Friday, December 31, 2010

465. எந்த மதக்காரனாக இருந்தால் என்ன ...

*

சமுதாய நலனுக்காக தொடர்ந்து PLURAL INDIA என்ற தன் வலைப்பூவில் எழுதி வரும் பேரா. ராம் புனியானி (Ram Puniyani)எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள் தமிழில் …

Saturday, December 25, 2010

464. WHY I AM NOT A MUSLIM ... 9

*

ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
பதிவு - 8
இப்போதைய பதிவு - 9

*

Sunday, December 19, 2010

463. ஓம்காருடன் ஒரு மாலை

*
எங்க ஊரு இ.த. கா.பா. இல்லாததாலோ என்னவோ, அதாவது, எங்கள்ளைய ளபதி கார்த்திகைப் பாண்டியன் ஊரில் இல்லாததாலோ என்னவோ

Thursday, December 16, 2010

462. WHY I AM NOT A MUSLIM ... 8

*

ஏனைய பதிவுகள்:
பதிவு - 7
இப்போதைய பதிவு - 8
*


Image and video hosting by TinyPic



Friday, December 10, 2010

461. WHY I AM NOT A MUSLIM .. 7

*

ஏனைய பதிவுகள்:
இப்போதைய பதிவு - 7

Monday, November 29, 2010

459. அமினா - த.மு.எ.க.சங்கத்தின் விருது பெற்ற விழா

*

அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...


*
Image and video hosting by TinyPic




27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால்  அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.

Friday, November 19, 2010

457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை

*

இப்பதிவில்  shanawazkhan, G u l a m, Haja என்ற மூவர் கொடுத்துள்ள சில விவாதங்களுக்குப் பதில் கூற ஆரம்பித்து, அது நீளமாக அமைந்ததால் அதை ஒரு தனியிடுகையாக என் பதிவில் இடுகிறேன். அவர்கள் விவாதங்களை நீல வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.
I
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (shanawazkhan)

நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளீர்கள். ஒரு மனைவியோடு இருப்பவன் பல பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். அதைத் தடுக்க 4 மனைவிகள் !!!!!!!!!!!!!! - நல்ல தத்துவம்.

எனக்குத் தெரிந்த ஆண்கள் - இஸ்லாமியரையும் சேர்த்து - ஒரு பொண்டாட்டிக்காரங்கதான். நீங்க சொல்றது அதில் யாருக்கும் பொருத்தமில்லை. நீங்கள் யாரை நினைத்து இப்படி சொன்னீர்களோ! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிறீர்களோ?

//பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், ... இதுப் போன்ற அவல நிலை தோன்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கூறிய செய்தி தான் இந்த 4 திருமணம்.// _ Haja

அடுத்த நச் தத்துவம். நீங்க சொல்ற மாதிரி 4 திருமணம் பண்ற பசங்க நிச்சயமா அதோடு நிக்க மாட்டாங்க. அரபு நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வந்து, சில நாட்களுக்குத் திருமணம் செஞ்சு பொண்ணுகளை விட்டுட்டு போனதாக சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. உங்க மதத்தில் அந்த மாதிரி திருமணத்திற்கு ஏதோ ஒரு பெயர் இருப்பதாகப்  படித்தேன். (பெயர் என்ன?) அவங்க ஊர்ல நாலு இருந்தும் பத்தலைன்னு இங்க வந்தாங்க அவங்க. அவுத்து உட்டுட்டா, மேய்ற மாடு அப்படித்தான் எங்க வேணும்னாலும் எபப்டி வேணும்னாலும் மேயும்.

நீங்க சொன்னது என்ன philosophy-ன்னு எனக்கு தெரியவில்லை. பொதுவாக எல்லா ஆண்களையும் கீழ்த்தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.

இதைவிடவும் இன்னொரு பொன் முத்து சொல்லியிருக்கீங்க: //விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்.// (குலாம்.)
நீங்க சொல்றது உண்மையாக இருந்தால் முஸ்லீம் நாடுகளில் விபச்சாரம் என்பதே இல்லையா? முற்றாக ஒழிந்து விட்டதா? நடைமுறை அப்படியில்லையே.

இப்படி 4 பொண்டாட்டி இருந்துட்டா அவனவன் நல்லவனா, அல்லாவுக்குப் பிடிச்சவனா இருந்துருவான். இல்லைன்னா அவன் விபச்சாரத்திற்குப் போய்விடுவான். ஒரு பொண்டாட்டி வச்சிருக்கிறதால்தான் விபச்சாரமும், சின்ன வீடும் -- பயங்கரமான கருத்துக்கள் ............. 

கீதாச்சாரம் அப்டின்னு ஒண்ணு அச்சடிச்சி ரூம்ல மாட்டியிருப்பாங்க. இதையும் அப்படி செய்யலாம். அத்தனை சத்தான முத்துக்கள் இவை. AIDS-க்கு பாதுகாவலா ஆணுறை பயன்படுத்துங்கள் என்பதற்கு ஏகோபித்த கோபக்குரலில் மறுப்பு கொடுக்கும் நீங்கள், இப்படி விபச்சாரத்தை ஒழிக்க ஒரு புது வழியை உங்கள் மார்க்கத்தின் மூலம் கொடுப்பது நன்றாக உள்ளது. நாலு வச்சிருக்கவன்தான் சார், ஏற்கெனவே சொன்ன மாதிரி, அவுத்த உட்ட மாடு மாதிரி எங்கெல்லாமோ போவான். நீங்க என்னடான்னா, வீட்ல நாலு இருந்தா மனுசன் ஒழுங்கா ஆகிடுவான் அப்டின்றீங்க ... அப்பதான் சார், நிலைமை பல காரணங்களால் ரொம்ப மோசமாயிரும். விளக்கமெல்லாம் இங்கே எதற்கு .....

//இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா?// -(குலாம்)

இப்படி ஒரு அணுகுண்டு. நாலு மனைவி வச்சிக்கிட்டா சமூகத்திற்கு என்ன பிரச்சனை என்று எளிதாகக் கேட்டு விட்டீர்கள்!  அடக் கடவுளே!!

மதம் எப்படி மனுஷங்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு பெரிய அத்தாட்சி ஏது? நிஜமாகவே இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உங்க மனசாட்சி உங்களை அவிழ்த்து விட்டது??!!  நம் சமூகக் கட்டுப்பாடு என்று ஒன்றுள்ளது. அது உங்களுக்குத் தேவையில்லை; குரான் தான் எங்களுக்கு எல்லாம் என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் விவாதம்.  தனி மனித ஒழுங்கு, loyalty to your spouse, -- இப்படி பல நல்ல காரியங்கள் நீங்கள் சொல்லும் பல தாரத்தால் அழிந்தொழிந்தல்லவா போய்விடும். நிஜமாகவே உங்களுக்கு ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற கருத்து தவறாகத்தான் உள்ளதா?

ஆளுக்கு நாலுன்னு வச்சிக்கிட்டா ... கடவுளே! நினச்சி பார்க்கவே பயமா இருக்கே. நீங்க ரொம்ப லைட்டா சொல்லிட்டீங்க ...

முகமது காலத்தில் நிறைய சண்டைகள்; சச்சரவுகள்; போர்க்களங்கள். நிறைய ஆண்கள் இறந்து போயிருப்பார்கள். பெண்கள் அதிகமாக வாழ்வில்லாமல் இருந்திருப்பார்கள். ஆண் நான்கு பெண்களை - அதை ஏன் முகமது நாலு என்று வைத்தாரென்று தெரியவில்லை;  - திருமணம் செய்து கொள்ளலாம் என்று முகமது கூறினார் என்றால் அதில் தவறேதும் இல்லை. ஒரு சமூகக் காரணியாக அதை ஒரு சமூக கடமையாகக் கூட நினைத்து ஒப்புக் கொள்ளலாம். அந்தக் காலத்திற்கு அது ஒரு சரியான தீர்வு என்று கொள்ளலாம். ஆனால் அன்று சொன்னது அல்லாவே சொன்னார் என்பதுவும், அதுவும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு அமைப்பு இது என்பதுவும், கடவுளே இப்படிச் சொன்னார் என்பது கேலிக்குரியவையே ஒழிய வேறொன்றுமில்லை.

அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார் என்கிறீர்கள். நான் இதைப் பற்றி சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேன். அல்லா எனக்கு மட்டும் இந்த exemption கொடுத்திருக்கிறார் என்றால் அது ஒரு குற்றவாளியே தனக்கு சாதகமான சாட்சியாக வாக்குமூலம் கொடுப்பது போலல்லவா உள்ளது.

அடுத்து, எதற்காக முகமதுவிற்கு அந்த exemption? ஆயிஷா என்ற  சின்ன பிள்ளையைக் கல்யாணம் செய்வது அரசியலுக்காக என்பீர்கள்; ஜேனாப் - வளர்ப்பு மகன் தன் மனைவியை தலாக் சொல்லிவிட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; ஏனெனில் வளர்ப்பு மகனை உண்மையான மகனாக நினைக்கக்கூடாது என்று காட்டுவதற்காக இந்த திருமணம் என்ற காரணம்; ஜுவேரியா என்ற தன்னிடம் தோற்ற எதிரியின் மனைவியைப் பேரம் பேசி முகமது திருமணம் செய்வது ..
... இதெல்லாம் என்ன சமூக / தனி மனித நாகரீகமோ; நியாயமோ?! தெரியவில்லை.

========================================================
II
ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்னவோ காத்திருக்கிறது என்று குரானில் சொல்லியுள்ளதே; ஏன் பெண்ணுக்குச் சொல்லவில்லை; பெண்ணுக்கு சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று கேட்டிருந்தேன்.

//ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை.//- G u l a m

ஓ! பெண்ணிற்கு 'அஃது உண்டு' என்கிறீர்களா? நல்லது. அந்த 'அஃது' என்னென்ன என்றுதானே கேட்கிறேன். ஏன் அதை சொல்லவே மாட்டேங்றீங்க? ..... ஆண்களுக்கு சுவனத்தில் என்னவென்று தெரியும். நிறைய இருக்கு. அதுபோல் பெண்களுக்கு என்ன? குலாம் வேறு இப்படி சொல்லியிருக்கிறார்: //அல்லாஹ் நாடினால் இது குறித்து மேலதிக விளக்கம் தருகிறேன்// G u l a m

இப்போதைக்கு நானும் நாடுகிறேன்.

---------------------------------------------------------------------------------------
III




1.***Sin of Khalwa  - ஒரு ஆணோடு ஒரு பெண் தனித்து இருந்தால் பாவம். அந்த பாவத்தை மாற்ற பெத்த பிள்ளைக்கு ஒரு தாய் முலைப்பால் குடுக்குறது மாதிரி அந்த ஆணுக்கு அந்த பெண் தாய்ப் பால் கொடுத்துட்டா அவன் கூட தனியா இருக்கலாம் என்பது எப்படிப்பட்ட தத்துவம்! (இது என்ன ஹத்தீஸ்- strong /weak - என்று தெரியவில்லை; ??)

2.***லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.

