Friday, July 22, 2011

513. இஸ்லாமும் பெண்களும் ... 3 / WHY I AM NOT A MUSLIM

*

ஏனைய முந்திய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
பதிவு - 9
பதிவு - 10
பதிவு - 11
பதிவு - 12
பதிவு - 13
பதிவு - 14
பதிவு - 15
பதிவு - 16

பதிவு - 17
பதிவு - 18

............. இப்பதிவு: 19

Image and video hosting by TinyPic

CHAPTER  14


WOMEN AND ISLAM - 3
பாகிஸ்தானில் பெண்களின் நிலை:
தமிழில் எதற்கு ... இதை மட்டும் ஆங்கிலத்திலேயே தந்து விடுகிறேன்:
I tell you, this country is being sodomized by religion. ........ a Pakistani businessman, ex-air force officer


இன்று பாகிஸ்தானில் பெண்களுக்கான மரியாதை முற்றிலும் இல்லை. அவர்களுக்கெதிரான குற்றங்கள் பலுகிப் பெருகுகின்றன. எங்களை ‘இஸ்லாமிய மயமாக்கியுள்ளார்கள் (islamized).’ ஆனால் ஏற்கெனவே இஸ்லாமியராக இருக்கும் எங்களை மீண்டும் எப்படி இஸ்லாமிய மயமாக்குவது? ஜியா (Zia) முல்லாக்களுக்கு அதிகாரம் கொடுத்த பிறகு, அவர்களுக்கெல்லாம் எந்தப் பெண்ணையும் கிழித்து எறியும் அதிகாரம் இருப்பதாக எண்ணுகிறார்கள்.    ..........Mrs, Farkander Iqbal, D.S.P., Lahore, Pakistan


பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது ஜின்னா சமயவாதியல்ல. ஒரு வேளை இப்போது அவர் உயிரோடு இருந்தால் பாகிஸ்தானில்  ஒரு தெரு முக்கில் கசையடி வாங்கிக் கொண்டிருப்பார்! இங்கிலாந்தில் இருந்த போது அவர் விஸ்கியும், பன்றிக் கறியும் சாப்பிட்டுப் பழகினார். 

அவரது சுதந்திர நாள் பேச்சு::

உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது; எந்தக் கோவிலுக்கும் போகவும், எந்த மசூதிக்குப் போகவும், மற்றும் எந்த கடவுளை வழிபடவும்  உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது.  ... நீங்கள் எந்த சமயத்திலோ, ஜாதியிலோ, இனத்திலோ இருக்கலாம். இதற்கும் பாகிஸ்தானின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ... நாமனைவரும் இந்த நாட்டின் சம நிலை குடிமக்களாகிறோம். ... நமக்கு முன்னால் ஒரே ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். இதனால் நாளடைவில் நாம் இந்துக்கள் இந்துக்களாக இல்லாமலும், இஸ்லாமியர் இஸ்லாமியராக இல்லாமலும் இந்த நாட்டின் பொதுக் குடிமக்களாவோம்.  நான் இதை சமய நோக்கோடு சொல்லவில்லை; ஏனெனில், சமய  உணர்வுகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.”

(இதைக் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. ஜின்னாவின் கனவு நனவாகாமலேயே  கலைந்து விட்டதே !) 


1947 ஜூலையில் ஒரு நிருபர் பாகிஸ்தான்  சமயச்சார்புள்ள நாடாக இருக்குமா என்று கேட்க, ஜின்னா, ‘என்ன முட்டாள்தனமான கேள்வி; சமயச் சார்புள்ள நாடு என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது’, என்றார். 


எம்.ஜே. அக்பர்:   பாகிஸ்தான் இஸ்லாமிய மக்களால் நிறுவப்படவில்லை. முல்லாக்களும், பெரும் நிலச்சுவான்தாரர்களும் இணைந்து உருவாக்கியது பாகிஸ்தான். முல்லாக்கள்  தங்கள் ஆளுகையை நிலச்சுவான்தாரர்கள் உருவாக்கிக் கொள்ளவும். நிலச்சுவான்தாரர்கள் முல்லாக்கள் ஒரு இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை மாற்றிக் கொள்ளவும் வழி வகுத்ததே பாகிஸ்தானும் பங்களா தேசமும் உருவாகக் காரணமாயிருந்தன. 


1948ல் ஜின்னா மரணமடைந்ததும்  லியாகத் அலிகான் பொறுப்பெடுத்ததும் மதச் சார்பற்ற அரசியல் சட்டம் கொண்டு வர முனைந்தார். முல்லாக்கள் கோபத்தில் நுரை தள்ளி நிற்க, அச்சட்டம் தூக்கி எறியப்பட்டது. 1951-ல் லியாகத் சுட்டுக் கொல்லப்பட்டார். முல்லாக்களின் கூலிப்படையினரே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. 


