Tuesday, March 14, 2006

143. சோதிடம்..9 - ராசிபலன்

முந்திய பதிவுகள்:
1.
2.
3.4.
5.
6.
7.
8.

பிந்திய பதிவுகள்:

10.
11.
12.
13.





ராசி பலன்களும், ராசிக்கற்களும்…

ஒரு பத்திரிக்கை விடாமல் எல்லா பத்திரிக்கைகளிலும் வரும் ஐட்டம் ஒன்று உண்டென்றால் அது ‘இந்த வார ராசிபலன்’தான். அந்தக் காலத்தில் நான்கூட Peter Vidal அப்டின்னு ஒரு ஆளு I.E.-ல் எழுதுவார்ல அதப் படிக்கிறது உண்டு. அப்போ யாராவது இத ஏன் படிக்கிற அப்டின்னு கேட்டா வழக்கமா நம்ம எல்லோரும் ஒரு பதில் வச்சிருப்போமே - ‘சும்மாதான்’ - அதச் சொல்லிர்ரது. அதுக்குப் பிறகு ஒண்ணு புரிஞ்சிது. பாஸிட்டாவா ஏதாவது சொல்லியிருந்தா அத ஒண்ணும் சீரியசா எடுத்துக்கிறதில்லை; ஆனால் நெகட்டிவா ஏதாவது இருந்தா கொஞ்சம் நெருடலா இருந்திச்சு. ஆனா கடைசியில அது ஒண்ணுமில்லாத விஷயமாத்தான் இருக்கும். அப்புறம் இதப் போட்டு எதுக்குப் பாக்கணும்னு லேட்டா புத்தி வந்திச்சி.

பிறகு ஒரு சமயத்தில இந்த ராசிபலன்களுக்கு ஒன்னொரு பயன் இருப்பது தெரிந்தது. ரொமான்ஸ் பண்ற ஆளுங்க நிறைய பேர்,’ஆஹா, பாத்தியா..நம்ம ரெண்டு பேர் ராசிக்கும் எவ்வளவு ஒற்றுமை’ அப்டின்னு காண்பிச்சிக்கிறதுக்கு அவங்க ரெண்டு பேரோட ராசிகளா வாசிச்சி, அடிக்கோடிட்டு அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நாமும் பார்ப்போமேன்னு வாசிச்சிப் பாத்தேன். அவங்க சொன்னது மாதிரி அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா பொருத்தம் அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க. பரவாயில்லையே, ரொம்ப பொருத்தமாத்தான் இருக்காங்கன்னு நினச்சேன். சரி எதுக்கும் வேற ராசிக்காரங்களுக்கும் இவங்களுக்கும் பொருத்தம் எப்படி இருக்குனு பார்க்கலாமேன்னு பார்த்தேன். பார்த்தா எந்த ராசி எடுத்துக்கிட்டாலும் அங்கங்க நம்மளுக்கு வேண்டிய மாதிரியான பொருத்தங்கள் இருந்திச்சு. அப்போதுதான் புரிஞ்சுது - நல்லது நாலு; அப்பப்ப நடுவில ஒண்ணு ரெண்டு நெகட்டிவா போட்டுட்டு, அதையும் கொஞ்சம் தட்டி கிட்டி அட்ஜஸ்ட் பண்ணிப் போட்டுட்டா வாசிக்கிற எல்லாரும் சந்தோஷமா போயிடுவாங்களல்லவான்னு புரிஞ்சுது. மக்களின் மனச நல்ல புரிஞ்சி வச்சிக்கிட்டு நல்லாவே காசு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சுது.

சரி..இதெல்லாம் நம்ம நாட்டு சரக்கு கிடையாது. நம்ம சரக்கு அதவிட எல்லாம் ரொம்ப ஒஸ்தி அப்டின்னு ஒரு விவாதம் வரலாம். நம்ம ராசிபலனில் மொத்தம் 12 ராசிகள்..மேஷம், ரிஷபம் அப்டி இப்டின்னு. வாசிச்சி பாத்தா அதே ‘தத்துவம்’தான்னு புரிச்ஞ்சிது.

