Tuesday, June 21, 2005

19. மன்னிக்கணும்..மன்னிக்கணும்..

மன்னிக்கணும்..மன்னிக்கணும்..பல பேர் என் வலைக்குவந்து புதிய பதிவுகள் இல்லாம
ஏமாந்து திரும்பியதாக தகவல். (லஷ்மி/ அவ்வை..இது எப்படி?) மன்னிக்கணும்..மன்னிக்கணும்.

இதுக்குத்தாங்க, என்னைமாதிரி கம்ப்யூட்டர் கத்துக்குட்டிகளுக்காகவே ஒரு correspondence course நடத்திட்டு அதுக்குப்பிறகுதான் வலையில் சேரணும்னு - முடிஞ்சா ஒரு entrance exam வச்சு, அதுக்குபிறகு அதை cancel பண்ணிட்டு, ஒரு/பல சாரள முறையில் நேர்காணல் வைத்து... - முடிவு பண்ணனும். ஏன்னா இப்ப பாருங்க, எங்க ஊரை விட்டு சென்னைமாநகரம் வந்தேன் (ஐயோடா, தருமி பற்றி கொஞ்சம் சொல்லித்தொலைச்சிட்டேனே..) . மகள் வீட்டுக்கு (மறுபடியும், தப்பா வயசு சொல்லிட்டேனே, போகுது போங்க) கம்ப்யூட்டரில் எனக்குத் தெரிந்தவரை முட்டி மோதி நானும் என்னென்னவோ பண்ணிப்பார்த்தேன். ஹு..ஹும்..என் பாச்சா பலிக்கலை. சரி, ஆபத்பாந்தவா அப்டின்னு திரு. பத்ரிக்கு ஒரு மெயில் அடித்து, அவர் செல் எண் வாங்கி, காரில் போய்க்கொண்டருந்தவரைப் பிடித்து, ஒரு tinkle கொடுத்தேன். சும்மா சொல்லக்கூடாது...ஒவ்வொன்றாக சொன்னார். நல்ல பொறுமை. எனக்கே புரியும்படி சொல்லிக்கொடுத்தார்னா பார்த்துக்கங்களேன். (மறுபடியும், மிக்க நன்றி பத்ரி).

ஆனாலும், மீண்டும் XP-க்காகக் காத்திருந்து...இப்போதான் ஒருவழியா மறுபடியும் என் வலைக்குள் மீண்டும் நுழைகிறேன். ( அது யாரு அங்கே, 'கஷ்டம்டா, சாமி'ன்னு'
சொல்றது? இதான வேண்டாங்றது.)

பி.கு. இந்த இடைப்பட்ட வேளையில் ஒரு வாரத்திற்கு முன்பு எப்படியோ தட்டுத் தடுமாறி 'விருந்தினர் வரவு எண்ணிக்கையை' உள்ளே சேர்த்துவிட்டேன். அப்படியே ஒரு கடிகாரத்தையும் சேர்க்க முற்சித்தேன். இதுவரை முடியவில்லை. பார்ப்போம்..

Sunday, June 05, 2005

18. யாருக்கு வேண்டும் இப்படி ஒரு சி.பி.ஐ.?

போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் விடுவிப்பு; சரியான ஆதாரங்கள் சி.பி.ஐ. தரவில்லை; இந்த வழக்கிற்கான செலவு 250 கோடி அல்ல, பத்து கோடிதான்; - சென்ற வாரத்தில் அடுத்தடுத்த பத்திரிகைச் செய்திகள்.

இது ஒன்றும் புதிது அல்ல. சி.பி.ஐ. தொடுத்த வழக்குகள், அதுவும் சிறப்பாக பெரிய அரசியல் புள்ளிகள் தொடர்புள்ள வழக்குகள் ஏதும் வெற்றி பெற்றதாகவே தெரியவில்லை. Accountability (சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை; உதவவும் ) என்று எதுவும் சி.பி.ஐ.-க்கு கிடையாதா?
அந்த அமைப்பிற்காகச் செலவிடப்படும் பொதுப்பணம் எல்லாம் வீண் என்றால் எதற்கு அந்த அமைப்பு?
அங்கு பெரிய பொறுப்பில் வேலை பார்க்கும் பெரிய மனிதர்களுக்கு சுய கெளரவமே இருக்காதா?
எதிர் கட்சிக்காரங்களை அவ்வப்பொழுது பயமுறுத்துவதற்கு மட்டுமே இந்த அமைப்பா?

Saturday, June 04, 2005

17. சில பம்மாத்து வரிகள்

சில பம்மாத்து வரிகள்: உண்மைகள் அடைப்புக் குறிகளுக்குள்.

நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன். (நான் எப்பவுமே கெட்டவன்தான்.)