1971-ல் வந்த பூட்டோ சமயச் சார்பில்லாதவர். ஆனாலும் அவரும் மக்களாட்சியை வெறுத்தவர். அவரும் முல்லாக்களுக்கு வளைந்து கொடுத்தார். 1977ல் ஜெனரல் ஜியா ராணுவப் புரட்சியால் பதவிக்கு வந்தார்.முல்லாக்களின் பேச்சைக் கேட்கும் ஜியாவினால் முழுமையான இஸ்லாமிய ஆட்சி வந்தது.(322)


முழுவதுமாக ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்த ஜியா துப்பாக்கி முனையில் ராமதான் நோம்பை எல்லோரும் கடைப்பிடிக்க வைத்தார். பெண்கள் எந்தவித விளையாட்டுகளிலும் பங்கெடுக்கத் தடை வந்தது. இஸ்லாமிற்கும் குடியரசிற்கும் எந்த வித  தொடர்பும் இல்லையென வெளிப்படையாகத் தெரிவித்தார். பெண்களுக்கெதிரான சட்டங்கள் உருவெடுத்தன. அதில் இரு முக்கிய சட்டங்கள்: ஜினா, ஹுதுத்.  


(ஹுதுத் சட்டங்கள் பற்றிய குறிப்பு முன் பதிவில் உள்ளது). ஜினா என்பது கள்ள உறவுகள், கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கெதிரான சட்டம். கல்லெறிதல், கசையடி போன்ற இஸ்லாமியச் சட்டங்கள் வந்தன. 


இச்சட்டங்கள் கற்பழிப்பில் கற்பழித்தவனை விடவும் கெடுக்கப்பட்ட பெண்ணே
அதிகம் சிரமப்படுவதாக ஆனது. ஏனெனில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் மீது கள்ள உறவு, திருட்டுக் காமம் போன்ற குற்றங்களும் சாட்டப்படும். ஆண்களின் சாட்சியமே எடுக்கப்படும்.(323)

பாகிஸ்தானின் மனித உரிமைக் கமிஷன் ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்கிறது. அதில் பாதி மிகவும் சிறு வயது பெண்கள். (எல்லோருக்கும் பர்தா போட்டு விடுகிறார்கள். ஆனால் கற்பழிப்பும் குறைவில்லை; மனித ஒழுக்கமும் அவர்கள் சொல்வது போல் மேம்படவும் இல்லை. பர்தாவை ஆதரிப்போர் இத்தகைய கற்பழிப்புகளுக்கு என்ன காரணம் சொல்வார்களோ!) சிறையில் இருப்போரில் 75 விழுக்காடு ஜினா என்ற சட்டத்தினால் அடைக்கப்பட்டவர்கள்.  வேண்டாத மனைவியை ஜினா சட்டத்தின் மூலம் சிறையில் அடைப்பது எளிது. 

(Mukhtaran Bibi என்பவரின் சமீபத்திய உலகை உலுக்கிய உண்மைச் சம்பவம் பற்றி இங்கு வாசித்துக் கொள்ளுங்கள்.)

ஜியாவின் இஸ்லாமிய மாற்றம் பெண்களின் மீது நடந்து வந்த வன்முறைகளை அதிகமாக ஆக்கி விட்டது. 1991ல் வந்த ஷாரியா சட்டங்கள் நிலைமையை இன்னும் கொடுமையாக்கி விட்டது. 

பெனாசிர் பூட்டோ வந்ததும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷரிப் முல்லாக்களைத் தூண்டி விட்டதில் பூட்டோவின் ஆட்சி 20 மாதங்களில் முடிவுக்கு வந்தது. பூட்டோவின் பெண்களுக்காக ஏதும் செய்யாது முல்லாக்களை மகிழ்ச்சிப் படுத்த முனைந்தார். ஆனாலும் முல்லாக்கள் ஒரு பெண் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை. (324)

ஆண்களை விட சராசரி பெண்களின் ஆயுள் குறைவாக இருக்கும் நான்கு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்று. குழந்தைப் பேற்றில் இறக்கும் பெண்களும் அதிகம். 1000ல் 6 பேர் இறக்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை  முல்லாக்கள் எதிர்ப்பதால் குழந்தை பிறப்பும் அதிகமாக,  6.9 வரை  உயர்ந்துள்ளது. 1994ல் பெண்களின் கல்வியறிவு வெறும் 2 விழுக்காடு. பெண் குழந்தைகள் கைவிடப்படுகின்றன. கராச்சியில் மட்டும் ஒரே ஆண்டில் 500 குழந்தைகள் கண்டெடுக்கப் பட்டன. அவைகளில் 99 விழுக்காடு பெண் குழந்தைகள். 

