கட்டாயமென்று வாதிடுகின்றனர்.

எது எப்படியோ என் பெயரை கையாளும் ஒவ்வொரு தருணத்திலும் பெயர்சூட்டிய என் பெற்றோரின் அன்பையும் கனிவையும்…எனக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் எண்ணியெண்னி நெகிழ்ந்து போகிறேன் என்கிற அந்தப் பலன் ஒன்றே எனக்குப் போதும்….

தருமி Says:
March 31st, 2006 at 11:38 am
நாய் வாலுன்னு சொல்றீங்களா, நாகராஜன்?

சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம்.சுரேஷ்,
அப்போ எனக்கு ராசி எண் ரெண்டுன்னு சொல்றீங்களா? சரி இனிமே எல்லாமே ரெண்டு ரெண்டா பண்ணிடுவோம். - பாத்தீங்களா, பின்னூட்டம்கூட ரெண்டு…ஹி..ஹி

சம்மட்டி Says:
March 31st, 2006 at 12:05 pm
பெயரை மாத்துரதால எதாவது ஆதாயம் இருக்குமாங்கிறது சந்தேகம். ஆன சில பெயர்கள் அதை பலதடவை உச்சரிக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

உதாரணத்துக்கு எடுத்துங்களே, நம்ம பில்கேட்ஸ் அண்ணாச்சி, வின்டோஸ்னு கணனி செயல் ஊக்கிய மொதமொதல்ல ஆரம்பிச்சப்ப DOS லேர்ந்து இயக்க ஆரம்பிச்சோம், அப்பல்லாம் , டாஸ் புராம்ட்ல (Prompt) win - ன்னு தட்டினால் வின்டோஸ் ன்னு படம்காட்டிட்டு தொடங்கும், இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,

அது மட்டுமா, நம்ம அம்மா இருக்காங்களே அவுங்களையும் ஜெ. ஜெ இன்னு பத்திரிக்க காரங்க எ௯ழுதி தள்ளினாதால, என்னதான் ஜென்னு எழுதினாலும் உச்சரிக்கிரப்ப ஜே போட்டு போட்டு அவுங்க ஜெ . ஜெ இன்னு வெற்றி கண்டாங்க, இதல்லாம் பாத்த நம்ம விசு அண்ணாச்சியும் அரட்டை அரங்கம் டைட்டில win இன்னு போட்டு ஆரம்பிப்பாரு.

சில சொல்லுங்களுக்கு சத்தி இருக்கத்தான் செய்யிது, ஆனா மாத்தி வெச்சிக்கிட்டு ஜெயிக்கலாம்னு நிக்கரவுகல நெனெப்ப என்னத்த சொல்ல.

துளசி கோபால் Says:
March 31st, 2006 at 12:17 pm
ஏங்க தருமி,

பெயரை மாத்தி வச்சுக்கறதுக்குப் பதிலா இந்த பிறந்த தேதியை மாத்தி வச்சுக்கிட்டா நல்லா இருக்குமுல்லே?

இன்னும் கொஞ்சம் இளவயசா….. ஆஹா…..

இப்படிக்கு
Thulashee

கோபி Says:
March 31st, 2006 at 1:11 pm
ராசிக்கல், பெயர் மாற்றினால் தலையெழுத்து மாறிடுமா? - நேமாலஜி.. இன்னபிற ஆலஜிகள்(!) விசயத்தில் உங்கள் கருத்துதான் எனக்கும்.

எண் கணிதம் என்னைப் பொறுத்தவரை ஒரு கணித புதிர் விளையாட்டு போல. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் எழுதுவதும் கூட கணிதமும் வானவியலும் தொடர்புடையது. அதன் மூலம் கணிக்கப்பட்ட பலன்கள் - நிகழ்தகவு.

ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:51 pm
A true jyothidam does not accept this type of peththalkal.This is only money making idea invented by somebody who was badly in need of money.

Geetha Sambasivam Says:
March 31st, 2006 at 4:53 pm
Thiruvalluvar “Ennum ezhuththum kannena thagum” enru chonnathu entha numerology padiyum cherathu.Avar chonnathu nam anrada vazhkaiku.