3. ***4 மனைவி + போனசாக அடிமைகள் - இவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள் அப்டின்ற "தேவ வாக்கு"

4. ****எல்லாத்துக்கும் 4 மனைவி வரை லைசன்ஸ்; ஆனால் முகமதுவிற்கு மட்டும் நிறைய - எல்லா வயதிலும். அதிலும் வளர்ப்பு மகன் மனைவியை -ஜேனாப்- தன் மனைவியாக்கிக் கொண்டது; 9 வயதுப் பெண்ணை -ஆயிஷா- மனைவியாக்கியது; போரில் தோற்ற தலைவனின் மனைவியை -ஜுவேரியா - தனதாக்கியது ... இந்தக் கதைகள்.

5. **** உங்கள் மதத்தை மறுப்பவர்களுக்கான தண்டனைகள்:


 //உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0// - Arun

இந்த மதத்தீவிரம் எப்படி "கடவுளாலேயே" கொடுக்கப்பட்டிருக்க முடியும்?

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண். 

-- நான் இதுவரை இருபது தடவையாவது பின்னூட்டங்களில் சொல்லியிருப்பேன். மேலே சொன்னவைகளை இஸ்லாமில் இல்லாத உங்கள் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி, அவைகளுக்கு அவர்கள் எவ்வாறு react செய்வார்கள் என்று பாருங்கள் என்று சொல்லியுள்ளேன்.

இதிலும் ஒரு பிரச்சனை. இஸ்லாம் மத தொடர்பான பதிவர்கள் யாரும் இஸ்லாமைத் தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை. ஒரு பிரபல பதிவரைக்கூட ஒரு தொடர் பதிவில் வரவேற்றேன். அவருக்கு இஸ்லாமைத் தவிர ஏதும் எழுதமாட்டாரென்பது அப்போது தெரிந்தது. எல்லோரும் நன்றாக 'மத ஊழியம்' செய்கிறீர்கள். சரி .. ஆனால் இதுவரை நீங்கள் எழுதியவைகளில் இஸ்லாமிய பதிவர்களைத் தவிர வேறு யாரும் வந்து, 'ஆஹா! நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்' என்று கூறியதை நான் பார்க்கவிலை. அதோடு, என்னோடு இன்னும் வால்ஸ், கல்வெட்டு, The Analyst போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதிகமாக வந்து உங்கள் பதிவுகளில் கருத்துக்களைப் பகிருவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும், அதில் ஒன்று - என்ன சொன்னாலும் இவர்கள் எங்கே கேட்கப்போகிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமியரைத் தவிர வேறு யாரையும் நண்பர்களாக அண்டுவதில்லை என்றே நினைக்கிறேன். பாவம் .. எப்படி நீங்கள் நண்பர்களைத் தேடி இதையெல்லாம் சொல்ல முடியும்?!

எந்தக் கேள்விக்கும் நீங்கள் எப்போதும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிடுவீர்கள்: '1400 வருஷக் கதை & எல்லாவற்றிற்கும் இஸ்லாமில் பதில் உண்டு'. அதோடு நான் சொல்வதெல்லாம், 1400 வருஷக்கதையை மனுக்குலத்திற்கே சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு, பிற சமய நண்பர்கள் ஒரு நாலு பேரிடம் சொல்லி அவர்களின் பதிலையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணைத் திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை. அதைத்தான் செய்யச் சொல்கிறேன். மற்றவர்களுக்கு உங்கள் மதம் எந்த உணர்வுகளை எழுப்புகிறது என்று உங்களுக்கும் கொஞ்சமாவது தெரிய வேண்டாமா? முயற்சி செய்யுங்களேன் ஒரு முறையாவது. நான் சொல்லியுள்ள அந்த ஐந்தை மட்டும் சொல்லுங்களேன். அது போதும். அதை விட்டு விட்டு குரானை ஒரு முறை வாசியுங்கள்; பதில் கிடைத்து விடும் என்ற வேலை எதற்கு? கேட்ட, வாசித்த கொஞ்ச பகுதியிலேயே எக்குத் தப்பான கேள்விகள்;

முழுவதையும் வாசித்தால் ....???


*

Thursday, November 18, 2010

456. அமினா - இன்னொரு விருது

*

முந்திய விருது: “திசை எட்டும்”
*

என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட “அமினா” என்ற புதினத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2009-ம் ஆண்டிற்கான த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசை - வ. சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு: இலக்கியப் பரிசை - அளிக்கிறது.

என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Image and video hosting by TinyPic

Sunday, November 14, 2010

455.பரிணாமம் ... 3

*
னைய பதிவுகள்:

இது மூன்றாவது இடுகை

Tuesday, November 09, 2010

454.அன்னை தெரஸா - COME BE MY LIGHT...என் பார்வையில்.. 5

*
தொடர்புள்ள இடுகைகள்:

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை


*




Image and video hosting by TinyPic

  
*


எனது பார்வையில் .... 
கடவுள் என்னிடம் பேசினார் ...

கிறித்துவர்கள் மத்தியில்   தன்னோடு கடவுள் / கர்த்தர் / ஏசு பேசினார் என்று பலரும் சொல்வது அடிக்கடி நடக்கும் ஒன்று. இது பிரசங்கிகள் (மதப் பிரசாரக்காரர்கள் & மத வியாபாரிகள்) மிக எளிதாகப் பயன்படுத்தும் ஒரு விஷயம். நான் கேட்டதில்ல; ஆனால் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் breakfast ஏசுவோடு என்று கூறுவாராம்! கல்யாண விஷயங்களில் இந்துக்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல், கிறித்துவர்களில் பலரும் கடவுளின் நேரடித் தலையீட்டை திருமணங்களுக்கு எதிர்பார்ப்பதுண்டு.  

இவ்வளவு எதற்கு ... என்னிடமே ஒரு முறை கடவுள் பேசினார். அது என் முதுகலைப் படிப்பு நடந்த போது நடந்தது. நடந்த இடம், நேரம் எல்லாமே நன்கு நினைவில் உள்ளன. சிறுவயதிலிருந்து ஆடி ஓடித் திரிந்த St. Mary's Cathedral. அங்கு நான் காலைப் பூசை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அப்போது மிகுந்த நம்பிக்கையாளன். எனக்குத் தேவையான ஒன்றைப் பற்றி கடவுளிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பூசையில் மிக முக்கியமான இடமான 'எழுந்தேற்றம்' நடந்த சமயம். தலைகுனிந்து எல்லோரும் ஆராதனை செய்யும் நேரம். அப்போது நானும் தலைகுனிந்து ஆராதிக்கும்போது  நான் கேட்டதற்கான விடை என் காதுகளில் மிகத் தெளிவாக ஒரு குரல் மூலம் விழுந்தது. அது அப்போது எனக்கு கடவுளின் குரலாகவே தெரிந்தது. நான் இங்கு சொல்லியதில் ஏதும் மிகை இல்லை.


எனக்கு எப்படி அந்தக் குரல் காதில் விழுந்தது? முழு நம்பிக்கையாளனாக இருந்த அன்று எனக்கு அது நிச்சயமாக கடவுளின் குரலாகத்தான்  தெரிந்தது. இன்று பழையதை நினைத்துப் பார்க்கும் போது அதற்கான காரணம் என்னவென்று தெரிகிறது. இங்கே அதைச் சொல்லியுள்ளேன். 

நான் கேட்டதற்கு கடவுளிடமிருந்து கிடைத்த பதில் பின்னால் தவறாகப் போய்விட்டது. அந்த வயதில் என்ன பெரியதாகக் கேட்டிருக்கப் போகிறேன், கடினமான ஒரு பாடத்திட்டத்தில் எந்தப் பகுதியில் பெரிய essay question வருமென்பதுதான் என் அன்றைய பிரச்சனை. (இதற்கெல்லாமா ஜெபிப்பீர்கள் என்று ஒருவேளை நீங்கள் யாராவது கேட்டால் ... உங்களுக்கு கிறித்துவ மக்களைப் பற்றித் தெரியவில்லை என்று பொருள். இதற்குத்தான் என்றில்லை; எதற்கும் ஜெபம் என்பது கிறித்துவ வழக்கம். சில ஜோக்குகள் கூட உண்டு. இங்கே வேண்டாமே!)

இப்படி 'கடவுளோடு பேசுவது' தொடர்பாக எனக்குப் பரிச்சியமான இந்து,கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களோடு இதற்கான தொடர்பை எழுதணும்.

கட்டுப்பாடற்ற இந்து மதத்தில்தான் அதிகமாக இந்த 'கடவுளோடு பேசுவது' நடக்கிறது என்று நினைக்கிறேன்.பலரும் அந்த தெய்வத்தோடு பேசினேன்; இந்த தெய்வத்தோடு பேசினேன் என்று சொல்வது அடிக்கடி கேட்கப்படும் ஒரு ஜோக்! அதுவும் சின்ன தெய்வங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் இன்றும் 'சாமியாடிகள்' என்று சில குறிப்பிட்ட மக்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஊரில் நடக்கும் அம்மன் கொடை போன்ற விழாக்களில் இவர்களின் 'ஆட்டம்' பார்த்திருக்கிறேன். 'அருள் வாக்கு' என்பது நடைமுறை வார்த்தை. ஆடும்போது பல கேள்விகள் கேட்க இவர்கள் தங்கள் அருள்வாக்கைத் தருவார்கள். ஆனால் கேட்ட கேள்விகளும் அவர்கள் தந்த அருள் வாக்கும் யாருக்கு நினைவில் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டு அம்மன் கொடை அன்று மறுபடி கேள்விகள் கேட்க அவரும் மறுபடி அருள்வாக்கு கொடுப்பார். சென்ற ஆண்டு கொடுத்த அருள்வாக்குகள் சரியாக இருந்தனவா என்று யாரும் கணக்கெடுப்பதில்லை.

இது போன்ற  'அருள்வாக்கு'க்காரர்களோடு எனக்கு இரண்டு அனுபவங்கள். ஒன்றில் நானும் என்னைப்போல் நம்பாத நண்பன் ஒருவனும் நம்பிக்கையோடு சென்றவனோடு உடன் போனோம். நம்பிக்கைக்காரனுக்கு 'பலன்' சொல்லியாச்சி. வேடிக்கைக்காக நம்பிக்கையில்லா நண்பனைப் பற்றி சும்மானாச்சுக்கும் ஒரு கேள்வி கேட்டேன். தம்பிக்கு மனசுல ஒரு கஷ்டம். என்னவாகும் என்றேன். அந்தப் பெண்மணி - வீட்டு வேலை செய்து வந்து, திடீரென்று அருள்வாக்கு கொடுக்கும் அற்புதப் பெண்ணாக லோக்கலில் பெயர் பரவியிருந்தது - வயசுப்பையன் என்ற அனுமானத்தில், காதலிக்கிற பொண்ணு கட்டாயம் கிடைக்கும்; வெளிநாட்டுப் பயணம் இன்னும் சில மாதத்தில் என்று அருள் வாக்கு கொடுத்தது. பிறகு நாங்களே சொன்னோம் - பையனுக்கு லவ்ஸ் ஏதும் கிடையாதுன்னு. சிரிச்சிக்கிட்டே, டமார்னு எனக்கு ஒரு அருள்வாக்கு கொடுத்தது. 'உங்க மூஞ்சிய பார்த்தா .. நல்லா தெரியுது, உங்களுக்கும் அருள் வாக்கு சொல்ற அம்சம் மூஞ்சில நிறைய இருக்குதுன்னு' சொல்லிச்சி. பொழைக்கத் தெரியாத ஆளா ஆய்ட்டேன் .. அப்பவே இறங்கியிருக்கணும் .. !