வரதட்சணைக் கொடுமை மிக அதிகம். 1991ல் 2000 வரதட்சணை மரணங்கள். இவைகள் பெரும்பாலும் சமையலறை விபத்துகளாக உரு மாறுகின்றன. (325)
Brides of Koran என்றொரு துன்புறுத்தல் பெண்களுக்கு உண்டு. வரதட்சணைக் கொடுமையால் பெண்களை குரானுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இவர்கள் வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சிகள் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. சிந்து மாகாணத்தில் மட்டும் 3000 குரானிய மணப்பெண்கள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டன. (இந்துக்களிடையே இருக்கும் வரதட்சணைக் கொடுமைகள் எங்கள் மதத்தவரிடம் இல்லையென்று அடிக்கடி நம் இஸ்லாமிய நண்பர்கள்  சொல்வதுண்டு. ஆனால் ... நிலைமை ...?)


ஜின்னா தன் 1944 வருடப் பேச்சில் கூறியவைகள் மிகவும் உண்மைகளாகி விட்டன. “தங்கள் நாட்டுப் பெண்களையும் ஆண்களோடு சமமாக வளர்க்காத எந்த நாடும் உயர்ந்ததாக வரலாறு இல்லை. நம்மிடையே பல முட்டாள்தனமான பழக்க வழக்கங்கள் உண்டு. நம் பெண்களை வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து மூடி வைப்பது சட்டப்படியும், மனித நேயத்தின்படியும் மிகவும் பெரிய தவறு.”

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அடிப்படைவாதிகளிடம் அச்சத்தோடு இருக்கிறார்கள். இந்த அச்சமே அடிப்படைவாதிகளின் எண்ணிக்கையை  மேலும் அதிகமாக ஆக்குகின்றன. 

Women's Action Forum  (WAF) and War Against Rape - என்ற அமைப்பு 1981ல் பாகிஸ்தானில் நிறுவப்பட்டது. பெண்கள் ஹுதுதிற்கும், ஜினாவிற்கும் எதிராக வீதியில் வந்து போராடினார்கள். 1983ல் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் பெண்களின் போராட்டம் நடந்தது.


==================================


எனது சில வார்த்தைகள்:
நடந்து வரும் தீவிரவாதங்களால் இஸ்லாமியச் சமூகத்தின் பேரில் மற்றைய மதத்தினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது உண்மையே. அதில் எத்தனை விழுக்காடு சரி, தவறு என்று கணக்கிடலாம். ஆனால் நான் பேச வந்தது அதுவல்ல. இந்த வேறுபாடுகளைக் களைய இஸ்லாமியர்கள் தயாராக வேண்டும். ஆனால் இந்த வேறுபாடுகளை அவர்கள் தீவிரமாக்குவது போலவே எனக்குத் தோன்றுகிறது. 
சின்ன வயதில் மதுரை தெற்கு வாசலில் இஸ்லாமிய நண்பர்களே அதிகமாக இருந்த காலம் உண்டு. ஆனால் அப்போது இஸ்லாமியரிடம் “வெளி அடையாளங்கள்’ அதிகமாக இருக்காது. கைலியைத் தவிர, தாடி, தொப்பி, நெற்றியில் தொழுகையில் ஏற்பட வைத்துக் கொள்ளும் கருப்பு காய்ப்பு  - இப்படி எதையும் அந்த வயதில் என் கண்களில் அதிகமாகப் பட்டதில்லை. அவர்கள் வீட்டுக்குள் மற்ற நண்பர்களின் வீடுகளைப் போல் போய்வர முடியாது என்பது மட்டும் ஒரே வித்தியாசம். நண்பர்கள் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் இப்போது தங்கள் உடை நடை பாவனை என்று எதிலும் அவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். பர்கா போடும் பெண்கள் அதிகமாகக் கண்ணில் படுவது இரு காரணங்களால் இருக்கலாம்: அதிகமான பெண்கள் பர்தா அணிகிறார்கள். அல்லது. பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்கள் வீட்டிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள். 

இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதால் நம் பதிவர் ஒருவர் அவர் பதிவில் எழுதிய வார்த்தைகளை இங்கு தருகிறேன்.

//மாற்று மத/சமுதாய மக்களிடையே கலந்து வாழும் வாய்ப்புகள் அற்று, அவர்கள் நம்மை விநோதமாகப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அது அவர்களிடம் நம்மை அநியாயமாக ஒதுக்க எண்ணங்களைத் தூண்டுகிறது.  ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை நாம் ஒருவிதமான "புதியவர்கள்" (strangers). நம்மைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்கள் அவர்களது மனதிலிருந்து அகலாமல் அப்படியே இருக்கக் காரணமாகின்றோம்.