இதுல்ல ஒரே ஒரு கேள்வி மட்டும் போதும்னு தோணுது. உலகத்தில இப்போதைக்கு 6-7 பில்லியன் மக்கள் இருக்கிறாங்களா? இதுவரை பிறந்த வாழ்ந்து முடிச்சிவங்க எத்தனை கோடியோ? இன்னும் பிறக்கப் போறது எவ்வளவோ? இந்த எண்ணிக்கை அவ்வளவையும் ரொம்ப சிம்ப்பிளா பன்னிரெண்டே வகையா பிரிச்சி, அவர்கள் எல்லாரும் இந்த இந்த குணநலன்களோடு இருப்பார்கள் என்பதுவும், இத்தகைய பலன்கள் அவர்கள் வாழ்க்கையில் இப்பப்ப நடக்கும் என்பதுவும் ‘கடல் தண்ணிய கடுகில் அடைக்கிறது’ மாதிரிதான் தோன்றுகிறது. மனுஷ டைப்புகளே 12 மட்டும்தானா? Is it not every human being an individual, a clear and separate entity? எல்லோரையும் பன்னிரெண்டு வகையில் ஏதோ ஒன்றில் அடைக்க முடியுமா, என்ன?

இந்த மாசத்தில் பிறந்தால் நீ இந்த நட்சத்திரம்…உனக்கு இந்த ராசி…அப்போ உன் குணம் இப்படிதான் இருக்கும்..உன் வாழ்க்கை இப்படி இப்படி அமையும்…..இதில் என்ன விஞ்ஞான உண்மைகள் உள்ளன? என்ன தத்துவம் பின்னடங்கியுள்ளது? என்ன லாஜிக் இருக்கிறது? என்ன common sense இருக்கிறது? Is human life so simple to be put into any one of these strait jacket compartments? Is human behaviour such a simplistic affair? —-பதில்கள் எனக்குத் தெரியவில்லை..

இதை ஒட்டிய இன்னொரு விஷயம்: ராசிக்கல்.
கற்களுக்கு, அதுவும் ஒவ்வொரு கல்லுக்கும், வேறு வேறு ஆட்களுக்கும் தனித்தனி பலனாம். கற்களுக்கு ஒரு effect இருக்குன்னு சொன்னா, இயல்பியல், வேறியியல் இப்படி ஏதாவது ஒன்றின் தயவை நாடலாம் - either to prove it or disprove it. ஆனால் இங்க ஒரே கல் ஆளாளுக்கு, தனித்தனி பலன் கொடுக்குதுன்னு சொன்னா அதை எந்த விஞ்ஞானத்தின் கீழ் கொண்டு வருவது? ஏதாவது செய்து எப்படியாவது காசு பார்க்க மாட்டோமா அப்டின்னு பரிதவிக்கிறவங்க இருக்கிறது வரை இந்தக் கல் வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்தான்.




Š

Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 14 2006 01:41 pm | சமூகம் | | edit this
31 Responses
துளசி கோபால் Says:
March 14th, 2006 at 2:21 pm e
என்னங்க தருமி,

நம்மளாவது ஒரு நட்சத்திரத்துலெ பொறந்தவுங்களுக்கு ஜோசியம் சொல்லிடறோம். இங்கே இங்கிலீஷ்காரன்
ஒரு மாசம் பூரா பிறந்தவனுக்கு ஒரு ராசியாம். உதாரணம் என்னன்னா நம்ம கும்பராசிக்கு ஜனவரி 20 லே இருந்து ஃபிப்ரவரி
18 வரை. ஆனா நம்மூர் நட்சத்திரப்படி நானு துலாம். அப்ப நானு எதுன்னு பலன் பாக்கறது? எது நல்லதோ அது என்னோடது:-)

ராசிக்கல்லைப் பொறுத்தவறை, எல்லாத்துக்கும் பொதுவா ‘நவரத்திக்கற்கள்’ நகையைப் போட்டுக்கலாம். எல்லாக் கலர்
உடுப்புக்கும் பொருத்தமா இருக்குமுல்லே?

