Thursday, April 09, 2009

305. கடவுள் என்றொரு மாயை ... 4

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*

கடவுள் என்றொரு மாயை


*


கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION
THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


CHAPTER 2: THE GOD HYPOTHESIS
PART II

*

ஜெபம் / தொழுகை / வேண்டுதல்கள் கேட்கப்படுகின்றனவா? - ஒரு அறிவியல் சோதனை:


முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது Francis Galton. இவர் டார்வினின் (ஒன்றுவிட்ட!?) சகோதரர். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எல்லா கோயில்களிலும் அந்த நாட்டின் அரச குடும்பத்தினருக்காக மக்கள் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது வழக்கம். மற்ற சாதாரண மக்களுக்கு அவர்களின் உற்றார் உறவினர்கள் மட்டுமே வேண்டுவார்கள். அப்படியானால், அரச குடும்பத்தினர் மற்ற சாதாரணர்களை விடவும் திடகாத்திரமானவர்களாக, ஆரோக்கியத்தோடு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அப்படியேதும் இல்லை.

வேறு வேறு நிலங்களில் நின்றுகொண்டு அங்குள்ள பயிர்களுக்காகவும் ஜெபித்தார். ஆனால் அந்தப் பயிர்கள் ஜெபிக்கப்படாத பயிர்களை விடவும் அதிக விளைச்சல் எதுவும் தரவில்லை!


சமீபத்தில் 2006-ம் ஆண்டு ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. "Study of the therapeutic effects of intercessory prayer (STEP) in cardiac bypass patients". American Heart Journal151: 4, 2006, 934 - 42. நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள Templeton Foundation.
விளையாட்டல்ல; இதற்காக செலவிடப்பட்ட காசு: 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!

மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே. (இந்த ரெண்டை வச்சே கடவுள் சரியான நோயாளியைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா என்ன!)வழிபாடு நடத்தியவர்கள் வேறு வேறு தொலைவில் உள்ள மாநிலங்களில் உள்ள நம்பிக்கையாளர்கள்.

நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும். முதலிரண்டு குழுவும் ஜெபத்தின் / தொழுகையின் தாக்கம் குறித்து அறிய. மூன்றாவது குழு ஜெபத்தால் ஏற்படக்கூடிய மன-உடல் பாதிப்புகளைக் கண்டு கொள்ள.

RESUTLS & DISCUSSION !!

மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.

சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் intersting ஆன விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், 'பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ' என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.

கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித சால்ஜாப்புகள் / காரண காரியங்கள் தரப்பட்டன. கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் (Oxofd theologian: Richard Swinburne). Swinburne ஏற்கெனவே ஹிட்லரால் யூதர்கள் கொல்லப்பட்டதுகூட ஒரு விதத்தில் நல்லது என்று சொன்னவர். இவர் மட்டும் இல்லை; வேறு சில மத நம்பிக்கையாளர்களும் இந்த சோதனை முடிந்த பிறகு 'ச்சீ .. சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போன்ற கருத்து முத்துக்களை உதிர்த்தார்கள். ஆனால், ஒரு வேளை இந்தச் சோதனையில் வழிபாடுகளுக்கு வலு உண்டு என்பதுபோன்ற முடிவு கிடைத்திருந்தால், இதே நம்பிக்கையாளர்கள் அவைகளை அப்போது சும்மா விட்டிருந்திருப்பார்களா? (91)

*

புத்தகத்தில் அடுத்த பகுதி: chapter 3: ARGUMENTS FOR GOD'S EXISTENCE
*

25 comments:

வால்பையன் said...

//முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது Francis Galton. இவர் டார்வினின் (ஒன்றுவிட்ட!?) சகோதரர். //

செல்லாது செல்லாதுன்னு நாட்டாமைகிட்ட இருந்து சவுண்ட்(முழுக்க தமிழ் எழுத்துகள் சேர்ந்து ஒரு ஆங்கில வார்த்தை) வரும் பாருங்க!

வால்பையன் said...

//அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே. (இந்த ரெண்டை வச்சே கடவுள் சரியான நோயாளியைக் கண்டுபிடித்துவிட மாட்டாரா என்ன!)//

மாட்டார்ன்னு இந்து மதம் சொல்லுது!
அதுக்கு ராசி லக்கனமில்லாம் வேணுமாம்! அப்ப தான் கரிகிட்டா கண்டுபிடிச்சி காப்பாத்துவாராம்.