மற்ற சமுதாயத்தினரோடு கலந்து பழக வேண்டும்.
மக்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு நாம் விநோதகர்களாக இருக்கமாட்டோம்.//

நமது பதிவுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் மதப்பிரச்சாரத்தைச் செய்வது  இந்து, கிறித்துவ பதிவர்கள் அதிகமாகப் போனால் ஒவ்வொன்றிலும் நாலைந்து பேர் இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் பதிவர்களில் நாலைந்து பேர் மட்டுமே மதங்களைத் தாண்டி எழுதுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் tag line-லிருந்து அனைத்தும் மதம் பற்றி மட்டுமே. அவைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் (என்னைப் போன்ற ஒரு சிலர் தவிர) அனைவரும் இஸ்லாமியர்களே. அவ்வளவு எதுக்குங்க! தொப்பை குறைக்க ஒரு நல்ல பதிவு; எழுதியது . அதில் வந்த ஒரு பின்னூட்டம் அந்தப் பதிவு ’இஸ்லாமியத் தொப்பைகளுக்கு’ மட்டும் என்பது போல் தோன்றியது! இப்படிப் ‘பிரச்சாரம்’ செய்வது ஏன்? இப்படிப் பிரச்சாரம் செய்வதால் எத்தனை மனங்களில் நல்ல வித்துக்களை அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் ஒரு உரைகல் சோதனை செய்தால் நலம். பதிவுலகிலேயே இப்படி ஒரு தனிப்போக்கை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?

சகோ. என்று அழைக்கும் வழக்கமான பாணியை நடப்பிலும், நட்பிலும் கொண்டுவரவேண்டும். உங்கள் மதம் உங்களுக்கு; என் மதம் எனக்கு. பிரிவினையை மதம் ஊட்டுவது கடவுளுக்கே(??) அவமரியாதை! மதத் தீவிரம் குறைந்து, மனிதனுக்கு மனிதன் என்ற உறவை வலுப்படுத்துவதே நமது தேவை என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.

ஆனாலும் தெரியும் ...
போக வேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம்.

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both

...
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. 


.............FROST
23 comments:

கல்வெட்டு said...

அவன் எல்லாம் அறிந்தவன். நீங்கள் மேலே சொல்லியுள்ளதும் சொல்லாததும் அவனின் விருப்பம் இன்றி நடக்காது. இந்த உலகில் அவனின் விருப்பத்தை மீறி நடந்த ஒன்றைக் கூறுங்கள்?

***

எல்லா நாடுகளுமே சமயச் சார்பா அல்லது சாதி/மத இனச் சார்போ கொண்ட நாடுகள்தான். சாதி மதம் இனம் மகக்ளிடம் இருக்கும் வரையில் (என்னதான் தனிப்பட்ட நம்பிக்கை என்று சொன்னாலும்) அதர் சார்புகள் பொது வெளிக்கு வந்தே தீரும்.


சமீபத்தில் கர்நாடக கல்வி அமைச்சர் "கீதை படிக்காதவர் எல்லாம் நாட்டைவிட்டுப் போங்கள்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் கவர்னராகவேண்டும் என்றால் கிறிஸ்டியனாக இருந்தே ஆக வேண்டும்.

saarvaakan said...

/பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது ஜின்னா சமயவாதியல்ல./
**************
ஜின்னா ஒரு ஷியா முஸ்லிம் என்பதும் அவருடைய மனைவி மும்பையை சேர்ந்த பார்ஸி பெண்.ஜினாவின் தாய்மொழி குஜராத்தி என்றால் ஆச்சரியமாக் இருக்கும்.
___________
/ஏற்கெனவே இஸ்லாமியராக இருக்கும் எங்களை மீண்டும் எப்படி இஸ்லாமிய மயமாக்குவது? /
*****************************
மத ஆட்சி என்பது மத குருக்களின் ஆட்சியே ஆகும்.மதம் என்னும் பேரில் நடைபெறும் காட்டாட்சியே இது.இயற்கை வளம் இல்லாத நாடுகளில் மத ஆட்சி வெற்றிகரமாக நீடிக்க முடியாது.இன்னும் உலகின் சில நாடுகள் (வஹாபி) சவுதி,(ஷியா) ஈரான் எண்ணெய் வளத்தால் மட்டுமே நீடிக்கின்றன. இதில் இரண்டுமே வெவ்வேறு பிரிவு என்பதால் இவர்களுக்குள் ஏற்படும் போட்டியும் மத்தியக் கிழக்கின் அமைதியின்மைக்கு காரணமாகும் (சிரியா,பஹ்ரைன், லெபனான்...).இந்த போட்டியை அபபடியே தக்க வைக்க ஆயுத வியாபாரம் சார்ந்து மேலை நாடுகள் விரும்புகின்ற‌ன.
_______________
மதம் ஆன்மீகமாக தனிப்பட்ட முறையில் மட்டுமே பின்பற்றப் படவேண்டும் என்னும் கருத்தை ஏற்காமல் மத ஆட்சி வந்தால் பாலும் தேனும் ஓடும் என்று பிரச்சாரம் செய்தே மக்களை ஏமற்றுகிறார்கள்.இவர்கள் உதாரணமாக காட்டும் சவுதியிலேயே வாழும் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதை மறைக்கின்றனர்.ஆட்சி மாற்றம் என்றால் உயிர்ப் பலி இல்லாமல் முடியாது.
__________
நமது நாட்டிலும் பல பிரச்சினைகள் உண்டு என்றாலும் ,சட்டங்களும, ஜனநாயகமும் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகின்றன.பிடிக்காத ஆட்சி எளிதாக மாற்றப் படுகிறது. ஆள்பவ்ர்களை விமர்சிக்க முடியும்.லோக்பால் மசோதா போன்ற சட்டங்கள் கொண்டுவர மக்களால் முயற்சி முன்னெடுக்கப் படுகிறது.குறைந்த பட்சம் ஒழுங்கான ஊழலற்ற மக்களாட்சி முறையை நோக்கி மெதுவாக நக்ர்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லாம்.
_______________
இம்மாதிரி மத ஆட்சி நாடுகளை பார்த்தபோதுதான் நாம் எவ்வளவு பாக்கிய சாலிகள் என்பது புரிந்தது.நம் அரசியல்வாதிகள் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.!!!!!!!!!!