சிவா Says:
March 31st, 2006 at 5:28 pm
நம்ம நெருங்கிய நண்பர் பேரை மொத்தமா சம்மந்தமே இல்லாம (சட்டப்பூர்வமாகவே) மாத்திக்கிட்டார். ஆசையா சின்ன வயசுல இருந்தே கூப்பிட்ட பேர விட்டுடமுடியுமா என்ன? புது பேர பார்த்தாலே வேற எவனையோ பார்த்த மாதிரி இருக்கு. இன்னும் பழைய பேரு தான். மாத்தமுடியாது. ஏனோ! மக்களுக்கு ஒரு மோகம். மீடியாக்கள் மக்களை மேலும் முட்டாள்களாக்க காலையில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது ‘இன்றைய பலன்’ அப்படின்னு,….ம்ம்ம்

கார்த்திகேயன் Says:
April 1st, 2006 at 12:38 pm
தருமி, வாத்தியார் சொன்ன மாதிரி, இதெல்லாம் ஒரு வித ‘Distribution of wealth’-க்காக ஆரம்பிச்ச உட்டாலக்கடியோ என்ன எழவோ. கர்மம், கர்மம்…

தருமி Says:
April 2nd, 2006 at 12:19 am
சதயம், சம்மட்டி, நீங்க ரெண்டுபேருமே அந்தப் பக்கம் ஒரு அடி, இந்தப் பக்கம் ஒரு அடி அப்டிங்கிறது மாதிரி போடுறீங்க. ஆனா முடிவா எந்தப் பக்கம் நிக்கிறீங்க அப்டிங்கிறது கொஞ்சம் தடுமாற்றமாவே இருக்கு - especially சம்மட்டி

சதயம் உங்க பேரைப்பற்றி சொன்னதால ஒரு சந்தேகம்: உங்கள் பெயரின் பொருள் என்ன?

தருமி Says:
April 2nd, 2006 at 2:36 pm
துளசி,
பிறந்த வருஷம்னு சொல்லுங்க
“இப்படிக்கு
Thulashee”// - இதென்ன உங்க பேருக்கு இப்படி ஒரு spelling : எண்கணிதம்தானா…?

தருமி Says:
April 2nd, 2006 at 2:41 pm
கோபி,
உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:43 pm
Geetha Sambasivam,
“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.

தருமி Says:
April 2nd, 2006 at 2:48 pm
சிவா,
அந்த நண்பர் இப்போ பயங்கர ஆளா மாறிட்டேன்னு சொல்றாரா…இல்ல இன்னும் ‘தெறமை’யான எண் கணித நிபுணர்கள தேடிக்கிட்டே இருக்காரா?

தருமி Says:
April 2nd, 2006 at 2:50 pm
கார்த்திகேயன்,
அந்த ‘வாத்தியார்’ யாருன்னு தெரியலையே..

சதயம் Says:
April 2nd, 2006 at 3:45 pm
சதயம் என்பது நான் பிறந்த நட்சத்திரம் .ராஜராஜ சோழன் கூட இந்த நட்சத்திரத்துலதான் பிறந்தாராம்.

(ரொம்பத்தான் நெனப்புன்னு மனசுக்குள்ள நீங்க சொல்றது நல்லாவே கேக்குது )

கோபி Says:
April 2nd, 2006 at 4:21 pm
//உங்க கருத்தும் எனக்குப் பிடிபடவில்லை. ஜோதிடம் உண்மை. எண்கணிதம் தவறு அப்டிங்கிறீங்களா?//

என் எண்ணத்தில் ஜாதகம் கணிப்பதும் எண் கணிதமும் கலைகள்.

ஜாதகம் கணிப்பதிலும் எண் கணிதத்திலும் வானவியலும் கணிதமும் (கணிப்பதற்கு) அறுதியிட்டு கூறப்பட்ட விதிமுறைகளும் உள்ளன. கணிக்கும் முறையில் சில வேறுபாடுகள் உள்ளன (திருக்கணிதம், சுத்த வாக்கியம்)

பலன்களும் குறிப்பிட்ட விதிமுறைகளுக்குட்பட்டே சொல்லப்படுகின்றன. எண்கணிதப் பலன்கள் எளிதானவை. துல்லியமானவை அல்ல. ஜாதகப் பலன்கள் துல்லியமானவை பல்வேறு Permutations and combinations கொண்டவை.

