Sunday, March 26, 2006

145. இரட்டை எச்சரிக்கை:

இதனால் நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ஒன்றல்ல இரண்டு எச்சரிக்கைகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்:

தமிழில் எழுதிக் ‘குவிப்பது’ பற்றாது என்பதுபோல் இப்போது தருமிக்கு ஆங்கிலத்திலும் எழுதிக் குவிக்க ஆசை வந்தால் அது உங்கள் தலைவிதி; தருமியை என்ன சொல்ல முடியும், பாவம்.

ஏற்கெனவே முதலில் ஆங்கில இடுகை ஒன்று ஆரம்பித்து, அதன் பிறகு தமிழ்மண ‘ஜோதி’யில் கலந்ததும் ஆங்கில இடுகை மறந்தே போச்சு; இப்போ ப்ளாக் தேசம் வந்திருச்சா, பழைய நினப்புடா பேராண்டின்னு ஆயிப்போச்சு. defunct ஆகிப்போன அந்த ப்ளாக்கில் இருந்த விஷயங்களை வைத்து மீண்டும் உங்களை தொல்லைப்படுத்த புதுசா ஆங்கிலத்தில ஆரம்பிச்சிட்டேன்ல… எல்லாம் உங்கள நம்பிதான்… ‘உங்கள் பொன்னான ஆதரவை நம்பி’ அப்டின்னு timely வேண்டுகோளோடு -ஆறாவது விரல் / sixth finger - என்ற தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன்; கண்டுக்குங்க…அதில உள்ள tagline-ல சொல்லியிருக்கிறது மாதிரி என் சந்தோஷங்களையும், வயித்தெரிச்சல்களையும் உங்களோட பகிர்ந்து கொள்றதா ஒரு திட்டம்.

சில நல்ல மனுஷங்க (ஒண்ணிரண்டு பேரு மட்டும்தான்; மற்றவங்க யாரும் கண்டுக்கிட்டதே இல்லை என்றாலும்..) என் தமிழ் இடுகையின் ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு படம் என்று போட்டு வந்ததற்கு கொஞ்சம் பாராட்டி விட்டார்கள். அது போதாதா நமக்கு.. உடனே புகைப்படங்களுக்கென்றே இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு… ஆசை யாரை விட்டது, சொல்லுங்க. முடிஞ்சவரை இரண்டு ப்ளாக்குகளிலும் படங்கள் repeat ஆகாமப் பாத்துக்கிறேன். ( ஏற்கெனவே இந்த தீர்மானத்தை மீறியாச்சு!) அப்பப்போ அங்கயும் வந்து பாருங்க.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 26 2006 07:58 pm | சொந்தக்கதை.. | | edit this
15 Responses
இளவஞ்சி Says:
March 26th, 2006 at 8:35 pm e
தருமி சார்! கலக்குங்க!!!

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்! என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா??

இல்லைனா அங்க வந்து (-) குத்திடுவேன்! இங்கிலீசு தெர்லன்னாலும் நமக்கு - தெரியும்ல!!

Padma Arvind Says:
March 26th, 2006 at 8:55 pm e
இன்னும் கொஞ்ச நாளில தெலுங்கு, மலையாளம் இன்னு எல்லா மொழியிலயும் ஆரம்பிச்சுடுவீங்க. ஆங்கிலத்தில எழுதறது இன்னும் எளிமையா இருக்கும். வாழ்த்துகள்

மணியன் Says:
March 26th, 2006 at 10:41 pm e
கலக்குங்கண்ணா கலக்குங்க!!
உங்கள் ஆங்கில பதிவுகள் இரண்டுமே நன்றாக இருந்தது.
தமிழ்திறன் இங்கு கண்டால் ஆங்கிலத் திறன் அங்கு கண்டேன்.
வாழ்த்துக்கள்!

தருமி Says:
March 27th, 2006 at 3:30 pm e
ரெண்டு விஷயம் இளவஞ்சி:
1. ஆமா, சொன்னாங்க உங்களுக்குத் தமிழில் எழுதவே தெரியாதாமே! நீங்க எழுதறத வாசிச்சா கண்ணுல தண்ணி வராதாமே! எப்பவாவது எழுதினாலும், எழுதறத அழகா, மனசில பதியிறது மாதிரி ‘நச்’சுன்னு எழுதத் தெரியாதாமே! எல்லாரும் ‘நாலு’ பற்றி பதிவு போட்டாலும் ‘you’re a complet man’ அப்டின்னு comment வாங்குறது மாதிரி உங்களுக்கு எழுதவே தெரியாதாமே! - சொன்னாங்க
தமிழில எழுதத் தெரியாத மாதிரிதான் ஆங்கிலத்திலும் உங்களுக்கு எழுதத் தெரியாதாமே, அப்படியா
அடப் போங்க..இளவஞ்சி.