தருமி said...

//அமெரிக்காவில் கவர்னராகவேண்டும் என்றால் கிறிஸ்டியனாக இருந்தே ஆக வேண்டும். //

கவர்னராவதை விடுங்க .. சாதா குடிமகனாக இருக்கவும் ஏதாவது மதம் தேவையாக இருந்தால் தான் வம்பு!

saarvaakan said...

சவுதியின் பொடா சட்டம்
சவுதி புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட‌த்திற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம்.அரச குடும்பத்தை விமர்சிக்கும் எவரும் 10 ஆண்டுகளுக்கு விசாரனையே இன்றி சிறையில் வைக்க முடியும்.
_______
http://english.aljazeera.net/news/middleeast/2011/07/201172295845529521.html
________
இது அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை தடுக்கவே என்பது அனைவருக்கும் தெரியும்.இத்னையும் ஆதரிக்கும் ஆட்கள் உண்டு.
எப்படி அனைத்து மதவாதிகளும் ஒரே மாதிரியாக சிந்தித்து செயல்படுகிறார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சர்யம்.!!!!!!!!!!!!!!!!

Unknown said...

எல்லோருக்கும் பர்தா போட்டு விடுகிறார்கள். ஆனால் கற்பழிப்பும் குறைவில்லை; மனித ஒழுக்கமும் அவர்கள் சொல்வது போல் மேம்படவும் இல்லை. பர்தாவை ஆதரிப்போர் இத்தகைய கற்பழிப்புகளுக்கு என்ன காரணம் சொல்வார்களோ!

நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.சாதரணமாக ஒரு பெண் அணியும் உடையின் மூலம் நல்ல மனிதனின் மனதையும் ஒரு நொடி சஞ்சலபடுத்தி விடும் அனால் பர்தாஅணிவதன் மூலம் மனிதர்களின் தேவையற்ற பார்வை தவிர்க்க படுகிறது

தருமி said...

//33 : 33 வசனத்தில் ‘முகமதுவின் மனைவியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.//

ரா.ரா.,
முந்திய பதிவையும் வாசியுங்கள். மேலேயுள்ளதை வாசிக்கும்போதும் மற்ற கோட்பாடுகளையும் வாசிக்கும்போது பர்தா ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை; ஆனால் பெண்கள் கெட்டுப் போகாமல் இருபதற்குத்தான் என்பது புரியும்.

இன்னொரு கேள்வி: முகத்தை மட்டும் பார்த்தாலே காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா?

பர்தா போடுவதற்கு இஸ்லாமியர் சொல்லும் அடிப்படையே தவறு.

தருமி said...

ரா.ரா.,
எல்லாப் பெண்களும் பர்தா போட்ட நாட்டில் 3 மணிக்கொரு கற்பழிப்பு. இப்பழி பர்தா போடாத நாட்டில் உண்டா என்பதுதான் கேள்வி. அப்படியாயின் பர்தா என்பது பெண்களை அடக்கி வைப்பதற்காக ஆண்கள் கையாளும் முறை என்பதைத் தவிர வேறு என்ன பயன்?

saarvaakan said...