இதெல்லாம் சின்ன சாமியாடிகளின் கதை. இப்போதெல்லாம் இது பெரிய, பெரிய கார்ப்பரேட் லெவல்ல இந்த 'அருள் வாக்குகள்' சொல்லப்படுகின்றன. இங்கேயும் யாரும் அருள்வாக்குகளின் validity-யை சோதிப்பதில்லை. எல்லாமே ஒரு 'அருள் மயம்' மட்டும்தான் ! ஆனால் currency laundering எல்லாம் இவங்க மூலமா நடக்கிறதாகவும் அதனால் தான் அரசியல்வியாதிகள் இவர்களை நெருங்கியிருப்பதாகவும் நம்ம நித்தீஸானந்தா விவகாரத்தில் ஊடகங்கள் எழுதின. பாபாவா, நித்தீஸா, கல்கியா, மேல்மருவத்தூரா ... எல்லாம் இந்த குரூப்பில் வருகிறார்கள். கல்கி மேல் பயங்கர காட்சிகளெல்லாம் தொலைக்காட்சியில் வந்தன; ஆனால் சில நாளில் கல்கி ஆஷ்ரமத்தின் பக்தி காட்சிகளும் வந்தன. மேல்மருவத்தூர் வரி ஏய்ப்பு விஷயம் வந்தது; அதோடு சரி. அட .. அதைவிட நித்தீஸ் விஷயம் தீயாய் எரிந்தது; ஆனால் தலைவர் போட்ட முதல் கூட்டத்தில் எல்லோரும் முழு அட்டென்டன்ஸ்! எப்படியோ, அவங்க பிஸினஸ் களைகட்டிப் போகுது ... !

அடுத்து கிறித்துவர்கள் மத்தியிலும் 'கடவுளோடு பேசுதல்' நிறைய நடக்குது. இதிலும் பெரிய பிரசங்ககாரர்களுக்கு ஒரு தனியிடம். அவர்களில் பலர் ஏசுவுடன் 'நேரடி உரையாடலை' நடத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் லைன் வைட்டல் லின்க்! எப்படித்தான் இப்படி கதை சொல்கிறார்களோ?! நம்பத்தான் ஆளிருக்கே .. அதனால்தான். ஒரு பிரசங்கியார் மேல் நம்பிக்கை வந்துவிட்டால் எதையும், எல்லாவற்றையும் நம்பிவிடுகிறார்களே! அதோடு, ஒரு பிரசங்கி பிடித்து விட்டால் அதன் பின் அவர், அவரது மனைவி, பிள்ளை குட்டி, மருமகன், மருமகள். பேரன் பேத்தி என்று அவர்கள் குடும்பத்து மேலேயே பக்தி மேலிட இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே கடவுள் காத்திருக்கிறார் போலும். அவர்கள் ஜெபம் பண்ணினால்தான் கடவுள் கேட்பாரென்ற நம்பிக்கை. ஏதோ போனா போகுதுன்னு அவர்கள் வீட்டு நாய் பூனைக்குட்டிகளை விட்டு விட்டார்கள்! இவர்கள் இந்து கார்ப்பரேட்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சும்மா சொல்லக் கூடாது .. நன்றாக வளர்கிறார்கள். ஆனாலும் இதில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். இந்து கார்ப்ரேட் (ஆ)சாமிகள் பெரிய மருத்துவமனை, கல்லூரி அது இதுன்னு பெருசா மக்களுக்கு உதவுவது போல் செய்வது மாதிரி இந்த கிறித்துவ வியாபாரிகள் எதுவும் நல்ல காரிய்ங்கள் செய்வது இல்லை.


இந்துவாக இருந்து கிறித்துவரான ஒருவர் - டாக்டர் - மாரிமுத்துன்னு பெயர். அவர் பையன் பெயர் ஒரு அண்ணாமலை பல்கலையில் கொடூரமான ஒரு கொலைக்கேசில் வந்ததென நினைக்கிறேன். அவரைப் பத்தி என் பாஸ் சொன்ன கதை நன்றாக இருந்தது. என் பாஸும் இந்துவாக இருந்து கிறித்துவரானவர். அந்த டாக்டர் படிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவராம். தேர்வு நேரத்தில் பயந்து போய் ஏசுவிடம் இறைந்து மன்றாடியிருக்கிறார். அன்று அவரது "கனவில்" ஏசு வந்து அப்படியே Question Paper-யைக் காண்பித்திருக்கிறார். யாரிடம் இதைச் சொல்லாதே என்று வேறு சொல்லிச் சென்றிருக்கிறார் ஏசு! ஆனாலும் ஒரு evidence வேணுமில்லையா .. அதனால் நம்ம டாக். மாரி நண்பர்களிடம் கேள்விகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.


அடுத்த நாள் .. தேர்வு. இங்க பாருங்கய்யா ... அப்படியே ஏசு கொடுத்த கேள்விகள். அதை மட்டும் சாய்ஸ் விடாமல் படித்த நம்ம டாக். மாரி அழகாக எழுதி பாஸ் பண்ணிட்டார். கடவுள் தன்னிடம் வந்து பேசி தன்னைப் பாஸ் ஆக்கிய பின் நம்ம டாக். என்ன பண்ண முடியும்? கிறித்துவனாகி விட்டார். இதைத் தன் பிரசங்கத்தில் 'சாட்சி' சொல்லியிருக்கிறார் -- இது என் பாஸ் சொன்ன கதை.

என் பாஸின் மகன் இந்தக் கதை சொல்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்தான் எங்கள் துறையிலேயே படித்து விட்டுச் சென்றிருந்தான். நல்லா படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பையன். பாஸ் கதை சொல்லியதும் கொஞ்சம் pause விட்டு விட்டு, வேறு ஏதேதோ பேசிவிட்டு, மெல்ல பாஸிடம் 'உங்க பையன் சீனு படிக்கும்போது அவனுக்கு Question Paper leak பண்ணியிருக்கீங்களா?ன்னு மெல்ல கேட்டேன். பாஸுக்கு கோபம்; ஆனாலும் 'என்ன Sam. இப்படிக் கேட்டுட்டீங்க? நானெல்லாம் அப்படியெல்லாம் பண்ற ஆளா .. அந்த மாதிரி தப்பெல்லாம் செய்வேனா?' அப்டின்னு சென்டியா கேட்டார்.

'பாஸ்! நீங்களே உங்க பையனுக்கு Question Paper leak பண்றது தப்புன்னு சொல்றீங்க. ஆனா உங்க கடவுளுக்கு அது தப்பா தெரியாதா? படிச்சவனுக்கு உதவி செய்யாம, இப்படி ஊர்சுத்திக்கு ஏன் உதவுறார்?' -- அப்டின்னேன். பாஸ் கொஞ்சம் அப்செட். நான் தொடர்ந்தேன்: 'ஏன் உங்க கர்த்தரை நீங்களே இப்படி தரம் தாழ்த்துறீங்க? நீங்க கூட செய்ய தயங்குற ஒரு தப்பை உங்க ஆண்டவன் செய்வார்னு ஒரு ஆள் சொன்னதை எப்படி நம்புறீங்க? அதை கோவில்ல வச்சி சாட்சியா ஒருத்தன் சொன்னா நம்பிடுவதா? -- அப்டின்னேன். .... பாஸ் அப்பீட் அந்த இடத்திலிருந்து!

இஸ்லாம் மதம் இதில் ஒரு தனி வகை. இன்னும் இறுக்கமான மதம். இங்கே யாரும் கடவுளைப் பார்த்தேன்; கடவுளிடம் பேசினேன் என்று சொன்னதாக நினைவில்லை. (ஆனால், Bahai  என்ற புதிய சமயத்தில் Bahá'u'lláh என்று ஒருவர்  தானும் ஒரு நபி என்று சொல்லி புதிய சமயத்தை ஏற்படுத்தினார். அந்த மதத்தைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறது: Bahá’í Faith is today among the fastest-growing of the world’s religions. With more than five million followers,  it is the second-most widespread faith,surpassing every religion but Christianity)  இருந்தாலும்  யாரும் இஸ்லாமிய மதத்தில் கடவுள் என்னிடம் பேசினார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அது தேவ தூஷணமாகி விடும்.பத்வா தான் அடுத்தது. இதற்கு பாகிஸ்தானில் தூக்குத் தண்டனையோ ?

இஸ்லாமில் முகமது மட்டுமே 'கடவுளோடு பேசியவர்'. அதுவும் முதலில் அவருக்கு அதை நம்ப முடியாமலிருந்து, பிறகு துணைவியார் confirm செய்த பிறகே அவரும் ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை குரான் இறங்கும்போதும் அவர் சில உடல் மாற்றங்களுக்கு உள்ளாகிறார். இங்கும் அவர் கடவுளோடு, அல்லது அவரது தேவ தூதரோடு பேசினார் என்பது முகமதுவின் அறிவிப்பு. இதற்கு என்ன சான்று? அவர் அப்படி ஜிப்ரேலிடமிருந்துதான் குரானைப் பெற்றாரா என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். தேவ தூதர் வந்து பேசினாரா ... இல்லை, நான் முன்பே சொன்னதுபோன்ற அது ஒரு மனப்பிரம்மையா என்பதை யார் உறுதி செய்ய முடியும்? முகமது சொன்னார்; நான் நம்புகிறேன்; ஏனென்றால் சின்னப் பிள்ளையிலேயே அது சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பது மட்டுமே இந்த விஷயத்தில் ஒரே ஒரு சான்று. ஜிப்ரேல் கொடுத்த வேதம் பல installments-களில், பல ஆண்டுகளில்தான் (610 to 632  - 22 ஆண்டுகள்)கொடுக்கப்படுகிறது. அதில் என்ன லாஜிக் என்று தெரியவில்லை. கொடுக்க நினைத்த கடவுள் ஒட்டு மொத்தமாக ஏன் கொடுக்கவில்லை? அதுவும் கொடுத்த கட்டளைகள் முறையாக -சீரியல் ஆர்டராகக் - கொடுக்கப்படாமல் அவ்வப்போது கொடுக்கப்பட்டு, பிறகு மனிதர்களால்  முறையாகத் தொகுக்கப்பட்டது என்று படித்து தெரிந்து கொண்டேன். ஏன் இப்படி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது .. ஏசு ஏன் 12-30 வயது வரை ரகசிய வாழ்க்கை வாழ்ந்தார் என்றெல்லாம் கேட்டால் கிறித்துவ நம்பிக்கையாளர்களுக்குப் பிடிக்காது. அது போல்தான் இங்கும். ஆனால், முகமது சொன்னார்;  அதனால் நம்புகிறேன் என்பது நம்பிக்கையாளர்களுக்குப் போதும்; ஆனால் எல்லோருக்கும் போதுமா?

