Wednesday, March 08, 2006

141. சோதிடம்…7 - ‘சாஸ்திரம்’

ஜோதிடம் தொடர் -

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.பெரியவங்க சொன்னவங்க சும்மாவா சொல்லியிருப்பாங்க;

அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்கல்லா;

காலம் காலமா அப்படிச் சொன்னாங்கன்னா, அதில ஏதாவது இருக்கும்.

- இப்படி நம்ம முன்னோர்களுக்கு நாம் அப்பப்போ அளிக்கும் நற்சான்றிதழ்கள் அனேகம். அவர்கள் சொன்ன பல நல்ல விஷயங்களை நாம் கண்டு கொள்வதேயில்லை. நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பது? ஆனால் நம் முன்னோர்கள் ரொம்பவே புத்திசாலிகள். பொய் சொல்லதேன்னு சொன்னாலும் நாம் பொய் சொல்லுவோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனால், பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. ஆனாலும், நம்ம ஆளுக இந்த மாதிரி விஷயங்களில் பெரியவங்க சொன்னதைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ‘இது சாஸ்திரம்’ அப்டின்னு சொல்லிட்டாங்கன்னு வச்சுக்குவோம். நம்ம ஆளுங்க டோட்டல் சரண்டர். அதுக்கு மேல கேள்வி எதுவும் கிடையாது.

அய்யா, நம்ம வீட்டுத் தோட்டத்துக்குள்ள நல்ல பாம்பு ஒண்ணு வந்திருச்சி. இயற்கை, பல்லுயிர் ஓம்புதல் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாம்ப
அடிக்கட்டா, மனசு கேக்குமா? ஒரு வழியா ஆளுகளக் கூட்டியாந்தாச்சு. ஆனா, நம்ம ஏரியாவில பாம்பு அடிக்கிற எக்ஸ்பெர்ட் அடிக்க வந்த பாம்பு
நல்ல பாம்பு அப்டின்னதும், (அதில கூட நல்ல பாம்புன்னு சொல்லக்கூடாதாமில்ல; ‘நல்லது’ அப்டின்னுதான் சொல்லணுமாம். ஏன்யா அப்டின்னு கேட்டா ‘பெரியவங்க அப்டிதான் சொல்லுவாங்க’ அப்டின்னு பதில்!) பின் வாங்கிட்டார். ‘வீடல பிள்ளதாச்சியா இருக்காங்க; அதனால ‘நல்லதை’ அடிக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க’ அப்டிங்கிறார். அப்புறம் என்ன, நம்மளே அடிக்கிறோம். அடிச்சுக் கொன்ன பிறகு ஒருபாட்டு சனம் நம்ம வீட்ட சுத்தி. எதுக்குங்கிறீங்க? ‘நல்லதுக்கு’ கடைசி காரியம் எப்படி பண்ணணும்னு சொல்றதுக்கு. அங்க என்னன்னா, ஒரு பட்டி மன்றமே ஆரம்பிச்சிருச்சு. ஒரு குரூப், ‘புதைச்சுதான் ஆகணும்’ அப்டிங்குது. இன்னொண்ணு, இல்ல..இல்ல.. எரிக்கணும்னு ஒத்த கால்ல நிக்குது. நானே பாப்பையாவா மாறி, விடுங்க, எரிச்சு புதைச்சுருவோம்னு தீர்ப்பு சொல்லிட்டு எரிக்கச் சொன்னேன். எதுத்த வீட்டுல இருந்து ஒரு பெரியம்மா, ‘தம்பி, கொஞ்சம் பாலு ஊத்திரு’யா’ என்று ஒரு மனு.

