அம்மாடி, போதுண்டாப்பா சாமி. புது வீடு கட்டினால், வேறு வீட்டில் தங்கிக்கொண்டே கட்டிக்கொள்ளலாம். இருக்கும் வீட்டையே மராமத்து பார்க்கிறதோ, புதுசா ஏதாவது சேர்க்கிறதோ இருக்கிறதே... அனுபவிச்சாதான் தெரியும். அகதிகள் கெட்டார்கள், போங்கள்.
உடைச்சிப்போட்ட சுவர்கள், தோண்டிப் போட்ட தரைகள், குவிச்சு வச்ச குப்பைகள், புதிதாக வெட்டிப் போட்ட பள்ளங்கள்... musical chair விளையாட்டு மாதிரி சாமான் செட்டுகளோடு இந்த அறையிலிருந்து அந்த அறைக்கும், அந்ததிலிருந்து அடுத்ததற்கும் நாளொரு அறையும், பொழுதொரு இடமுமாக மாறி மாறி... தூசி படக்கூடாதுன்னு நீங்க நினைக்கிற உங்க கம்ப்யூட்டர், இன்னும் மற்ற சாமான்களை மூடிப் பாதுகாத்து... இது போதாதுங்கிறது மாதிரி, சூடம் அடிக்காத குறையா நாளைக்கு இந்த வேலையென்று உங்கள் காண்டிராக்டர் / கொத்தனார் / பெயிண்டர் சொல்லிச் சென்றதை நம்பி நீங்களும் எதையாவது எங்காவது மாற்றி விட்டு, வெளி வேலைக்கும் மாற்று சொல்லிவிட்டு பாவம்போல உட்கார்ந்திருப்பீர்கள் - உறுமீனுக்குக் காத்திருக்கும் கொக்கு மாதிரி... அதெல்லாம் உங்கள் தலையில் அவர்கள் வைத்த வெண்ணைய் என்று தெரியாமல். அடுத்த நாள் வந்து அவர்கள் கொடுக்கும் சால்ஜாப்புகள் உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். கத்தினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு ஆயிடுமோங்கிற பயத்தில் நீங்கள் மவுனமாக ஆனால் உணர்ச்சிபூர்வமாக அவர்களது விளக்கங்களோடு - ஜோதியில் கலப்பதுமாதிரி -கலந்தேயாக வேண்டும்.
சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்ற முன்யோசனையோடு, அல்லது இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று புத்திசாலித்தனமாக முடிவெடுக்காமல், அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு வீட்டைப் புனருத்தாரணம் பண்றேன்னு முடிவு பண்ணி இந்த சிக்கலில் மாட்டிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம்; அதுவும் மனைவி சொல்லே மந்திரம்னு (என்னை மாதிரி ) நினைச்சு இந்த மாயவலையில் சிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம். அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எதிர்கொண்டு, இருக்கும் கொஞ்ச தலைமுடியையும் பிச்சுக்கிட்டு, பல்லைக்கடிச்சுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கும்போது 'நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் தேவையான்னு' அப்டீன்னு ஒரு அசரிரீ கேட்கும்; உங்களை இந்த சிக்கலில் சிக்க வைத்த அந்த ஆத்மாதான் அதைச் சொல்லியிருக்கும். இதிலும், உங்க மனைவி சொல்லி இதில் இறங்கியிருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாவம் நீங்கள்.. உங்கள் அகதி வாழ்க்கை ரொம்பவே கஷ்டம்தான். இப்போ பழிபூராவையும் நீங்கள்தான் தாங்கிக்கொள்ளவேண்டும். Day in and day out 'வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்; நான் சொன்னா கேட்டாதானே' என்ற பல்லவி காதில் விழுந்துகொண்டேயிருக்கும். ரொம்ப புத்திசாலித்தனமாக ஏற்கெனவே அவர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் quote பண்ணி, உன்னால்தானே எல்லாம் என்று சொன்னீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; தொலைந்தீர்கள். 'நான் சொன்னதே வேறு; நீங்கள்தான் ரொம்ப மேதாவிமாதிரி நினைச்சு தப்புக்கு மேல் தப்பாகச் செய்துவிட்டீர்கள்' என்று புதுப்புது கணைகள் பாயும்; வேறு வேறு தண்டனைகள் வரும். இந்தக் குப்பைக்குள் போய் சமையல் எல்லாம் செய்யமுடியாது என்பது சர்வ நிச்சயமான முதல் விஷயமாயிருக்கும். இப்போது உங்களுக்கு புது வேலை ஒன்று வந்துவிட்டது - வேளாவேளைக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தாகவேண்டும். வேலை நடக்கும் நாளெல்லாம் புதுப்புது ஹோட்டல் தேடியாகவேண்டும்.
இதில் எனக்கென்று இன்னொரு கஷ்டம் என்னவென்றால் - புதிதாக ஒரு blog தொடங்கி, ஏறக்குறைய புது மாப்பிள்ளை ஜோரில் சில நாட்களுக்கு ஒரு பதிவாகப் பதிந்து, மயிலிறகை புத்தகத்தில் வைத்துவிட்டு குட்டி போட்டுவிட்டதா என்று தினம் தினம் பார்க்கும் குழந்தைபோல, பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று தினம் தினம் பார்த்து ஏமாந்து, கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, blog browsing ஒரு addictionஆக ஆகிவிட்ட நிலையில், இந்த வீட்டு வேலையால் திடீரென்று நிறுத்தியதால் ஏற்பட்ட withdrawal syndrome-ஆல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரிரு தடவை browsisng centre போய் மெயில் பார்த்து, பின் வழக்கம்போல் பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று பார்த்து, வழக்கம்போல் ஏமாந்து, வழக்கம்போல் கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, வழக்கம்போல் எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, சரி..சரி இனி நல்ல நல்ல விஷயங்களைப் பற்றி எழுதி பொறி கலக்கிடணும்னு மனசில ஒரு வைராக்கியத்தை வச்சுக்கிட்டு, மூடிவச்சிருந்த கம்ப்யூட்டரைக் கட்டவிழ்த்து..........