ஆர்க்கிமிடீஸின் eureka  கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆர்க்கிமிடீஸ் ஒரு பிரச்சனைக்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறார். நினைவெல்லாம் அதிலேயே இருக்கிறது. அந்த நினைவின் நீட்சியாக அவருக்குத் திடீரென ஒரு பதில் கிடைக்கிறது. இதில், அவரது  நினைவின் நீட்சியாகப் பதில் கிடைத்தது என்பது சரியா? அல்லது, அவருக்கு கடவுள் வந்து செய்தி சொன்னார் என்பது சரியா?  நான் சொன்ன மனப் பிரம்மை என்பதும் இத்தகையதே,. நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நினைவு வருகிறது. அது நம் நினைவின் ஆழத்திலிருந்து வந்த ஒரு பதில். நமது பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கலாம். அத்தீர்வு நாம் ஏற்கெனவே நினைத்து வந்ததின் தொடர்பே.

ஆர்க்கிமிடீஸ் மட்டுமல்ல .. இது போல பல அறிவியல் உண்மைகள் கனவுகளாக, நினைவுகளாக திடீரென தோன்றியவைகள்தான். சில சான்றுகள்:

The scientists credited with the top seven eureka moments, in an ascending order of excitement (with the discovery of penicillin the winner) are:
இதை விடவும்  Kekulé என்ற வேதியியல் அறிஞருக்கு வந்த 'பாம்புக் கனவே' benzene என்ற வேதிப்பொருளுக்கான உருவமைப்பை வெளிப்படுத்தியது. அது போலவே, கலிலியோ கோவிலில் உட்கார்ந்து ஒழுங்காக பிரசங்கத்தைக் கேட்காமல், கோவில் ஆடிக்கொண்டிருந்த chandelier-ன் அசைவின் ஒழுக்கத்தைக் கவனித்து பெண்டுலத்தைக் கண்டுபிடித்தார்.


இந்த அறிவியலாளர்களுக்கு கடவுளே இப்படி வந்து பதில் கொடுத்தார் என்று ஏன் சொல்லக்கூடாது?

அப்படியே நம்பிக்கையாளர்கள் சொல்வது போல் கடவுளே வந்து 'ஏதாவது' சொன்னால் அது அறிவியல் மொழியோடு ஒட்டிய ஒரு மொழியாக, சரியான பொருளோடு சொன்ன அன்று இருந்த காலத்தை ஒட்டி இல்லாமல் எப்போதைக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் குரான் முழுவதும் அறிவியலோடு ஒன்றியது என்று சொல்லிக்கொண்டிருப்பதால் அதிலிருந்தே சில வசனங்களை எடுத்து விவாதிப்போம்.

உலக படைப்பைப் பற்றிக் கூறினால் உருண்டையான இந்த உலகைப் படைத்தார். சூரியன், நிலவு இப்படி இப்படி இருக்கும் என்று சொன்னால் சரி; அதை விட்டு விட்டு, பூமியை நான் விரிப்பேன்; மலைகளை நட்டு வைப்பேன், சூரியன் இரவு வணங்க வரும் ...  என்பது போன்ற பொத்தாம் பொதுவான சொற்கள் நமக்கு இன்றைய அறிவியல் நிலையில் என்ன புதியதாக, சரியாக சொல்லிவிட்டன? அதைவிட பதிவுகளில் நன்கு விவாதிக்கப்பட்ட விந்துவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இனவிருத்திப் பொருட்கள், விந்து-முட்டை இணைதல், நிறமிகள் ஒன்று சேரல், haploid, diploid, fertilization, மூளையும் இதயமும் எப்படி வளர ஆரம்பிக்கன்றன என்பது போல் அன்றே சொன்னால் இன்றைய அறிவியலுக்கு ஒத்து வரும். அதை விட்டு விட்டு ...
086.006 He is created from a drop emitted- விந்து  மிகச்சிறிய ஒன்று; அது  என்ன a drop? Is sperm a drop of liquid?
086.007 Proceeding from between the backbone and the ribs:    'ribs' அப்டின்னா நெஞ்செலும்பு. முதுகெலும்பிற்கும், நெஞ்செலும்புக்கும் நடுவிலிருந்து என்றால் அது நெஞ்சாங்கூட்டிலிருந்து என்றாகிறது. வர்ர இடத்தை சரியா சொல்றதா இருந்தா சொல்லணும்; இல்லட்டா சொல்லாம விட்டிரலாம்.

ஒரு மாணவன் தப்பான விடை தருவதைவிட குழப்பமான விடை கொடுத்தால்  நிச்சயம் அவனுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும். சொல்ல வந்தால் சொல்ல வந்ததை தெளிவாக, சரியாக, இக்காலத்திற்கும் பொருந்துவதாக 'கடவுள்' அப்பவே சொல்லியிருக்கணும். அது இல்லைன்னா அது கடவுள் சொன்னதாக இருப்பதாக நினைப்பது தவறு. கடவுள் சொன்னதாக இருந்தால் அது 2+2 = 4 என்பதுபோல் கனக் கச்சிதமாக இருக்க வேண்டும். கடவுள் சொன்னதுக்கு அர்த்தம் இதுல்ல .. அதுன்னு சொன்னா ...அதுல்ல  .. இதுன்னு சொன்னா ?

ஆக, கடவுள் சொன்னார் என்பதெல்லாமே மனப்பிரம்மை; சுயக் குழப்பம்; இதெல்லாம் இல்லையென்றால், அது வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்று வேலை.

இன்னொரு விஷயம்:   கிறித்துவத்திலும் ஏக கடவுள் என்ற நிலையுண்டு. என்னைத்தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை என்ற தத்துவம்தான். ஆயினும் வழி தவறினால் உனக்கு என்னென்ன நடக்கும் என்ற விஸ்தாரங்கள் இங்கே இல்லையென நினைக்கிறேன். ஆனால் கிறித்துவத்தைத் தொடர்ந்து வந்த இஸ்லாமியத்தில் அவைகள் நறுக்குத் தெறித்தது போல் சொல்லியுள்ளன - நல்ல அச்சுறுத்தலாகவே ...


[ஹல்ரத் அலீ: "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதம்தான் சிறந்த வழி. (தன் அறிவைக் கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல்படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி விடுவான்."

16:106: "அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.)


மூன்று ஆபிரஹாமிய மதங்களில் எப்படி வந்தது இந்த பெரும் வேற்றுமை?
பழைய ஏற்பாட்டில் இருக்கும் கொடூரம் புதிய ஏற்பாட்டில் கொஞ்சம் நலிந்து. பின் ஏன் 'கடைசி ஏற்பாட்டில் இப்படி ஆனது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அதுவும் இந்தக் கடைசிக் கடவுள் மிக வல்லினமானவராகத் தெரிகிறது. நிறைய பயமாக இருக்கிறது.

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்று சொல்லும் ஒரு  'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது இஸ்லாமில் ஒரு நல்ல நகைமுரண். அதோடு இப்படி குரானில் பேசப்படுவது வன்முறையல்ல; அது வெறும் எச்சரிக்கைதான் என்று சொல்வது அதைவிட மிகப் பெரிய நகைமுரண்.


*


Sunday, November 07, 2010

453. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 4

*
Image and video hosting by TinyPic


மற்றைய இடுகைகள்: 

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை

*


கிறித்துவ புனிதர்களுக்கெல்லாம் மனதில் எவ்வித கேள்விகளோ குழப்பங்களோ வருவதில்லை என்று பலரும் நினப்பதுண்டு.

Saturday, November 06, 2010

452. தீபாவளி வாழ்த்துகளும் ...

Image and video hosting by TinyPic

தீபாவளிக்கு முந்திய நாள் மாலை. ஊருக்குள் குவிந்து கிடந்த கூட்டத்தை ஊடுருவி ஒன்றிணைந்து மதுரைப் பதிவர்கள் ஒரு தீபாவளி சந்திப்பு நடத்தினோம்.

Friday, October 29, 2010

451. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 3

*






*

மற்றைய இடுகைகள்; 

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை


*


நரகம என்று ஒன்றிருந்தால் அது இதுவாகத்தானிருக்கும். கடவுள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. ஜெபங்கள் இல்லை; தேவ நம்பிக்கைகள் இல்லை; அன்பு என்றும் ஏதுமில்லை.

Wednesday, October 27, 2010

450. அன்னை தெரஸா - COME BE MY LIGHT ... 2

*
முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை

*


*

மொழியாக்கம் செய்யப்பட்ட அன்னையின் கடிதம் ஒன்று கீழேயுள்ளது.

Monday, October 25, 2010

449. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ... 3

*


முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3



*





முதலில் இப்படியும் சில எண்ணங்கள் .....

Thursday, October 21, 2010

448. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ... 2

*

முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3

*







*

Philip Pullman அதிகமாக குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர்.நடுவிலே இப்படி ஒரு நூல்.

Tuesday, October 12, 2010

446. SALAAM - LETTER TO THE HINDU

*

I have sent the following to LETTER TO THE EDITOR of The Hindu.

Sunday, October 10, 2010

445. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (COMMON WEALTH GAMES)

*

COMMON WEALTH GAMES - (நடுவில உள்ள WEALTH எங்கெங்கேயோ போயிரிச்சாமே ..!)

Wednesday, October 06, 2010

444. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*
செல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி. 

Wednesday, September 29, 2010

443. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ...1

*

முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3




இது இப்போது வாசித்து முடித்த புத்தகம்.

பெயரைக்  கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல். வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி, கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன்.

Wednesday, September 22, 2010

442. சிங்கப்பூர் -- முடிவுரை மாதிரி ...

*

சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு  நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.

Tuesday, September 21, 2010

441. சிங்கப்பூர் -- ஆடைகளில் ஒரு தத்துவம்

*

 சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே அமெரிக்காவின் சாயலை அப்படியே பார்க்க முடிந்தது. சாலைகள், விரையும் வண்டிகள், சாலை விதிகள், அப்பழுக்கற்று அவைகளைப் பின்பற்றும் மக்கள், நடைபாதைகளின் அழகு, பராமரிப்பு, ரயில், பேருந்துகளின் அழகான நிலை, விரைந்து வரும் மக்களிடமும் காணப்படும் நாகரீகம்  -- இப்படி அந்த லிஸ்ட் மிக மிக நீளம்.



ஆச்சரியங்களை அளித்த இந்த வேற்றுமைகளோடு, ஷாக் கொடுத்த இன்னொரு விஷயம் -- மக்களின் ஆடைகள். பலரும், பொதுவாக அனைத்து சீனப் பெண் மக்களும் வயது வேற்றுமையின்றி அணிந்திருந்த ஆடைகள் முதல் இரு நாளில் என்னை  வாயைப் பிளக்க வைத்தன. மிக மிகச்சிறிய கால் சராய்கள். மேலே போட்டிருக்கும் ஆடைகளும் எந்த வித fixed style என்றில்லாமல் 'என்னத்தையோ' போட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளாடைகளின் நாடாவும், வெளியாடையின் நாடாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்கும். (நம்மூரில் அதற்கு sunday is longer than monday  என்றெல்லாம் குழூக்குறிகள் உண்டு; அந்த மக்களுக்கு அந்தக் கவலையே இல்லை.) Wondering whether it was all a "calculated carelessness"?!