2. நான்தான் ‘பட்டை’ போட முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேனே..நீங்க எங்க பிறகு - /+ போட்றது?! அதென்ன எனக்கும் பட்டைக்கும் இவ்வளவு தூரமா இருக்கு? இதுக்காகவே பட்டை போடணும்போல இருக்கு

தருமி Says:
March 27th, 2006 at 3:32 pm e
பத்மா,
நான் ஒண்ணும் அவ்வளவு மோசமான ஆள் கிடையாது; எனது ‘கொலைகளை’ இந்த இரண்டு மொழிகளோடு நிச்சயமாக நிறுத்திகொள்வேன். ‘நாக்கு தெலுகு தெலிலேது’; ‘மலயாளம்…?

தருமி Says:
March 27th, 2006 at 3:34 pm e
மணியன்,
நீங்க சொன்னதை ‘உண்மை’யெனப் பாவித்து, சந்தோஷப்பட்டுக்கிறேன் - with your permission

சோம்பேறி பையன் Says:
July 11th, 2006 at 4:51 pm e
// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா?? //

இதை முற்றிலும் வழிமொழிகிறேன்.. வாழ்த்துக்கள் தருமி, தமிழில் கலக்குவது போல் ஆங்கிலத்திலும் கலக்குங்கள் !!!

பொன்ஸ் Says:
July 17th, 2006 at 2:49 pm e
// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில்!!! அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா?? //

நானும் நானும்

தருமி Says:
July 18th, 2006 at 8:51 am e
சோ.பையானாரே,
அட போங்கப்பா…அகில உலகமே சுத்துவாங்களாம். (இஸ்ரேலில் ஆரம்பிச்சாச்சுல்லா… அடுத்து உலகம் சுத்துதறதுக்கு இது ஒரு முன்னோட்டம்தானே?) கேட்டா இங்கிலிபீசு தெரியாதுன்னு சொல்லிக்குவாங்க…
இதுக்குப் பேருதான்..fishing for compliments!

selvanayaki Says:
July 18th, 2006 at 10:07 am e
///நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ////

அந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க! படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) உங்களின் மௌன வாசகர்கள் என்றும் அறிக.

TheKa Says:
July 18th, 2006 at 10:02 pm e
I am listening still but with a difference, right now I am busy fishing and frogging (hehehe… ) along with one of those many Minnesota lake beaches.

Thirumba vandhu kando kirengov…

தருமி Says:
July 18th, 2006 at 10:11 pm e
வாங்க செல்வநாயகி,
உங்கள் எழுத்தைப் பாராட்டி (நெஜம்மான உணர்வோடு..) ஒரு பின்னூட்டம் போட்டதாக -வேறு ஒரு பதிவில் நினைவு. நீங்கள் என் தொடர் வாசகர் அறிவது மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வரணும்.
நன்றி.

கொத்ஸ் Says:
July 18th, 2006 at 10:22 pm e
நடத்துங்க சாமி! வாழ்த்துக்கள்!

sarah Says:
July 18th, 2006 at 11:17 pm e
//அந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க! படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) //

ஆஹா, செல்வநாயகி, என்ன இப்படி படக்னு சொல்லிட்டீங்க?. அப்புறம், நான்?

தருமி சார்! கலக்குங்க!!!

சாரா.

selvanayaki Says:
July 24th, 2006 at 11:45 am e
மகிழ்ச்சியா இருக்கு சாரா, என்னை மாதிரியே (அட….. சோம்பேறியாத்தான்) இன்னொருவர் இருப்பதை அறிந்து

4 comments:

Sivabalan said...

தருமி அய்யா,

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

மலையாளத்துலே எழுதும்போது கண்டிப்பாச் சொல்லணும், ஆமா.:-))))

தருமி said...

சிவபாலன்,
ஏதோ முயற்சி செய்து பாத்துட வேண்டியதுதான்.

தருமி said...

துளசி,
நாக்கு மலையாளம் தெலியலேது!

Post a Comment