Geetha Sambasivam Says:
March 14th, 2006 at 2:23 pm e
Ahaa, atleast we are agreeing in this matter. I am also not a believer in the RASIPALAN of the magazines.And not a believer of wearing a stone according to my Rasi or change my name into numerological method. I am a believer of God who will give us everything we are able to get, not even a penny less or not even a penny more.

suresh - penathal Says:
March 14th, 2006 at 3:03 pm e
ஒரு பெரிய கல் எடுத்து பலன் சொல்றவன் தலையிலே போட்டா நிச்சயம் பலன் இருக்கும் தருமி. (ஐடியா உபயம்: பாளையத்தம்மன் விவேக்.

தருமி Says:
March 14th, 2006 at 4:07 pm e
துளசி,
இந்த கல்மோதிரங்கள் மேல் எனக்கு ஒரு காலத்தில (இப்பவும்தான்!) ஆசை. ஒரு தடவை நாலஞ்சு கலர்ல வகை வகையா வாங்கி அப்பப்போ கலர் கலரா மினுக்கிக்கிட்டு போறதுண்டு. ஆனா எல்லாம் கண்ணாடிக்கல்; ஸ்டீல் மோதிரங்கள். அவ்வளவுதான் நம்பளால முடியும்!!

தருமி Says:
March 14th, 2006 at 4:23 pm e
கீதா சாம்பச்சிவம்,
“I am a believer of God ” - இதுதானங்க எல்லாரும் வேணும்னு சொல்றாங்க. இதயும் வச்சிக்கிட்டு, பிறகு ஏன் சாதகம்,ராசின்னு ஓட(றீ)றாங்க?!

muthu(tamizhini) Says:
March 14th, 2006 at 5:22 pm e
இதையெல்லாம் கடுமையா விமரிசிக்கலாம் கெட்ட பெயர் தான் வரும்..குரங்கு மாதிரி ஒர்த்தன் வந்து ராசிக்கல் மோதிரத்தை பத்தி பேசுவான் பாருங்க..விஜய் டிவின்னு நினைக்கிறென்…அவன பாம்பே லோக்கல் டிவி சேனல்ல நான் பார்த்தேன்..பாருங்க அவன் ரீச்சை..நம்ப மக்கள் முட்டாளுங்க..அவன என்ன சொல்றது?

கொத்ஸ் Says:
March 14th, 2006 at 6:21 pm e
என்ன நைனா இப்படி சொல்லிட்டீங்க. போனதபா இந்தியா வந்தாசொல்ல, நைட் டீ.வீ.ல இந்த கல்லுங்க பத்தியும் பேரு மாத்தி வைக்கறது பத்தியும் ப்ரோகிராமெல்லாம் பாத்தேன். படா டமாசா இருந்திச்சிப்பா. காதுல எல்லாம் என்னென்னவோ மாட்டிக்கிட்டு அந்த ஆளுங்க அடிச்ச லூட்டி தாங்கலப்பா.

அவங்களே எப்பமாச்சும் அளுக சீரியலுக்கு நடுவா இந்த மாதிரி காமெடி எல்லாம் போடறாங்க. விட மாட்டீங்க போல இருக்கே.

தருமி Says:
March 14th, 2006 at 6:49 pm e
சுரேஷ்,
“ஒரு பெரிய கல் எடுத்து பலன் சொல்றவன் தலையிலே போட்டா நிச்சயம் பலன் இருக்கும் தருமி.”//-
இல்ல சுரேஷ், நாம் அந்த ஆளுகளை மதிக்கணும்; ஏன்னா இத்தனை பேரை ஏமாத்தணும்னா அந்த ஆட்கள் எவ்வளவு திறமைசாலிகளாக, புத்திசாலிகளா இருக்கணும்.