இதெல்லாம் என்னங்கப்பான்னு கேட்டா, ஒரே மாதிரியா எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, - ‘பெரியவங்க அப்படிதான் சொல்லியிருக்காங்க’; ‘அது காலங்காலமாய் ஆகி வந்த சாஸ்திரம்’…

ஆனா நான் பார்த்த வரையில் எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். அதன் அடிப்படை என்னவென்று தெரியாமலே நாம் அவைகளைச் சிரத்தையாக நடத்தி வருகிறோம். வாழை இலை போடும் முறை சாஸ்திரம் என்ற பெயரில் சொன்னால் கேட்கிறோம். நல்ல
common sense-யோடு இலையை எப்படிப் போட வேண்டும் என்று சொல்லி, அதை சாஸ்திரம் என்ற பெயரில் கொடுத்ததும் நாமும் அதை அப்படியே
ஒத்துக்கொண்டு செய்து வருகிறோம். இலையின் முனைப்பகுதி ஏன் இடப் பக்கம் வரவேண்டும் என்று உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? இதே
போல் நான் ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறேன் - சாஸ்திரம் என்ற பெயரில் உள்ள நல்ல விஷயங்கள் என்று:

விளக்கு வைத்த பிறகு வீட்டைக் கூட்டினால் லஷ்மி வெளியே போய்விடுவாள்.
விளக்குப் போட்ட பிறகு நகம் வெட்டினால் தரித்திரம்.
பச்சைக் குழந்தையையோ, வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவர்களையோ தாண்டக் கூடாது.
ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.
சாப்பிடும்போது விளக்கை அணைக்கக்கூடாது.

- இப்படி எத்தனை எத்தனையோ… இவைகள் நல்ல விஷயங்கள்; சாஸ்திரம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட காரியங்கள்.

இவைகள் இப்படி என்றால், இன்னும் பல காரியங்கள் சாஸ்திரம் என்ற பெயரில் அர்த்தமில்லாமல் நம்மேல் சுமத்தப் படுகின்றன. எங்கேயும் போகும்போது எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாதாம். கேட்டா போற காரியம் நடக்காதாம். இது male chauvenism இல்லாம வேற எதுவும் இருக்குமா என்ன?

கண்ணாடி சாமான்களைக் கீழே போட்டா உடையத்தான் செய்யும். அதுலயும் சாஸ்திரம். அதுவும் வெள்ளிக் கிழமை உடைச்சா, ரொம்ப விசேஷமாம்!
அட, ஒரு சின்ன பூனை, அதுவும் கறுப்புப் பூனை அதுபாட்டுக்குப் போனா நமக்கென்ன; அது குறுக்கே போச்சுதுன்னா நம்ம ஆளு அவ்வளவுதான்!
பூனையாவது பரவாயில்லைங்க; இந்தப் பல்லி பாவம்; இத்தனூண்டு. அது பாட்டுக்கு சுவர் கூறைன்னு திரியற ஜந்து. அவ்வளவு உயரத்தில போற வர்ரப்போ ஏதோ கையோ காலோ வழுக்கி கீழ விழ நம்மாளு மேல பட்டிச்சின்னா, தலைவர் உடனே காலண்டரின் பின்பக்கம் பார்க்க ஆரம்பிச்சுருவார் - பல்லி பலன் பார்க்க!

இதையெல்லாம் கேள்வி கேட்டால் ‘ஆமா, எல்லாம் படிச்ச திமிரு’ / ‘’பெரியவங்க அர்த்தமில்லாமலா சொல்லுவாங்க..’ - இப்படி ஏதாவது ஒரு பதில். என் கேள்வி: சாஸ்திரம் என்று சொல்லிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு வழிநடக்கணுமா அப்டின்னுதான்.
Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 08 2006 01:19 pm | சமூகம் | | edit this
16 Responses
suresh - penathal Says:
March 8th, 2006 at 1:58 pm e
நல்ல பதிவு தருமி,

இவற்றுக்கு மட்டும் காரணங்களை சொல்லி விடுங்களேன்.. மற்றவற்றுக்கு எனக்கே(?!) தெரியும்.

ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.

எல்லா சாஸ்திரங்களும் நல்ல காரணத்தோடே ஆரம்பிக்கப்பட்டவையாகத்தான் இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் பூனையைப்பிடித்துக்கட்டிய சீடன் கதையாகவே ஆகிவிட்டன என்பது என் கருத்து.