இப்படி அரை குறையாக ஆடை அணிந்து செல்கிறார்களே என்று ஆண்கள் யாரும் வாய்பிளந்து நிற்கிறார்களா என்றால் யாரும் இல்லை. முதல் இரு நாளில் எனக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும் தெரிந்தது - மூன்றாவது நாளிலிருந்து அப்படியில்லை. என்னைப் போலவே ஒரு தமிழ் இளந்தாரி ஒரு நாளில் வாய்பிளந்து பார்ப்பதைப் பார்த்தேன். ஒரு வேளை அவனும் இப்போதுதான் சிங்கைக்கு வந்திருக்க வேண்டும்.

தொலைக் காட்சியில் ஒரு முறை நடிகைகள் ஷ்ரேயா (மிகச்சின்ன கால் சராயைப் போட்டுக் கொண்டு கால் மேல் கால் மாற்றி உட்கார்ந்திருந்தார்.), ரீமா சென்  மேலே பட்டை ஏதுமில்லாமல் 'எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கும்' மேல்சட்டையுடன் இருந்தவைகளைப் பார்க்கும்போது எனக்கே 'என்னடா இப்படி இதுக எல்லாம் சட்டை போடுதுகள்' அப்டின்னு நினைத்தேன். நாலு இடம் பார்த்தாதான் 'இதெல்லாம் சகஜமப்பா' அப்டின்ற நினைப்பு வரும் போலும்.

நம்மூர்ல நடிகைகள் போடும் ஆடைகளை சர்வ சாதாரணமாக இங்கே எல்லா மக்களும் போட்டுக் கொண்டு போவதைப் பார்த்த பின்தான் நாம் தான் காலத்தால் மிகவும் பின் தங்கி விட்டோம் அப்டின்னு தோன்றியது.

அறுபது எழுபதுகளில் 'வாலிப வயசில்' இருந்த அப்போதைய இளைஞர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள்; அவர்கள் ஆடைகளுக்குக் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். அப்போதெல்லாம் ரெடிமேட்  ஆடைகள் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கென்றுதான் நாங்கள் சொல்வோம் -- விலை அப்படி இருக்கும். எல்லோரும் போடுவதெல்லாம் tailored ஆடைகள்தான். அப்போதெல்லாம் அமெரிக்காவில்  பணக்காரர்கள் மட்டுமே tailored ஆடைகள் போடுவார்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியாக இருக்கும்.

சட்டை போட்டு 'டக்' பண்ணினால், சட்டையின் பின் பக்கம் தோள்பட்டை பக்கம் உள்ள இரு மடிப்புகள் மடிப்பு மாறாமல் நெடுக இருந்து, அதை டக் செய்யணும். ஒரு வேளை ஸ்லாக் சட்டை போட்டால் அதன் முன் மடிப்பு அப்படியே நேராக pants-ன் முன் மடிப்பில் சரியாகப் பொருந்தணும். pants-ன் pleats - மடிப்புகள் நன்றாக தைக்கப்பட்டு, சரியாக iron  செய்யப்பட்டு கத்தி மாதிரி இருக்கணும். அட ... ஷூ கூட அவ்வப்போது டிசைன் மாறும். ஒரு தடவை ஊசி மாதிரி .. கொஞ்ச நாளில் ஷூவின் முனை தட்டையாக இருக்கணும். லேடிஸ் ஹை ஹீல்ஸ் செருப்பு மாதிரி கொஞ்ச நாள் ஆண்கள் ஷூவும் உயர்ந்த ஹீல்ஸோடு போட்டோம். (மோகன் - அதாங்க .. மைக் பிடிச்சிக்கிட்டு பாடிக்கிட்டே ஒரு நடிகர் இருப்பாரே, அவரது ட்ரேட் மார்க்கே அந்த டைப் ஷூ தான்!) இந்த பெல்ட் இல்லை ... அது பட்ட பாடு. 65-ம் வருடத்தில் பெல்ட் நம் அரை ஞாண் கயிறு சைசில் இருக்கும். அதிலிருந்து நாலைந்து ஆண்டுகள் கழித்து சரியான பட்டை சைசில் ஆயிரிச்சி. உரித்தெடுக்கும் டைட் pants அறுபதுகளின் கடைசியில். ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் படா பெல் பாட்டம்ஸ்.

எழுபது வரை இப்படி இருந்த 'ஸ்டைல்' தொன்னூறுகளில் முற்றிலும் மாறி விட்டது. ரெடிமேட் ஆடைகளின் காலம் ஆரம்பித்தது. அதுவரை தனித்தனியாக தைத்து போட்ட ஆடைகளில் நாங்கள் காட்டிய நுணுக்கங்கள் காணாமல் போனது. ஜீன்ஸுகள் வந்தன. casual wear என்ற காலம் பிறந்து விட்டது. அறுபதிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை டைட்ஸ், பெல் பாட்டம்ஸ் என்றெல்லாம் மாறி மாறி வந்த pants அனேகமாக ஒரே "ரூபத்தைப்" பெற்றன. அதன்பிறகு ஆண்களின் ஆடையில் மாற்றங்கள் மிகக் கம்மி.

ஆண்கள் ஆடையில்தான் இந்த மாற்றங்களா என்றால் பெண்களின் ஆடையிலும் தான். தாவணிகள் போய் சூரிதார் வரும்போது மிகவும் அவை மிக மெல்ல மெல்லவே வந்தன. பெண்களுக்கும் தடுமாற்றம். சமூகத்திற்கும் அதை ஒத்துக் கொள்ள காலம் எடுத்தது. ஒரு மாணவி சூரிதார் போட்டு என வகுப்பிற்கு வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்ற கல்லூரி ஆசிரியர்களும் இருந்தார்கள். தாவணி --> சூரிதார் -- இதற்கெடுத்த காலத்தையும் விட குறைவாகவே சூரிதார் --> pants  எடுத்தது. அதிலும் மதுரையை விட சென்னையில் இந்த வேகம் கொஞ்சம் அதிகம். சென்னையை விட பெண்களூரில் இன்னும் வேகம். அதையும் தாண்டி அடுத்த நாடுகளில் வேகம் இன்னும் அதிகம். நமது நாட்டில் pants வரை பெண்கள் வந்து விட்டார்கள். அரைக்கால் சட்டையும் மெல்ல எட்டிப் பார்க்கிறது. சிங்கையில் முழுமையாக வந்து விட்டது.

சிங்கையில் ஒரு வாரம் இருந்து விட்டு விமான நிலையத்தில் கூட்டமாய் காத்திருந்த போது சுற்றிலும் நம்மூர் பெண்கள். எல்லா பெண்களிடமும், சேலை கட்டியோர் தங்கள் முந்தானைகளிலும், சூரிதார் பெண்கள் தங்கள் துப்பட்டாவிலும் மட்டுமே தங்கள் கற்பு 'தொங்கிக் கொண்டிருப்பது' போல் இருந்ததைக் காண முடிந்தது. அது எனக்கு இப்போது வேடிக்கையாக இருந்தது.

நாங்கள் எழுபதுகளில் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் இப்போது பெண்கள் தங்கள் உடைகளோடு ஒன்றிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கைப் பெண்கள் அதையும் தாண்டி வந்து விட்டார்கள். அந்த உடைகளில் அவர்களைப் பார்க்கும் போது working women என்ற ஒரு நினைப்பு உடனே வந்து விடுகின்றது. அதில் முதலில் தோன்றிய so called  கவர்ச்சி என்று ஏதுமில்லை. மிக சாதாரணமாகத் தோன்றியது. அந்த பெண்கள் ஆடைகளைத் துறந்து விட்டார்கள். ஆடைகளுக்குரிய அதீத முக்கியத்துவத்தைத் துறந்து விட்டார்கள்.
ALVIN TOFFLER  ஆடைகளின் fashions மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை என்று தனது நூல் FUTURE SHOCK-ல் கூறுவார். முப்பது வருடங்களுக்கு ஒரு cycle  என்பார் அவர். ஆனாலும் அவர் சொன்னதை விடவே இன்னும் வேகமாகவே மாறி வருகின்றன. அந்த மாற்றங்களை எதிர் நோக்குவதும் அதை ஏற்றுக் கொள்வதுமே நமது தகவுடைத்தன்மை என்பார். நாளை நம்மிடத்தில் மெல்ல வரப்போகும் ஒரு மாற்றத்தை திடீரென்று சிங்கை போனதால் பார்த்தேன்.அதனால் முதலில் சிறிதே FUTURE SHOCK !




*
ஒரு வேளை யாராவது இந்த இடுகையை வாசிக்க நேர்ந்து, ஒரு பின்னூட்டமும் போட நினைத்தல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
'தமிழ்ப்பண்பாடு' என்ற வார்த்தை அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்படி ஒன்றுமே, எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்த வரை 'தமிழ்ப்பண்பாடு' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை.









Monday, September 20, 2010

440. சிங்கப்பூர் -- SINGAPORE FLYER

*


சிங்கப்பூர் சுழல் குடை ... ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒரு பெரும் சக்கரம். 40 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமான இரும்பு அதிசயம். உலகத்தில் இதுபோல் உள்ள பெரும் சக்கரங்களில் இதுவே மிகப் பெரியதாம்.

Sunday, September 19, 2010

439. சிங்கப்பூர் -- கண்காட்சியகம்



சென்ற பதிவில் சொன்ன 'தண்ணிக்கடைகள்' இருந்த தெருவைப் பார்த்து விட்டு இயல்பாக நடந்து வந்து கொண்டிருந்த போது  இன்னொரு கட்டிடம் எங்கள் கவனைத்தைக் கவர்ந்தது.

Saturday, September 18, 2010

438. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*

கெட்ட வார்த்தை எதுவும் இல்லாமல் இந்த இடுகையை இட வேண்டுமென்ற முழு முயற்சியோடுதான் ஆரம்பித்துள்ளேன். ஒரு வேளை ஏதாவது வார்த்தை வந்து விழுந்து தொலைத்தால் அது 'காலத்தின் கட்டாயம்'!

Wednesday, September 15, 2010

437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...






*

சிங்கையில் இறங்கி வெளியே சாலைகளுக்கு வந்ததுமே தெரிந்த முதல் உண்மை - நாம் மூன்றாம் உலகத்தில் இருந்து முதலாம் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்.

Tuesday, September 14, 2010

436. சிங்கப்பூர் -- வீடுகள்

  






*
'ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க' என்று சொல்லுவது போல் இந்த நாட்டை முன்னோக்கி நடத்த யோசித்தவர்கள் வாழ்க்கையின், பொருளாதாரத்தின், சமூகத்தில் பல படிகளையும் நன்கு யோசித்து நல்ல பல முடிவுகளை எடுத்துள்ளனர். எடுத்த முடிவுகளைச் சட்டங்களாக்கி, அவைகளை முறையாகவும் செயல்படுத்தி வருகின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நம்ம ஊர்ல ஆட்டோக்களுக்கு மீட்டர் போட ஒரு அரசாலும் முடியவில்லை!
கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே போகும் உத்தமர்களை நிறுத்த காவல் துறையால் முடியவில்லை!
தலைக்கவசம் போட அரசின் கருணை இடம் கொடுக்கவில்லை!
ஒரு அரசியல்வாதியின் ஊழலை நீதிமன்றத்தில் நம் C.B.I.-ஆல் நிறுவ முடியவில்லை!
தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்க நீதியரசர்களுக்கு மனமில்லை!

இது போல் நிறைய இருக்கு அழுது கொண்டே சொல்ல ... 
............. என்னமோ போங்க! நம் தலையெழுத்து!!

