Monday, July 27, 2026

1385. FIFA '26 - இறுதிப் போட்டி


FIFA ’26  -  இறுதிப் போட்டி

 

ARGENTINA  -  SPAIN


அர்ஜென்டினா வெற்றி பெற்று மெஸ்ஸி பல புதிய சாதனைகளை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்புகள்  இருந்தன. ஆனால் எல்லாம் மழையில் நனைந்த பட்டாசு போல் பிசுபிசுத்து விட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியில் ஒரே ஒரு வீரர் மட்டுமே விளையாடினார் என்பதுதான் உண்மை. அவர் இந்த நாட்டு அணியின் கவலாளி- (goal keeper) Emiliano Martínez.  60 விழுக்காட்டிற்கு மேல் பந்து ஸ்பானியர்கள் கால்களில் தான் இருந்தது. மெஸ்ஸி இந்த விளையாட்டை ஒரு பார்வையாளர் போல் பார்த்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்பானியர்கள் ஏறத்தாழ 20 தடவை கவலை நோக்கி அடித்த பந்துகளில் 12 பந்துகளை மிக அழகாகத் தடுத்தாட்கொண்டார், இந்த கவலாளியில்லாமல் வேறு யாரோ ஒருவர் விளையாடியிருந்தால் அர்ஜென்டினா அணி ஐந்தாறு கவல்களாவது வாங்கி மிகக் கேவலமாகத் தோற்றிருக்கும். பார்க்கவே ஆச்சரியப்படுமளவிற்கு 
அவர் ஒரு காவல் தெய்வமாக நின்றார். ஆச்சரியமாகப் பந்துகளைத் தடுத்தாடினார். அவருக்குத் தான் இந்தப் போட்டியின்  GOLDEN GLOVES AWARD கொடுக்கப்பட்டது.




எதிரணி ஸ்பெயின் சிறப்பாக ஆடினர். ஆயினும் மார்ட்டினஸ்ஸின் திறமையால் அவர்களால் கவலடிக்க முடியவில்லை. முழு விளையாட்டு நேரம் முடிந்தது. கவல் ஏதும் விழவில்லை. Extra time ஆட்டம் தொடர்ந்தது. அப்போது அர்ஜென்டினா முன்னணி வீரர்  பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சளட்டை வாங்கினார். அது சிகப்பட்டையானது. வெளியேறினார். உள்ளதே நொள்ளக் கண்ணு என்பார்களே அந்த நிலையில் தான் அர்ஜென்டினா அணி இருந்தது. இப்போது 11 பேருக்கு எதிராக 10 பேர் ஆடினார்கள்.  106வது நிமிடத்தில் டாரஸ் அடித்த பந்து மார்ட்டினஸை ஏமாற்றி உள் நுழைந்து, வெற்றிக் கவலாக மாறியது.

ஸ்பெயின் வென்றது.

சென்ற 22ம் ஆண்டுப் போட்டியில் இறுதிப் போட்டியில் நன்கு விளையாடியதால் எம்பாப்பே பிடித்துப் போனது. இந்த ஆண்டு லஷ்மி அம்மாள் – யாமல் – நன்கு விளையாடியிருந்தாலும், எனக்கு அவரை விட வில்லியம்ஸ் என்ற ஸ்பெயின் வீரரைப் பிடித்துப் போனது. ஏற்கெனவே இவர்  substitute ஆக உள்ளிறங்கி, அப்போட்டியிலும் ஒரு கவலடித்தார். இந்த இறுதிப் போட்டியிலும் அவரது ஆட்டம் அத்தனைச் சிறப்பாக இருந்தது. டார்ஸ் கவலடிப்பதற்கு இவரே துணை புரிந்தார். ஏன் இவ்வளவு நல்ல ஆட்டக்காரரை துணை ஆட்டக்காரராக – substitute – ஆக இறக்குவதன் மர்மம் எனக்குப் புரிபடவில்லை.

 


 

 

 


No comments:

Post a Comment