செல்வம் Says:
March 8th, 2006 at 2:02 pm e
ஐயா,

புகைப்படத்தில் இருப்பது கூடல்நகர் வானொலி நிலையம் பின்னால் கரிசல் குளம் கண்மாயை ஒட்டிய வயல்தானே?

Geetha Sambasivam Says:
March 8th, 2006 at 2:09 pm e
what is the link between this and jothidam?I am confused. You should take whichever you like and drop which does not suit you. It is very simple.

துளசி கோபால் Says:
March 8th, 2006 at 3:54 pm e
விளக்கு வச்ச பிறகு யாருக்கும் ‘உறைமோர்’ கொடுக்கக்கூடாது.

வெள்ளிக்கிழமையன்னிக்குக் கடன் கொடுக்கக்கூடாது.

அமாவாசையன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுத் தலை முழுகக்கூடாது.

pot"tea"kadai Says:
March 10th, 2006 at 9:14 am e
பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்.

நீங்க சொல்லிட்டீங்க, நா கேட்டுக்கறேன்…

நிழற்படம் மிக அருமை…

I LOVE IT…

dharumi Says:
March 11th, 2006 at 3:05 pm e
ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம்.
வீட்டுப் படியில் உட்கார்ந்து சாப்பிடாதே.

சுரேஷ்,
நான் நினைக்கிறது: 1. matter of balance
2. mater of hygiene -ஏன்னா, வாசல் படி -நுழை வாயில் தெரு அழுக்கு நுழையும் இடமல்லவா?

“எல்லா சாஸ்திரங்களும் நல்ல காரணத்தோடே ஆரம்பிக்கப்பட்டவையாகத்தான் இருந்திருக்கும்.”
இல்ல சுரேஷ், நான் நினைக்கிறது என்னென்னா, சில விஞ்ஞான பூர்வமான விஷயங்கள் இதுபோல சாஸ்திரம் என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. ஆனால் பல விஷயங்கள் எந்த அர்த்தமும் இல்லாமல் சாஸ்திரப் போர்வையில், கண்மூடித்தனமாக புழங்கப்படுகின்றன என்றே நான் நினைக்கிறேன். மேலே துளசி சொல்லியுள்ள மூன்று விஷயங்களில் என்ன விஞ்ஞானம் இருக்க முடியும்?

dharumi Says:
March 11th, 2006 at 3:28 pm e
ஐயா செல்வம்,
இதென்ன அநியாயமா இருக்கு? ஏதோ நான் காலையில் வாக் போறப்போ என் பின்னாலேயே வந்து, நான் படம் எடுக்கும்போது பார்த்தமாதிரி அவ்வளவு சரியா சொல்லிட்டீங்க??!! எப்டிங்க இது? ஆச்சரியம் என்னென்னா, அந்த இடத்தை இவ்வளவு சரியா சொல்றதுக்கு படத்தில ஒரு அடையாளம் கூட இல்லையே..அங்க தூரத்தில தெரியிற டவர் தவிர.
suspense தாங்கலை; சீக்கிரம் சொல்லுங்க.

dharumi Says:
March 11th, 2006 at 3:30 pm e
Geetha Sambasivam,
ரொம்ப அவசரப் படுறீங்களே! இனிமதான் அது வரும்…

“You should take whichever you like and drop which does not suit you. It is very simple…”

Is it that simple? My aim is not to find and accept what suits me; but to raise the basic question : should we have such ’set of rules’ in the name of சாஸ்திரம்?

dharumi Says:
March 11th, 2006 at 3:32 pm e
இதயும் சேத்துக்குங்க:

should we have such ’set of rules’(most of which have become so obsolete) in the name of சாஸ்திரம்?

dharumi Says:
March 11th, 2006 at 3:33 pm e
துளசி,
விளக்கு வச்ச பிறகு யாருக்கும் ‘உறைமோர்’ கொடுக்கக்கூடாது.// - லைட் இல்லாத அந்த நாட்களில் பாலுக்கும் உறை மோருக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிச்சிரக் கூடாதல்லவா..?