இஸ்லாமில் முகமதுவின் காலத்தில் வழக்கத்தில் இருந்து கைவிடப்பட்ட வழக்கங்கள்.
1.அடிமைமுரை&அடிமை பெண்களுடன் திருமணமற்ற உறவு
2.முட்டா என்ற தற்காலிகத் திருமணம்(ஷியா இப்போதும்,சுன்னி மிஸ்யர் என்ற பெய‌ரோடு கொஞ்சம் மாற்றமாக)
3.பெண்கள் வீட்டினுள் இருக்க வேண்டும்.
4.மெக்கா மதினாவிவிற்கு பிற மதத்தினர் செல்லுதல்,வசித்தல்.
5.ஜிஸ்யா எனப்படும் பிற மதத்தவரின் மீதான வரி
6. பால்ய வயது பெண் திருமண‌ம்
7. மது அருந்துதல்(சிறிது காலம் மட்டுமே அனுமதி இருந்தது,ஆனால் சொர்க்கத்தில் மது இருக்கிறது).
8. பிற மத நாடுகளை,நிலங்களை கொள்ளையிடுதல் ஆக்கிரமித்தல்.
9. மனைவியை அடித்தல்
10.தேர்ந்தெடுக்கப் பட்ட கலிஃபா ஆட்சி முறை
இவை கைவிட்டது நல்லதுதான்.
_________
இது போல் இவற்றையும் கைவிடக் கூடாது?.
1.பல தாரமண‌ம்
2.கை,தலை வெட்டும்,கசையடி தண்டனைகள்.
3.கல்லெறிந்து கொள்ளுதல்
4.இஸ்லாமில் இருந்து வேறு மதம் மாறினால் மரண தண்டனை.
5.மன்னராட்சி(இஸ்லாமின் படி தவறு)
________________

naren said...

http://www.outlookindia.com/article.aspx?271564

http://outlookindia.com/article.aspx?277774

மேற்கூறிய கட்டுரைகளை படித்தால் மத fanaticism எவ்வாறு எல்லாம் வேலை செய்கிறது என்பதை அறியலாம்.

மதத்தை வைத்து எந்த ஒரு ஆட்சிமுறை கோட்பாடை உருவாக்க முடியாது. மதம் முதன்மை பெற்றால் நிச்சயமாக அடுக்குமுறை இருக்கும். அடுக்குமுறையே ஒரு தேசத்தை கட்டிக்காக்கும்- உ.தா. பாகிஸ்தான்.

இஸ்லாமியர்கள், நல்ல இஸ்லாம் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக கூறுவது ஸ்பேயின் நடந்த இஸ்லாமிய மூர்களின் ஆட்சியை தான். ஆனால் அந்த ஆட்சியானது மததிற்கு அப்பாற்பட்ட ஆட்சி.(சங்க் பரிவார் சந்திர குப்த மெளரிய ஆட்சியை மேற்கோள் காட்டுவார்கள்??????)

இஸ்லாமியர்கள் மதத்தை மத அரசியல் அதிகாரதிற்கு பயன்படுத்தும் எண்ணம் இருக்கும் வரையும், உம்மா என்ற காணல் நீர் கொள்கை (utopian concept)எடுத்து வரும் எண்ணம் இருக்கும் வரை மற்ற சமுதாயதினரிடம் பிரச்சனை தான்.

மதத்தை வைக்க வேண்டிய இடத்தில் எல்லோரும் வைத்தால் பிரச்னையில்லை.

naren said...

//இஸ்லாமில் முகமதுவின் காலத்தில் வழக்கத்தில் இருந்து கைவிடப்பட்ட வழக்கங்கள்.//

இதையெல்லாம் தூய்மையான இஸ்லாமிய ஆட்சியில் எடுத்து வர வேண்டும் என்று சில ஆலிம்கள் ஜும்மா பயான் செய்கிறார்கள். கை விட்டு விட்டார்களா????????????. கைவிட்டு விட்டால் குரானையும் சுன்னாவையும் பின்பற்றவில்லை என்று ஆகிவிடும்.

சீனு said...

ஜின்னா ஒரு சிறந்த மதச்சார்மற்றவர். நேருவும் அதே போல் தான் என்று என்னுகிறேன். ஆனால் இரு நாட்டினரும் அவர்களுக்கு பிறகு குரங்குகளுக்கு கொடுத்துவிட்டோம்.