இவை இரண்டும் சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just one can be aware of what may happen. It can not be changed through changing the Name or “பரிகாரங்கள்”.

உண்மை/தவறு என்பதை உங்கள் நம்பிக்கைக்கே விட்டுவிடுகிறேன்.

துளசி கோபால் Says:
April 3rd, 2006 at 1:43 am
தருமி,

இப்படி ஸ்பெல்லிங் மாத்திப் போட்டா அதிர்ஷ்டம் வந்துராதா….ன்ன்ற நப்பாசைதான்.

எனக்கு இந்த வருஷம்( பொறந்த வருஷங்க) விஷயத்துலே மட்டும் ‘லாங் டைம் மெமரி லாஸ்’
முயன்று பார்த்தாலும் ரெக்கவர் பண்ண முடியலை

தருமி Says:
April 4th, 2006 at 3:09 pm
நன்றி கோபி.

துளசி,
எனக்கு ஞாபகம் வந்திருச்சே…நீங்க பொறந்த வருஷம் 1943 தானே !!!!!!!!!

துளசி கோபால் Says:
April 8th, 2006 at 2:19 am
தருமி கணக்குலே இவ்வளோ வீக்கா? ஒரு 40 ஐக் கூட்டிக்கணும். இருங்க அடுத்தமுறை அங்கெ வர்றப்ப இருக்கு.

கார்த்திகேயன் Says:
April 8th, 2006 at 10:00 am
வாத்தியார் நம்ம விஞ்ஞானி ‘ரங்கராஜர்’தான் . ‘சுஜாதா’ன்னு கூட எழுத்துலகுல சொல்லுவாங்களே அவரு..

ஞானவெட்டியான் Says:
April 8th, 2006 at 10:00 am
அன்பு சதயம்,
//”ஐம்.கலீம்.சௌக”//
ஆங்கிலமா? புதியதாயுள்ளதே!

அன்பு சம்மட்டிக்கு,
//இப்படியே நாம எல்லோரும் வின்டோஸ் version 1 லேர்ந்து 3.5 வரைக்கும் win win னு தட்டியதால என்னுமோ பிச்சிக்குட்டு win பண்ணிடுச்சி,//
நானும் படிக்கும்போது “WIN,WIN” ்னு சொல்லியோ, எழுதி இருந்தாலோ இன்னும் அதிகமாகப் படித்து செல்வந்தனாகி இருக்கலாம் போலுள்ளதே!

அன்பு கோபி,

//ஜாதகம் ஒரு வழிகாட்டி மட்டுமே (சாலையோர அறிவிப்புகள் மாதிரி - Just you can be aware of). பரிகாரங்கள் மூலமாய் ஜோதிட வியாபாரிகளுக்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.

சில ஜோதிட வியாபாரிகளை பார்த்து ஜோதிடத்தை தவறென்று சொல்வது, சில மத வியாபாரிகளை பார்த்து ஒரு மதத்தை தவறென்று சொல்வது போல. //

சோதிடம் சோதித்து திடம் அடைவதற்கே! அது ஒரு கை விளக்கு. இரவில் நடக்கும்போது குழி எங்கே உள்ளது? எனத்தெரிந்து ஒதுங்கிச் செல்லவே! பரிகாரம் செய்யவேண்டுமெனச் சொல்லும் சோதிடர்களை புறந்தள்ளிப் பரிகசியுங்கள்.

அன்பு தருமி,

//“..true jyothidam ..” - அதாங்க, அந்த ‘உண்மையான’ ஜோதிடம் என்னன்னுதான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.//

எந்த சோதிடனிடம் நீங்கள் ஏமாறவில்லையோ, அந்த சோதிடம்தான் உண்மையான சோதிடம்.