வால்பையன் said...

//கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார்//

எனகென்னவோ கடவுளுக்கு காதே கேக்காதுன்னு தோணுது!
ஆளுகொரு மதம், அதில் உட்பிரிவு, ஊருக்கு ஒரு நியாயம்.
இதில் எந்த நியாயம் கடவுளோட நியாயம்!

அவனவன் ஆளாளாக்கு ஒண்ணொண்ணு சொல்லுவான்!

வோட்டாண்டி said...

ஏதோ ஒரு புத்தகதுல்ல கூட்டு வழிபாடுக்கு கடைசி பக்கத்துல்ல வாரம் வாரம் அழைப்பு வரும்..விகடன்னு நெனைக்கிறேன்.. அப்ப எனக்கு 12 வயசு இருக்கலாம்.. அப்பவே எனக்கு இவை பைத்தியகாரதனமாக பட்டன... அனால் அன்றிருந்த நிலைமையில் என் உறவினர் ஒருவருக்கு உடல் நிலை குன்றி இருந்தால் கூட்டு வழிபாடுகாக விண்ணப்பிக்க சொல்லி என் பெற்றோர் இடத்தில் கேட்டு இருப்பேன்..
இறை நம்பிக்கையாளர்கள் சிலருக்கே கூட்டு வழிபாடு, கூட்டு ஜெபம், போன்றவையில் நம்பிக்கை கெடயாது..
சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த பத்திரிக்கைக்கு பகுத்தறிவு வந்தது.. எனக்கு எப்ப வந்தது என்று நினைவில்லை..ஆனால் பலருக்கு இன்னும் வரவில்லை

தருமி said...

doctor,
//I really dont understand why you should drag in such controversies//

it is not 'i'; it is the Templeton Foundation which is an out and out christian foundation which actually wanted to establish the effectivenss or success of prayer which bombed in this experiment!

as you say, prayer and faith in pryer may be a personal affair. but..so what? this is what dawkins in the very first chapter talks about. religious matters need not be 'holy cows', above all scrutiny.
they, rather anything, can be questioned.

அதிமுகவுகு ஓட்டு போடப்போறேன்னு நீங்க சொன்னா, வேணாங்க; அது தப்புன்னு நான் என் கட்சியைச் சொல்வேனே அதுமாதிரி தான் இதுவும்.

//somehow your articles disturb me a lot.//

can i help it?
at the most i can add a டிஸ்கி: இதை ஆழமான மத நம்பிக்கையாளர்கள் வாசிக்க வேண்டாம்.

இப்ப பாருங்க ஒருத்தரு எழுதுற சினிமா விமர்சனத்தை வாசிக்கிறதில்லையென நான் முடிவு பண்ணியிருக்கேன்ல .. அது மாதிரி!

தருமி said...

//நாட்டாமைகிட்ட இருந்து ..//

யாருன்னு தெரியலையே, வால்ஸ். தனிமடலில் சொல்லிடுங்க .. சஸ்பென்ஸ் தாங்கலை.....

தருமி said...

doctor,
முடிஞ்சா, என் இரண்டாம் கட்டுரையில் prayer vs predeterminism of almighty என்பதுபற்றி எழுதியதை வாசித்துப்பாருங்களேன். நியாயமா இருக்கா இல்லையான்னு பாருங்களேன். ஒரு சின்ன முயற்சிதானே!

தருமி said...

doctor,
முடிஞ்சா, என் இரண்டாம் கட்டுரையில் prayer vs predeterminism of almighty என்பதுபற்றி எழுதியதை வாசித்துப்பாருங்களேன். நியாயமா இருக்கா இல்லையான்னு பாருங்களேன். ஒரு சின்ன முயற்சிதானே!

தருமி said...

வால்ஸ்,
//அதுக்கு ராசி லக்கனமில்லாம் வேணுமாம்..//

அட! கிரஹச்சாரமே .. !

//இதில் எந்த நியாயம் கடவுளோட நியாயம்//

அதில்லை வால்ஸ். எந்த கடவுளோட நியாயம் நியாயமான நியாயம்? அப்டின்றதுதான் சரி. அத்தனை போட்டில்லா இருக்கு சாமிக மத்தியில...

தருமி said...