//நமது பதிவுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் மதப்பிரச்சாரத்தைச் செய்வது இந்து, கிறித்துவ பதிவர்கள் அதிகமாகப் போனால் ஒவ்வொன்றிலும் நாலைந்து பேர் இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் பதிவர்களில் நாலைந்து பேர் மட்டுமே மதங்களைத் தாண்டி எழுதுகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் tag line-லிருந்து அனைத்தும் மதம் பற்றி மட்டுமே. அவைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் (என்னைப் போன்ற ஒரு சிலர் தவிர) அனைவரும் இஸ்லாமியர்களே. அவ்வளவு எதுக்குங்க! தொப்பை குறைக்க ஒரு நல்ல பதிவு; எழுதியது ஹைதர் அலி . அதில் வந்த ஒரு பின்னூட்டம் அந்தப் பதிவு ’இஸ்லாமியத் தொப்பைகளுக்கு’ மட்டும் என்பது போல் தோன்றியது! இப்படிப் ‘பிரச்சாரம்’ செய்வது ஏன்? இப்படிப் பிரச்சாரம் செய்வதால் எத்தனை மனங்களில் நல்ல வித்துக்களை அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் ஒரு உரைகல் சோதனை செய்தால் நலம். பதிவுலகிலேயே இப்படி ஒரு தனிப்போக்கை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்?//


இதே விஷயம் கிருத்துவர்களிடமும் உண்டு. எந்த கிருத்துவரும் தன் அடையாளத்தை காடிக் கொள்ளவே விரும்புகிறார். ஒரு காரி வாங்கினால் அதில் பைபிள் ஸ்லோகம் இருக்கும். ஆட்டோ ஓட்டுநரை பாருங்கள்...அவ்வாறே...

தருமி said...

நரேன்,
//சில ஆலிம்கள் ஜும்மா பயான் செய்கிறார்கள். //

கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்....

naren said...

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=770:28-jan-2011&catid=39:jumma

இவர் சொல்வதை பார்த்தால் logic ஆன முடிவு ஜிஸ்யா, கலிஃபா ஆட்சிமுறை, பிற நாட்டினரை கொள்ளையடித்தல், அடிமைப்படுத்த்ல் தானே வருகின்றது.

பால்ய திருமணம். இஸ்லாத்தில் பால்ய திருமணம் பெண்கள் வயதில் தான் பிரச்சனை. இதற்கு நேரடியாகவே horse mouth என்ன சொல்கின்றது என்றால்
http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=en&id=1748&limit=34&idxpg=0&qry=%3Cc%3ESOM%3C%2Fc%3E%3Cs%3EMAR%3C%2Fs%3E%3Cl%3Een%3C%2Fl%3E
இதில் puberty பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பட்வா. ஆணுக்கா பெண்களுக்கா என்று சொல்லவில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே கண்டிஷன் ஆண் வயதுக்கு வந்து பொருளாதார தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும். பெண்ணின் வயது ஒரு பொருட்டே அல்ல. அதனால் பால்ய விவாகம் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது-
http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=en&id=21031&limit=3&idxpg=0&qry=%3Cc%3ESOM%3C%2Fc%3E%3Cs%3EWOI%3C%2Fs%3E%3Cl%3Een%3C%2Fl%3E
http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=en&id=3729&limit=9&idxpg=0&qry=%3Cc%3ESOM%3C%2Fc%3E%3Cs%3EWOI%3C%2Fs%3E%3Cl%3Een%3C%2Fl%3E
இப்படி சொன்னால் எதற்காக பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும்.

அடிமை முறை---சவுதியில் நடைப்பெறும் வீட்டு பணிப்பெண்கள் கொடுமைகளுக்கு, அவ்வாறு கொடுமைப் படுத்தும் அரபிகள் எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பது பல பதிவுகளில் பார்த்தாயிற்று.

மூட்டா கல்யாணம்--http://delhiblast.sulekha.com/blog/post/2009/04/muta-or-temporary-marriage-in-muslim-societies.htm
--காஜிகளே அதை ஆதரிக்கிறார்கள்.

இதிலிருந்து, மதகுருமார்களிடம் கடிவாளம் தந்தால் குதிரையை எங்கு வேண்டுமானாலும் ஓட்டிச்செல்வார்கள்.

தருமி said...

என்னங்க நரேன்,
மக்கா மஜீத்தில் ஒரு ஆளு இப்படி பேசுறாரு!! ஜனநாயகமே தப்புன்னு ஒரே அடியா போட்டுட்டாரு. அப்ப நம்ம தமிழ்நாட்டுக்கு மம்மியை சிற்றரசியாக்கி, பாரத் நாட்டுக்கு பெரிய மம்மியை பேரரசியாக்கணுமோ என்னமோ!

பயமா இருக்கு. இதெல்லாம் பள்ளிவாசலுக்குள் .. பயங்கர brain washing தான். இதனால்தான் இஸ்லாமியம் அவர்களை இப்படி இறுக்கிக் கட்டிப் போட்டிருக்கிறதோ?

மிகத் தவறான போதனைகள். அரசியலையும் மதத்தையும் இணைத்தல் ... மிகப் பயங்கரம் தான்!

இதையும் வாசித்துப் பாருங்கள்.

தருமி said...

