15.7.26 Wednesday
இரவு 12.20 (அல்லது புதன் கிழமை காலங்கார்த்தாலே .. அதாவது இரவு 12.20)
SF I FRANCE -
SPAIN
செமி பைனல் ஆரம்பிச்சிருச்சு. பிரான்ஸ்
ஸ்பெயின் விளையாடுறாங்க. இதுல பிரான்சு டீம்ல எம்பாப்பே இருக்கிறாரு. அவர் போன
வேர்ல்ட் கப்லையே என் மனச ரொம்ப கவர்ந்திட்டார். ஏன்னு கேட்டா அர்ஜென்டினா ரெண்டு
கோல் போட்டு முழு வெற்றி அப்படிங்கற மாதிரி இருந்த நிலைமையில் செகண்ட் ஹாஃப்ல பத்து
நிமிடங்களுக்குள் ரெண்டு கோல் போட்டு சமன் பண்ணாரு. அந்தப் பத்து நிமிஷம் இருந்த
விளையாட்டுல போன தடவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
ஸ்பெயின்ல போன வேர்ல்ட் கப்லேயே ஒரு சின்னப் பையனைப் பிடிச்சது. அப்ப அவருக்கு
வயசு 19 வயசு. அவர்தான் இப்போ நம்ம
சென்னை ஆயாவினுடைய புண்ணியத்துல புதுப் பேரு ஒன்னு வாங்கீருக்காரு - லட்சுமி
அம்மாள் அப்படின்னு. லமீன் யமால் (Lamine Yamal) அவரும் விளையாடுகிறார் சோ ரெண்டு டீம்ல ஆளுக்கு ஒரு பிளேயர் பிடிக்கும்னு
வச்சிக்குவோமே நமக்கு தான் கருப்பு கலர் கொஞ்சம் பிடிச்சுப் போயிடுமே. அது வேற ஒரு
பிரச்சனை நம்மட்ட இருக்கு. அதனாலே எம்பாப்பே
மேலே இன்னும் கொஞ்சம் அபிமனம் அதிகம்.
இப்போ மணி கரெக்டா 12: 20. அந்தக் காலத்துல மாதிரி அலாரம் வச்சு கரெக்ட்
டைமுக்கு பார்க்க உட்கார்ந்தேன். நமக்கு வயசுக்கு இதெல்லாம் தேவையில்லை என்றுதான்
நினைத்தேன். சரி .. எப்படி போகுதுன்னு பார்ப்போம்
மணி 12.30. நம்ம செவ்வாய் ராத்திரி என்போம். அவர்கள் புதன்கிழமை காலைங்கிறாங்க. மிகச் சரியாக
ஆரம்பிக்கிறார்கள்
12.35 பிரான்சிற்கு முதல் கார்னர் கிடைக்கிறது.
12.50 லட்சுமி அம்மாள் மேல பவுல் பண்ணதாக ஒரு பெனல்ட்டி ஷாட் கொடுக்கிறாங்க எனக்கு
இது சரியா தெரியல. ஏன்னா அந்த ஷாட்டில் ஆப்போனன்ட் லட்சுமி அம்மாவைப் பார்க்காமலே பிரான்ஸ்
வீரர் பந்தையடிக்க, அது மிஸ் ஆகி எதிராளியில் காலில் அடித்தது.
இதுவும் பாக்ஸ்க்கு வெளியே நடந்தது. இதுக்கு எப்படி பெனல்டின்னு தெரில. போங்கப்பா
... புதுப் புது தத்துவங்களா கொண்டு வர்றீங்க. கிளியர் கோல் விழுந்தது.. அநியாயமான
கோலாக எனக்குத் தோன்றியது.
1.07 செகண்ட் சான்ஸ் ஸ்பெயினுக்கு. ரொம்ப அழகான சான்ஸ் விட்டுட்டாங்க.
1.12 goal keeper கோலை விட்டு ரொம்ப தூரம் கிரவுண்டுக்குள்ள
ஓடி வந்துட்டாரு. நல்ல வேளை. கோல் விழலை. பிழைச்சாங்க
1.16 good
save by ஸ்பெயின்
1.21 half
time
எம்பாபேவின் மேஜிக் இந்த ஆட்டத்தில் நடக்கலை. அதோடு ஸ்பெயின் டிபன்ஸ் ரொம்ப
ஸ்ட்ராங். தொடர்ந்து மூணாவது கோல் விழாம பிரான்ஸ் தப்பிச்சுது. 2022 ப்ரான்ஸ் உலகக்
கோப்பையைத் தூக்கிச் சென்றது. போனதடவை இறுதிவரை வந்து ரன்னராக வந்தது. பாவம் இந்த தடவை
அரையிறுதியிலே வாய்ப்பை இழந்தது.
நாளை – இங்கிலாந்து – அர்ஜென்டினா. அர்ஜென்டினா வெல்லணும்னு ஆசை, பார்ப்போம். ஆனால் நான் தூக்கம் முழிக்கப் போவதில்லை.


No comments:
Post a Comment