வோட்ஸ்,

அது குமுதம்னு நினைக்கிறேன். இப்பவும் வர்ரதில்லையா? எனக்குத்தெரியாது. சலூனுக்குப் போறதை நிப்பாட்டியதுக்குப் பிறகு அதைத் 'தொட்டதில்லை'.

தருமி said...

வோட்ஸ்,

அது குமுதம்னு நினைக்கிறேன். இப்பவும் வர்ரதில்லையா? எனக்குத்தெரியாது. சலூனுக்குப் போறதை நிப்பாட்டியதுக்குப் பிறகு அதைத் 'தொட்டதில்லை'.

தருமி said...

doctor,

மதநம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தக் கூடாது; (ஏனெனில் அது தனிமனித நம்பிக்கை.. personal/independent affair) என்று சொல்வதே மிகவும் ஆபத்தானது. ஒசாமாவுக்கு இருப்பதும் மத நம்பிக்கைதான்.அதை தீவிரவாதம் என்று சொல்வீர்களாயின், மிதவாதங்களே தீவிரவாதங்களுக்கு வழி கோலுகின்றன --- இதை நான் சொல்லவில்லை; டாக்கின்ஸ்தான் சொல்லுகிறார். (பக்:345-346)

தருமி said...

doctor,
//கடவுளை நம்புகிறவர்களுக்கு அதனால் மன நிம்மதி கிடைக்கலாம், கிடைத்திருக்கலாம்..ஒரு சிலர் கடவுள் நம்பிக்கை இருப்பதால் தவறு செய்ய கூட பயப்படுவார்கள்...... இது மாதிரி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது..//

நூத்துக்கு நூறு நீங்க சொல்றதை அப்படியே ஒத்துக்கிறேன்.

அதனாலதான் என் மதங்கள் பற்றிய பதிவில் முடிவுரையாக இரண்டு பாய்ண்டுகள் --1. Policing the society? 2. Psychotherapy? -- சொல்லியுள்ளேன். கொஞ்சம் எட்டிப்பார்த்து விடுங்களேன்... ப்ளீஸ்!

ஆனாலும் அதுக்காக இப்படியெல்லாம் -- நீங்க மெத்த படிச்சவங்க.. -- கேலி பண்ணக்கூடாதுங்க ..

கல்வெட்டு said...

வழிபாடுகள் நிச்சயம் பஞ்சரான டயரை ஒட்டவைக்காது.

Pope blesses holy oils to be sent to earthquake zone
http://www.necn.com/Boston/NECN-Extra/2009/04/09/Pope-blesses-holy-oils-to-be/1239288084.html

இந்த ஹோலி ஆயில் என்ன செய்யும்?

இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால், நாங்களும் உனது துக்கத்தில் பங்கு கொள்கிறோம், உனது வலியின் போது அருகில் இருக்கிறோம், தோள் கொடுக்கிறோம் உனக்கு என்ற சதாரணமான மனிதப்பண்புதான்.மதம், கடவுள் என்ற குறிப்பிட பேக்கஜின் வழியாக இந்தப் பண்புகள் பரிமாறப்படும்போது அது வெறும் சடங்காக மாறிவிடுகிறது.மதம் / கடவுள் வகையறாக்களின் பிரச்சனையே அதுதான்.

மனிதத்தை எந்த சட்டங்களும் சடங்குகளும் இல்லாமல் அப்படியே வெளிப்படுத்திக் கொள்ள என்ன பயம்?

காணத கடவுளிடம் போய் முறையிடுவதிவிட நேரடியாக பாதிப்பில் உள்ளவனுக்கு......

"டேய் மாப்பி , ரொம்ப அலட்டிக்காத. நான் இருக்கேன். என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன். பயப்பிடாத மக்கா. ஐ லவ் யூ. சீக்கிரம் எல்லாம் சரியாயிரும். நீ சரியாயி வர்ற வரைக்கும் மல்லிகா உன்கூடவே இருக்கடும். பிள்ளைகள சாந்தி பார்த்துக்குவா. அப்பா அம்மாவை பத்தி டோண்ட் ஒர்ரி. நம்ம ஓட்டவாய் தாமஸ் இருக்கானில்ல , அவங்க வீட்டுல இருந்து வந்து கூட்டிடுப் போறதா சொல்லிட்டாண்டா. அவன் சம்சாரம் மேரி பெரியவங்கள நல்லா பாத்துக்குவா...." என்று பேசிப் பாருங்கள்.... இன்றைய தேவை இதுதான்.