இவரு சொல்றதைப் பார்த்தா ஒளரங்கஜேப் மாதிரி அப்பா, அண்ணன், தம்பி இவங்களையெல்லாம் ‘போட்டுப் பார்த்துட்டு’ அல்லா சொன்ன, ஜனநாயகம் இல்லாத அரசை அழகாகக் கொண்டு வரணுமோ?

அல்லது, சவுதி மாதிரி அரசுகளுக்கு சப்போர்ட் பண்றதுக்காக இப்படி பேசுறாரோ?

தருமி said...

அல்லது கீழ்க்கண்ட வரலாறு திரும்ப திரும்ப நடக்க வேண்டுமோ?
முந்திய பதிவு ஒன்றில் ...
நபிகளின் வாரிசுகள்:
நபிகளின் தன்னலமற்ற லட்சியத் தோழர்களான ஆபூபக்கர் (கி.பி. 622-642), உம்மர் ( 642-644), உஸ்மான் (644-656), அலி (656-661)-க்குப் பின்னர், நபிகளின் எண்ணம் கற்பனைக் கனாவாகவே முடிந்தது விட்டது. முகமது மறைந்த 39 வருடங்களுக்குப் பிறகு, அமீர் ம்வாவியா (661-680) வின் கைக்கு ஆட்சி வந்தததிலிருந்து அவருடைய வாரிசுகள் அனைவரும் கி.பி. 1037 வ்ரையிலும் ஷாக்களைப் போலவே, கைசர்களைப் போலவே கொடுங்கோல் ஆட்சியாளர்களாக் இருந்தனர். (இஸ். தத்துவம், சாங்கிருத்யாயன் -பக். 11)

தருமி said...

இன்றைய இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்குப் பின் நடக்கும் ‘ஜனநாயக ஆட்சி’ இஸ்லாமிற்கு விரோதமானதோ? எப்படி Islamic Brothers அதற்குத் துணை போகிறார்கள்?

saarvaakan said...

ஜனநாயகமும் சம்சுதீன் காசுமியும்
இவர் உதிர்க்கும் தத்துவ முத்துகள் தாங்க முடியவில்லை.கல்வெட்டில் பொறிக்கப் பட வேண்டியவை.
________________
1. ஜனநாயகம் என்பதும் இறைவனுக்கு இணை வைப்பதாகும்.

2.கிரேக்கர்கள் இஸ்லாமை ஒழிக்க ஜனநாயகத்தை கண்டு பிடித்தனர்.(இவருக்கு யாராவது கொஞ்சம் வரலாறு சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை.)

3.இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொலவ்து போல்தான் இஸ்லாமிய ஜனநாயகம்.

4.ஜிஹாத் செய்த ஹமாஸ்தான் சரியான அமைப்பு.
_____________
ஒசாமாவிற்கு தொழுகை நடத்தி புகழ் பெற்றவர்தான் இவர்.தலிபான்களின் ஆட்சிதான் சரி என்று சொல்லாமல் சொல்கிறார்.இந்த மாதிரி ஆட்களை எல்லாம பேச உரிமை கொடுப்பதுதான் ஜனநாயக்த்தின் தவறு.
_______________

பத்ரு போர் பற்றி மக்காவாசிகள் முகமதுவை தாக் வந்ததாக் மத வாதிகளுக்கு கைவந்த கலையான பொய் கூறுகிறார்.வணிகக் கூட்டம் என்று கொள்ளையிடச் சென்று போர் வீரர்களுடன் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அனைவரும் அறிவோம்.

http://en.wikipedia.org/wiki/Battle_of_Badr
_________

தருமி said...

//ஒசாமாவிற்கு தொழுகை நடத்தி புகழ் பெற்றவர்தான் இவர்//

ஓ! அந்த ஆளா இவரு!

சரிதான்!!

fa said...

5th class padikira muslim pullaikku kooda theriyum ungaloda kelvikku ulla answer.evano arakorakitta kettutu kathai eluthuranunga.

theriyathatha pesama poyi pullaiya padikka vainga sir.....

தருமி said...

fa,

சாந்தி .. சாந்தி .......

naren said...

இந்த தீவிரவதிகள் ஏதோ ஒரு புரியாத பெயரை வைத்து கடைசியில் 313 என்ற நம்பரை வைப்பார்கள்.

இது என்ன போலீஸிடம் இருக்கும் ஆதிக்காலத்து துப்பாக்கியின் அளவுகோளை குறிக்கும் எண்ணாக இருக்கின்றதே என தோன்றும்.

ஆனால் இந்த நம்பர் பதர் போரில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கை என்று இப்பொழுதுதான் புரிகிறது.

தருமி said...

//pullaiya padikka vainga sir..... //

naan mudichachu .. neenga innum aarambikavae illaiyae! aarambinga sir .......

Post a Comment