வெள்ளிக்கிழமையன்னிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. ‘’ மக்கள் weekend celebration-ல ரொம்ப செலவழிச்சிருவாங்க..!

அமாவாசையன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுத் தலை முழுகக்கூடாது'’ // - உள்ளதே சில கேசுகள் இழுத்துக்கோ பரிச்சுக்கோன்னு இருக்கும். அதுக தலைல எண்ணெய் வைச்சு ஒரேயடியா முடிச்சிரக் கூடாதேன்னுதான்..!

dharumi Says:
March 11th, 2006 at 3:34 pm e
பொட்’டீ’க்கடை,
என்னங்க விளையாடுறீங்களா? இந்தப் படத்தை நல்லா இருக்குன்னு சொல்லி ‘லந்து’ பண்றீங்களா? இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்!

selvam Says:
March 30th, 2006 at 6:30 pm e
//அந்த இடத்தை இவ்வளவு சரியா சொல்றதுக்கு படத்தில ஒரு அடையாளம் கூட இல்லையே..அங்க தூரத்தில தெரியிற டவர் தவிர.//

அந்த ஒலிபரப்புக் கோபுரத்தை வச்சும் நீங்க மதுரைக்காரருங்கிறதையும் வச்சுத்தான்.

நான் கோயில் பாப்பாகுடிக்காரன்.

கோபி Says:
April 3rd, 2006 at 12:29 pm e
//கண்ணாடி சாமான்களைக் கீழே போட்டா உடையத்தான் செய்யும். அதுலயும் சாஸ்திரம். அதுவும் வெள்ளிக் கிழமை உடைச்சா, ரொம்ப விசேஷமாம்!//

:-)

//அட, ஒரு சின்ன பூனை, அதுவும் கறுப்புப் பூனை அதுபாட்டுக்குப் போனா நமக்கென்ன; அது குறுக்கே போச்சுதுன்னா நம்ம ஆளு அவ்வளவுதான்!//

உண்மையில பூனை தன்னோட ஆளுமைக்குறிய பிரதேசத்தை குறிக்க “உச்சா” போயி (நாய்க்கும் இந்த குணம் உண்டு) மார்க் பண்ண பிஸியா நடந்துக்கிட்டு இருக்கும்போது குறுக்கே போறது நாமதானுங்க.

“சே! மனுசப்பய குறுக்கே போயிட்டானே.. இனி எல்லை குறிச்ச மாதிரிதான்” அப்படின்னு பூனை நெனைக்குமோ என்னவோ.

தருமி Says:
April 3rd, 2006 at 1:26 pm e
கோபி,
“பூனை “உச்சா” போயி மார்க் பண்ண பிஸியா நடந்துக்கிட்டு இருக்கும்போது .. ‘ பாவம் அது எதுக்கு பிஸியாயா போச்சோ..

சம்மட்டி Says:
April 3rd, 2006 at 1:59 pm e
இடது கையில் எதையும் வாங்ககூடாது என்பார்கள், ஆனால் நாயர் கையால் (நல்லா கைகழுவியோ ?) தட்டின மசால் வடையை மட்டும் சுவைத்துச் சாப்பிடுவார்கள். உங்களுக்கு வடைதட்டுறது எப்படின்னு சொல்லித்தர வேண்டியதில்லை. வடைத்தட்டுவதில் இடது கையே பெரும்பங்கு வகிக்கிறது. ஏப்பம் விட்டலும், கொட்டாவி விட்டலும், தும்முனாலும் எல்லாம் சகுனம். நம்பாளுங்க சாவுக்கும் தடைவெச்சிருக்காங்கன்ன பாத்துக்குங்க, அது என்னான்னா, சனிப் பொனம் தனியா போகாதாம் கூடவே (பாவம்) ஒரு கோழிக்குஞ்சியையும் கட்டி அனுப்புவார்கள்.