பரப்பளவு பற்றாக் குறையினால் அடுக்கு மாடி வீடுகளையே நிறைய கட்டியுள்ளார்கள். அறுபதுகளில் ஊரில் அங்கங்கே வெறும் கூரை வீடுகளாக இருந்தனவாம். அன்றைய குப்பங்கள் .. இன்றைய கான்க்ரீட் காடுகள். எங்கும் பல மாடிக்கட்டிடங்கள். 15 முதல் 50 வரையிலான மாடிக் கட்டிடங்கள். அவ்வாறு கட்டும்போதே அங்கே யார் யாரைக் குடி வைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளார்கள்.  இருக்கும் மக்கள் நால்வகை மக்கள்: மலாய், சீனா, இந்திய, மற்றையவர் என நான்கு பிரிவு மக்கள்; வெவ்வேறு விழுக்காட்டில் உள்ளார்கள். சாதாரணமான, திட்டமில்லாத குடியேற்றம் என்றால் அந்தந்த வகை மக்கள் மொத்தமாக வீடுகளில் குடியேறியிருக்கலாம். அப்படியிருந்திருந்தால்  ஒரு புறம் மலாய், மறுபுறம் சீனாக்காரர்கள்; இன்னொரு பக்கம் தமிழர்கள் என்றெல்லாம் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பகுதிகளிலும் நாட்டில் இருக்கும் மக்களின் விழுக்காட்டின்படி மட்டுமே வீடுகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. 'அந்த லொக்காலிட்டி, இந்த லொக்காலிட்டி' என்ற பேச்சுக்கே இடமில்லை.  எல்லோரும் எங்கும் ....நம்ம ஊர் சமத்துவபுரம் போல் அங்கு சரியாக நடந்து வருகிறது.

வீட்டுத் தொகுதிகள் எண்களால் குறிக்கப்பட எங்கிருந்தும் வாடகைக்காரில் போய் வருவது எளிதாகி விடுகிறது. எண்களைச் சொன்னால் காரிலுள்ள G.P.S. மூலம் எளிதாகக் கண்டு பிடிக்க முடிகிறது. வீடுகளில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் வருவது நல்ல தண்ணீர் மட்டுமே. அமெரிக்காவிலும் முன்பு இதே நிலையைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. சிங்கையில் தண்ணீரும் இறக்குமதிதானாம். மலேஷியா நாட்டிலிருந்து தண்ணீரைப் பெற்று அதை நல்ல நீராக்கி அவர்களுக்கே திரும்ப கொடுத்து லாப வியாபாரம். அதோடு தங்களுக்கும் தண்ணீரை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். வீட்டைச் சுத்த பத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். அவ்வப்போது வீடுகளின் நிலையை அரசு  கண்காணிக்கிறது.  கொசு போன்றவைகளை உருவாக்கும் வழியாக தண்ணீர் எங்கும் கட்டிக் கிடந்தால் அதற்கு தண்டம் உண்டு. நம்ம ஊர்ல மாதிரி அங்கங்க எச்சி துப்புறது, கண்ட இடத்தில் குப்பை போடுவது இவைகளைச் சிறு வயதிலிருந்தே தடை செய்யப்பட்ட விஷயமாக ஊட்டி விட்டிருக்கிறார்கள். எங்கும் எதிலும் குப்பையில்லை; அழுக்கில்லை. அட .. சாலைகள் கூட எவ்வளவு சுத்தம்.வீடுகளில் கூட நம் குப்பைகளை அந்தந்த மாடியில் உள்ள  ஒரு பொந்தில் கொட்டி விடுகிறார்கள். குழாய் வழியாக அது 'மறைந்தே' விடுகிறது.

வீட்டுத் தொகுதிகளைச் சுற்றி நல்ல புல்வெளி; இரவில் உண்டு களிக்க திறந்த இடங்கள்; உடற்பயிற்சிக்கான இடங்கள்; வயதானவர்களுக்கான கீழ்த்தளத்தில் ஓரிடம்; வீட்டில்  நல்லது கெட்டது எதற்கும் ஒரு பொதுவிடம் - கல்யாணமோ, கடைசிப் பயணமோ அங்கே நடத்திக் கொள்ள வசதி -- self contained complexes.

பதினேழரை வயதில் ஆண்கள் இரண்டரை ஆண்டு கட்டாய ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும். இளைஞர்கள் அதன்பின் வேலைக்குச் சேரும்போது இந்த இரண்டரை ஆண்டுகளும் அவர்களின்  தொழில் வரலாற்றுப் பதிவில் இடம் பெறுகிறது.இளைஞர்கள் அந்த ஆண்டுகளில் முழு மன வளர்ச்சி பெறுவது இயல்பாக நடந்து வருகிறது.  வாழ்க்கையில் அவர்கள் முறையான பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ள இந்தப் பயிற்சி உதவுகிறது. குடும்பத்திலிருந்தும் சிறிது விலகல்  வந்து விடுகிறது. அதன்பின் அவர்கள் ஒரு வளர்ந்த தனித்த மனிதனாக இருப்பதே நடைமுறை போலும்.

ஒவ்வொரு வீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் ஒரு M.R.T. நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அதோடு  ஒரு பெரிய Mall ஒன்றும் பக்கத்திலேயே. இன்னொன்றும் உண்டு. ஒரு பெரிய food court.  பாதி கால்பந்து மைதான சைஸில் ஒரு சாப்பாட்டு இடம். அதைச் சுற்றிலும் பல கடைகள். உங்களுக்கு வேண்டியதை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலாம். ஒரு சனி மாலை அந்தப் பக்கம் போனேன். எங்கும் எதிலும் காலி பியர் பாட்டில்கள். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து மக்கள் சோம பானம் குடிக்கலாமாம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஒரு food court-க்குப் போனோம். இரண்டு மணியளவில் கிளம்பி போனால் பக்கத்திலிருந்த சாலையின் நடை மேடையில் ஒரு கச்சேரி - நம்ம ஊரு பசங்கதான் - நடந்துகிட்டு இருந்திச்சி. food court-ல் அம்புட்டு கூட்டம். ஜமாய்க்கிறாங்க'பா!

ஏற்கெனவே சொன்னது போல் underground bunkers நிறைய கட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் எல்லா தேவைகளுக்கும் சிங்கை அயல்நாட்டு இறக்குமதிகளை நம்பித்தான் உள்ளது - தண்ணீர் கூட. ஆனாலும் எப்போதும்  தேவையான பொருட்களை அரசு சேமித்து வைத்துள்ளது என்றும், இரு முழு ஆண்டுகள் வெளிநாட்டு இறக்குமதி இல்லாவிட்டாலுமே நாடு அதை சமாளிக்கும் அளவிற்கு தேவையான எல்லா பொருட்களையும்  சேமித்து வைத்திருக்குமாம். ரூம் போட்டு அல்ல .. ஒரு பெரிய ஹால் பிடித்துப் போட்டு யோசித்து வைத்திருக்கிறார்கள்.

இரும்புக் கதவு
இதையெல்லாம் விட என்னை மிகக் கவர்ந்த விஷயம் - ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இரும்பறை உள்ளது. கதவும் தடிமனான இரும்புக் கதவு. அந்த அறை நம் தமிழ் மக்களால் பூசை அறையாகவும், மற்றவர்களால் store room-ஆகவும் பயன் படுத்தப் படுகிறதாம். அந்த அறையில் எந்த வித மாற்றமும் செய்யப்படக் கூடாதாம். இந்த அறை ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திலும் ஒரே இடத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக வரும்படி கட்டியுள்ளனர். எந்த வகை மனித, இயற்கை சீர்கேடுகள் நடந்தாலும் இந்த அறைகள் பாதுகாப்பானதாக இருக்கும். அடுக்குமாடிக் கட்டிடங்கள் நொறுங்கினாலும் இந்த அறைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டியுள்ளார்கள்.

மக்கள் பழகும் எல்லா மொழிகளிலும் ஒரு அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது, தேவையான பொழுது இந்த அறைக்குள் மக்கள் ஒரு ரேடியோவும் சாப்பாட்டுடனும் இந்த அறைக்குள் நுழைந்து கொள்ள வேண்டுமாம்.
எப்ப்டியெல்லாம் யோசிச்சிருக்காங்க ... நாட்டுத் தலைவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருந்தால் இரு ஆண்டுகளுக்கு தேவையானதை சேமித்து வைத்தல், இது போன்ற இரும்பறை கட்டுதல் என்று பல விதயங்களை யோசித்து செய்திருப்பார்கள்!! ஆச்சரியமில்லையா?






















Monday, September 13, 2010

435. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

?????

இன்றைய இந்துவில் Forbes பத்திரிகையின் சில எதிர்கால நிகழ்வுகளாகச் சொல்லப்படுவதில் முதன்மையானது அம்பானி விரைவில் உலகின் முதல் பணக்காரராக உருவாகிவிடுவார் என்பது. நானும் அப்பத்திரிகையின் பணக்கார லிஸ்டுகளைப் பார்ப்பதுண்டு. அதில் எனக்கு பெரிய ஆச்சரியம் எப்படி நம்மூர்  அரசியல்வாதிகள் பெயர் வருவதேயில்லையே என்பதுதான். அதெல்லாம் கருப்பு - வெள்ளை என்பதைப் பொருத்ததோ என்னவோ? நம்மூர் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் என்ன வெளியேவா தெரியப் போகிறது. ஆனால் அப்பப்போ மூட்டை மூட்டையாக பணம் கிடைத்தது என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வருகிறது. என்ன ஆகும்?  அதோடு, எத்தனையோ லட்சம் கோடிகள் நம்மூர் ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் கிடக்கிறதாமே. அதையெல்லாம் சேர்த்தால் இந்த லிஸ்டுகள் எல்லாம் மாறிடாது?

?????

அமைச்சரின் பிள்ளைகள் பல கோடிகளில் தொழில் செய்தாலும், சினிமா எடுத்தாலும் இவர்களுக்கு ஏது இவ்வளவு சொத்து என்றோ, இல்லது அவர்களின் அப்பாமார்களின் சொத்தையோ யாரு பார்க்கப்போகிறார்கள் என்று சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தில் நிறைய தெரிந்தவர் ஒருவர் கேட்டார். அப்படியா?

?????



ராதிகா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திக்கைப் பார்த்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அதற்கு ஒரு வாலையும் ஒட்ட வைத்தார். தமிழ்சினிமாவில் ஆண் நடிகர்களைப் பற்றிப் பேசும்போது 'அழகு' என்ற வார்த்தையையே பொதுவாகப் பயன்படுத்த முடியாதில்லையா என்றார். முழு உண்மையைச் சொல்லி விட்டார்.
ஆனாலும் நமக்கெல்லாருக்குமே 'அழகுணர்ச்சி' ரொம்ப கம்மியோ?

?????

மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அங்குள்ள கலை மன்றத்தின் ஓரத்தில் கண்காட்சியாளர்களின் படங்கள்,  விளம்பரங்கள் எல்லாம் flex board-ல் இருந்தன. இவைகளை வைக்க போர்டு ஒன்றுக்கு அந்தப் பத்து நாட்களுக்கு தலா 2000 ரூபாய் வாங்கினார்களாம். ஞாநி சொன்னார்.