இது முடியாத அதாவது நிஜமான எந்த உதவியும் செய்ய இயலாத கையாலகாத பண்புதான், ஹோலி ஆயில்/கூட்டு பிராத்தனை என்று மனிதத்தை வெற்றுச் சடங்காக்குகிறது.

Thekkikattan|தெகா said...

ம்ம்... தருமி, இந்த chapterல் கொஞ்சம் நமக்கும் பேசுவதற்கு இடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது, ப்ரேயர் - தியானம் என்று கொள்ள முடியுமா?

அப்படியாக கொள்ளமுடிகின்ற பட்சத்தில் நேர்மறையான எண்ணங்கள் ஒரு மனிதனின் நோய் குணப்படுத்தளில் குறிப்பிட்ட அளவு உதவுவதாக இருக்க அனேக வாய்ப்புகள் உள்ளது.

கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு "டைம்ஸ்" வார இதழில் இது தொடர்பாக ஒரு ஆர்டிகில் படிக்க நேர்ந்தது.அது திபெத் மாங்க்களின் மீது நடத்தப் பட்டு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. அதாகப் பட்டது, எப்படி மனதின் சக்தி குவிக்கப்படும் பொழுது ஆழ்ந்த குளிரையும் தாங்கிக் கொள்ளும் சக்தி கைவரப் பெறுகிறது, அப்படிங்கிற கோணத்திலிருந்து - வலி தாங்கும் சக்தி வரைக்கும் அவர்களின் மீது அந்த ஆராய்ச்சியின் பொருட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதாக.

அதற்காக நான் இது போன்ற இந்த சாமிய 'கண்டிஷன் பேரில்'(அதாவது குணமாகிட்டா மொட்ட போட்டுக்கிறேன் - டீல்) கும்பிட்டா இந்த நோயுக்கு உடனடி நிவாரணம் அப்படிங்கிற அளவில எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா, தனிப்பட்ட நபரின் "நேர்மறை எண்ணங்கள்" (positive thoughts) கண்டிப்பாக ஒருவரின் உடல் நல ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதனை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று எண்ணுகிறேன்.

ஆனா, இது போன்ற குரூப் ப்ரேயர்ஸ் எல்லாம் எந்த அளவிற்கு அந்த தனிப்பட்ட நபர் எடுத்துக் கொள்கிறார் என்பதனை பொருட்டே உள்ளது... நீங்க குறிப்பிட்ட ஆராய்ச்சியின் பொருட்டு அத் தனிநபர் எதிர்மறையாக எடுத்துக் கொள்வதற்கும் சாத்தியக் கூறுகள் உண்டு அவ் நிலையில், ஒன்றும் பயனில்லை எனலாம்.

இங்கே பாருங்க ஒரு அடிதடி... Questioning Healing Prayer

கோவி.கண்ணன் said...

வேண்டுதல்களால் பூசாரிகளுக்கு ஐ மீன் கடவுள் முகவர்களுக்கு பலன் உண்டு !
:)

கோவி.கண்ணன் said...

//இவர் மட்டும் இல்லை; வேறு சில மத நம்பிக்கையாளர்களும் இந்த சோதனை முடிந்த பிறகு 'ச்சீ .. சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பது போன்ற கருத்து முத்துக்களை உதிர்த்தார்கள். ஆனால், ஒரு வேளை இந்தச் சோதனையில் வழிபாடுகளுக்கு வலு உண்டு என்பதுபோன்ற முடிவு கிடைத்திருந்தால், இதே நம்பிக்கையாளர்கள் அவைகளை அப்போது சும்மா விட்டிருந்திருப்பார்களா? //

கடவுளையே சோதித்தால் பலிக்குமா ?
இப்படித்தான் சொல்லி சமாளிப்பபங்க !
:)

Unknown said...

OK dharumi or whatever you call yourself..

Have the guts to publish this comment

Now My research shows..

All atheists .. I mean all of them .. are affected by GOD delusion..

I.e They pray and ask something desperately of GOD and if GOD refuses that "korikai" they become haters of god

SO dharumi Sir here is the challenge..Show me one normal human being.. By normal I mean... Born of normal parents.. no Father/Mother divorce and remarry..no step mother..NO step father..NO child abuse... No personal loss.. No SON?girl dying in accident etc..plain normal guys who are atheists and I will say there is no GOD.. Show me please.. ALL atheists have lost something and they are turning their anger towards GOD....so a personal question.. are you normal? OR have you suffered a huge loss in life sir ?? Forgive me for asking

Peter

கல்வெட்டு said...