மகேஸ் Says:
April 8th, 2006 at 10:31 pm
ஏனக்கு முதலில் வீட்டில் வைத்த பெயர் மகேஸ்பாபு.
பள்ளியில் பெயர் சேர்க்கும் போது மகேந்திரன் ஆனது. ஆனால் வீட்டில் மகேஸ் என்று அழைக்கின்றனர். நண்பர்கள் என்னை அழைப்பது மகேந்திரன், சில பேர் மகி, ஓரிருவர் ‘மாணா’.
என்னை நான் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது என் பெயரை நான் சொல்வது ‘மகேந்ரா’ என்று.
இப்படிப் பல பெயர்கள். என் திருமண அழைப்பிதழில் என்ன பெயர் போடுவது என்று ஒரு குழப்பம் வரும் என் நினைக்கிறேன்.

தருமி Says:
April 9th, 2006 at 12:10 am
மகேஷ் aka மகேஷ்பாபு aka மகேந்திரன் aka மகி aka மாணா aka ??? aka

- எப்படியோ திருமண அழைப்பிதழில் என்ன இருந்தாலென்ன? திருமண வாழ்வு குழப்பமில்லா தெளிந்த நீரோடையாக இருக்க வாழ்த்துக்கள்.

மகேஸ் Says:
April 9th, 2006 at 1:32 am
வாழத்துகளுக்கு நன்றி திரு.தருமி அவர்களே. திருமணம் நிச்சயம் ஆனவுடன் சொல்கிறேன். நீங்கள் மதுரையா? நான் ராமநாதபுரம்.

4 comments:

Chandru said...

நானும் இது போல் சொல்லிக் கொண்டிருந்தவன் தான். ஆனால் நிகழ்வுகளில் கவனம் வைத்து தகவல்களை தேடி அலசிப் பாருங்கள் அதில் ஒரு சைன்ஸ் இருப்பது புரியும். ஆனால் அது இவர்கள் சொல்வது போல் இல்லை என்றாலும் அது வேறு முறையில் வேலை செய்யலாம்.
உதாரணமாக எந்தப் பெயரிலும் விஜய் அல்லது லெட்சுமி,விஜய, ராஜ என்று கலந்து வந்தால் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

அது போல் ராமன் என்று வந்தால் அதில் ஒரு பின்னடைவு இருக்கிறது. நான சொல்ல வந்ததை தகவல் திரட்டி பின் ஆராய்ந்து பார்த்தீர்களென்றால் மிகை நாடி மிகக் கொள்ளும் பட்சத்தில்
இதை ஏன் ஆராயக் கூடாது எனத் தோன்றும்.
பூகம்பம், சுனாமி வரப் போவதையும் இதனால் இவ்வளவு சேதம் ஏற்படும் என்று சொல்லாத அறிவியல் ஒரு அறிவியலா? என்ற பாணியில் உங்களது சில கேள்விகள்
உள்ளன

தருமி said...

//உதாரணமாக எந்தப் பெயரிலும் விஜய் அல்லது லெட்சுமி,விஜய, ராஜ என்று கலந்து வந்தால் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.//

நம்ம போலீஸ் கேஸ் விஜயலட்சுமி கூட இதையே சொல்லியுள்ளார்.

//ராமன் என்று வந்தால் அதில் ஒரு பின்னடைவு இருக்கிறது.//

ஆமா .. நோபல் பரிசு வாங்கிய சி.வி. ராமன் கூட இதையே சொல்லியுள்ளார்.

தருமி said...

//இவர்கள் சொல்வது போல் இல்லை என்றாலும் அது வேறு முறையில் வேலை செய்யலாம்.//

ஓ! அப்படி வேறு இருக்கோ?

Chandru said...

//ஆனால் நிகழ்வுகளில் கவனம் வைத்து தகவல்களை தேடி அலசிப் பாருங்கள் அதில் ஒரு சைன்ஸ் இருப்பது புரியும்.//
இதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் உடனடியாக அங்கொன்றும் இங்கொன்றும் உதாரணமாகக் கூறி பதில் சொல்வதில் அர்த்தம் இல்லை.
பரிணாமத்த்தின் பரிமாணங்கள் இன்னும் முழுமையாக அகப்படவில்லை என்பதால் பரிணாமத்தை மறுக்கும் மதவியலார் போல் இருக்கிறது உங்கள் கூற்று.

Post a Comment