ஆனா இந்த ஆட்கள் முன்னால் உக்காந்திருக்குதுகளே அதுக தலையில நீங்க சொல்ற மாதிரி பெருசா போடணும். ஏன்னா அதுகதானே பேரு மாத்தினதும், கல் மோதிரம் போட்டதும் கூறையப் பிச்சுக்கிட்டு ‘மேல′ இருந்து விழுகப்போகுதுன்னு நினைக்குதுக.அதுக தலைதான் சரியான டார்கெட்…இல்ல?

தாணு Says:
March 14th, 2006 at 8:52 pm e
அட
நான்கூட `காதலித்த நாட்களில்’ பீட்டர் விட்டால் வாசித்திருக்கிறேனே!

தருமி Says:
March 14th, 2006 at 9:51 pm e
தமிழினி முத்து,
“நம்ப மக்கள் முட்டாளுங்க..அவன என்ன சொல்றது?”//
- நானும் அதத்தான் சொல்றேன்…அவர்கள் மேல் தப்பே இல்லை. நம்புகிறவன் இருக்கிற வரை ஏமாத்துறவன் ஏமாத்தத்தான் செய்வான்.

சிமுலேஷன் Says:
March 14th, 2006 at 10:07 pm e
புயலுக்கு என்ன பெயர் வைப்பது என்ற எனது கட்டுரையையும் பார்க்கவும்.

http://simulationpadaippugal.blogspot.com/2005_12_01_simulationpadaippugal_archive.html

- சிமுலேஷன்

தருமி Says:
March 14th, 2006 at 10:08 pm e
கொத்ஸ்
” ….அளுக சீரியலுக்கு நடுவா இந்த மாதிரி காமெடி எல்லாம் போடறாங்க”
பிரச்சனை என்னன்னா, சீரியல்களில் அவங்க அழுவுறாங்க; இதில நமக்கு அழுகை வருதே …

தருமி Says:
March 14th, 2006 at 10:27 pm e
தாணு,
பேப்ப்ர கட் பண்ணி, அண்டர்லைன் பண்ணி ‘தலைவருக்குக்’ கொடுதிருப்பீங்களே

தருமி Says:
March 14th, 2006 at 10:35 pm e
சிமுலேஷன்,
உங்க புயல் எங்க வீசுதுன்னு தெரியலையே

Mohan P Sivam Says:
March 14th, 2006 at 10:43 pm e
நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும் 12 டைப்பா மட்டும் பிரிக்கறதில்லை. அதிலேயும் நிறைய காம்பினேஷன் வரும்.
உதாரணமா லக்னம், நட்சத்திரம், ராசி அப்படி பார்த்தா (12 x 27 x 12) நிறைய வகைப்படுத்தி இருப்பாங்க. லக்னத்துக்கு தனி கேரக்டர், நட்சத்திரத்துக்கு தனி கேரக்டர், ராசிக்கு தனி கேரக்டர் இது ஒன்னொன்னும் கலந்து வேதி வினை மாற்றத்துக்குள்ளாகும் போது அது ஒரு தனி கேரக்டர்.

மற்றபடி கல் விசயத்துல துளிசி கோபால் அவர்கள் சொன்னது தான்.

வெளிகண்ட நாதர் Says:
March 14th, 2006 at 10:53 pm e
இந்த ராசி பலன் சும்மா படிச்சிட்டு பசங்ககிட்ட பீலா வுட்டு திரியறதுக்கு. இந்த கல்லு, வேணாம், நமக்கு எமகண்டன் மாதிரி, இந்த மஞ்சகல்லால வந்த வினை வேணவே வேணாம், அப்புறம் இதை ஒரு பதிவா போடறேன்!

இராமநாதன் Says:
March 15th, 2006 at 1:43 am e
ஆஹா, பெரிய தொடரா இருக்கே.. பொறுமையா ஆரம்பத்துலேர்ந்து படிச்சிட்டு வரேன்.