//I.e They pray and ask something desperately of GOD and if GOD refuses that "korikai" they become haters of god//

//o a personal question.. are you normal? OR have you suffered a huge loss in life sir ??//


ஆகா...ஆகா...ஆகா..கடவுளை நம்புபவர்களில் பெரும்பான்மையானவர்கள் , அவர்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதற்கான உண்மையான காரணத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள். மேலே உள்ளவர் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். பகிங்கரமாக பொதுஇடத்தில் இப்படி ஒத்துக்கொள்ள துணிச்சல் வேண்டும்.


ஒருவர் நாத்திகராவதற்கு இவர் சொல்பவைகளே காரணம் என்றால், அவைகள் நடக்காமல் இருக்கும்வரையே இவரும் ஆத்திகராக இருப்பார்.


so....... இவருக்கு...

1) இதுவரை கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
2)இவர் குடும்பத்தில் எல்லோரும் சாகாவரம் பெற்றுள்ளார்கள்.

இவைகளில் ஏதாவது ஒன்று மாறும் பட்சத்தில் இவரும் நாத்திகராகிவிடுவார்.

என்ன கொடுமை இது?

Thekkikattan|தெகா said...

//so a personal question.. are you normal? OR have you suffered a huge loss in life sir ?? //

இந்தக் கேள்விய கேக்க, இவரு எவ்வளவு படிச்சிருப்பாரு(அடடடா, இந்த பேப்பர் டிகிரி இல்லையப்பா...) எத்தனை வருஷத்து உழைப்பில, சிந்திச்சு, மூளைய பாராண்டி இது போன்ற ஒரு அறிய லாஜிக்கல் தீர்வை நம் முன்னே வைச்சிருப்பார்... :-))

ஒரு மனுஷன் தன் திருவாய் மலர்வது வரையும்தான் அவருக்குள் என்ன இருக்கிறதோ என்று யோசிக்க வேண்டும், பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து கேக்க உட்கார்ந்தால் இது போன்ற முத்துக்களை உதிர்த்துச் செல்வதனை காணலாம் போலவே...!

தருமி இதற்கு ஒரு வாய்ப்பா அமையுதே உங்க பக்கம் அதுக்கே கோடி கும்பிடு :-)

கல்வெட்டு ===>1) இதுவரை கேட்டதெல்லாம் கிடைக்கிறது.
2)இவர் குடும்பத்தில் எல்லோரும் சாகாவரம் பெற்றுள்ளார்கள். ... எல்லாம் business deal thaaan ;-)

வால்பையன் said...

//கடவுள் மீது பலர் வைத்திருக்கும் நம்பிக்கயை கிண்டல் பண்ணும் போதுதான் மனதுக்கு என்னவோ செய்கிறது. அவங்க அவங்க இஷ்டம்.//

ரஜிச்னியை கிண்டல் செய்தால் சிலருக்கு கோபம் வருமே! அது மாதிரி தான!

தருமி said...

doctor,

//கடவுள் மீது பலர் வைத்திருக்கும் நம்பிக்கயை கிண்டல் பண்ணும் போதுதான் மனதுக்கு என்னவோ செய்கிறது.//

இது நிச்சய்மாக மறுக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகக் கருதுகிறேன். இது முழுக்க முழுக்க சீரியசாக எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள். எனக்குப் புரியவில்லை எதெது உங்களையோ, இன்னொரு நண்பரும் சொல்லியிருந்தார்; அவரையோ பாதித்தன என்று.

நிச்சயமாக இதில் கிண்டல் ஏதுமில்லை. (உங்கள்) பரவலாக மக்களின் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டாலே அதைக் கிண்டல் என்பதா?மிகவும் ஆழமான கேள்விகளும். நல்ல விடைகளும் இந்தப் புத்தகத்தில் நான் கண்டதாலேயே இதை இங்கும் பதிய முடிவெடுத்தேன்.

தருமி said...

tsunami aka peter

i fully endorse what கல்வெட்டு has said since he knows me personally very well.

better you start redoing your 'research' all over again with better parameters and draw proper conclusions of your results.

good luck.

srinivasan Nattarasan said...

God's faith is an illusion! dharumi is right

தருமி said...

அப்படி வாங்க வழிக்கு ………..

Post a Comment