நடுவில் ஒரு நாள் அந்த போர்டுகள் காணாமல் போயின. எங்கள் ஊர் அரசியல்வாதி ஒரு காது குத்து விழாவிற்காக வருகிறார் என்று அந்த போர்டுகளை எடுத்து விட்டு அவர் படங்கள் அணி வகுத்தன. கொடுத்த காசுக்கு எங்க படத்தை மாட்டாம எதுக்கு அவைகளை எடுக்கணும் அப்டின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா பாருங்க .. அந்த ஒரு நாள் முடிஞ்சதும் மறுபடி பழைய போர்டுகள் வந்து விட்டன. என்ன நேர்மை??

?????

flex board என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது.  வீட்டு விழாக்களுக்கு
flex board அடிப்பது ஒரு fashion என்றாகி விட்டது. ஆனாலும் எங்கள் மதுரையில் அதுவும் செல்லூரில் இந்த 'வியாதி' அளவுக்கு மீறிக்கொண்டிருப்பதாக அப்பகுதியை நித்தமும் கடக்கும் எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கையான மனிதர்கள், செல்போனை காதில் வைத்து ஒரு போஸ் கட்டாயம் இருக்கணும். அதோடு படங்களை எடுக்கும் பயங்கரமான காமிரா பொட்டிக்காரர்கள் படத்தில் இருப்பவர்களை பயங்கர போஸ் கொடுக்கச் சொல்லி விடுகிறார்கள். கடவுளே .. அதில் நாலைந்து படங்களை எடுத்து இங்கு போடலாமா என்று கூட நினைத்தேன். என்ன ஒரு பயங்கரமான போஸ்கள். எல்லோருக்கும் '***' மாதிரி தான் அழகா இருக்கிறது மாதிரி ஒரு நினைப்பு போலும்.

நம்ம வீட்டு பெண்கள் படத்தை பதிவுகளில் போடக்கூட அச்சப்படும் காலத்தில் இந்த மக்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் படங்களை பெரிய சைஸில் போடுகிறார்கள். அதுவும் நிஜ நகைகளா இல்லை வேற ஏதுமா என்று தெரியாத அளவில் 'பயங்கரமான' நகை நட்டுகளோடு படங்கள். (income tax காரங்களுக்கு இதெல்லாம் தெரிந்தால் பரவாயில்லையான்னு தெரியலை.) காது குத்து என்று ஒரு போஸ்டர். அதில் உள்ள பிள்ளைகளுக்கு ஏற்கெனவே காது குத்தியிருந்தது. அப்போ .. இப்போ யாருக்கு "காது குத்து?"  படத்தை ரோட்டில் இப்படி போடுவதால் எல்லோரும் அவர்களைப் பற்றி என்ன பேசுவார்கள்; எப்படி கேலி செய்வார்கள் என்பது கூட இவர்களுக்கு எப்படி தெரியாமல் போய்விட்டது?

யாராவது இதை மாற்ற முயலலாம். யார் சொன்னா கேப்பாங்க? ஒருவேளை நம் காமெடி நடிகர் விவேக் சொன்னா ஒருவேளை கேட்கலாம். ஆனாலும் அவராலும் முடியாமல் அவர் நம் அப்துல் கலாமிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.

?????

பிறந்த நாள் வரும் ஒரு மாதத்திற்கு முன்புதான் flex board போட வேண்டும்.  வரப்போகும் பிறந்த நாளுக்கு ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பே வாழ்த்துகள் போடக்கூடாதுன்னு மதுரைக்காரர்களுக்கு ஒரு தடை போட்டால் என்ன? அல்லது யாராவது சொல்லியாவது கொடுத்தால் என்ன?
:)

?????













Thursday, September 09, 2010

434. சிங்கப்பூர் -- ஒரு அதிசயமான வரலாறு

*

Lee Kuan Yew

*


கால் நூற்றாண்டுக்குள் ஒரு நாட்டை - அது எவ்வளவு சிறிதாக, மூலப்பொருளேதும் இல்லாது இருந்தும் கூட - வளமாக்க முடியும் என்பதற்கு சிங்கை ஒரு நல்ல உதாரணம்.

Monday, September 06, 2010

433. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்

*
இதன் முந்திய பதிவு இங்கே ...

*

2010ஏப்ரல் மாதம் கூட தேர்தல் கமிசன் தலைவர் தொழில் நுட்ப மேம்பாடு தேவை இல்லை. எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று சாதிக்கிறார். விவாதிக்கத் தயாரில்லாத மன நிலையில் தான் அவருடைய பேச்சு உள்ளது. .

432. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்




*மின்னணு ஓட்டளிப்பு எந்திரங்களின் திறன், பாதுகாப்புத் தன்மை பற்றிய நிறைய கேள்விகள் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. வரும் கேள்விகளுக்கு விடை அளிப்பதே அரசின், தேர்தல் கமிஷனனின் வேலை. ஆனால் கேள்வி கேட்ட ஹரி ப்ரசாத் என்பவரை சமீபத்தில் ஒரு 'நொண்டிச்சாக்கோடு' அரசு அவரை கைது செய்தது.

இந்த EVM- களின் பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி என் கல்லூரி மாணவரும், நண்பருமான இளங்கோ ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.


Saturday, September 04, 2010

431. ஜெய மோகனும், ஞாநியும் ...

*

ஐந்தாம் புத்தகக் கண்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்திற்கும் எங்கள் கல்லூரிக்கும் நடுவிலே ஒரே ஒரு ரோடு. நல்ல வசதியாகப் போய்விட்டது. கண்காட்சிக்கு வரும் படைப்புலகத்தாரை எங்கள் கல்லூரிக்குப் பேச அழைப்பது எளிதாகிவிடுகிறது. இரு தினங்களுக்கு முன் - வியாழனன்று ஜெய மோகன், வெள்ளியன்று ஞாநி ... இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஜெயமோகன்:

காட்சிப் பிழை என்ற புதிய திரைப்படம் தொடர்பான திரு. சுப குணராஜன பதிப்பிக்கும் இந்த நூலை அறிமுகப்படுத்தும் விழாவிற்கு கல்லூரியின் குளு குளு அறையில் கூட்டம்.  பேரா. பிரபாகர் வரவேற்புரைக்குப் பின் பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் முதல் பதிவின் கட்டுரைகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையை அளித்தார்.குணம், குற்றம் எல்லாம் பகிரப்பட்டன. முனைவர் ராஜன் குறை திரைப்படங்களைப் பற்றிய தன் ஆய்வுபற்றி கூறினார். ஜெயமோகன் தன் திரைப்பட அனுபவங்களை வைத்தே தன் கருத்துக்களைக் கூறினார்; அதனால்தானோ என்னவோ அவை ஒரு பக்க வாதமாக எனக்குத் தோன்றியது.

இரவு பனிரெண்டு மணிக்குக் கூட சர்வாலங்காரத்தோடும், பள பளக்கும் பட்டு சேலையுடனும் ஒரு கூடைப்பூவைத் தலையில் வைத்துக்கொண்டிருக்கும் பண்க்கார நாயகிகளைக் காண்பிப்பதும் படம் பார்க்க வருபவனின் அபிலாஷையைப் பூர்த்தி செய்யவே என்று சொன்னது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது. 30 பைசா செலவில் எண்பதுகளில் அவன் புக முடியாத பணக்கார வீடுகளை சினிமா அவனுக்குக் காட்சிப்படுத்தியது என்றார். அது ஏன் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு மட்டும் அப்படி ஒரு அபிலாஷை! பார்வையாளனின் எதிர்பார்ப்பில்தான் படம் எடுக்கப்படுகிறது என்றார். அதைவிடவும் மிக முக்கியமான செய்தி: இந்தியாவிலேயே 200 கோடி முதலீட்டில் எடுக்கப்படும் ஒரு படத்திலும்,
உலகத்தரத்தில் எடுக்கப்படும் மாற்றுப்படமொன்றிலும் தான் இப்போது ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். அது எப்படி .. நம்ம சூப்பர் இஸ்டார் இல்லாமல் 200 கோடியில் ஒரு படம் என்ற வியப்பு எனக்கு!

பேரா.முனைவர் சுந்தர் காளி ஏற்புரை அளித்தார்.



ஞாநி:

வெள்ளி மாலை ஒரு மரத்தடியில் வழக்கமாகத் தாங்கள் கூடுவது போல் சங்கம் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. மரத்தடியில் வட்டமாக பாய் விரித்து மாலை நேர வெயிலின் தாக்கம் இன்னும் இருந்த அந்த மாலை வேளைக் கூட்டத்தை பேரா. ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுகத்தின் பின் ஞாநியின் கூட்டம் ஆரம்பித்தது.கொடுக்கப்பட்ட தலைப்பு:   கருத்துச் சுதந்திரமும், ஜனநாயகமும்.

வட்டம் /சைபர் என்ற உருவ அமைப்பிலிருந்து ஆரம்பித்து, மீடியாக்களின் தோற்றம், வரலாறு, கட்டமைப்பு, அக்கட்டமைப்பால் வரும் இறுக்கம் பற்றிக் கூறினார். சொல்லிவரும் கருத்துக்களுக்கு வரும் எதிர்வினைகளால் மக்கள் ஒரு வித பயத்தில் இருப்பதாகவும், ஆனாலும் நேர்முகமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மக்கள் தங்கள் சமூக ஆர்வத்தை வெளிக்கொணர்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணமாக தெகல்கா பத்திரிகை ஆரம்பமான முறை பற்றிக் கூறினார். ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக வைத்து இன்று 5 கோடி சேர்த்து அப்பத்திரிகை இப்போது ஒரு strong base  வைத்திருப்பதாகக் கூறினார். இது  நல்லது நடந்து விடாதா என்ற மக்களின் ஏக்கத்தின் வெளிப்பாடே என்று கூறினார்.

திறந்த வெளிக் கூட்டம் என்பதால் மாணவர்களின் பங்களிப்பு நன்கிருந்தது. சமூக வன்முறைகளுக்கு எதிர் வன்முறையல்ல கல்வியே என்ற ஞாநியின் கூற்று நன்கு சென்றடைந்தது என்றே நினைக்கிறேன்.

எதுவும் பேசலாம் என்ற கூறியும் ஞாநி கொஞ்சம் 'அடக்கியே' பேசினார் என்றே நான் நினைக்கிறேன். அவரது வெளிப்படையான எழுத்து போலன்றி சிறிது 'காரம்'  குறைத்தே பேசினார். கல்லூரி என்பதால் வந்த தயக்கமோ என்னவோ ....


=============

கூட்டம் முடிந்தது பல மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சிக்குச் சென்றோம். அங்கே கா.பா.வையும் ஸ்ரீயையும் பார்த்தேன். ஞாநியின் கடை முன் நின்று சிறிது பேசிக்கொண்டிருந்தோம். வரும் வியாழனன்று மாலை 6 மணியளவில் மதுரைப் பதிவர்களைச் சந்திக்கலாமே என்று ஞாநி கூறினார். சந்திக்க வேண்டும்.







Friday, September 03, 2010

430. உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து



*

தினமலரில் .........


ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து

Monday, August 30, 2010

429. அமினா -- பொள்ளாச்சியில் பரிசளிப்பு விழா




*
முந்திய பதிவு காண ...
*

நான் ஒரு பெரிய  பொறாமைக்காரன். குறிப்பாக,  இசை, எழுத்து, ஓவியம் சார்ந்த படைப்பாளிகளைப் பார்த்தாலே ரொம்ப பொறாமையாக இருக்கும்.

Saturday, August 21, 2010

428. பொள்ளாச்சி to ஆழியார்





*
பழைய கார் இருக்கும்போதே வெளியூருக்கெல்லாம் காரோட்டிச் சென்று வர ஆசை. தங்ஸிடம் பெர்மிஷன் கிடைக்கவேயில்லை. கார் மாற்றியதும் கட்டாயமாக ஊர் சுற்றிவர ஆசை.

Saturday, August 14, 2010

426. உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம் (Just an idea...).

*


உமாசங்கரைப் பற்றிய முன் பதிவைப் படியுங்கள்.

உமாசங்கர் நியாயமான அதிகாரி, அவர் மீது அரசு ஏவி இருக்கும் கொடூரத்தை நாம் கண்டும் காணாமலும் இருக்க வேண்டுமா?  -- இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டபோது எனக்குத் தோன்றிய பதில்  -  ஏன் பதிவர்களாகிய நாம் அனைவரும் இம்முறை நம் ஒட்டு மொத்த ஆதரவை அந்த அதிகாரிக்குத் தெரிவிக்கக் கூடாது. அப்படி நாம் ஏதும் செய்தாலும் அது எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்பதை விடவும், ஓரளவாவது நாம் நம் கடமையைச் செய்தோம் என்ற நல்ல உணர்வு நமக்கு ஏற்படலாம். அதற்காகவாவது எனக்குத் தோன்றிய ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். சரியென்றால் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சின்ன காரியம் செய்வோம்.

 இந்த அதிகாரி தவறான காரணங்களுக்காக அரசால் தண்டிக்கப்படுகிறார் என்ற எண்ணமுள்ள பதிவர்கள்  அனைவரும் ஒன்றாக, ஒரே நாளில் --வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம். அந்த ஒரு நாளில் ஒரே மாதிரியான இடுகைகள் இட்டு நம் ஒற்றுமையான உணர்வை அரசுக்குத் தெரிவிப்போம்.

இதனால் என்ன பயன் என்று கேட்பீரின், என்ன பயன் கிடைக்குமென்று தெரியாது. ஆனால் முழு இணையப் பதிவுலகமே ஒரு மனிதனின் பின்னால் நின்றால் அது அந்த மனிதனுக்கு நிச்சயம் தேவையான மன வலுவைத் தரும். அரசும் சிந்திக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஒருவேளை நான் ஒரு எதிர்க்கட்சிக்காரன், அதற்காக இந்த முயற்சி என்று யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு ஒரு வார்த்தை:  அந்தக் கட்சி, அதன் தலைவர்கள் எதுவுமே என் மரியாதைக்குரியதல்ல. கனவில் கூட நான் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்ற உறுதி எனக்கு எப்போதும் உண்டு.

இது நிச்சயமாக நியாயம் செத்து வரும் வேளையில் ஒரு தனி மனிதன் பல எதிரப்புகளையும் தாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கிறானே, அவனுக்கு நம்மாலான எளிய இந்த உதவியைச் செய்வோமே என்ற ஒரே எண்ணம்தான்.

வாருங்கள் ... ஒன்றுபட்டு நின்று நாம் நினைப்பதைச் செயலில் காட்டுவோம். இத்தனை பதிவர்கள் ஒன்றிணைந்தால் நல்லது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைவோம். வாருங்கள் ....



பி.கு.
1.
அவ்வாறு இடுகையிட சம்மதிப்பின், யாராவது நல்ல நான்கு வரிகள் தயார் செய்து அளித்தால் அதை அனைவருமே ஒட்டு மொத்தமாக ஒன்று போல் இடுகையிடலாம்.

2. //கார்த்திகைப் பாண்டியன் said... புதன்கிழமை.. எல்லாருமே செய்யலாம் ஐயா..// அப்படியானால், எல்லோரும் புதன் கிழமை  ஒன்றுபோல் இப்பதிவை இடுவோம்.
 
  3. கா.பா. போன்ற பதிவர்கள் இதை மறுபதிப்பாக இட்டால் இன்னும் பலரின் கண்களுக்குப் போய்ச் சேரும். Please ...  மறு பதிப்புகள் வரவேற்கப்படுகின்றன. 
 
4. பால், சாதி, சமயம், இருக்குமிடம் எந்த வேறுபாடுமின்றி இதில் ஒன்றுபடுவோமே ... 
 
5. நண்பர்களுக்கும் இச்செய்தியை இட்டுச் செல்லுங்கள். ஒன்றாக இடுகை இட உதவுங்கள். 
================================ 
 
நாம் எடுக்கும் இந்த முடிவு பிடித்ததென்றால், நம் கையெழுத்தையும் இங்கே போடலாமே. வாருங்கள்.

மேலும் வாசிக்க ---
குசும்புவின் உமாசங்கர் பற்றிய பதிவு 

மதுரை புல்லட் பாண்டியனின் இடுகை  --
ON (UN) TOUCHABILITY


425. சிங்கப்பூர் -- மீண்டும் முதலில் இருந்து ....

*

முஸ்தபாவிலிருந்து கூப்பிடு தூரம் ...எங்கள் அறை
*
எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த  அறையிருந்த இடத்திற்கு Little India என்று பெயராம். 'தமிழ்நாட்டு'ப் புகழ்பெற்ற முஸ்தபா கடைக்கு மிக மிக அருகில்.  முஸ்த்பா கடை சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. கடையை விரிவு படுத்தும்போது அதன் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் நடுவில் ஒரு ரோடு போகிறது அரசில் இருந்து அனுமதி பெற்று இரண்டு பகுதிகளையும் ஒரு பாலம் போல் ரோட்டுக்கு மேல் இணைத்திருக்கிறார்கள்.  24 மணி நேரமும் விற்பனைதான். எங்களின் முதல் நாளில், இரவு மணி 12.30 - 1.00 வரை அந்தக் கடைக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம்.  முஸ்தபா இன்னும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. புதிய கட்டிடம் ஒன்று இரண்டாம் பகுதியின் தொடர்பாக வளர்ந்து வருகிறது. அதோடு, முஸ்தபாவின் அடிப்பகுதியில் முடியும்படி ஒரு MRT  கட்ட அரசு ஆலோசித்ததாகவும், அதற்காக முஸ்தபாவிடம் ஒரு பகுதி பணம் கேட்டதாகவும், முஸ்தபா அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி ...
நாங்களிருந்த அறை.   காலைச் சிற்றுண்டிக்குச் செல்ல வெளியே வந்தோம். நிஜமாலுமே அப்பகுதி  இந்திய, அதுவும் தமிழ்ச்சூழலோடு இருந்தது.
சரவணபவன், முருகன் இட்லி கடை, மதுரை மீனாக்ஷி பவன், ஆனந்த பவன் -- திரும்புமிடமெல்லாம் நம் ஊர் கடைகள். முதல் தடவை மட்டும் நம்மூரை மதிப்போமே என்ற பெரிய எண்ணத்தில் முருகனுக்குப் போனோம். தோசை .. பொங்கல் என்று போனது. இதற்குப் பின் இனி தமிழுணவைத் தவிர்க்க வேண்டுமென்று எடுத்திருந்த எங்கள் 'குறிக்கோளை' ஒரே ஒரு முறை தவற விட்டோம். மற்றபடி  அதன்பின்  எல்லாம் லோக்கல் சமாச்சாரங்கள்தான். அதுவும் நிறைய கடல் சமாச்சாரங்கள்.
Singapore Flier

மதியம் வரை முஸ்தபா ..  இன்னும் சில கடைகள் என்று சுற்றினோம். மதியம் முஸ்தபாவில் இருந்த cafeteria-வில் ஒரு பர்கர் & லெமன் டீ குடித்தோம். சிங்கப்பூரில் என் முதல் காதல் இந்த லெமன் டீயோடு ஆரம்பித்தது.
சிங்கையில் முதல் காதல்





மூன்றாவது நாளன்று slim tower mall-க்குப் பக்கத்திலிருந்த கடையில் குடித்த லெமன் டீ என் முதல் காதலை முழுவதுமாக முற்றிய காதலாக மாற்றியது. அதன் பின் அனேகமாக சிங்கையில் எங்கு போனாலும் லெமன் டீ தான் ... ஆனாலும் புத்திசாலித்தனமாக  மாலைகளில் என் காதலையெல்லாம ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டேன்!!


அன்று மாலை ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. அது முடிந்ததும் பக்கத்திலுள்ள MRT-க்கு வந்தோம். அழகான, மிக மிக சுத்தமான ரயில் நிலையங்கள், அதைவிட சுத்தமான ரயில்கள், மிக ஒழுக்கமான மக்களின் பழக்க வழக்கங்கள் ...
Sign Board inside the train. It just tells where you are and where do we go ...

திரும்பி வரும்போது சில மால்களைத் தாண்டி வந்தோம். மால்களுக்கு மிக அருகே food courts -- பெரிய வளாகங்களில் சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள் .. சுற்றிலும் நிறைய கடைகள் ... எங்கு வேண்டுமோ அதை வாங்கி வந்து எங்காவது உட்கார்ந்து சாப்பிடலாம். அன்று சனிக்கிழமை வேறா .. கூட்டத்திற்கு குறைச்சலில்லை. மது எங்கு வேண்டுமானலும் அருந்தலாம். ஒவ்வொரு மேசை மீதும் வரிசையாக காலி பீர் பாட்டில்கள் அணிவகுத்து நின்றன.

இரவு மீண்டும் ஊர் சுற்றல். இரவு 1 மணிக்கு ஒரு வட இந்திய உணவகம்.  நண்பர் சசி ருசி பார்த்த இடம். அதனால் நல்ல சாப்பாடு. அதோடு புதியதாகப் பார்த்த guiness beer ... ரொம்ப density-ஆன பீர். density-யோடு சேர்த்து சுவையும் நலமே ..

இரண்டாம் நாள் மாலையிலிருந்து நண்பர் சசியின் வீட்டில் தங்கினோம். அன்பான உறவுகள். அதிலும் சசியின் மகனுக்கு கவின் என்ற அழகான பெயரை வைத்திருக்கிறார்.





ஆனால் அவனுக்கோ இன்னொரு பெயரில் ஒரு ஈர்ப்பு!




முதல் நாள் அவனோடு இருந்துவிட்டு நான் வெளியே போனபின் தன் அப்பாவிடம், 'எனக்கு ஏன் கவின் அப்டின்னு பெயர் வச்சீங்க; தருமின்ற பெயர் எவ்வளவு நல்லா இருக்கு' என்றானாம்.

மதுரக்கார பயல் இல்லையா? அதிலிருந்து நான் அவனை 'குட்டி தருமி' என்றே அழைத்து வருகிறேன்.


சிங்கை ம்க்களோடு தங்கியிருந்தது நேரடி அனுபவங்கள் பெற துணையாக இருந்தது. அந்த அனுபவங்களால் இரண்டாவது காதல் -- சிங்கையின் மீது -- ஆரம்பித்தது.

என் இரண்டாவது காதல் பற்றி அடுத்த பதிவு ..........