நாம சகுனத்தடையா நினைக்கிற ஆமை (அதாங்க ஆமைப் பூந்த வீடும் அமீனார் பூந்த வீடும் உருப்படாதாமே) சீனர்களுக்கு அதிர்ஷ்ட சின்னம். ஒரு பழமொழி கூட இருக்குங்க, ஒரு சோசிய காரன் சொல்லுவானம் ‘உங்களுக்கு தலைப்பிள்ளை ஆண்பிள்ளை தப்பித்தால் பெண்பிள்ளை இது மாதிரி அபத்தங்களை சொல்லிக்கின்னெ போவலாம்.

இந்த செவ்வாக்கிழமைய வெச்சு அடிக்கிற கூத்து இருக்கே அது சொல்லி மாளதுங்க.

சம்மட்டி

மகேஸ் Says:
April 3rd, 2006 at 2:57 pm e
அதல்லாம் விட, பஸ்ல போகும் போது , அசைவ உணவு சாப்பிட எடுத்துச் சென்றால், எங்கள் வீட்டில் ஒரு அடுப்புக்கரியையும் பையில் போட்டு அனுப்புவார்கள். அது ஏன்??
தருமி அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க, கொஞ்சம் போட்டோ போட்டிருக்கேன்.

3 comments:

Aravindhan said...

சில விஷயங்கள் புரியவில்லையே தருமி
பல matterla அந்த காலத்துல கரண்ட்,லைட்,பேன் இதெல்லாம் இல்லாததே காரணமா ??

விளக்கு வைத்த பிறகு வீட்டைக் கூட்டினால் லஷ்மி வெளியே போய்விடுவாள். லைட் இல்லததநல சரியா kootta முடியாது...இப்ப தான் லைட் vaccum cleaner எல்லாமே வந்துடுச்சே

விளக்குப் போட்ட பிறகு நகம் வெட்டினால் தரித்திரம்.- லைட் இல்லாததுனால வெட்டுன நகத்த dispose பண்ண முடியாது,இப்ப தான் அந்த பிரச்சனை இல்லையே?

பச்சைக் குழந்தையையோ, வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவர்களையோ தாண்டக் கூடாது.-any logic behind this?

ஒத்தக் காலில் நிற்காதே - தரித்திரம். - weight balancing எல்லாரும் பண்றது தானே? ஏன் கண்ணன் கூட styla ஒரு கால்ல weight balance பண்ணிதனே flute வாசிப்பார் - any logic behind this?

தருமி said...

அரவிந்தன்,
// லைட் இல்லததநல சரியா kootta முடியாது...//
அதைவிடவும் சின்ன valuables-யையும் (லஷ்மியையும்) சேர்த்து வெளியே தள்ளிவிட வாய்ப்புள்ளதே.

//வெட்டுன நகத்த dispose பண்ண முடியாது,// அதைவிடவும் கையை 'கட்' பண்ணிக்கக்கூடாதே. அப்ப ஏது nail cutter.

//பச்சைக் குழந்தையையோ, வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவர்களையோ தாண்டக் கூடாது.//
எப்படியோ கொஞ்சம் பாலன்ஸ் தவறி அவங்க மேல விழுந்து வச்சீங்கன்னா ..?

இது நம்ம ஊரு கெட்ட பழக்கம் அப்டின்னு அமெரிக்காவில ரொம்ப வருஷம் இருந்த ஒரு பேராசிரியர் கூறினார். ஏனென்றால் அப்போது நாங்கள் நின்றுகொண்டு இருந்த கல்லூரி வெராண்டாவில் ஒரு காலில் நின்று அடுத்த காலை சுவற்றில் வைத்த தடயங்கள் / அழுக்கு வரிசையாக இருந்ததைப் பார்த்தோம்.

கண்ணனுக்கு சாஞ்சிக்க மாடு இருந்தது. நமக்கு அப்படியெல்லாம் இல்லாம நாம் சாஞ்சிரக்கூடாதேன்னு இருக்கலாமோ?

srinivasan Nattarasan said...

one should not act by this way for that a fear of god

Post a Comment