தருமி Says:
March 15th, 2006 at 9:27 am e
Mohan P Sivam,

“அப்படி பார்த்தா (12 x 27 x 12) ..”//
- அப்படி பார்த்தாலும் 3888 தான வருது…

பின்னூட்டங்கள பார்க்கும்போது இன்னொரு காம்பினேஷன் தெரியுது. சாதகம் மட்டும் நம்புறவங்க..சாதகம்+ராசி; ராசி மட்டும்; ராசி+கல்; சா+க+ரா; கல்+ வாஸ்து; சாதகம்+ வாஸ்து+கல்+எண் கணிதம்…பயங்கர permutation combination-ஆக இருக்கும் போலவே இதப் பத்திக் கூட ஒரு சமூகவியல் ஆராய்ச்சி நடத்தலாம் போல இருக்கு

தருமி Says:
March 15th, 2006 at 9:32 am e
வெளிகண்ட நாதர்,
என்ன நீங்க..நான் ஒண்ணு சொன்னா, அதில இருந்து அடிக்கடி சொந்தக் கதை..சோகக்கதைன்னு போயிடறீங்க..அதுவும் நல்லா இருக்கு…ஜமாய்ங்க…

தருமி Says:
March 15th, 2006 at 9:37 am e
இராமநாதன்,
நீங்கதான் இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே…ஏதோ பெரீஈஈஈஈயப்பான்னு ஒரு சீவன் இருக்கேன்னு ஞாபகமே இல்லாம போச்சு ??: சரி…அடுத்தவங்க வீட்ல வச்சு பார்க்கலாமான்னு பாத்தா அங்கயும் கண்ல படறதில்ல..F1 கத வாசிச்சேன்..

இன்னும் 2/3 பகுதி எழுதறதா திட்டம் - இன்ஷா அல்லா

Geetha Sambasivam Says:
March 16th, 2006 at 6:21 pm e
Hello, I told I am not a believer of these drama artists who are coming and going in the TV Rasi palan shows and in the magazines. But if a true Jyothidar analyse your bio-data or jathakam in my language and told your past and present and some of the event which are going to happening in the near future, that is true. And it happened to big political leaders also.So do not believe these bammathu persons.Believe God and true jyosiam which is very rare now-a-days.And to your kind information, I am not Geetha Sambachchivam. I am only Geetha Sambasivam.Thank you.

Geetha Sambasivam Says:
March 16th, 2006 at 6:27 pm e
My comment some minutes ago was refuse due to lso9me technical problem. I said I am not a believer of these BAMMATHU jyosiers who are coming in the TV shows and in magazines. But if a true and honourable jyothidar analyse your jathakam and tellyou the past and present and the happenings of the near future that will become true. And it is happening to big political leaders also. Ex:Rajiv Gandhi:Who neglected his jyosiers repeated requests not to go to Tamilnadu at that time.And for your kind information:My name is GEETHA SAMBASIVAM not Geetha Sambachchivam as you wrote. Thank you.

சோம்பேறி பையன் Says:
March 16th, 2006 at 7:10 pm e
இந்த டுபாக்கூரை எல்லா பத்திரிக்கைகளும் பின்பற்றுகின்றன என்பதுதான் வேதனை.. நான் என்னோட தமிழ் மற்றும் ஆங்கில் ராசியை பாத்துட்டு எது நல்லா இருக்கோ அதை எடுத்துப்பேன்.. அதுவும் அன்றைய தின முடிவில்தான் அதைப் பார்ப்பேன்.. அதுசரி தருமி, உங்க ராசி என்னா ????

துளசி கோபால் Says:
March 17th, 2006 at 11:03 am e
அவுருது ‘ஏப்ப ராசி’ங்க

Khannan.R Says:
April 15th, 2006 at 8:59 am e
Dear Bro/sis

Stop looking for your future, your future has been decided when u born. Astrology can’t predict and tell u what will happen in the future. Future is on your hand. If you work hard that will create good life, so that wil be the your future.

Khannan. R
Canada

ஞானவெட்டியான் Says:
April 15th, 2006 at 12:00 pm e
அடாடா!!
ஒங்க தொல்லை தாங்கமுடியலியே!!!

மொதல்ல சோதிடம்; இப்ப ராசிக்கல்

எல்லாத்துக்கும் பதில் ஒண்ணுதானே!!!