எனக்கு என் மனசாட்சிதான் முக்கியம். (நான் என் இஷ்டப்படிதான் ந்டப்பேன்.)

நான் நினைச்சா சாதிச்சிடுவேன். (ஆனா நினைக்கவே மாட்டேன்.)

பொய் சொல்றது மட்டும் எனக்குப் பிடிக்காது. (இந்த பொய்யைத் தவிர.)

செய்யும் தொழிலே தெய்வம். ( இது எனக்கல்ல; எனக்கு கீழே உள்ளவன் எல்லாம் அதே தொழிலையே - அது எவ்வளவு மோசமான அல்லது இழிவான தொழிலாக இருந்தாலும் - செய்து வர வேண்டும். அவன் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக என் புத்திசாலி முன்னோர்கள் சொன்னது.)

Friday, June 03, 2005

16. தலித் - உள்ளிருந்து சில முயற்சிகள்

THE HINDU Monday, MAY 2, 2005 pp11

DALITS all over the world have something to rejoice about. Durban was not in vain. On April 19, 2005, the U.N. Commission on Human Rights adopted a Resolution to appoint two Special Rapporteurs to tackle caste-based discrimination.

--------------------------------------------------------

பள்ளத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட வெளியிலிருந்து தூக்கிப்போடும் கயிறு போல இது. தேவைதான். அதைவிடவும் உள்ளிருந்து சில முயற்சிகள் அவசரமாகத் தேவை.

1. சில தொழில்களுக்கு என்று சிலரை ஒதுக்கிவைத்து, அதை சாதியாக்கி...கீழிறக்கி, தாழ்த்தி 'வர்ண'மயமாக்கியாயிற்று. இது நடந்துபோனது. இனி நடக்கவேண்டியது - இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். பரம்பரையாகச் செய்துவரும் தொழில்களை விட்டேயாகவேண்டும். சில தொழில்களை கலை என்ற பெயர் சூட்டி (தப்பாட்டம்,பறையாட்டம்) தலையில் கட்டியுள்ளார்கள்; இன்னும் சிலவற்றை இவர்கள்தான்செய்யவேண்டும் என்று 'பட்டயம்' கட்டியுள்ளார்கள்.

யாருக்கும் யார் வேண்டுமென்றாலும் சவக்குழி வெட்டமுடியும்.
சங்கு யார் ஊதினாலும் சத்தம் வரும். வேண்டுமென்பவர்கள் ஊதிக்கொள்ளட்டுமே.

2. மேலேவந்து விட்டவர்கள் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு நான்கு பேரை கைதூக்கி விடவேண்டும். ப்ண உதவியைச்சொல்லவில்லை; விழிப்புணர்வைத்தர வேண்டும் - தங்கள் உரிமைகளையும், அரசு தரும் சலுகைகளைப் பற்றியும்கூட தெரியாமல் இருக்கும் தலித்துகள் அநேகம்.

3. லாப நோக்கிலாக இருந்தாலும் பரவாயில்லை; வசதியுள்ளவர்கள் கல்வி நிறுவனங்கள் துவங்க வேண்டும்.

4.எந்த அரசியல் தலைவனையோ கட்சியையோ நம்பக்கூடாது.


இவையெல்லாம் நடக்குமா...? ஒரு சமூகத்தலைவன் தோன்றுவானா?

Thursday, June 02, 2005

15. கள்ள ஓட்டு போடுறாங்கப்பா...

(பொது. 7) கள்ள ஓட்டு போடுறாங்கப்பா...


இது கொஞ்சம் கூட நல்லா இல்லீங்க..தப்பு தப்பா கள்ள ஓட்டுதான் போட்டிருக்கணும். பின்னே எப்படி நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்தான் கிடைக்கும். உலக அழகிகள் 50 பேரில் முதல் இடம் ஏஞ்சலினா ஜோலி-க்காம். அந்த 'அம்மா' நல்லாதான் இருப்பாங்க..செக்சியான உதடுதான்...இல்லைன்னு சொல்லலை... ஆனா, அவங்களுக்கு முதலிடமும், நம்ம ஐஷுவுக்கு 9-வது இடம்னா அது சரி இல்லீங்க. ஏதோ கள்ள ஓட்டு சமாசாரம்தான்!


இப்படிதாங்க, நானும் ஏண்டா நம்ம பதிவுகளுக்கு ஓட்டே விழுகமாட்டேங்குதுன்னு யோசிச்சேன்.. இப்பதான் புரியுது சமாசாரம்! ஓட்டுன்னு வந்துட்டாலே இப்படிதான் எல்லாமே கும்மிடிப்பூண்டியாயிடுது.


எப்பதான் இந்த மாதிரி 'நல்ல' பதிவுகளுக்கு மக்கள் ஒழுங்கா ஓட்டு போடுவாங்க...?