விட்டுருங்க. பட்டுத் திருந்தட்டும்.
“பட்டால் தெரியும் பார்ப்பவன் பாடு”

குமரன் (Kumaran) Says:
April 19th, 2006 at 1:55 am e
//அவுருது ‘ஏப்ப ராசி’ங்க //

துளசி அக்கா,

ஏப்பைன்னு எங்க ஊருல சொல்லுவாங்களே. அந்த ராசியா? நாமளும் அது தானுங்க…

:-)

தருமி சார், இந்த கல்லு மோதிரம் எல்லாம் இன்னும் போடறீங்களா? இது மதுரை ஸ்டைலோ? நானும் சின்ன வயசுல அப்படி தான் போட்டுக்கிட்டுத் திரிவேன். அப்புறம் மெல்ல அந்தப் பழக்கம் போயிடுச்சு.

Swami Says:
May 25th, 2006 at 11:22 pm e
//இப்போதைக்கு 6-7 பில்லியன் மக்கள் இருக்கிறாங்களா? இதுவரை பிறந்த வாழ்ந்து முடிச்சிவங்க எத்தனை….மனுஷ டைப்புகளே 12 மட்டும்தானா?//

see there is only 12 size of shoos or cheppal for all thos 6-7 பில்லியன் மக்கள் also i heared jathakam palan is not based on birth time also depence on what good or bad u did in the past(Karuma vinai?).

சின்னக்கடப்பாரை Says:
July 10th, 2006 at 4:45 pm e
தருமி அய்யாவுக்கு வணக்கம்,

என்னடா இன்னும் தலைவர் நம்மளை வாரலையேனு யோசிச்சென்,

capri அப்படினு நான் வச்சிருக்கரது sun sign. I’ve personally seen personality familiarities with a person of the same sun sign. I’m not supporting ஜாதகம் & ராசிக்கல்.

A same person born on the same day i was born has a lot of personality familiarities.

For ex.

I hate seafood
I love eggs, chicken (without bones)
I sleep with 4 pillows
The liking towards bikes
The liking towards cooking
The liking to be lazy
The liking towards a specific cult of friends
Being very very choosy!

He has the same personalities!!!!

The same is the case with another friend born a day before me and she is a girl from Germany.

This is not a belief! But, still, the birthday has to do something with the personalities

தருமி Says:
July 12th, 2006 at 10:38 am e
சீ.க.,

I hate seafood ……….I DO LIKE THEM.crab, shrimps பிடிக்காத ஒரு non-veg ஆளா..?
I love eggs, chicken (without bones)…WITH OR WITHOUT BONES; ESPECIALLY WITH BONES IN FRIED வேட்டைக் கறி
I sleep with 4 pillows …ONE WILL DO
The liking towards bikes…HAD IT. WHO WONT AT YOUR AGE!
The liking towards cooking…NEVER EVEN VISITED KITCHEN FOR LONG; BUT VERY RECENTLY DEVELOPED TASTE FOR COOKING THOUGH NOT COOKING FOR TASTE!
The liking to be lazy…WHO IS NOT? ONLY IT IS A MATTER OF AFFORDABILITY.
The liking towards a specific cult of friends…FRIENDS HAVE TO BE ALWYAS LIKE THAT - LIKE MINDED!
Being very very choosy!…AGAIN A MATTER OF AFFORDABILITY.

ஆக நீங்க சொன்னதில நிறைய பொதுவா மனுஷங்களுக்கு இருக்கிற விஷயம்தான். சிலது மாறுபட்டு இருக்கு என்னிடம் - ஆனால் நானும் ஒரு capricorn ஆளுல்லா…??!!

சின்னக்கடப்பாரை Says:
July 17th, 2006 at 11:16 am e
அடடே,

இதை இப்படியும் யோசிக்கலாமோ?

சரி, நம்ம 2 பேருக்குமே நெறைய ஒற்றுமை இருக்கே?

ஆனாலும் ராசிக்கல் போடர அளவுக்கு நான் போனதில்லை. எனக்கு அப்பப்போ வர்ற kidney stone போதும்னு நெனச்சுக்கறேன்.

No comments:

Post a Comment